செவ்வாய், 28 ஜனவரி, 2014

கதைக்குள் இருக்கும் கதை

எழுதிக் கொண்டிருக்கும் ஒரு கதையில் இருந்து ஒரு காட்சி : எல்லாம் ஒரு பரிசோதனையோட்டம்.. எவ்வளவு இலகுவாக ஒரு கதையை சொல்ல முடியும் என்று தான் பரிட்சித்துப் பார்க்கிறேன்.



சரியாக எந்த நொடி காதல் என்னுள் நுழைந்தது என்று தெரியாது, இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்த அலுவலகத்தில் இருந்து அப்போது நான் வெளியேறி ஒரு மாதம் தான் இருந்திருக்கும். வேறு ஏதோ சொல்வதற்காக அவளிடம் இரவு குறுஞ்செய்தி அனுப்பினேன், எந்த நொடி எனக்குள்ளிருந்த காதல் எட்டிப் பார்த்தது என்று தெரியவில்லை.... ஆனால் அதற்குப் பின்னர் வாழ்ந்து பார்ப்பது என்பது உன்னைக் காதலிப்பது மட்டுமே என்று தோன்றியது.


காதலைச் சொல்லி விடுதல் என்பது எத்தனை கடினமான விஷயம்?. அன்றிரவு எஃப்.எம் ரேடியோவில் இரவின் மடியில் கேட்டுக் கொண்டிருந்த நேரம் அவளிடமிருந்து ஒரு பதில் குறுந்தகவலாக வந்தது, அதே நேரம் ரேடியொவில் மெல்லத் திறந்தது கதவிலிருந்து ஒரு பாடல்.

 “ -hi.. enna innum thookkam varalaiya pa?”

"s rathi"

"sir edho confuse ayittingannu nenaikkuren"

அப்போது தான் ஊரு சனம் தூங்கிடுச்சு என்ற பாடலை முதன் முதலாகக் கேட்பது போல் இருந்தது...  

பாவி மனம் தூங்கலையே... அதுவும் ஏனோ புரியலையே

“helloo thoongittiya pa”

'உன்னை எண்ணி நானே.. உள்ளம் வாடி போனேன்

“sari naalaikku pesuvom”

பாடலில் இருந்து வெளியே வந்தேன்.

“sorry sorry rathik.... konjam disturb ayitten”

"enna achu pa? sir-ku enna prblm?"

மீண்டும் பாடல் - ஊரு சனம் தூங்கிடுச்சு , ஊத காத்தும் அடிச்சிடுச்சு

“raathik naan onnu sonna kovichukka maattiye”

“maatten sollu”

 ‘படக்’கென்று சொல்லிவிட்டேன். பதிலுக்கு ஸ்மைலி இட்டாள்

 ‘வெறும் ஸ்மைலி ...???’, அப்போதே தெரிந்தது இனி என் பாடு குழப்பத்தில் தான் என்று

அவளுக்கு எல்லாமே இயல்பாக வருகிறது இந்த ஸ்மைலியைப் போலே, :) இதற்கு என்ன அர்த்தம்...?? இது அவளுக்கு மட்டுந்தானா, அல்லது எல்லா பெண்களுக்குமே இயல்பாக வருகிறதா??

குழப்பம் வந்தவுடன் அடுத்த நொடி தேடுவது - நண்பனைத் தான்

********

ஜெகனிடம் கேட்டேன்

நீ என்ன சொன்னாய்

என் காதலைச் சொன்னேன்

எப்படி

நீயும் நானும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலாவை, ஒரே ஜன்னலில், ஒன்றாக பார்க்க முடியுமா என்று கேட்டேன்

என்னது

ம்ம்ம் அப்படித் தான் சொன்னேன், ஜகன்..”

அவள் என்ன சொன்னாள்??”

நிஜமாவா சொல்ற, விளையாடாதே என்றெல்லாம் சொன்னாள், பின்னர் நான் உண்மையாகத் தான் சொன்னேன் , சீரியஸ் என்றேன்

ம்ம்ம் அப்ப்றம்

“ஒரே ஒரு ஸ்மைலி மட்டுமெ அனுப்பினாள் ஜெகன். அப்படின்னா என்ன அர்த்தம் ஜெகன்??

“உனக்குப் புரியல”

“ம்ஹூம்”

“அப்படின்னா நீ சொன்னது புரியல, ஒழுங்கா சொல்லு என்று அர்த்தம்

“....”

போய் ஒழுங்கா சொல்லுட உன் காதல... கவிதல்லாம் ட்ரை பண்ணாம  தேங்காய ஒடைக்குறது மாதிரி சொல்லுடா

அவளைத் தேடிச்  சென்றேன், அது ஒரு சனிக் கிழமை மதிய வேளை. சினிமாத்தனமாகத் தான் இருந்தது காதலில் அந்த ஒற்றை ரோஜா என்ன தான் செய்து விடும்??

அவளைப் பார்த்தேன்


இந்த ஒரு நொடிக்காகத் தான் நான் பிறந்திருப்பேனா என்று கூட தோன்றியது.. அதுவரை என் கண் கூசச் செய்யும் அவள் கூர் கண்கள், நான் வருவதை அறிந்ததும் ஓரக் கண்ணால் பார்த்து விட்டு ஒளிந்து கொண்ட நொடி..... அது எனக்கான நொடி, எனக்கான கணம்.

ஜெகன் சொன்னது போலே மூன்றே வரியில் என்னால் என் காதலைச் சொல்ல முடியவில்லை, எத்தனை முறை சொன்னாலும் அள்ள அள்ளக் குறையாமல் இன்னும் இருக்கிறதே என்று தோன்றிக் கொண்டிருந்த்து. ஆனால் அவள் பதிலுக்கு அதிகமாகப் பேசியதெல்லாம்  இந்த வசனத்தைத் தான்.

ஒரு நண்பனை எப்படி காதலிக்க முடியும்???”

ஆனாலும் வாங்கிக் கொண்டாள் நான் வாங்கி வந்த ரோஜாவை, மூன்று மணி நேரமாக எனது காதல் வாதங்களை மறுத்தவள், அந்த ரோஜாவை தலையில் சூடியபடி தான் என்னை விட்டு நகர்ந்தாள். அவள் பேருந்தில் ஏறும் வரை பின் தொடர்ந்தேன், அவளுக்கு தெரியாமல்.

அவள் ஜன்னலோரத்தில் மட்டும் அன்று அமராமல் இருந்திருந்தால், அவள் எத்தனை தூரம் என்னை ரசித்திருக்கிறாள் என்று என்னால் அறிந்திருக்க முடியாது போயிருக்கும். பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்தபடி தன் தலையிலிருந்த ரோஜாவை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்; சிரித்தாள், தன் கைகளைப் பார்த்தாள், கொஞ்சம் கண்களை மூடியபடி ஜன்னலின் வழியே முகம் காட்டினாள். அவள் பார்வையில் தான் நின்றிருந்தேன், ஆனால் அவள் என்னை உணரவில்லை.. அதை நான் உணர்ந்தேன், அவள் மனதில் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்.

-
 ஜீவ.கரிகாலன்



என்ன நண்பர்களே கதை தேறுமா??

1 கருத்து: