சனி, 11 ஜனவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 55 வீரம் - கவிதை விமர்சனம்“என்னடா இது அரைக் கிழடு உருவத்திற்கு ஒரு கதாநாயகன், அவனுக்கு ஸ்கூல் பெண் மாதிரியான ஜோடியா?? இது என்னடா அபத்தம்” என்று யோசிக்கையில்.. இது ஆண்டாண்டு காலமாக, தமிழ் திரையுலகில் சாதாரணமானது. “நான் தல ஃபேன்!!” என்று சொல்லிக் கொள்ளும் சில நண்பர்கள் என்னை ஆச்சரியப்படுத்துகிறார்கள், பொதுவாக வணிக சினிமாவை சிலாகித்துப் பேசுபவர்கள் தங்களை INTELLECTUAL ஆகக் காட்ட முடியாது என்கிற எண்ணம் எனக்கு உண்டு, ஓரளவிற்கு அது உண்மையும் கூட..

45-50, வயதுள்ள மனிதர் அவர், ரொம்ப Dignifiedஆ தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒரு நண்பர் கூட “நான் தல படம் பார்க்கப் போறேன்” என்று சொல்லும் போது ஆச்சரியம் தான், “என்ன சார் நீங்களா??”, “அஜித் மாதிரி ஒரு DOWN TO EARTH” மனிதரை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும்” என்கிறார். ஒரு சினிமா தொழில் நுட்பக் கலைஞர் ஒருத்தரோடு பேசும் பொழுது “அஜித் என்ற மனிதரை விட ஒரு நல்லவரை, நான் என் சரிவீஸ்ல பார்த்தது கிடையாது, கூட வேலை செய்யுறவங்கள மதிக்கனும்னு கடைநிலை ஊழியனாகிய நானே அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன்”என்றார் (நானே கேட்டதுங்க). எனது நண்பன் ஒருவன் சொல்கிறான், “அஜித்திடமிருந்து தான் நான் போராடும் குணத்தைக் கற்றுக் கொண்டேன், Oru celebrityஆக comfort zoneஇல் இல்லாமல் தனக்கு passion(ரேஸிங்) எனும் நினைத்த துறையில் தன்னால் முடிந்ததை சாதித்துள்ளார், அதனால அவர் தான் என் ரோல் மாடல்” என்றான், அவன் ஒரு அறிவியலாளர்.

இணையத்தை சுரண்டினால் அத்தனை கதைகள் மேற்சொன்ன இவர்களைப் போல, அஜித்தின் சினிமா, பர்ஃபார்மன்ஸ், ஸ்டைல், பர்ஸ்னாலிட்டியைக் காட்டிலும் இது போன்ற நிறைய கதைகளே உலா வருகின்றன. எனக்கும் கூட ரசிகர் சங்கத்தை கலைத்தது, அல்டிமேட் ஸ்டார் எனும் பட்டத்தை ’கட்’ செய்தது என்று அஜித் மீது ஈர்ப்பு வரக் காரணம் இருக்கிறது, அதுவும் கலைஞர் பாராட்டு விழாவில் அப்படி தில்லாகப் பேசிய போது நானும் ஈர்க்கப் பட்டேன். ஆனால் என்ன அவர் நடிக்கும் சினிமாவில் தான்........
..............................................

 “உனக்கு எதுக்கு இப்போ சினிமா விமர்சனம்?” என்று கேட்டால், வேறு வழி இல்லை நண்பர்களே.

நான் பொருளாதாரம், சூழல், சிற்பம், ஓவியம் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒன்றிரண்டு வாசகர்களைத் தவிர என்னைச் சீண்டுவாரில்லை, இன்றைக்கு கவிதை பற்றி எழுதனும் என்று யோசித்த போது தான் இந்த எண்ணிக்கை பிரச்சினை வந்தது,  ‘நாம் எழுதுவதைப் பார்த்து ஒரு கவிதைத் தொகுப்பை யாராவது வாங்குவார்களா??’. நான் வாசகர்கள் எண்ணிக்கைக்காகத் தான் எழுதுகிறேன் என்றால், யாரும் அவசிக்காமலே இத்தனைப் பதிவுகள் எழுதியிருக்க மாட்டேன். இருந்தாலும் மிகக் கடினப்பட்டு,  நிறைய reference தேடி எழுதும் பதிவில் குற்றம் கண்டுபிடிக்கக் கூட யாரும் இல்லை எனும் போது சற்றே சோர்வு வந்துவிடும். ஆனால் நாமே எழுதி, நாமே புரோமஷன் பண்ணுவதால் சில பிரச்சினைகள் வந்து விடுகிறது ..
.
“சரி என்னமோ கவிதை விமர்சனம்னு சொன்னிங்க”
“அட இருங்க. சொல்ல வந்தத சொல்லிடுறேன்”
.
“அப்படி என்ன புரோமசன் பண்ணுவதால் பிரச்சினை வந்துவிடுகிறது??” என்று கேட்டால், ஒரு உதாரணம்.. என்னுயிர் நண்பன் பிரதீப் - அவனிடம் மட்டுமே உச்சபட்ச உரிமை எடுத்துக் கொள்ளக்கூடிய உறவு, ஒரு நாள் அவனிடம் அவசரமாகப் பேசுவதற்காக போனில் அழைத்த போது:

 “ ஹலோ”

  “ஹலோ”

 “ப்ரதீப் நாந்தான்டா, இது ஆஃபிஸ் நம்பர்”

 “இன்னும் ஒரு ஹால்ஃப் அன் ஹவர் டைம் கொடுடா, உன் ப்ளாக பாத்துடுறேன்டா.. ”

“டே ... அது இல்லடா” ----- “பீப்” செல்போன் கட் செய்யப்படுகிறது.
 எத்தனை முறை அழைத்தும் அவன் எடுக்கவேயில்லை.

புரோமோஷன் என்கிற பெயரில் இப்படி நண்பர்களை விடாமல் தொந்தரவு செய்வதால், அந்த வேலையையும் நிறுத்தியாகிவிட்டது.. இப்போது யாரையும் தொந்தரவு செய்றது இல்லை. இருந்தபோதும், இப்போது நல்ல நண்பர்களா ஒரு நாலு பேர் தொடர்ந்து வாசிக்கிறாங்க.

அதே நேரம்.
“அப்படி ஏன் நான் எழுதனும்” என்று எனக்குள்ளாகவே கேட்டுக் கொள்கிறேன், முன்னர் என் ப்ளாகில் வைத்த சப் டைட்டில் தான் நான் தொடர்ந்து எழுதுவதன் காரணம்.

“எழுத எழுதத் தீரும் என்று நம்பி”
.
 “சரி கவிதையைப் பற்றி பேசுவோமா??”
“இருங்க ... அவளோ தான், முடிச்சிடுறேன்”
.
ஆமாங்க அப்படி எனக்குள்ளயே பல மாறுதல்கள உருவாக்கிடுச்சு என் எழுத்து, ரொம்ப பீலாவுடறேன்னு நினைக்க வேண்டாம். நான் சொல்லும் மாறுதல், ஒருவன் தொடர்ந்து டைரி எழுதும் பழக்கம் கொண்டவன், தன் தினசரி வாழ்க்கையை எப்படி திட்டமிட்டபடி ‘எக்ஸிகியூட்’ பண்ண முடிகிறதோ அதைப் போன்ற ஒரு சின்ன  “கட்டிங் ஒட்டிங்” மாறுதல். சில சமயம் ரிலாக்‌ஷேசனுக்காக இது போன்ற லைட் ரீடிங் பத்திகள் எழுதவும், சில நேரம் மயக்க நிலையில் (சாம்பிள்) நான் என்ன எழுதுகிறேன் என்று கூடத் தெரியாமல் எழுதியிருக்கிறேன்

.
 “கவிதை?????”

ஆமாங்க கவிதை பற்றி ஆரம்பிக்கிறேன். அதற்கு முன்னால் எதற்காக இந்த கட்டுரைக்கு தலைப்பு “வீரம்”னு வைச்சேன் ?? “பின்ன கவிதைத் தலைப்பு போட்டு விமர்சனம் செய்தால் யார் தான் வாசிப்பார்?”. அதுவும் வாசகர்களை விட அதிகமாக கவிஞர்கள் இருக்கின்ற மண்ணில்?? அதுவும் இது அஜித் படம் பற்றி இல்லை என்றதும், மூன்றாவது பத்தியிலேயே என்னைத் திட்டிவிட்டு எத்தனையோ பேர் எஸ்கேப் ஆகியிருப்பார்கள். அதையும் தாண்டி வாசிக்கும் உங்களையும் நான் ஏனுங்க சங்கடப் படுத்தனும்.

ஆனால், என்னால ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு பற்றிப் பேசிட முடியும். வாங்க!! நான் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால்ல தான் இருப்பேன், இந்த புத்தகச் சந்தை முடியும் வரை..

எனது நண்பர்களான..
*வேல்கண்ணன்  - வம்சி பதிப்பகம் -
*தியாகு பன்னீர்    - வெயில் நதி

ஆகியோரின் கவிதை புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்


-
ஜீவ.கரிகாலன்4 கருத்துகள்:

  1. an interesting write-up, since almost everybody have very minimum time to go on FB & related blog spot. so, kindly bear with me. i almost read ur views. sometimes it, will be more nice 2 read. thank u..

    பதிலளிநீக்கு
  2. an interesting write-up, since almost everybody have very minimum time to go on FB & related blog spot. so, kindly bear with me. i almost read ur views. sometimes it, will be more nice 2 read. thank u..

    பதிலளிநீக்கு
  3. கவிதை புத்தகங்கள் பற்றி வீரமான , சுவாரஸ்யமான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு