புதன், 1 ஜனவரி, 2014

பஜ்ஜி - சொஜ்ஜி - 53 / ஹீரோக்கள் தேவை - To Address : தமிழ் இலக்கிய உலகம்

Amish -Author- Shiva Trilogy


ஒரு வழியாக புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கும் பொழுது, எங்கள் யாவரும்.காம் சார்பாக வரயிருக்கும் முதல் புத்தகமான வா.மணிகண்டனின்(லிண்ட்சே லோஹன்) சிறுகதைத் தொகுப்பிற்கான வேலையில், நேற்று பிரிண்டிங்கிற்காக அனுப்பி வைத்தபடி வந்தோம்.

இந்த மாதம் 21இல் யாவரும்.காமிற்கு மூன்றாவது பர்த்டே, இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு 16 கூட்டங்கள் நடத்தினோம், அத்தனையும் வெற்றி பெறவில்லை என்றாலும் எல்லாவற்றிட்கும் சமமாகவே உழைத்தோம், ஆரம்பத்தில் கடினமாக இருந்த பிரச்சினைகள் எல்லாவற்றையும் சமாளிக்கப் பழகி விட்டோம். இந்தோ - வா.மணிகண்டனின் மின்னல் கதைகள் அச்சுக்குப் போய் விட்டது, இந்த வருடம் மேலும் சில புத்தகங்கள் வருவது உறுதி - குறைந்தபட்சம் ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு என்று விரும்புகிறோம். விருப்பங்கள் யாவும் எளிமையானதல்ல என்று தெரியும்.. இன்றிருக்கும் நிலைமையில் புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பு மிகவும் குறைந்து கொண்டே தான் போகின்றது.
எனினும் ஒவ்வொரு வருட புத்தகச் சந்தையும் காட்டும் பிரம்மாண்டம் என்னளவில் நம்பிக்கையை விதைத்து தான் வைத்திருக்கிறது.

இதற்கான மார்கெடிங் யுக்திகள் சரியான முறையில் கையாளப்பட்டால் வெற்றி கிட்டும் என்றே நம்புகிறேன். வியாபாரத்தில் வெற்றி பெறுபவர்களில் இரண்டு வகையான தொழில்முனைவோர்கள் இருக்கின்றனர் - ஒருவர் இன்னொவேடர்(Innovator), மற்றொருவர் இமிடேடர்(Imitator). இதில் இரண்டாம் ரகத்தை சார்ந்தவர்கள் தான் அதிகம் வெற்றி பெறுவார்கள். இவர்கள் தான் ஒரு வணிக மையத்தை (Business Cluster) ஒரு நிலப்பகுதியில் உருவாக்க முடியும். ஒரு Innovator-ஓ தனது முதல் முயற்சியாக ஒரு சந்தையையோ, புதிய வணிக யுக்திகளையோ அல்லது மாறுதல்களையோ உருவாக்குவான். அதில் இருந்து பெறக் கூடிய அனுபவங்கள், லாப -நஷ்டங்களை கணக்கில் கொண்டு ஒரு Imitator பயணத்தைத் தொடர்வான், பாதை இலகுவானது. இதில் தவறேதும் இல்லை - சந்தை அதற்கான இடத்தை உருவாக்கும் இயல்பு கொண்டது தான். ஒரு இன்னோவேடரை அடுத்த நிறுவனங்களின் செலவுகளையும், அடக்கவிலைகளையும் குறைக்க பல வகையில் காரணமாவான். அநேக வேலைகளில் உருவாக்குபவனை விட தொடர்பவன் எளிதாக வெற்றி பெறுவான், அவனை முந்தி விடவும் செய்வான். ஆனால் ஒரு சந்தையை சரியாகப் புரிந்து கொள்பவன் எப்படியும் வெற்றி பெறுவான்.

இங்கே எத்தனையோ பதிப்பகங்கள் இருக்கின்றன - இந்த சந்தையில் புதிதாக இறங்குபவனுக்கு இரண்டு யோசனைகள் இலவசமாக வருகின்றன.
1.தமிழ் வாசகர்கள் குறைந்தே விட்டார்கள்
2.லைப்ரரி ஆர்டர்கள் இல்லாமல் போய் விட்டன.

இந்த இரண்டிற்கும் பதில் சொல்லாமல் அடுத்தடுத்த முயற்சியில் இறங்க முடியாது. நண்பர்களையும் சம்மதிக்க வைக்க வேண்டுமென்றால் இந்த முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றாக வேண்டும். இதில் பல பரிட்சார்த்த முறைகளைக் கையாண்டு வரும் கிழக்குப் பதிப்பகம் - பத்ரி அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான். அவரைப் பின் தொடரலாம். அப்படி சில திட்டங்களை செயல்படுத்த வேண்டும், பார்ப்போம் எப்படியிருக்கிறது முடிவு என்று.

தி.நகரில் உள்ள நடைபாதை கடைகளில் - சிவா ட்ரைலாஜி, சேட்டன் பகத்தின் விற்பனை எண்ணிக்கையை கேட்டுப்பாருங்கள். உரிமம் இல்லா பதிப்பில் ஆயிரக்கணக்கில் விற்றுத் தீர்கிறது. தமிழ் புத்தகங்களுக்கும் வாசகர்களுக்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்கான பெரிய அளவில் எந்த முயற்சியும் நடந்தேறவில்லை, ஆனால் மேலை நாட்டு புத்தகங்களில் இருந்து சேட்டன் சர்மாவிற்கும், அமிஷிற்கும்(Shiva-Trilogy), அஷ்வின் சங்வி(krishna key) என மாறிய வாசகர்களின் எண்ணிக்கையை பார்க்க வேண்டும். இந்த ஒப்பிடல்கள் இந்திய அளவில் என்றாலும் தமிழர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் பெரிய வித்தியாசம் வரும்.

அப்படி சில புத்தகங்கள் (கல்கி, சாண்டில்யன், சுஜாதா வாயிலாக சமகால இலக்கியங்களுக்குள் நுழைந்த வாசகர்களைப் போல்) நம் நிலத்தில் பெரும்வாரியாக வாசிக்கப்படும் போது இன்னும் ஒரு வட்டம் புதிதாக இலக்கியங்களை நோக்கி வரும். சரியான புரமோஷன்களும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊட்டும் விழிப்புணர்வும் தான் அவசியம். அந்தப் பணியை அரசும், பெரியா பப்ளிஷர்களும் தான் செய்ய வேண்டும். ஆனால் அரசுக்குத் தான் டாஸ்மாக், ஆற்று மணல் அள்ளுவது போன்ற அத்தியாவசியப் பணிகள் இருப்பதால், அந்தப் பணியை யாராலும் கையெடுக்க முடியாமல் இன்று ஒரு பெரிய இடைவெளி உருவாகிவிட்டது. ஒவ்வொரு விற்பனை மற்றும் சேவை வரிகளில் வசூலிக்கப்படும் EDUCATION மற்றும் HIGHER EDUCATIONக்கு - பிம்பிளிகா பிலாபி என்று அரசும் லாட்டரி விற்கிறது

கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மற்ற புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், வாசிப்பைக் குழந்தைகள் இலக்கியத்திலிருந்தே பயிற்றுவிக்கப் பட வேண்டும். அது மட்டுமே ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும். அதே சமயம் சந்தையின் நலனுக்காகவாது ,ஏற்கனவே சொன்னது போல் புரோமாஷன்களும் அவசியம், நட்சத்திர எழுத்தாளர்களும் அவசியம். இங்கே இன்னும் ராபின் ஷர்மாவிலிருந்து பல சுயமுன்னேற்ற எழுத்தாளர்களையும் துரத்துவதற்கு ஒரு ஹீரோ அவசியம்.


தெரியுமா உங்களுக்கு ??அமிஷ் திரிப்பாதியின் ராயல்டி ஒரு மில்லியன் டாலர்...!!!

நம்ம ஊரிலும் அப்படிப்பட்ட மீட்பர் உருவெடுப்பார் என்று வேண்டிக் கொண்டே விடை பெறுகிறேன்..


நன்றி
ஜீவ.கரிகாலன்

(குறிப்பு : இந்த வலைப்பூவில் வலது புறம் இருக்கும் விளம்பரத்தில் க்ளிக்கினால் எனக்குப் புத்தாண்டு பரிசாக இருக்கும்)


5 கருத்துகள்:

  1. இரண்டு புத்தக விளம்பரம் போட்டிருக்கின்றேனே அதைச் சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. Thanks for reply my friend.... நீங்கள் ரசித்த புத்தகங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிட்டால் வரும் புத்தகக் கண்காட்சியில் நான் சில தரமான புத்தகங்களை சேகரிக்க உதவியாக இருக்கும் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் உங்களுக்காக என் அடுத்த பதிவு - புத்தகப் பரிந்துரை..

    தங்கள் விருப்பம், துறை, வாசிப்பு சார்ந்த புரிதல் இல்லாததால் நானாக பரிந்துரைக்கும் பட்டியல் இது. இதில் குறிப்பிட்ட சில புத்தகங்கள் சந்தையில் கிடைக்காமல் போனால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு