பரிதி வெயிலில் சருகாகி
எஞ்சிய உடம்பின் வெப்பம் ,
அவளில்லாத மாலையை
இறைவன் அளித்த பரிசாய்
நகரத்தில் எஞ்சியிருக்கும்
ஒரே நிம்மதி
நிலாவைப் பார்ப்பது தான்!!
அன்று -
எனக்கான நிலவு ஒன்று
முழு முகம் காட்டிக் கொண்டு ,
தென்னை மரக் காற்றோடு
சரசரவெனப் புணர்ந்து
சன்னல் வழியே
பச்சை வாசத்துடன்
என்னை வெள்ளிப் பாலால்
நனைத்தது.
பால் நிலவொளி கொடுத்த
பாலுணர்வு நரம்புகளின்
வழியே -அவள் முகம்
தெரிந்தது என் மூளையில்!!
நிலவை என்னுள்ளிருந்து
வெளியெடுத்து வீசி ,
மிஞ்சியிருக்கும் மங்கிய
ஒளியில் அவள் அங்கம்
புலனாகிட ,
குளிர் தென்றலும்
வெப்பத் தனல் மூட்டியது
நினைவுகளில் அவளிருப்பதால்
சுகிக்க முடியாத நிலவு ..
இன்றும் என்
கவிதை எழுதாதப் பக்கங்களின்
பாடு பொருளானது :(
exotic lines kalidaas.
பதிலளிநீக்குvery nice lines kalidaas.all the very best for ur new carreer.
பதிலளிநீக்கு