திங்கள், 2 ஜனவரி, 2012

2012 - பிரளயம்

காந்தப் புலத்தின் திசையானது
 தலைகீழாய் மாறிடுமாம் -
அது பிரளயம் என்று பெயர்
 கொண்டு மையம் கொள்ளுமாம் .

ஆயிரமாண்டுகளாய் வளர்த்து
வந்த அறிவியல் மரம் ஒன்று,
அடியோடுப் பெயர்ந்து விடுமாம் -
அடிப்படையே முற்றிலுமாய் மாறிவிடுமாம்.

 கதிரவனின் கடுஞ்சூடு, புயலாய் மாறிட
 அதனைச்சுற்றி வந்து மையல் கொண் ட
 திங்களும், செவ்வாயும், வெப்பப்புயலில்
  புணர்ந்து பின் மடிந்து விடுமாம்.

 நீரிருந்த வெற்றிடத்தின் பூமித்தகடுகள்
 ஒன்றோடொன்று உடைத்து
ஆழியைப் பெயர்த்திடுமாம்,
ஆழ்குழாய் கிணறு கொண்ட
நகரங்கள் மூழ்கும் வரை..

 மனிதம் சேர்த்து வைத்த
அமிலங்களும், அனுக்கதிர்களும் -
உடன்போக்கிருந்து,  கலவி கொண்டு
உமிழ்ந்துவிடுமாம்
 கதிரியக்க விந்துக்களை!!

பஞ்ச பூதங்களும் கூட்டணி
அமைத்து பிரபஞ்சக் கட்சியிலிருந்து,
 பூமியை நீக்கிட அசுரப் போர்
தொடுத்தும் - தோற்றிடுமாம்
 மனிதம் முன்னே !!!!

 அன்று  நல்ல நேரம் பார்த்து
 வந்த பிரளயத்தை முந்தியது மனிதமே.
 ஆம் ,முந்தைய நாளில்தான் முடிந்தது
  மூன்றாம் உலகப் போர் - இன்று
 பூமி வெறும் வெற்றிடம் தானே!!- .....

1 கருத்து: