கோவர்தனகிரி குகைச் சிற்பம் - மாமல்லை சிற்பங்கள்
கோவர்தனகிரி சிற்பம் மாமல்லை |
இது போன்ற ஓவிய மற்றும் சிற்பக் கலை உருவாக்கங்கள் செய்வதற்கு எப்போதுமே நல்லதொரு மூலப் பிரதி(அல்லது கருப்பொருள்) கிடைக்க வேண்டும். வரலாறு தன்னை காலத்திற்கும் தக்க வைப்பதற்காக அது தன்னை வலிமையாகப் பதிவு செய்து கொள்ள முயல்கிறது, அது உலகில் கடைசி மனிதன் இருக்கும் வரை தன்னை தக்க வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. இந்த முனைப்பு ஆதிமனிதனின் குகைச் சிற்பங்களில் இருந்து, இன்று நாம் பார்க்கும் மிகப்பெரிய கட்டுமான பிரம்மாண்டங்கள் வரை சாத்தியமாக்கியிருக்கிறது. விண்வெளிப் பயணங்களும் அவ்வாறான ஒரு வரலாற்றுப் பதிவை எண்ணிப் பார்க்காமல் தொடங்குவது இல்லை.
மனிதன் தன் ஆயுளை வரலாற்றின் மூலம் நீட்டிக்கும் ஆசைக்கு கொடுத்த
உழைப்பின் பலன் தான் கலை வெளிப்பாடு. கதைகளின் வழியே தலைமுறை தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வந்த வரலாறுகளில் பல வர்ணங்கள் பூசப் பட்டிருக்கின்றன. அப்படிப் பூசப்பட்டு, பிரம்மாண்டம் செய்யப்பட்டு, சில மூடத்தனங்கள், சில புதிர்கள் என புனையப்பட்டு அதை புனிதமாகக் கொண்டாடுவதற்காய் அதை கண்ணாடிப் பேழையிலும் வைத்து விட்டனர். இந்த உண்மைகளை அகழ்ந்து எடுக்க பலர் முயற்சித்துக் கொண்டிருந்தாலும், சிலர் அதைத் தோண்ட அனுமதிப்பதில்லை, சிலர் அந்த முறைமையைப் பரிகசிக்கிறார்கள்.
பாரசீக வரலாற்றறிஞனால் கொண்டு வரப்பட்ட உலக வரலாற்றில் நோவா வெள்ளத்தைப் போன்ற கதை 15ம் நூற்றாண்டு |
ஆனால் உலகம் முழுக்க உள்ள ஆதி புராணங்களில் பல ஒற்றுமைகள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனென்றால் உலகம் முழுமைக்கும் உள்ள புராணங்கள ஒரே ஒரு உண்மையைத் தான் மறைத்துக் (உணர்த்தி) கொண்டிருக்கின்றன. இந்தப் புராணங்களுக்கு மத்தியில் இருக்கும், ஒற்றுமை தான் மனித இனத்தையே ஒன்றாக இணைக்கிறது. நோவா வெள்ளம் பற்றிய கதை பைபிளின் வழியே உலகம் முழுதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இதற்கு முன்னோடியான ஒரு புராணம் இருக்கிறது. புராணம் தான் முன்னோடியே தவிர இந்த நோவா வெள்ளம் என்று குறிப்பிடப்படும் காலத்திற்கு இணையாக இந்த கோவர்தனகிரிப் பெருவெள்ளத்தை எடுத்துக் கொள்ள முடியும்.
நமது மதக் கொள்கைகளோ அல்லது கல்வி முறையோ இது போன்ற ஒப்பிடல்களை அடியோடுப் புறக்கணிக்கலாம். விக்கிப்பீடியா தகவல்களை வைத்து இது போன்ற கட்டுரைகள் எழுதுவது பலருக்கு அபத்தமாகக் கூடத் தோன்றலாம். இந்த கட்டுரையின் அடிப்படை புராணத்தின் அல்லது வரலாற்றின் ACCURACYஐ வைத்து அல்ல, ஆனால் இவை இந்த புராணத்தின் வழியே தோன்றிய கலை படைப்புகளின் மெய்ப்பொருளான ஆன்மாவைக் (SOUL) கண்டடையும் முயற்சி இது. (வெற்றி தோல்விகளைப் பற்றிய அக்கறையில்லா முயற்சி).
எதற்காக இது போன்ற வெள்ளத்தைப் பற்றிய காட்சி பல புராணங்களில் இருக்கிறது என்பதற்கு கண்டிப்பாக ஒரே ஒரு LOGIC தான் இருக்க முடியும். கடவுள் இருக்கிறார் என்பதை EVOLUTION (பரிணாமக்) கொள்கைகளில் முரண்படும் வாதங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்ததால். கடவுளின் சக்தியை நிரூபிப்பதற்காகத் தேவைப்பட்ட வெற்றிடத்தை நிரப்பியது தான் பெருவெள்ளம், பெரு வெள்ளம் என்பது உலகத்தில் பலமுறை நடந்துள்ளது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். POLAR SHIFT, POLAR WANDER, போன்ற அறிவியல் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது 10500 BCE வாக்கில் ஒரு பெரிய வெள்ளம் பூமியைச் சூழ்ந்திருக்கிறது, 4500 வருடங்களுக்கு ஒரு முறை உலகில் பெருவெள்ளங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, CLOUD BURST போன்ற விபத்துகளைக் கூட எண்ணிக்கை அளவில் இன்றுள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் பல மடங்கு குறைந்திருந்த காலத்தில் மனித இனத்தை அழிக்க வல்ல வெள்ளம் சிறிய அளவாக ஒப்பீட்டு அளவில் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதில் இறைவனின் அருளால் உலகின் உயிர்கள் காக்கப் படுகின்றன என்கிற தத்துவம் போதிக்கப்பட்டிருக்கிறது
தொன்மையான நாகரிகங்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பெரு வெள்ளம் பற்றியக் குறிப்புகளைக் காண முடிகிறது. இப்போது பெரு வெள்ளக் கதையை பட்டியலிடுவோம்.
