புதன், 25 ஜனவரி, 2012

பரம பதமும் - பொக்கை வாய் முத்தமும்

பரம பதமும் - பொக்கை வாய் முத்தமும் 

எத்தனை முறை அழைத்தாலும் 
விளையாட வர வேண்டும்!! - 
எப்படியும் தோற்றிடவே நீ விரும்புவதால்
ஒவ்வொரு சர்பங்களையும் நாடவேண்டும் 

பகடையின் தாயங்களைச் சிலநேரம் ,
நீ விழுங்கிவிட வேண்டும் -
உன்னைத் தீண்டும் சர்ப்பங்களால்
அவன் மகிழ்ச்சியுருவதால் - உன்
சர்ப்ப தோஷக் காலங்கள்
நீட்டிக்கப் படலாம், மகிழ்ந்திருப்பாயா?

அவன் கள்ளத் தனமாய் சிரித்தபடி
முன்-பின் காய் நகர்த்துதலில்,
உன் அரைகுறைப் பார்வையும்
தொலைத்துக் குருடியாக வேண்டும்!!

தாயம் விழாத கோபத்தில்
தூக்கியெறியும் காய்களைப்
பொறுக்க, உன் தேய்ந்து போன
மூட்டினை மறந்து விட வேண்டும்!!!

இத்தனை செய்தும் உன்
பேரன் தோற்றிடின் - தேற்றிட
அவனுக்கு வேண்டும், உன்
பொக்கை வாய் முத்தம்..

அவன் எழுந்து போய்விட்டானென்று
அதற்குள் களைப்படையாதே!!
மறுபடியும் மின்சாரம் போய்விடும் !!

5 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இதோ எனது சில வரிகள், தங்களின் கவிதை தொடர்ச்சி!

    "ஏற்றமும் இறக்கமும் உனக்கென்ன புதிதா கிழவி?!
    உன் அமரக் கணவனின் அந்நாள் முத்தத்திலே
    ஏணி ஏற்றம் போல் சட்டென மேல் எழுந்தாயே..
    உன் அன்பு மகனின் கடுஞ்சொல் கேட்டுப் பின்னாளிலே
    நாகம் கொத்தினார் போல் கீழ் விழுந்தாயே.
    ஏற்றமும் இறக்கமும் உனெக்கென்ன புதிதா கிழவி!

    ஏற்றமும் இறக்கும் வாழ்வின் அம்சம் என்பதை நீ நன்கரிவாயே கிழவி!

    பேரனிடம் மேலேறி, கீழிறங்கி, வாழ் மகிழ்ந்து பொக்கை வாய் முத்தமொன்றும் கொடுத்திடேன்,
    என் இனிய கிழவி!"
    :)

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு நீங்கள் ஒரு பல்கலை வித்தகன்.. உங்களிடம் நெருங்கி இருப்பதில் எனக்கு எப்பவும் மட்டற்ற மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு