புதன், 8 ஆகஸ்ட், 2012

கணம் பொருந்திய மீடியாக்களே, கொஞ்சம் அடக்கி வாசிங்க !!என்னங்க உங்க விளம்பர வருமானம் எல்லாம் திருப்திதானா?? இப்போ சென்சேஷனல் செய்தி ஒன்னு கிடைத்துவிட்டது, உங்களுக்கு என்ன ? ”நான் அப்பவே சொன்னேன், தலையங்கம் எழுதினேன்” என்று எங்கள் நடுத்த்ர மக்களை சாடுவீர்கள். 


PANIC SELLING என்று ஷேர் மார்கெட் சரியும் பொழுது ஒரு நிகழ்வு வரும். அதாவது ஒரு நிறுவனத்தின் வியாபரத்தில் எந்த ஒரு குறிப்பிடத் தகுந்த சரிவும் இல்லாமல் இருப்பினும், மார்கெட் மீது கொண்ட அவநம்பிக்கையில் எல்லா முதலீடுகளையும் விற்பதற்கு பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் முனைவார்கள் , அதனால் மார்கெட் சரிவு மிகவும் ஆழமாகப் போய்விடும். அதுபோல இந்த நிதி நிறுவனம், சிட் ஃபண்ட், நகைச் சீட்டு, ஏலச் சீட்டு நிறுவனங்கள் என சில நல்ல நிறுவனங்கள் கூட இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிவிடும்.
எல்லா முதலீட்டாளர்களும் ஒரே சமயத்தில் எல்லா முதலீடுகளையும் திரும்பப் பெற்றிட வலியுறுத்தினால் இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி கிடையாது.. இந்த தொழில் உடனடியாக முடக்கப்பட்டால் எத்தனை தற்கொலைகள் வருமென்று உறுதியாய்ச் சொல்ல முடியாது. ஷேர் மார்கட்டில் ஃப்ரீஸ் பண்ணுவதுபோல் இந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து செயல்பட வைக்கவும் முடியாது.. முதலில் போலீஸ், அப்புறம் சிபிஐ அதன் பின் பொருளாதரக் குற்றப் பிரிவு என்று அலைய வேண்டும்.

விளம்பரம் என்றால் வாயைப் பிளந்து வாங்கிய பத்திரிக்கைப் பெரு மக்களே இதை sensation ஆக்கிட இதன் எதிர்வினை மிரட்டப் போவது முதலீட்டாளார்களைத் தான்...

புதன், 1 ஆகஸ்ட், 2012

பிதற்றல்கள் - 1


முட்டை உடையும் வரை
இருந்த உயிர் ரகசியம் தான்,
இறப்பைத் தேடிச் செல்லும்
பிறப்பின் விடுகதை,

எதையும் தீர்க்க முடியா
அற்ப மானுட வாழ்வில்
ஆனந்தத்தால் நிரம்பியிருக்கேன்
இருப்பேன்...


---------------------------------------------------------------------------------------------------------------------

புரண்டுப் படுக்குமுன் 
சூழ்ந்திருந்தத் தீ வந்து 
கரியாகப் பொசுக்கியும்,
அணையாத காமத் தீயில்
எச்சில் தெளித்து செய்தாள்
ஈமக் கிரியை


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


என்னை
மறந்து விடச் சொல்லி 
பறந்து விட்டவளே!!
உன் நக இடுக்குகளில் 
மறைந்திருக்கும் என்
சதையைக் கழுவி விட்டாயா??

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------