- கிருத்துவம் நம்பும் பைபிள் கதையான நோவா பெருவெள்ளம்.
- கிஷே -மாயன்களின் வழிவந்தவர்களிடம் இன்னும் இது போன்ற கதைகளை இன்னும் பார்க்க முடிகிறது.
- நமது கோவர்த்தனகிரி கதையிலும் இந்தப் பெருவெள்ளத்திலிருந்து மக்களை க்ரிஷ்ணன் காப்பதாகவே வருகின்றது.
- மாண்டியா என்ற தெற்கு ஈராக்கியப் பழங்குடிகளிடமும் இதே கதை உள்ளது, அதில் மோசஸ் மற்றும் இயேசுவை தவறான தூதுவர்கள் என்றும் நோவாவை மட்டும் உண்மையான தூதுவனாக நம்புகிறார்கள்.
- கிருத்துவம் நம்பும் பைபிள் கதையான நோவா பெருவெள்ளம் போலவே மெசபடோமிய மற்றும் சுமேரிய நகரங்களிலும், இது போன்ற ஒரு பெருவெள்ளம் தான் நகரங்களை அழிக்கப் போகின்றதென தேவ தூதனிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்ததாகச் சொல்கிறது - - இதைப் பற்றி பாரசீக மன்னனாகிய தைமூரின் மகனின் ஆணைக்கிணங்க - பாரசீக வரலாற்றிஞன்(Hafiz-I-Abru) எழுதிய உலக வரலாற்று நூலில் இதே போன்ற பெருவெள்ளம் பற்றிய கதையாக வரலாறு வருகிறது.
நிற்க:
- உலக வரலாற்றில் கடற்கோளால் அழிந்த நகரங்களும் நம் சங்கத் தமிழ் மதுரையையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா??
அப்படிப்பட்ட ஒரு அழிவைப் பற்றிய செய்தியையும், இறைவனின் காத்தலையும் சொல்லும் மற்றுமொரு பிரம்மாண்டப் படைப்பு தான் மாமல்லையின் கோவர்தனகிரிச் சிற்பக் காட்சி. இறுதியில் மாமல்லையே அப்படியொரு பேரழிவைச் சந்தித்திருக்கிறது என்பது தான் துயரமான நிகழ்வாகிவிட்டது.
பெருவெள்ளத்தைக் காட்டும் அத்தனை புராணங்களிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது. பூமியில் வாழ்ந்த பல உயிர்கள் ஒரு பேராபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறன, அந்த தப்பித்தலுக்கான காரணம் FITTEST என்று அறிவியல் நோக்குடனும், இறைவன் என்று பக்தி நோக்குடனும் சொல்வது மனித இனம் மட்டுமே என்கிற பேருண்மை தான் அது.
பெருவெள்ளத்தைக் காட்டும் அத்தனை புராணங்களிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது. பூமியில் வாழ்ந்த பல உயிர்கள் ஒரு பேராபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறன, அந்த தப்பித்தலுக்கான காரணம் FITTEST என்று அறிவியல் நோக்குடனும், இறைவன் என்று பக்தி நோக்குடனும் சொல்வது மனித இனம் மட்டுமே என்கிற பேருண்மை தான் அது.
அடுத்தப் பதிவில் சிற்பங்களோடு பேசுவோம்.
உங்களது கருத்துகளை தெரிவித்தால் நான் பெரிதும் ஊக்கமடைவேன்
- ஜீவ.கரிகாலன்
ஒரு சின்ன திருத்தம்.... //(வெற்றி தோல்விகளைப் பற்றிய அக்கறையில்லா முயற்சி). // அக்கறை இல்லா அல்ல.... அதனை எதிர்பார்க்காத என்று வைத்துக்கொள்ளலாம்....
பதிலளிநீக்கு"survival of the fittest concept" இயற்கை படைத்த அனைத்து ஜீவராசிகளுக்கும் (மனிதன் தவிர்த்து) பலம் சார்ந்தது... மனிதனுக்கு மட்டும் மன பலம் சார்ந்தது...
இது பற்றி நிறைய விவாதிக்க ஆசைதான்.... நேரமின்மை காரணமாக தற்காலிகமாக i left right now.... 'll come again....
பெருவெள்ளத்தைக் காட்டும் அத்தனை புராணங்களிலும் ஒரு ஒற்றுமையைக் காண முடிகிறது. பூமியில் வாழ்ந்த பல உயிர்கள் ஒரு பேராபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறன, அந்த தப்பித்தலுக்கான காரணம் FITTEST என்று அறிவியல் நோக்குடனும், இறைவன் என்று பக்தி நோக்குடனும் சொல்வது மனித இனம் மட்டுமே என்கிற பேருண்மை தான் அது./
பதிலளிநீக்குசிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
// மனிதனுக்கு மட்டும் மன பலம் சார்ந்தது..// ஆம் .... ஆனால் எப்படியோ fittest மற்றுமே ஜெயிக்கிறார்கள்...
பதிலளிநீக்குதங்கள் கருத்துக்கு நன்றி : - உரையாடுவதன் மூலமும், விவாதங்கள் மூலமும் தான் அடுத்தடுத்தி நகர முடியும்.. நன்றி
இராஜ ராஜேஸ்வரி : இந்த ஆறு மாதங்களாக என்னை ஊக்குவித்து வரும் சகோதரிக்கு நன்றி...
பதிலளிநீக்கு