அம்மா ............
உன்னை
கழுத்து நிறைய நகைகளுடன்
கட்டி வைத்தனரா? :
அந்த புகைப்படம்
சொன்னது ஆமாம்
என்று :
எந்தையின் தொழிலுக்கும்;
என் பிறப்பிற்கும்:
பின் என் தம்பிக்கும்;எங்கள் படிப்பிற்கும் ;
உணவுக்கும் , நோயிற்கும் ,
என்று எல்லா நகையும் போனது ;
உனக்கு வாங்குவதற்கு கடை சென்றேன்;
அம்மா தங்கம்
வாங்கும் போது மட்டும் விலை அதிகமாம்;
ஒன்று மட்டும் கேட்கிறேன் அம்மா;
அந்த புகைப்படம் போல்
இன்றும் சிரிக்கிறாயே ??
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் தானே சாட்சி !!!!
உன்னை
கழுத்து நிறைய நகைகளுடன்
கட்டி வைத்தனரா? :
அந்த புகைப்படம்
சொன்னது ஆமாம்
என்று :
எந்தையின் தொழிலுக்கும்;
என் பிறப்பிற்கும்:
பின் என் தம்பிக்கும்;எங்கள் படிப்பிற்கும் ;
உணவுக்கும் , நோயிற்கும் ,
என்று எல்லா நகையும் போனது ;
உனக்கு வாங்குவதற்கு கடை சென்றேன்;
அம்மா தங்கம்
வாங்கும் போது மட்டும் விலை அதிகமாம்;
ஒன்று மட்டும் கேட்கிறேன் அம்மா;
அந்த புகைப்படம் போல்
இன்றும் சிரிக்கிறாயே ??
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் தானே சாட்சி !!!!
பருவமெய்திய சிரித்து நாளில்
உனது முத்தம் வெட்கம், நாணம் !!!
பரீட்சை எழுதும் போது,
உன் விரலில் சிந்திய மை !!
தூங்கும் போது புரண்டு படுத்ததால்
பழிவாங்கிய மருதாணியால் சிவந்த உன் நெற்றி!!
கோயிலில் விளக்கேற்றிய போது
உன் கண்ணில் தோன்றிய தீபம்!!
பள்ளித் தேர்வு முடிவு பார்க்கும் வேளை
படபடவென அடித்த உன் நெஞ்சம்!!!
கல்லூரியில் உன்னை சிலர் வம்பிழுக்க,
"எங்கேயடா போய் தொலைந்தாய் நீ" என்று
என்னை தேடி அலைந்த கண்கள் !!!
உன் நடனம் கண்டு அனைவரும் பாராட்ட,
மெய் மறந்து நின்ற என்னை அறியாது,
வஞ்சித்த உன் சிறு இதழ்கள்!!!
உன் தாவணிக்கு தோதான வாடாமல்லி!
முதன் முதலாய் நீ அணிந்த வெள்ளை சுடிதார்!
நடந்து வரும் போது என் கைகளில்
சிக்கிய உன் சிவப்பு நிற துப்பட்டா!!
நலினமாய் மடித்து கைக்குள் மறைந்திருக்கும்
ரோசாப்பூ படம் போட்ட கைக்குட்டை!!
முகம் சுளிக்க வைத்து அழகை
பேரழகாக்க வைக்கும் நீ தின்ற
சில மாங்காய் துண்டுகள் !!!
உன்னையும் மறந்து ஒரு நாளில்
நனைந்த அவ்வான் மழை !!!
இப்படியெல்லாம் கண்டு , ரசித்து வர்ணித்ததுண்டோ
உன் கணவன் !!!!???????
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2.ஈழத் தாயின் சத்தியம்
வற்றிய மார்பில் பால் வரவில்லை- பசியில்,
மாண்ட எம்மகனைக் கண்டு அழுத்திவிடவும் இல்லை,
களம் சென்ற என்கணவன் திரும்பிடவும் இல்லை,
குவிந்திருக்கும் பிணக்குவியலில் கிடக்கவும் இல்லை.
வெதும்பிய என்னை அவர்கள் விட்டுவிடவில்லை,
கதறிய எங்குரல் கேட்க அந்த கண்ணனுமில்லை.
ஆயினும் எமக்கு அவநம்பிக்கை இல்லை,
சத்தியம் தோற்ற சரித்திரம் இல்லை..
----------------------------------------------------------------------------------------------------------------------------------
3.வைரம்
காதல் ஒரு வைரம் போல,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
3.வைரம்
காதல் ஒரு வைரம் போல,
அதை பட்டை தீட்ட
பல காதலிகள் வந்து போவர் ...
and vice versa ..
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
4.ரயில் நிலையம்
4.ரயில் நிலையம்
கடைசி நிமிடத்தில்
நீ செல்லும் ரயிலை
கண்டுபிடித்தும் ..
கூட்டத்தில் என் சப்தம் கேட்காமல்
நீ முகம் திருப்பிய திசையில்
ரயிலும் நகர ஆரம்பித்தது .
என் நிம்மதி , காதல், ,வாழ்க்கை
எல்லாமே ஒரு ரயிலில் சூறையாடப்பட
அடுத்த ரயிலில் தலை வைக்க காத்திருந்தேன்.
அடுத்ததாய் வரும் வண்டி ,
சங்கொலித்து வரவேற்க ,
குதிக்க முற்பட்டேன் .
உனது குளிர்ந்த உடல்
என் முதுகை கட்டி "வேண்டாம் "
"நாம் வாழ வேண்டும் "என்றது .
திரும்பி பார்த்தால்,
Wrong number:-
கண்ணா!!! லட்டு திங்க ஆசையா !!!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மழை
அன்பே!!!
நீ தந்த முத்தத்தின்
எச்சிலாய் நினைத்து
ஒவ்வொரு துளியிலும்
நனைகிறேன்!!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முள்
ரசித்து ருசித்து
விழுங்கிய மீனின் முள்
கிளித்த தொண்டையினைப் போல்,
உன்னோடு கொண்ட காதலில்
என் இதயம் பிளந்தது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பார்த்து, சிரித்து , உருகி , மருகி , பேசி , பழகி , உணர்ந்து , கிறங்கி , அலைந்து , திரிந்து ,கெஞ்சி ,கொஞ்சி கனிந்தது
காதல்
"நாம் அடுத்த ஜென்மத்தில் இணைவோம்" எளிமையாய் என்று பிரிந்தாள்..
காரணத்தை தேடி பைத்தியமாய் நான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------உதிர்ந்துவிட வேண்டிய
காட்டயத்திலிருக்கும் சருகாய்,
கதிரவன் மறையும் முன்பு
கடைசியாக பார்க்கும் சூரியகாந்தியாய்,
வெட்டப்படும் நேரம் நெருங்குவதையுணராது
உரிமையாளனின் காலில் தன்கொம்பினைச்
சொறியும் வெள்ளாடாய்,
காத்திருக்கும் வலையை நோக்கியே
அதிர்நீச்சல் அடித்து வரும் ஆற்றுமீனாய்,
நிலையற்ற வாழ்வில்
சூன்யத்தின் பிரதிபலிப்பாய்,
திசையறியாது - பாதை தெரியாது
பயணத்தின் முடிவு தெரியாது
மனதின் உந்துதலில் - ஏதோ ஒரு
பொக்கிஷமென காலிபெட்டியினைச் சுமந்து
உள்ளிருக்கும் விழிப்புணர்வை,
உலகெல்லாம் தேடியலையும் முட்டாள்தனத்துடன்
ஒரு தேடல்,
ஒரு விடியல்,
இன்னும் புலப்படாமல்.........
-----------------------------------------------------------------------------------------------------------------
காதலைத் தான் சொல்லப் போகிறேன்
என்று அவளுக்கும் தெரியும்
தன்னை நிராகரிக்க தான் போகிறாள்
என்று எனக்கும் தெரியும்
எங்களுக்குள் என்ன நிகழ
இருக்கிறது என்று தெரியும்
தெரிந்தும், புரிந்தும், அறிந்தும்
ஏன் என்று கேட்காது ,
அடுத்த நாள் சந்திக்க இடம் குறித்தோம்.
இளவேனில் மாலையில் எங்கள்
நண்பனின் அலுவலகம் தேர்வானது
காலங்காலமாய் நண்பர்கள் தானே
காதல் செடிக்கு உரம்??
சம்மதித்தான். சந்திக்க இடமளித்தான்.
இறைவன் உருவாக்கிய
காதல் மலராம் ரோஜா
என் சிந்தையில் வந்து
இன்று என் விலை இருபது என்றது,
பூக்கடைக்கு சென்றேன்.
கூட்டமாய் இருக்கும் மலர் செண்டு
கவர்ச்சியாய் தோற்றமளித்தது,
இதயம் - மனிதனுக்கு ஒன்று தானே !
ஆக வாங்கினேன் ஒரே ஒரு
இதயப் பூ!!!
நூறு தடவை கண்ணாடி பார்த்தாலும்
திருந்தாத முக வெட்டு எனக்கு,
முதல் தடவை பார்க்கும் போதே - பிம்பமும்
ஆசை கொள்ளும் வதனம் அவளுக்கு.
கனிந்துக் கொண்டிருந்தக் காதலை- அவள்
கைகளில் தரும் வேளை,
காலங்காலமாய் நண்பர்கள் தானே
காதல் செய்ய இடைஞ்சல் ?
துரத்தினேன் -அவன் கால்களில் விழுந்து,
சிரித்தபடியே வெளியில் சென்றான்
முதல் முறை என் முகம் பார்க்காது
அவள் தலை குனிய - நாணம்
பொய்யல்ல என்றேன், எனக்குள்.
தித்திக்காத முகம் தானே என்று
பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஏதும் அறியாதவள் போல்
"ஏன் இங்கு அழைத்தாய் ? "என்றாள்.
புரிந்தும் கேட்கிறாள் என்று புரிந்தாலும்
இயம்பாது, "முக்கியமான விடயம்" என்றேன்!!
என்ன என்று கேட்கும்- அவள்
இதழில், ஆர்வம் இருந்தது,
தெரியாதது போல் நடிக்கும்- அவள்
கண்ணில், பொய் இருந்தது.
கையிலெடுத்த ரோஜாப்பூவை
நானே கொடுக்குமுன்- என்னிடமிருந்து
பிடுங்கி ," மிக அழகாய் இருக்கிறது"
என்று நன்றி சொன்னாள்
குழம்பிய என்னை கவனித்துக்
கொண்டு - புன்னகை பூத்தாள்
இது வா என் காதலைச் சொல்லும்
வேளை ????
----------------------------------------------------------------------------------------------------------------------------
நீ ஒரு கொடுமைக்காரி
கனவுக்குள் மட்டும்
----------------------------------------------------------------------------------------------------------------------------
நீ ஒரு கொடுமைக்காரி
கனவுக்குள் மட்டும்
வந்து என் காது மடல் கடிப்பாய்!!
திரும்பி பார்க்க ஆகும் ,
கணங்களை விட வேகமாய்
மறைவாய்
கூட்டத்தில் சென்றால் மட்டும்
என் பெயர் சொல்லி அழைப்பாய்!!
யாரென்று தெரியாமல் நான்
படும் பாட்டை ரசிப்பாய் !!
இமை மூடும் வேளைகள் மட்டும்
எனை கடந்து போவாய் !!
எனைக் கொல்கின்ற வேலையை
விரதம் போல் செய்வாய் !!