புத்தகம் பரிந்துரைக்கச் சொல்லி கேட்ட ஒரு தோழமைக்கான எனது விருப்பப் பட்டியல்: *(Content may not be suitable for all)
அன்புள்ள தோழமைக்கு,
தங்களைப் பற்றியோ தங்கள் விருப்பம், பணி, வாசிக்கும் பழக்கம் போன்ற எந்த அறிமுகமும் எனக்கு இல்லாத போதிலும் என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு சில புத்தகங்களை நான் பட்டியலிடுகிறேன். இவை என் All time favorites
1. “நம்மோடு தான் பேசுகிறார்கள்” - வம்சி பதிப்பகம் - சில நாட்களாக நான் அடிக்கடி குறிப்பிட்டும் சிலாகித்தும் பேசும் முக்கியமான புத்தகம் - இரண்டாவது அல்லது மூன்றாவது முறை வாசிக்கும் போது முற்றிலும் வேறு தளத்தைப் பற்றி பேசுவதாய் அமைந்திருக்கும். ஒரு உரையாடல் தான் என்றாலும் இதில் ஒரு வாழ்க்கை அழகாகச் சொல்லப் பட்டிருக்கும் அது மிக முக்கியமான பதிவு.
2. Shiva Trilogy - அநேகமாக நீங்கள இதை வாசித்து முடித்திருக்கலாம், இருந்தபோதும் என்னால் இதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை, புராணங்களை எந்த ஒரு நாகரிகம் அடைந்த சமூகமும் புறந்தள்ளிவிட முடியாது/கூடாது. அதை நவீனப் படுத்தி சுவாரஸ்யமாக - ஒரு சூப்பர் ஹிட் BEST SELLER தொகுப்பு இதைத் தவற விடக் கூடாது
3. இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரணம் கிடையாது எத்தனை விதமான கருத்தாக்கங்கள் இருக்கின்றன என்பது இந்த பட்டியலில் பார்த்துக் கொள்ளுங்கள்
அ. A brief history of India from the prehistoric times to the fall of vijayanagar - Oxford University Press - டிஸ்கவரி ஆஃப் இந்தியா போன்ற புத்தகங்களை விட இது உங்களுக்கு உதவும் என்பது என் நம்பிக்கை
ஆ. கிழக்குப் பதிப்பகத்தின் ”மொகலாயர்கள்“ - முதல் புத்தகத்தின் Sequalஐப் போன்று வாசிக்கலாம்
இதற்குப் பின்னர் இந்தியாவைப் பற்றிய Interpretations என தற்பொழுது வந்திருக்கும் எஸ்.ரா அவர்களின் “நான் கண்ட இந்தியா" மற்றும் சில classicsகளான “Makers of India" & “India after Gandhi” - Ramachandra guha - அர்விந் நீலகண்டனின் “Breaking India” போன்றன எனக்குத் தெரிந்த முக்கியமான புத்தகங்கள்.
4. வெகுவாக பாதித்த புத்தகங்களாய் நான் நம்பும் சில
அ. Everybody Loves A Good Drought - நாம் காணாத கிராமத்து மனிதர்களைப் பற்றிய ஆவனம் - Author -P.Sainath
ஆ. An autobiography of yogi
இ. Mahabaratham
ஈ. Experiment with the Truth - காந்தியின் சுயசரிதை
5. இது வரை நான் மறக்க முடியாத கதைகள் (classics)
1. Malgudi Days - RK Narayanan
2. பொன்னியின் செல்வன், யவன ராணி
3. பிறகு - பூமணி
4. தலைமுறைகள் - நீல.பத்மநாபன்
5. அம்மா வந்தாள் - தி.ஜ, கரிசல் கதைகள் - கி.ரா, ஒரு புளியமரத்தின் கதை - சுரா
6. Sea of Poppies, River of Smoke - Amithav Gosh -( இந்தியாவின் மிகச் சிறந்த நாவல் வரிசைகளில் ஒன்று)
7. புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் - பா.சிங்காரம்
*கவிதைகள் பற்றி இன்னும் எனக்கு அவ்வளவாகத் தெரியாது என்பதால் நான் அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை.
இப்படி ஒரு சின்னப் பட்டியலில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு நிறைய இடமுண்டு நானொரு டெக்ஸ் வில்லரின் ரசிகன். மற்றபடு நான் ஒரு பிரமாதமான வாசகன் அல்ல என்ற போதிலும் தேடித் தேடி வேறு வேறு துறைகளில் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அநேகமாக என் லிஸ்டிங் உங்கள் வீட்டிலேயே இருக்கலாம். ஆனால் இவற்றில் இல்லாத ஒரு புத்தகமேனும் உங்களிடம் இல்லாமலிருந்தால் நான் நிச்சயமாய் உறுதி அளிக்கிறேன், நான் பரிந்துரைத்தவை முக்கியமான புத்தகங்களே..
இந்த வருடம் வந்த புத்தகம் என்று நான் குறிப்பிட்டுச் சொல்ல இயலாமைக்கு மன்னிக்கவும். மற்றபடி நானும் தினசரி புத்தகச் சந்தைக்கு வரும் திட்டம் கொண்டுள்ளதால் அங்கும் என்னை சந்திக்கலாம் - விருப்பமிருந்தால்..
புத்தகங்கள் பரிந்துரை செய்த அன்புத்தோழருக்கு மிக்க நன்றி ... தாங்கள் பதில் அளிப்பீர்கள் என்று எதிபார்த்தேன்..... இதனை ஒரு பதிவாகவே இடுவீர்கள் என்று எதிபார்க்கவில்லை.....
பதிலளிநீக்குஇவற்றில் " நம்மோடுதான் பேசுகிறார்கள்" புத்தகத்தை தங்களின் ஒரு ஆக்சிடெண்டல் ஸ்டோரி பதிவின் மூலம் அறிந்து பனுவல்.காம்-இல் ஆர்டர் செய்து வாங்கினேன்....
நான் ஒரு கற்றுக்குட்டி வாசகி... தற்போதுதான் வாசிக்கவே கற்றுக்கொண்டுள்ளேன்....
தாங்கள் குறிப்பிட்ட புத்தகங்கள் யாவும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதை நானறிவேன்.... இவற்றில் மகாபாரதம், பொன்னியின் செல்வன், " Experiment with the Truth", "A brief history of India from the prehistoric times to the fall of விஜயநகர்" போன்றவற்றை மட்டுமே வாசித்துள்ளேன்....
வரும் பொங்கல் விடுமுறை தினங்களில் கண்காட்சிக்கு வர உத்தேசித்துள்ளேன்... தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.....
நண்பரே, மீண்டும் என் நன்றிகளை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்......

நன்றி. தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் புத்தகங்கள் இருக்கின்றன.. சந்திப்போம்.
பதிலளிநீக்கு14,15 ஆகிய தினங்களில் நான் புத்தக அரங்கு 307,308 - 353,354 இல் என்னைக் காணலாம்... (அரங்கு: டிஸ்கவரி புக் பேலஸ்)
பதிலளிநீக்கு