செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பஜ்ஜி சொஜ்ஜி -59 / காமன் பண்டிகை vs ஜீவ.கரிகாலன்




நேற்று ஃபேஸ்புக்கில் சாதாரணமாக ஒரு பதிவிட்டேன் :

நாளை பிப்ரவரி 4, வஸந்த பஞ்சமி ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக காதலை கொண்டாடி வரும் இனத்தின் காதலர் தினம் - காமன் பண்டிகை, இன்னும் தஞ்சை, குடந்தையை சுற்றிய பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது.... இதை மாசி மாதம் பௌர்ணமி தினத்திலும் கொண்டாடுவார்கள்
மன்மதனை எரித்துவிட்ட சிவனிடம் ரதி முறையிட்டு தன் காதலனை மீட்ட தினத்தை கொண்டாடுவர்.

ஒரு நண்பர் எனக்கு கருத்திட்டது அதிர்ச்சியாக இல்லாத போதிலும், பெரும்பாலும் இது போன்ற விவாதங்களை ஏற்படுத்துவதோ அல்லது கலந்து கொள்வதோ வெறும் நேர விரயமின்றி வேறேதுமில்லை என்று எனக்குத் தோன்றியது, அந்த நண்பரின் கருத்தும் என் பதிலும் கீழே:

நண்பர்: இதைத்தான் காதலர் தினத்திற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் காரன் முன் வைத்துவருகிறான்.

நான்: எல்லா தினங்களும் சந்தைப் பொருளாதாரத்திற்கு தான் உபயோகப்படும், எப்படியோ ஒன்று கொண்டாட்டம் இருந்தால் நல்லது தானே!!!

நண்பர்: வசந்த பஞ்சமி எனப்படும் பஸந்த பஞ்சமி இந்துமக்கறையோடு இருப்பதுதான் நமக்குப் பிரச்சினை.

நான் : உங்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றலாம், அதில் எனக்குப் பிரச்சினையில்லை..

அந்த நண்பர் திரும்பவும் காட்டமாக என்னிடம் பதில் சொல்லியிருக்கலாம், நானும் பதில் பேசியிருப்பேன். ஆனால் இது நான் ஏற்கனவே சொன்னது போல நேர விரயமேயன்றி வேறேதுமில்லை. ஏனென்றால் இந்த உலகில் (அதுவும் விக்கிப்பீடியா உள்ள இந்த உலகில்)எந்த மனிதருமே முட்டாளில்லை. இன்றைய உலகில் தனக்கு வேண்டியதை தான் விரும்பியதைப் போன்றே தெரிந்துகொள்வதற்கும், நம்புவதற்கும் உதவும் எல்லா தொழில்நுட்பங்களும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றன. எல்லா சித்தாந்தங்களையும் வலிமையானதாகவும், வரலாற்றுப் பின்புலத்தோடும் கட்டமைத்து நாம் பிறருக்கு பயிற்றுவிக்கிறோம். ஆதலால் யாருடைய கருத்தும் சோடை போகாது என்பது நிதர்சனம், ஆகவே விவாதங்களில் பெரும்பாலும் நேர விரயமே மிஞ்சுகிறது. 

இப்போ ஒரு சுயமதிப்பீடு - நான் இது வரை கலந்துகொண்ட விவாதங்களில் சில தடவை என் கருத்துகளை பின்வாங்கியிமிருக்கிறேன், பலவிதமான கருத்தியல்களை ஏற்றுக் கொண்டே தான் வந்திருக்கிறேன். இப்போதும் ஏதாவது ஒரு நொடியில் நான் இந்தைய கணத்தில் இருக்கின்ற என்னோடு முரண்பட்டு இருக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக இது ஒரு நிலையற்ற தன்மையாக பார்க்கப்பட்டாலும் எனது முயற்சியெல்லாம் ஒரு நல்ல பயணத்திற்கான எத்தனிப்பே!!

சரி, எதற்காக இந்தப் பதிவு என்று தொடங்கியப் பிரச்சினைக்கே வருவோம், அதில் ஏன் எனக்குப் பிரச்சினையில்லை. இன்றைய காதலர்தினம் என்பது அப்பட்டமான ஒரு சந்தைக்கான கொண்டாட்டமே!! எல்லா பண்டிகைகளின் நோக்கமுமே அதுதான். நமது பொங்கல் பண்டிகை இதற்கு ஒரு சிறந்த எடுத்து காட்டு, இன்னும் எத்தனை கிராமங்களில் பொங்கலுக்கென உருவாகும் தற்காலிக சந்தையை நினைத்துப் பாருங்கள், தீபாவளிச் சந்தையும் பொங்கலுக்கு இணையான பொருளாதார பரிமாற்றங்களைக் கொண்டுள்ளது என்பதைக் கணக்கிலிட்டுக் கொள்ள வெண்டும் (முன்னது விவசாயிகளுக்கு, பின்னது வேலை பார்க்கும் சமூகத்திற்கு). பண்டிகை என்ற ஒன்றில்லாவிட்டால், கிராமங்களின் வாழ்கைச் சக்கரம் அச்சு முறிந்ததாகிவிடும்.

பல கிராமங்களில் ஊர்த்திருவிழா நடக்கவில்லை என்றால் கடவுளுக்கு கோபம் வந்துவிடும், பின்னர் கிராமத்தில் பஞ்சம் வரும் என்று சொல்லும் மக்கள் உணராத உண்மை அதுதான்.  ஒரு நிறுவனமாய் இல்லாத கிராம அமைப்பு - கோயிலை வைத்தும் (temple centric) கோயிலைச் சுற்றி அமையப்பெரும் சந்தையை வைத்தும் தான் உருவாகிறது, இந்த அமைப்பில் நடைபெறும் பரிவர்த்தனைகள் தான் ஒரு கிராமத்தில் மக்களை தக்க வைப்பது, இது சரியாக அமையப் பெறாத கிராமங்களில் மக்கள் இடம்பெயர்வர்.

இப்போது நீங்கள் கோயில்களையும், பண்டிகைகளையும் முன்வைத்து வரும் அநீதிகளை சுட்டிக் காட்டலாம, எல்லா வகையான அமைப்பிலும் சில தடைகள் இருக்கவே செய்கின்றன(restrictions). அவை சமூகத்தில் ஒரே மாதிரியான பலன்களைத் தந்துவிடுவதில்லை (System formed with flaws as its nature). அதே சமயம் திருத்துவதற்காகவும் உடனேயே இசைந்து கொடுப்பதில்லை, ஆனா திருத்தவோ மாற்றவோ முடியாது என்பது ஏற்க முடியாதது. ஏனேன்றால் எல்லா மாற்று சித்தாந்தங்களும் இதே மாதிரியான உடலமைப்பைக் கொண்டவை தான், தோல் நிறமும் - ஆடையும் தான் வெவ்வேறு.

சரி, இப்போ காமன் பண்டிகை பற்றிப் பேசுவதற்கு ஏன் இந்த லோலாயி... காதலர் தினம் கொண்டாடலாமா வேண்டாமா??நான் மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் காதலர் தினம் கொண்டாடப்படாமல் விடப் போவதில்லை. உலகமயமாக்கப்பட்ட பின்னர் உலகின் எல்லா மூலைகளும் இணைக்கப் பட்டுவிட்டன, அதை இணையம் வெற்றிகரமாகச் சாதித்துவிட்டது. எல்லா நாட்டு மனிதர்களுக்கும் பலவிதமான மொழி பேசும், நிறங்களுடைய, இனத்தைச் சேர்ந்த, மதத்தை நாடுகின்ற மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகளுள் முக்கியமானவை ஒன்று பணம் சேர்ப்பது , மற்றொன்று காதல் தான். ஆயிரம் தான் பழமை பேசினாலும் அல்லது நவீன - முற்போக்கு சிந்தனைகளை முன்வைத்தாலும் உலகமே ஒரு கொண்டாட்டத்தை ஏற்றுக் கொண்ட பின் இதற்கு தடை போட முடியாது. 
அதே சமயம் தடை கோருபவர்கள் மற்றும் அவர்களை எதிர்ப்பவர்களின் அரசியல லாப நோக்கங்களைப் பற்றியும் எழுத அவசியமில்லை, ஏனென்றால் அதில் எந்த பலனும் கிடையாது.

எனவே, இந்த தினத்தை நான் உலகமயமாக்கலால் விளைந்த நன்மையென்றுக் கருத இந்த சூழல் எனக்கு இடமளிக்கிறது.

 “இல்லை” என்று வாதிடுவதற்கு நான் சொன்ன உலகமயமாக்கல் என்ற சொல் தான் காரணம் என்றால் நீங்கள் பேசுவதில் என் நேரம் விரயமாகாது. ஆனால்  காதலர் தினத்தின் வரலாறு அதன் பிற்போக்குத் தன்மை குறித்து விவாதம் செய்யும் முன்பு இதற்கு பதிலளித்துப் பார்ப்போமா? :

“ஒவ்வொரு காதலர் தினத்திலும் காதலர்கள், அந்த வேலன்டைன் எனும் நண்பனுக்காக - அவர் தியாகத்தை எண்ணி மவுன் அஞ்சலி செலுத்துகிறார்களா?? அல்லது தங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கிறார்களா??”

“..”

“பாஸ் ... இன்றைய ஒரே தேவை கொண்டாட்டத்திற்கான காரணம் மட்டுமே, அதன் ஹிஸ்டரி - ஜியோகிராஃபி இல்லை”

மற்றபடி காமன்பண்டிகை எனும் காதலர் நோண்பும் அதன் தொன்மையும், அழகியலும் காதலர்தினத்தை விடச் சிறந்தது தான் என்று நம்பும் நான் அதை இடைஞ்சல்களே இல்லாத பதிவாக அடுத்தப் பதிவில் பதிவிடுகிறேன்.

- நன்றி
ஜீவ.கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக