ஞாயிறு, 26 ஜனவரி, 2014

பாதையில்

உடல் எடை சுமையாகும்
ஆன்மாவின் பொழுதுகள் அவை
 .
நானென்கிற கர்வம்
நோய்மையில் கரைந்திட,
எஞ்சியிருந்த
ஒரு சொல் தான்
நம்பிக்கை கோபுரத்தின்
அஸ்திவாரம் தகர்க்கிறது

அசைவுகளில் எல்லாம்
தசைகள் உதிர்வதாய் பெருவலி ஒன்று

செவிடாகும் வரம் கேட்கத் தூண்டும்
அகத்தின் தப்பித்தலுக்கான வேண்டுதல்கள்
பேரிரைச்சலுடன் இரைகின்றன.
இமைகளுக்கு முன்னே
சூன்ய இருள்.

இத்தனையும் கடந்து வாழப் பணிக்கும் மூளையின்
அபைத்திய நிலைக்கு
ஒரு பிடி அன்புச் சோறாவது போடுங்கள்
வாழ்ந்து தொலையட்டும்

-ஜீவ.கரிகாலன்

1 கருத்து:

 1. //இத்தனையும் கடந்து வாழப் பணிக்கும் மூளையின்
  அபைத்திய நிலைக்கு
  ஒரு பிடி அன்புச் சோறாவது போடுங்கள்
  வாழ்ந்து தொலையட்டும்//

  வாழ்ந்துவிடு என வழிநடத்தும் அறிவுக்கு (மூளைக்கு)த் தெரிவதில்லை இந்த வீணாய்ப்போன மனதைச் சமாதானப்படுத்த.....

  பதிலளிநீக்கு