நேற்று வீரம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதால், இன்று ஜில்லா என்று எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
.
சென்னை புத்தகக் கண்காட்சி வழக்கம் போலவே மிளகாய் பஜ்ஜி, அப்பளம் போன்றவற்றுடன் சமையல், தன்னம்பிக்கை, சரித்திரப் புனைவு புத்தகங்களோடு சேர்ந்து இலக்கிய புத்தகங்களும் விற்பனையாகின. அணிவகுத்திருக்கும் புத்தகங்களை ஒவ்வொரு ஸ்டால்களிலும் விதவிதமாக அடுக்கி வைத்து ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தன. நித்யானந்தாவின் ஸ்டால் ஒரு ஓரமாக வந்ததால், வசதியாக - சத்தமே இல்லாமல் வந்து செல்பவர்கள் சில ஆர்வலர்கள்.
யாரென்று பெயர் போடாத மெழுகு வேலைப்பாடு |
காலச்சுவடு ஸ்டால் தான் இது, இதை செய்தவர் யாரென்று கூட பெயர் போட்டு வைக்கவில்லை, ஏனென்றால் அவர்களுக்கு இது முக்கியமாகத் தெரியவில்லை.இதுவே ஒரு ஷோவில் வைத்திருந்தால் இது போன்ற ஒரு படைப்பிற்கு தனியாக லைட்டிங் எல்லாம் செய்து இருப்பார்கள். ஆனால் வெகுஜனங்கள் வந்து செல்லும் இடங்களில் இது போன்ற நுன்கலைகளை காட்சிப் படுத்தலாம் என்பது வரவேற்கத் தக்க யோசனை தான். ஆனால் இதை செய்தவர் யாரென்ற பெயர் தான் போடவில்லை. இங்கு எல்லாருக்குமே ஒரே குறிக்கோள் புத்தகம் விற்க வேண்டும், அந்த ஸ்டாலிலேயே சிற்பம் பற்றியோ, ஓவியங்கள் பற்றியோ அல்லது வேறு ஏதாவது நுன்கலைகள் பற்றியோ புத்தகங்கள் இருக்கலாம், சிலாகித்து விற்பனை செய்து கொண்டும் இருக்கலாம்.
"பெயர் எழுதிவைத்தால் மட்டும் பார்க்கவா போகிறார்கள் ??" என்று கேட்டால் என்ன சொல்வது??. சரி பயணக் கட்டுரைகள் என்று நம் எழுத்தாளார்கள் எழுதும் கட்டுரைகளில் எல்லாம், ஃபிரான்ஸையும் வேறு சில ஐரோப்பிய நாடுகளையும் அவர்களுடைய கலையுணர்வையும் சிலாகித்துப் பேசுவதும் - நம்மைப் பற்றி குறைபட்டுக் கொள்வதுமாகவே பார்க்கிறோம். நம்மைப் பொருத்தவரை நாம் இன்னமும் கண்கள் மறைக்கப்பட்ட குதிரைகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறோம். நமக்கு வேடிக்கை பார்க்கும் பழக்கம் இருக்கிறது தான். ஆனால் அது நம் சொந்த ஆர்வத்தினால் அல்ல, வேறு யாராவது ஒன்றை வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், நமக்கு அதில் ஆர்வம் வந்து விடும். பொழுது போகாமல் இருக்கும் ஒருவன் வண்டியை சாலையோரமாக, நிறுத்தி வைத்து விட்டு பாலத்தின் கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்.. பத்தே நிமிடத்தில் ஒரு பத்து பதினைந்து ஆர்வக் கோளாறுகள் அங்கு அவன் செயலையே செய்து கொண்டிருப்பார்கள்.
இதே போல தான் நான் சென்ற அந்த நேரத்திலும். காலச்சுவடு ஸ்டாலில் இருந்த வாசகர்கள் யாவரும் நான் வந்து அதை போட்டோ எடுக்கும் வரை அதை யாருமே கவனிக்காது புத்தகம் புரட்டிக் கொண்டிருந்தனர். அந்தப் படைப்பை பார்த்துக் கொண்டே என் நண்பர் பாலாவிடம் “ஏங்க இது மெழுகு கவனிச்சிங்களா??” என்று பேச்சு கொடுத்தேன். இதைச் செய்தவர் - காலச்சுவட்டின் ஆஸ்தான ஓவியர்களில் ஒருவரான ரோஹினி தான்.
அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போதே வேறு இரண்டு பேர்கள் தங்கள் கைப்பேசியில் இதைப் படம் பிடித்துக் கொண்டு நகர்ந்தனர். இப்படி வெகுஜனங்கள் கூடும் இடங்களில் வைக்கப்படும் CREATIVE முயற்சிக்கு பாராட்டுகள் சொல்ல வேண்டிய அதே நேரம் இதைச் செய்தவர் யார் என்று பெயர் எழுதி வைத்தால் குறைந்தா போவீர்கள் நண்பர்களே??..
.
ஜில்லாவின் போஸ்டர்கள் நன்றாக இருக்கின்றன, காஜலுக்கு போதிய இடம் கொடுக்கவில்லை என்று போஸ்டரைப் பார்த்தாலே தெரிகிறது....
- ஜீவ.கரிகாலன்
s
பதிலளிநீக்குyes, the same feel..
பதிலளிநீக்கு