தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை..
முரட்டு உருவத்தை
விரும்பி ஏற்கும்
உள்ளங் கணிந்தச்
செண்பக மலரைத்,
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை..
தடித்த தோள்களில்
தலை சாய்க்கும்
அன்புத் தமிழ்
பதுமையினை,
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை..
தன்னைப் போல என்னை
பார்க்கும் அவளுக்கு
இன்னொரு கண்ணிற்கு
இடம் பெயர்க்க,
எவ்வளவு கேட்டும்
வைக்காத நெற்றியில்
திருநீறு பூச,
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை..
மனதை தைத்த
விடலைக் காதல்
வடு மறைய,
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை
எழுத முடியாத
வெற்றுப் பக்கங்களில்
வாழ்க்கை எனும்
கவிதை எழுத,
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை
என் சித்தாந்தத்தை
கொள்கையினை,அபத்தத்தை
பித்தத்தை மாற்றிட
ஒரே நம்பிக்கையாய்,
இன்னும்
தேடிக் கொண்டே
இருக்கிறாள் உன்னை..
ஆனால் அவளுக்கு
தெரியாது,
நான் பிறக்கும் முன்பே
என்னுள் கலந்து விட்ட நீ,
பூரணமாய் என்னைச்
சேர்ந்து விட்ட சங்கதி!!
அவள் திட்டுவதும்,
அணைப்பதும், அடிப்பதும்
தலை கோதுவதும்,
முத்தமிடுவதும் கொஞ்சுவதும்
உன்னைத்தான்...
நீயே சொல்
அவளுக்கு நான்
என்ன சொல்லவென்று ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக