திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு குட்டிக் கதை



இன்று மடிப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

எனக்கும் அறிவியலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்றாலும், இந்தவாரம் எந்த சினிமாவும் புதிதாய்த் திரையிடப் படாததால் அங்கு செல்ல நேரம் இருந்தது. அறிவியல் கண்காட்சி பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் இருந்தது , மைதானத்திலோ "ரிங்க ரிங்கா ரிங்க ரிங்கா" என்பனப் போன்ற பின் நவீனத்துவப் பாடலுக்கு மாணவர்கள் நடனமாடிக் கொண்டு இருந்தனர். அந்த மேடைக்கு பின் "அட்மிசன் நடைபெறுகிறது" என்கிற ஜொலிக்கும் பேனர் விளம்பரத்தில் "Without Donation" என்கிற ஜென் தத்துவம் அடங்கி இருந்தது.

சின்னச் சின்ன வாண்டுகள் கூட மிக ஆர்வமாய் அறிவியலோடு விளையாடிக் கொண்டிருந்தனர். நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட சோலார் விளக்கு மாதிரியையும், முல்லைப் பெரியாறு பற்றியும் பேச வைத்திருக்கும் குறிப்பை மனனம் செய்து முடித்திருந்தாள். ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவன் "அப்துல் கலாம் சிந்தித்த இந்திய நதிகள் இணைப்பு" என்று சொல்லிக்கொண்டும், "பாரதியை யார்?" என்று நான் கேட்டதற்கும் சொன்னான். இன்னொருவன், சென்னைக்குள் செயற்கை அணையை உருவாக்கி அதை ராலேகான் சித்தியாய் போல் ஆக்குவதாய்ச் சவால் இட்டுக்கொண்டிருந்தான் அந்த வகுப்பில் இந்த வருடம் புத்திதாய் முளைத்த தலைவர் "பவர் ஸ்டார் அண்ணா ஹசாரே"யின் படம் ஒட்டியிருந்தது .

கிராமம் தன்னிறைவு அடைதல் பற்றியும்; சுற்றுப் புறச் சூழல்,மாசுக்கட்டுப்பாடு பற்றியும் அநேகமாக எல்லா மாணவர்களும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர் ; கோக் ,குர்குரே போன்ற நச்சுத் தீவனங்களின் விளைவு பற்றியும், பயோ காஸ் பற்றியும் அநேகம் பேர் தெரிந்து வைத்து இருந்தனர். அந்தப் பள்ளியின் ஒவ்வொரு மாணவனும் அறிவியலுக்காகவே நேர்ந்துவிட்டதைப் போல் நின்றுக் கொண்டிருந்தனர். எங்கள் கிராமங்களில் அதே பாடங்களைப் படிக்கும் (சமச்சீரல்லவா ??) எம் கிராமத்து மாணவர்கள் இந்த அறிவியல் அறிவினைப் பெற்றிருபார்களா என்று ???

தன் பிள்ளைகள், இந்த மூன்று நாட்களுக்காகத் தன்னை முப்பது நாட்களாய் இம்சித்தக் கதையை ஒருவருக்குச் சொல்லிக் கொண்ட படியே ஒருவர் நகர்ந்து சென்றார், Energy efficiency பற்றி பேசிக் கொண்டிருந்த ஒரு அறையில் குண்டு பல்புக்கு பதிலா - CFL பல்ப்ஸ் போட்டிருக்கலாமே என்று தன் சமயோசித அறிவை மற்றவர்களுக்குக் காட்டினார். மேலும், ஒரு நாகரிக மனிதர் நான்காம் வகுப்பு சிறுமியின் ப்ராஜெக்ட் சரியில்லை என்று அவள் நீட்டிய கருத்து புத்தகத்தில் கையொப்பமிட்டு தன் பண்பை வெளிப்படுத்தினார். கல்வியில் நீதி போதனை வகுப்புகள் இல்லாமல் போனதன் நினைவையும், மனிதனுக்கு தேவை அற்றுப் போன வாழ்வியல் உணர்வுகள் பற்றியும் கவலை வந்தது ..
அடுத்ததாக ஒரு அறையில் நுழைந்தேன்- அதுவும் மின்சார உற்பத்தி பற்றிய அறையாகத் தான் இருந்தது . அந்த அறையின் கடைசியில் இரண்டு பக்கம் கூடங்குளம் , கல்பாக்கம் ஆகியவற்றின் மாதிரிகளும் நடுவில் காற்றாலையின் மாதிரியும் வைக்கப் பட்டிருந்தது. இரண்டு grand decorationகளுக்கு மத்தியில் ஒரு எளிமையான ப்ராஜெக்ட் -ஆக காட்சி அளித்தது. அதை உருவாக்கிய மாணவர்கள்(11 -ஆம் வகுப்பு) அந்த பிராஜக்ட் பற்றி செய்முறை விளக்கிக் கொண்டிருந்தனர்.

அணுவுலை மாதிரிகளை உருவாக்கிய மாணவர்கள் இந்தியாவின் முன்னேற்றம் பற்றி, தமிழகத்திலுள்ள நகரங்களில் எல்லாம் மின்சாரம் தடையின்று கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர், நடுவில் இருக்கும் மாணவனோ அனுவுலைகளினால் உள்ள ஆபத்தைப் பற்றியும், விவசாயம் பற்றியும், இயற்கையாக நமக்கு மின்சாரம் உருவாக்குவதனால் ஏற்ப்படும் நிலை பற்றியும் சொல்லி கொண்டிருந்தான். ஒரு மனிதனின் அடிப்படை சித்தாந்தம் ஆசிரியரின் கையிலா?? பெற்றவர்களின் கையிலா? என்றக் கேள்வி என்னுள் எழுவதை நிறுத்த முடிவதில்லை.

'ஒரே வகுப்பிற்குள் எப்படி இந்த மாறுபட்ட ஐடியாலஜிகள் சாத்தியமானது?' என்று வியப்புற்றேன், "கல்வி ஒரே மாதிரி போதனை செய்யப் படும் பொழுது, பெற்றோர்கள் ஊட்டும் அறிவு தானே இதைக் கொடுக்கிறது? பெற்றவர்கள் தான் தன் மகனின் சிந்தனையைக் கூட தீர்மானிக்கிறார்களா? " என்று யோசித்துக் கொண்டே நான் வெளியே செல்லும் போது ஒரு எனக்குள் எழுந்தது இன்னொரு யோசனை, மீண்டும் அங்கு சென்று நடுவில் இருந்த (காற்றாலை) சிறுவனிடம் "உன் பெயரென்ன??" என்றுக் கேட்டேன். அவன் "முஹம்மது" என்றான், அவனுக்கு இருமருங்கிலும் இருந்த அந்த இரு சிறுவர்களிடமும் அவர்கள் பெயரைக் கேட்டேன், அவர்களும் சொன்னார்கள் .

(முடிந்தது)

என் நண்பன் தன்னைப் பிக்கப் செய்வதற்காக என்னை அவசரமாக அழைத்தான் .. அப்போது மடிப்பாக்கத்திலிருந்த நான், நங்கநல்லூர் வழியாக மீனம்பாக்கம் சென்று அவனை பிக்கப் செய்தேன்.
அந்த அணுவுலைகளின் மாதிரியை உருவாக்கிய அந்த சிறுவர்களின் பெயரை நான் கதையில் சேர்க்க மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்... ஆனால் நான் உங்களிடம் கூற விரும்புவது என்னவென்றால் எந்த ஒரு சிறுவனையும், ஒரு மனிதனாக மாற்றும் வேலையை அவனைச் சூழ்ந்த சமுதாயம் தான் மிகுந்த அக்கறையுடன் செய்துக் கொண்டிருக்கிறது. சரிதானே 

Hodge-Podgy Apple May Serve To All ( A review on post modern Tamil poetry )


for non Tamil -Readers

Tamil modern Literature – A Snap Shot
It’s the review attempt to tear off the fake screen which imaging as the existence of only shallow works in the sub-continent literature particularly in the post-modern genre.
The internal politics of the state and inadequate promotion by translation of master works in our state cause’s ignorance of superlative works from many loftiest creators.

Particularly in the Tamil state, after the Indian Freedom the era of post-modernization has plenty of contributors, of which most of them unnoticed yet. The increasing rate of ignorance of reading habit can be the crucial reason for the isolated scenario of Tamil works.

Freedom fight of LTTE played vital role in lifting its image, the icons from the eelam visualized our heritage and modernization through numerous verses, fictions and poems mostly focusing the destruction, politics, rape, genocide ( which records in world History ) Dominic Jeeva would witness the age of this era. Even JK, SU.RA, Nagulan and many post-modern activists paved the way for the healthy environment. Perhaps, the contemporary literature could not multiply its readers with the deliberate cultural changes in this state.

The outrageous & mass glamour over cinema, cricket, television, Dravidian politics (which misused by some politicians) resulted that keep the Tamils far away from other languages and reading habit too. Whereas the writers hatching their large number of literary works without making any remarkable business. That’s the brief reason why I am urging these readers to enhance their values of the Tamil literature.

Emergency action needed to change this environment, by translating our master pieces in European languages, honest appreciation and reviews, promotions, opinions which interacts common with the literature.


Review

“Train Runs Inside The Apple”


A modern poetry pastiche written by Iyyappa Madhavan (emerging poet), where the poet self attested in his introduction as his writings are much influenced by the unsecured political environments. He added that love and lust are the subjects given to him by the thankful society. But his admission failed from the very first poem in which he portrayed the divine relationship between a girl and her mirror image. The very image witnessed the childlike poet clearly.


As said earlier, pastiche work – means a rumble of beads in various color, theme and subject synchronized with the medley called love. Yes, the compassionate unconditional love stitched naturally in all the verses. The poet love is purely unconditional, that’s the reason for an umbrella’s survival with the penny of 30.

He contradicts himself through his poems, because his love shows fulfillness as well as emptiness. Here the chaos uses to come, until you travel some meters in Zen. One who crosses the worldly duos can celebrate the Zen as this poet did in this book. In a poem,
he confessed that he prayed only for her touch he ignores the celestial objects, even he well know about its designs. Thus he broken or tied the duo emptiness and fulfillness.

The travel with the poet is quite adventurous, one moment you travel in the dusty Gemini bridge of Chennai; in another time he sees Buddha in a women’s dressy tops, some time having conversation with the moon; some time describing the infant’s state in front of her suicide mother; In one stage he change his lover as angel and fell in her hands as baby. Now I feel like jumping from mountain to valley and vice versa.

The much blooming scene we can find in the poem,” Train Runs Inside The Apple”, where poet sophisticated his travel in train by using an Apple which luckily traveled with him. Meanwhile he shows his orthodox identity while narrating the adolescence / puberty

The cliché’s are there you can’t reckon it, you will celebrate it. You may see many magic realism throughout the book, but you can not escape from the existentialism ( in the poem of Kavitha’s Face, The door seller). Nihilism is the exact station where you can identify this tremendous philosophical train get halted.

This could be his masterpiece because this poet flattered in a steep drench of love with the girl who loved and he cannot able to escape.

Last but not least: - If  the stratosphere of the Tamil modern literature can be tuned to overseas radios if such a promotion and translation frequently done for this kind of good and finest masterpieces.


( Hope the book shall be translate in other languages in short)

புதன், 25 ஜனவரி, 2012

பரம பதமும் - பொக்கை வாய் முத்தமும்

பரம பதமும் - பொக்கை வாய் முத்தமும் 

எத்தனை முறை அழைத்தாலும் 
விளையாட வர வேண்டும்!! - 
எப்படியும் தோற்றிடவே நீ விரும்புவதால்
ஒவ்வொரு சர்பங்களையும் நாடவேண்டும் 

பகடையின் தாயங்களைச் சிலநேரம் ,
நீ விழுங்கிவிட வேண்டும் -
உன்னைத் தீண்டும் சர்ப்பங்களால்
அவன் மகிழ்ச்சியுருவதால் - உன்
சர்ப்ப தோஷக் காலங்கள்
நீட்டிக்கப் படலாம், மகிழ்ந்திருப்பாயா?

அவன் கள்ளத் தனமாய் சிரித்தபடி
முன்-பின் காய் நகர்த்துதலில்,
உன் அரைகுறைப் பார்வையும்
தொலைத்துக் குருடியாக வேண்டும்!!

தாயம் விழாத கோபத்தில்
தூக்கியெறியும் காய்களைப்
பொறுக்க, உன் தேய்ந்து போன
மூட்டினை மறந்து விட வேண்டும்!!!

இத்தனை செய்தும் உன்
பேரன் தோற்றிடின் - தேற்றிட
அவனுக்கு வேண்டும், உன்
பொக்கை வாய் முத்தம்..

அவன் எழுந்து போய்விட்டானென்று
அதற்குள் களைப்படையாதே!!
மறுபடியும் மின்சாரம் போய்விடும் !!

திங்கள், 23 ஜனவரி, 2012

கவிதாவிற்கு கிடைத்திருக்கலாம் ஒரு ஆப்பிள் -(எனது புத்தகப் பார்வை - 4)




ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் குறித்து நான் எழுதி வைத்த என் அனுபவங்கள் பற்றிய குறிப்பு தொலைந்துபோன பின் மறுபடியும் எழுதுகிறேன். எனினும், இந்த புத்தகத்தின் மீதான என் பார்வையை, கொஞ்சமும் அயர்ச்சி இன்றி என்னால் எழுத முடிகிறது .. ஆனால் எனது பார்வைகளை, என் விமர்சனத்தை கவிஞருக்கும்,உங்களுக்கும் சூடாகப் பரிமாற இயலவில்லை என்பதில் ஒரு வருத்தம் தான்.

ஏனென்றால் இனி நான் எழுதப் போகும் வரிகளுக்காக மீண்டும் சில கவிதைகளை வாசிக்க வேண்டுமென்றாலும், முதல் முறை படித்த போது கிடைத்த புத்துணர்வு போல் மீண்டும் அதே உணர்வு கிடைக்க வேண்டும் என்பது இயலாதது தானே!! .சரி, என் பார்வையைத் தொடங்குகிறேன்.


நேரடியாக கவிதைக்குள் செல்கிறேன், "நதியோடிய கவிதாவின் முகம்" என்ற கவிதையில் சொல்லும் மரணம் மிகக் கொடுமையானது. அக்கவிதையில் வரும் கவிதாவின் தற்கொலையால் பிதுங்கிய விழிகளை உணராது, அவள் பெயரை முனுமுனுக்கும் குடிகார கணவனும், மரணத்தை அறியாமல் விளையாடும் தொட்டில் குழந்தையும் எந்த ஒரு கற்பனையும், மிகைப் படுத்துதலும் இல்லாமல் சொல்லப் பட்டிருக்கும் விதம் நெஞ்சைக் கசக்கும் உண்மையே அதில் கவிதை மிகைப் படுத்தியோ இல்லை கற்பனைக்காகவோ ஒரு எழுத்தைக் கூட சேர்க்கவில்லை.. உண்மையை அழுத்தமாக சொல்லிவிடுதலோடு கவிதையும் நின்று விடுகிறது . அதற்கு நேர் மாறாக, "ஆப்பிளுக்கும் ஓடும்   ரயில்" என்ற தலைப்பே முதலில் சொன்ன கவிதையின் யதார்த்தத்தை விட்டு விலகி எவ்வளவு தூரம் பயணம் பட்டிருப்பது என்பதை நாம் எளிதாக உணரலாம். ஆக, ஒரு வாசகன் இந்த புத்தகத்தில் மேற்கொள்ளும் பயணம் ( வாசிப்பை பயணம் என்று சொல்லுவது குறித்து விவாதம் வராது என்று நம்புகிறேன்) மிகவும் புத்துணர்ச்சி மிக்கது.

அய்யப்ப மாதவன் அவர்களுடைய நான்காவது புத்தகத்தை நான் வாசிக்கிறேன். பொதுவாக நண்பர்கள் மத்தியில் அவரது நடை மிகவும் கடினம் என்பது போன்ற வாதங்களை நான் பலமுறை கேட்டதுண்டு. என் வரையில் எனக்கு தோன்றுவதெல்லாம், அவரது நடை மிகவும் எளிமையானதே, ஆனால் அவர் கவிதை சொல்லும் பாணியில் சில சட்டெனப் போட்டுடைக்கும் நிஜ உலகை மையப்படுத்தி , சில தன்னுணர்வைச் சொல்லும் இயற்கைத் தோற்றம் பற்றியும் ,  சில கவிதைகள் பிம்பங்களுக்கும், அஃறினைக்கும் வியாபித்திருக்கும் பௌதீக அழகு பற்றியும் , பல கவிதைகள் வறுமையின் கோரப் பிடியிலும் தளராத அறிவுப் பசியையும், எப்போதும் மனம் வீசும் காதலும் என்பன போன்ற Micro Elements பற்றியெல்லாம் நாம் புரிந்து கொள்ள நமக்கு சில நேரம் பிடிக்கும்( மறுமுறைப் படித்து பார்க்க வேண்டும்), இல்லாவிட்டால் கூட கவிதை உலகில் ஒரு வாசகனாகவாது  நெடும் பயணம் சென்றிருக்கவேண்டும் .. ஏனென்றால், என்ன தான் தினமும் நாம் வாகனம் ஓட்டிச் செல்பவனாய் இருந்தாலும், மலை பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் வாகனம் ஒட்டிய பின் நம் தோள்களை நாமே தட்டுவது போல், இது போன்ற நவீனத்துவப் படைப்புகளை வாசிப்பதும் மறக்க இயலாதவையே. இந்தத் தொகுப்பில் கூட சில கொண்ட ஊசிகளில் வளைவதை நாம் மறக்க முடியாது,(முப்பது ரூபாயில் இளமை மீட்கலாம், ருதுவின் காலம், நதியோடிய கவிதாவின் முகம் போன்ற கவிதைகளில் தெரியும் அதிர்ச்சி)
    அதே சமயம், அவர் சமூகப் பார்வை மிகவும் எவ்வளவு கூர்மை வாய்ந்தது என்பதை சில வார்த்தைகளில் நாம் எளிதில் கண்டு கொள்ளலாம், கீழே பாருங்கள் 
1 . கிளிசலாடை படர்ந்த இடுப்பில் அமர்ந்து நிர்வாணம் மறைக்கும் குரங்கு
2 . விற்பனையாளன் விற்காத கதவுகளின் கதவற்ற வீடுகளைக் கற்பனித்துக் கொண்டிருக்கிறான்.
மேலே சொன்ன இரண்டு வரிகளின் வீரியத்தை எவ்வளவு எளிதாக உணர முடிகிறது. அவரது நடை கடினம் என்று சொல்லப் படுவதன் மீதான எனது எதிர்வினையை இந்த பத்தியில் பதிவு செய்கிறேன்.

அடுத்தது காதல், கவிஞரின் காதல் அவரை எப்படி எல்லாம் ஆட்டுவித்திருக்கிறது என்பது மிகக் சுவாரஸ்யமாய் சொல்லப் பட்டிருக்கிறது. மஞ்சளழகில் அவர் கண்ட உயிர்ப்பின் காட்சியிலிருந்தும், காதலியை தேவதை ஆக்கி அவளுடன் குழந்தையாகி விடுவதும், பெரும் அண்டம் பற்றிய அறிவு கொண்டிருந்தும் -அவளை அடைவதையே பூரணமாய்க் கொள்வதும், அவளோடு இருந்த அபூர்வக் காதலின் வெள்ள நீர் பாய்ச்சலில் எட்ட முடியாத ஆழத்தில் புதைகின்ற செயல்களும்,இயற்கையின் படைப்புகளை அவளை அறிந்து /அவளுள் அவளாகவே ததும்புவதும் என தன் காதலைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார் 

இதில் அம்முவின் பிம்பமும் , மழைச் சிறுமியும், சித்திரப் பெண்ணும், புத்தனை போன்ற அவளின் மேலாடையும் கூட அவர் கண்ட காதல் கணங்களின் சாட்சிப் பொருள்களே. நிலாவிடனான உரையாடலிலும், சில்லிட்ட அந்தியிலும், ஜெமினி பாலத்திலும் இந்தக் கவிதைகளின் சாயல் ஒருமுறையாவது நமக்கு வந்து போவது நிதர்சனம்.

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் - அந்த ஆப்பிள் அடக்கி வைத்திருக்கும் ரயிலும், அதன் பயணமும் தந்த கவிதை உணர்வானது, இந்த தொகுப்பில் எனக்கு கிடைத்த ஒரு உச்ச கட்ட திருப்தி.
ஏனென்றால் ,கடவுள் என்பது (ஜென் உலகில்) ஒரு தன்மையாக மட்டுமே சித்தரிக்கப் படுகிறது, இங்கு பிரச்னையே கடவுளை ஒரு பொருளைப் போல் பார்க்க ஆரம்பித்த நிலையில் இருந்து தான். ஜென் என்று தன்மையைத் தான் வலியுறுத்துகிறது ,எனக்கு இந்த ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் சொல்வது, ஆப்பிள் என்ற பொருளை அல்ல, அது கவிஞர் மட்டுமே துல்லியமாய் உணர்ந்த ஆப்பிள் எனும் தன்மை ...Object சொல்லும் subject இதுவே.

    இக்கவிதையின் முன்னுரை சற்று கனமானதாக இருக்கும், தான் சொல்ல வேண்டிய மிக முக்கியமான கவிதைகளை அவர் சொல்ல முடியாமல் போனதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான தடைகளை உருவாக்கிய சூழலையும், சமூகத்தையும் சாடியிருக்கிறார்... வழிகளுக்கு மருந்தாக காதலையும் , காமத்தையும் விரவியிருப்பதாய் சொல்கிறார். ஆனால்,அடக்கி வைத்த பேருணர்வின் எச்சங்கள் அவரையும் மீறி இந்தத் தொகுப்பில் தஞ்சம் புகுந்துவிட்டன. சொல்லப் போனால், காதல் ஒரு பட்டு நூலைப் போல் கவிதைகளை கோர்க்கத் தான் செய்திருக்கிறது. இறுப்பினும் நாம் அவர் "மூடிவைத்திருக்கும் இறுக்கங்களைத் தளர்த்திச் சொல்ல விரும்புகிற எந்த உணர்வையும் உரக்க சொல்லுங்கள்" என்று ஆதரவளிக்க வேண்டுகிறேன். பேனா மட்டுமே எந்தத் தடைகளும் உடைக்கும் கூர்மையான ஆயுதம் என்று நமக்கு தெரியாதா என்ன?? என் ஆதரவுக் குரலை இதில் நான் உங்களுக்கு பதிவு செய்கிறேன்.

மிக முக்கிமாய் நான் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் இந்த புத்தகத்தின் அட்டைபடம் குறித்து , இத் தொகுப்பு முழுக்க நம் மண் சார்ந்த , நமது மரபு, சூழல், காதல் போன்ற விசயங்கள் சொல்லும் தொகுப்பிற்கு அயல் நாட்டு அழகியின் ஆப்பிள் நிர்வாணம் ஒன்றும் justify பண்ணியதாய் எனக்குத் தோன்றவில்லை. ஒரு மிகச் சாதரான கவர்ச்சியைக் கொண்ட டவுன்லோட் அட்டைபடம் அந்த விசித்திர ஆப்பிளின் உணர்வைக் கொடுக்காமல், வாசகனுக்குத் தேவையற்ற எதிர்பார்ப்பை கொடுத்திருக்கலாம். 

அதனால் தான் என் பார்வையில் கூட ஜென் வாசம் வீசும் அந்த அறிவு ஆப்பிளை, வெறுமையில் தற்கொலை செய்த அந்த கவிதாவிற்கு கொடுக்கவே விருப்பம்.. நான் கொடுத்தாலும் வாங்குவதற்கு அவள் என்ன ஏவாளா?? இல்லை நான் தான் ஆதி மனிதனா??

நன்றி 
ஜீவ.கரிகாலன் 

சனி, 14 ஜனவரி, 2012

ரசிகனின் புத்தகப் பார்வை - 3 (தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்)


கவிதைத் தொகுப்பு : தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் 
வெளியீடு                   : உயிரெழுத்து பதிப்பகம் 




கவிதை தொகுப்பு பற்றிய என் பார்வை எவ்வளவு தூரம் ரசிக்கும்படியும் ஆழமாகவும் இருக்கப் போகிறது என்ற என்னுடைய Maturity  கொடுத்த சந்தேகத்தையும் தாண்டி ஒரு தைரியம் இருக்கிறது.இது கவிஞருக்கும் வாசகனுக்கும் இடையேயான ஒரு சந்திப்புத்தான், கவிதைகள் ஒரு கடைக்கோடி ரசிகனுக்கு என்ன சொல்கிறது என்பதை உணரலாம் அல்லது இதற்கு எதிர் வினையாக தற்கால இலக்கியங்களில் அதே கடைக்கோடி வாசகன் எப்படிப் புரிந்து கொள்கிறான் என்கிற உண்மை புலப்படலாம். என் வாசக அனுபவம் மேலும் பல வாசகர்களை இந்த புத்தகத்தை வாங்கச்செய்யும் என நம்புகிறேன்.

இதற்கு மற்றொரு பலமான காரணமும் உள்ளது, இன்னும் நம் ஊரில் வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது, உடனே தொலைகாட்சி,கிரிக்கெட், சினிமா என்று காரணங்கள் கூறினாலும். நான் நினைப்பது என்னவென்றால், ஒரு வாசகன் தனக்கு யார் என்று தெரியாத படைப்பாளிகளிடம் தன் பணம் செலவு செய்ய அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை, இது தவறானது தான்.. ஆனால் இன்றைய சினிமாவும் இப்படித்தானே இருக்கிறது. எத்தனை நல்ல கலை படைப்புகள் நம் ஊர் திரை அரங்கங்களுக்கு வராமல் போகிறது. ஆக, இந்த நவீன உலகத்தில் முகநூல் போன்ற இணையப் பிடிகளில் சிக்கிய பின்னரும் படைப்பாளிகளுக்கும் - வாசகர்களுக்கும் இடையேயான தூரம் தான் இன்றைய படைப்புலகப் பிரச்சனை. இதனால் நல்ல புத்தகங்கள் கண்ணில் படாமல் போவதும், அதை விட கொடுமையாய் -வாசகர்கள் தவறான வழிகாட்டுதல்கள் மூலம் திசை திருப்பப் படுகிறார்கள்.

இனி என் பார்வையை என் நண்பர்களுக்கும், கவிஞர் ஆத்மார்த்தி அவர்களுக்கும் சமர்பிக்கிறேன்  

தனிமையின் நீட்சியில் ஒரு நகரம்

ஒரே வரியில்: எளிமையாய், அருமையாய், ருசிகரமாய், புதுப்புது யுக்திகளில், வெவ்வேறு  தளங்களில் பாய்ந்து பாய்ந்து செல்லும் ஒரு Pegasus.

( அவர் கவிதை எவ்வளவு எளிமையாக இருந்தது என்பதை உணர்ந்ததால் எனக்கும் மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்பது போல் இருக்கிறது, எளிமையாய் சொல்லுதல் எவ்வளவு கடினம் என்பதை நான் இங்கு உணர்கிறேன்).

இக்கவிதைத் தொகுப்பினை என்னை வாங்குமாறு சிபாரிசு செய்தவர் தோழர்,கவிஞர் அய்யப்ப மாதவன் அவருக்கு என் நன்றிகள்.ஒரே ஒரு மணிநேரத்தில் ஒருவனை தன் ரசிகனாய் மாற்றிப் பிரசவித்து விட்டார் கவிஞர் ஆத்மார்த்தி, கண்காட்சியில் இருந்து பிராட்வே சென்று அங்கு இருந்து பேருந்தில் பழவந்தாங்கல் செல்வதற்குள் கவிதையை படித்தாகி விட்டது, சில கவிதைகளுக்கு நிசப்தம் வேண்டும், சில கவிதைகள் எங்கு வேண்டுமானாலும் வாசிக்க முடியும் - இந்தப் புத்தகமும் அப்படித்தான்.நானும் என் நண்பர் கண்ணதாசனும், இதைப் படி ,அதைப் படி என எங்களுக்குள் விவாதித்துக்  கொண்டே முடித்து விட்டோம்.

    ஒவ்வொரு கவிதையும் வேறு வேறு பரிமாணங்களில், வேறு வேறு தளங்களைத் தொட்டுக் கொண்டே செல்கிறது. உதாரணமாய்ச் சொல்வதானால் இத்தொகுப்பினில்-புத்தனும், பத்மப்பிரியாவும், சைத்தானும் , செயற்கைப் பெண்ணும் அருகருகே வசிக்கின்றனர்.பதிற்றுப் பத்து, எட்டுத் தொகை போன்ற தொகைக் கணக்கு கவிதைகள் Fresh,  "கடிதம் 10 ", "செல்பேசி 10 " , "மரம் என்ற ஒன்று" என சுவாரசியம் மிகுந்த கவிதை மாலைகள் தொகுக்கப் பட்டு இருக்கின்றன.
    சிதறிக் கிடக்கும் ஜென் தத்துவங்களுக்கு( புத்தன் தனிமை, புள்ளி,சொல் மறதி, மீள் வினை, மரணம், ஏகாந்தம் ) மத்தியில் , சில நவீன அழகியலும் { இழை, காற்று, நதி;மீளா வனம் , கிளிக் பால்யம்), திடீரென்று சமூகத்தின் அங்கங்களில் சாட்டையடிக்கும் (கடவுள் மாதிரி, கனவில் வந்த மிருகம், கரைகள், கடவுளைப் பற்றி மூன்று கவிதைகள், தனிமையின் நீட்சியில் ஒரு நகரம் (இதில் கரைகள் கவிதையில் அவர் சாடும் முறை மிகவும் கூர்மை "எப்படிப் போதும்/ பிண்டச் சோறு/ தகப்பனுக்கு பிடித்ததாய் /எதையாவது கொண்டு வந்திருக்கலாம்?? ")} கவிதைகளும், புதுப் புது யுக்திகளோடு சொல்லும் மற்ற கவிதைகளும், காதல், கலவிக் கவிதைகளும் என்னை மிகவும் ஈர்த்து விட்டன
    எளிமையாக இருப்பதால் ஒவ்வொரு கவிதையிலிருந்து, மற்றொரு கவிதைக்கு செல்கையில் உணர்வுத் தாவல்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன
    எனினும், என்னால் வெளியே வர முடியாத அதிர்ச்சி பெண் செய்தல் என்ற கவிதையின் கடைசி வரிகள் "உயிர் குடிக்கும் கொடுமை புரிகிறது. எல்லாவற்றிற்கும் மேல் "பெண் செய்தலில்" - காதல் ஏற்படுத்தும் வடு எவ்வளவு அவநம்பிக்கை வாழ்க்கையில் கொண்டு வந்து விடுகிறது?? "உன் காதல் " எனும் கவிதை ஈரமானது
    அதே போல் "அவனும் அவளும்" சொல்லும் ஒரு சராசரி மனிதனின் அன்றாடக் காமச் சங்கடங்களை, கலவிப் பெரும் பசி உடையவன் காமாந்தகனாகவும் - சிருபசிவுடயவன் கவிஞனாகவும் எனக்குத் தோன்றுகிறது !! சிறுபசி ஆற்றுதல் பெரும்பசி நேராமல் தடுக்கும் தானே ??
    செல்பேசி10௦ என்கிற கவிதை 10 ஆம் என்னை கடந்த பின்னும் மற்றொரு 10 ஏனோ ???
    அது கடிதம் பத்து போல் "௦0" பதில் தவறாக வந்த "10"? இல்லை அது நவீனத்துவத்தின் நீட்சியா?? இல்லை தங்களது கண்டுபிடிப்பா ?? ஒருவேளை எனக்கு இன்னும் பயிற்சி போதவில்லையா ??
    கவிஞரே, உங்கள் தொகுப்பில் ஒரு வாசகன் பரவசமடைகிற எல்லா வித்தைகளும்செய்யும் மந்திரப் பொடிகள் உங்கள் பெரும்பான்மையான கவிதைகளில் தூவப்பட்டிருக்கின்றன என்பதை உணர்கிறேன். வாழ்த்துகள்.

நண்பர்களே!! எளிமையாய்ச் சென்றடைகிறது என்று சொல்வதால் நீங்கள் வகைப் பிரிக்க வேண்டாம்.. ஒரு ரசிகனை எளிமையாய்ச் சென்றடைவது அவ்வளவு இயல்பானது அல்ல

இது இவரது முதல் படைப்பு என்று வாசித்த பின் தான் எனக்குத் தெரிய வந்தது , இந்த கண்காட்சியில் முதல் தடவையாய் பிரசுரிக்கும் ஒரு படைப்பாளரின் புத்தகங்களை பார்வையில் வைக்காமல் இருந்த உயிரெழுத்து பதிப்பகம் இதை கவனம் கொள்ள வேண்டும்.( நான் தேடிக் கிடைக்காமல் , stall sales person  எழுந்து வந்து தேடி எடுத்துக் கொடுத்தார்). புதிய வரவுகளைக் கண்டிப்பாக எல்லோர் கண்ணிலும் படுமாறு வைத்தல் எவ்வளவு  அவசியம் என்றும்  சொல்ல விரும்புகிறேன்.

அடுத்த தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும்,
உங்கள் நண்பன்
ஜீவ. கரிகாலன்



வெள்ளி, 13 ஜனவரி, 2012

காதலைச் சொல்லும் வேளை


காதலைத் தான் சொல்லப் போகிறேன் 
என்று அவளுக்கும் தெரியும் 
தன்னை நிராகரிக்க தான் போகிறாள் 
என்று எனக்கும் தெரியும் 


அடுத்த நாள் சந்திக்க இடம் குறித்தோம்.
இளவேனில் மாலையில் எங்கள் 
நண்பனின் அலுவலகம் தேர்வானது 

காலங்காலமாய் நண்பர்கள் தானே 
காதல் செடிக்கு உரம்??
சம்மதித்தான், சந்திக்க இடமளித்தான்.

இறைவன் உருவாக்கிய 
காதல் மலராம் ரோஜா
 என் சிந்தையில் வந்து
இன்று என் விலை இருபது என்றது,
பூக்கடைக்கு சென்றேன்.

கூட்டமாய் இருக்கும் மலர் செண்டு 
கவர்ச்சியாய் தோற்றமளித்தது,
இதயம் - மனிதனுக்கு ஒன்று தானே !
ஆக வாங்கினேன் ஒரே ஒரு 
இதயப் பூ!!!

நூறு தடவை கண்ணாடி பார்த்தாலும் 
திருந்தாத முக வெட்டு எனக்கு,
முதல் தடவை பார்க்கும் போதே - பிம்பமும்
 ஆசை கொள்ளும் வதனம் அவளுக்கு.

கனிந்துக் கொண்டிருந்தக் காதலை- அவள் 
கைகளில் தரும் வேளை,
காலங்காலமாய் நண்பர்கள் தானே 
காதல் செய்ய இடைஞ்சல் ?
துரத்தினேன் -அவன் கால்களில் விழுந்து,
 சிரித்தபடியே வெளியில் சென்றான் 

முதல் முறை என் முகம் பார்க்காது 
அவள் தலை குனிய - நாணம் 
பொய்யல்ல என்றேன், எனக்குள்.
தித்திக்காத முகம் தானே என்று 
பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஏதும் அறியாதவள் போல் 
"ஏன் இங்கு அழைத்தாய் ? "என்றாள்.
புரிந்தும் கேட்கிறாள் என்று புரிந்தாலும் 
இயம்பாது, "முக்கியமான விடயம்" என்றேன்!!

என்ன என்று கேட்கும்- அவள் 
இதழில், ஆர்வம் இருந்தது,
தெரியாதது போல் நடிக்கும்- அவள்  
கண்ணில், பொய் இருந்தது. 

கையிலெடுத்த ரோஜாப்பூவை 
நானே கொடுக்குமுன்- என்னிடமிருந்து 
பிடுங்கி ," மிக அழகாய் இருக்கிறது"
என்று நன்றி சொன்னாள்

குழம்பிய என்னை கவனித்துக் 
கொண்டு - புன்னகை பூத்தாள்  
இது வா என் காதலைச் சொல்லும் 
வேளை ????

வியாழன், 12 ஜனவரி, 2012

என் தாயும், நீயும், நானும்




என் தாய் 
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

முரட்டு உருவத்தை 
விரும்பி ஏற்கும் 
உள்ளங் கணிந்தச் 
செண்பக மலரைத்,   
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

தடித்த தோள்களில் 
தலை சாய்க்கும் 
அன்புத் தமிழ் 
பதுமையினை, 
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

தன்னைப் போல என்னை
பார்க்கும் அவளுக்கு 
இன்னொரு கண்ணிற்கு
இடம் பெயர்க்க, 
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

எவ்வளவு கேட்டும் 
வைக்காத நெற்றியில் 
திருநீறு பூச,
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

மனதை தைத்த 
விடலைக் காதல் 
வடு மறைய,
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை

எழுத முடியாத 
வெற்றுப் பக்கங்களில் 
வாழ்க்கை எனும் 
கவிதை எழுத,
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை


என் சித்தாந்தத்தை 
கொள்கையினை,அபத்தத்தை 
பித்தத்தை மாற்றிட 
ஒரே நம்பிக்கையாய்,
இன்னும் 
தேடிக் கொண்டே 
இருக்கிறாள் உன்னை..

ஆனால் அவளுக்கு 
தெரியாது,
நான் பிறக்கும் முன்பே 
என்னுள் கலந்து விட்ட நீ,
பூரணமாய் என்னைச் 
சேர்ந்து விட்ட சங்கதி!!

அவள் திட்டுவதும்,
அணைப்பதும், அடிப்பதும் 
தலை கோதுவதும்,
முத்தமிடுவதும் கொஞ்சுவதும் 
உன்னைத்தான்...

நீயே சொல் 
அவளுக்கு நான் 
என்ன சொல்லவென்று ???

புதன், 11 ஜனவரி, 2012

என் உடல்

எனக்கும் என் உடலுக்கும் 
உண்டான தசம வேறுபாடுகள் 
புலப்பட்டுக் கொண்டே இருக்கின்றன 

பல முறை படுக்கையில் 
சாய்ந்திருக்கும் என் உடலை நான் 
அமர்ந்து கொண்டே 
பார்க்கிறேன் ..
ஒரு உஷ்ணத்தின் 
ஜீவனில்
இயங்குகிற 
இயந்திரக் கூடு 
என் உடல் ..

நான் அந்த உடலா ???
இல்லை அந்த உஷ்ணமா??
உடலையும் 
உஷ்ணத்தையும் 
சாட்சியாக கவனிக்கும் 
நான் யார்??

யார் என்ற கேள்விக்கு 
பதில் தெரிந்தாலும் 
புரிந்து கொள்ளும் 
அறிவு !!
உடலின் பாகமா 
உயிரின் நீட்சியா !!

அந்த 
கடிகார அலாரச் 
சப்தம் !!
உடலுக்குள் இணைத்து 
உலகுக்குள் அனுப்பியது

வியாழன், 5 ஜனவரி, 2012

கைக் குழந்தையாக 
பேருந்தில் தாய் மடியில் ,
முகத்தில் அறையும் காற்று 
மூச்சுத் திணற வைக்க 
மார்போடு எனை அணைத்து 
மீண்டும் உயிர் கொடுத்தவள் !!.

எனக்குச் செலுத்த வேண்டிய 
மருந்தை அவள் எடுத்து ,
அம் மருந்தையும் பாலாய்க்
கொடுத்தவள்!!

எத்தனையோ முறை 
வாந்தி எடுக்கும் வேளை!
தன் கரங்கொண்டு ஏந்தினாள்..
நானோ - ஒரு குவளை தண்ணீர் 
கேட்டாலும் சலிப்புடனே கொடுக்கின்றேன்.

படுக்கையில் வீழ்ந்தாலும்
நான் தடுக்கினாலே 
பதறுகிறாள்.
நானோ கடமை செய்ய 
தயங்குகிறேன் 

கழுத்தில் இருந்த 
கடைசிச் சங்கிலியையும் 
என் உடைபட்ட 
கால்களுக்கு கொடுத்தவள்.

தம் மகவைச் சிரமப்படுத்தும்
தன்னை இன்னும் 
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள்.
சொல்லாதத் துயரில் 
துஞ்ச முடியாது அழுகின்றாள் ..

நானோ கொசுவலைக்குள் உறங்கி 
கனவுக்குள் அவளுடன் 
தொலைந்துகொண்டிருந்தேன்

Inferior Soul

It's paining ...
Being a inferior soul 

It's hard to bear the pain
In front of the ugly society...

As,
I am not allowed to - 
cry & laugh
When i feel to do it

I am not allowed to -
pray the God
Which I designed for myself

I am not allowed to 
learn the subjects
Which I liked to know

I am not allowed to -
live in my own 
when I know my style

I am not allowed to
be fool,
when I love to be fool

Even 
I am not allowed
to love -with
Whom I really loved

The bloody society
tied me in its 
useless culture & custom..


Being a inferior soul,
My urge to burn the
bloody society,
remains in my dream.............................

செவிடன்

மீண்டும் ஒரு முறை 
கூட கேட்காத உன் குரல்..
திரும்ப திரும்ப என்னுள் 
ஒலித்து,
என் அகச்செவியின் திரை 
கிழித்தது

பின்னர் ஒருநாள் ,
என்னை கைதட்டி
நீ அழைத்தபோதும்
செவிடன் போல்
கடந்து சென்றேன்

என்னுள் கேட்டுக் கொண்டிருக்கும்
உன் குரலுக்கு
வந்தனம் செய்து கொண்டே !!!




திங்கள், 2 ஜனவரி, 2012

2012 - பிரளயம்

காந்தப் புலத்தின் திசையானது
 தலைகீழாய் மாறிடுமாம் -
அது பிரளயம் என்று பெயர்
 கொண்டு மையம் கொள்ளுமாம் .

ஆயிரமாண்டுகளாய் வளர்த்து
வந்த அறிவியல் மரம் ஒன்று,
அடியோடுப் பெயர்ந்து விடுமாம் -
அடிப்படையே முற்றிலுமாய் மாறிவிடுமாம்.

 கதிரவனின் கடுஞ்சூடு, புயலாய் மாறிட
 அதனைச்சுற்றி வந்து மையல் கொண் ட
 திங்களும், செவ்வாயும், வெப்பப்புயலில்
  புணர்ந்து பின் மடிந்து விடுமாம்.

 நீரிருந்த வெற்றிடத்தின் பூமித்தகடுகள்
 ஒன்றோடொன்று உடைத்து
ஆழியைப் பெயர்த்திடுமாம்,
ஆழ்குழாய் கிணறு கொண்ட
நகரங்கள் மூழ்கும் வரை..

 மனிதம் சேர்த்து வைத்த
அமிலங்களும், அனுக்கதிர்களும் -
உடன்போக்கிருந்து,  கலவி கொண்டு
உமிழ்ந்துவிடுமாம்
 கதிரியக்க விந்துக்களை!!

பஞ்ச பூதங்களும் கூட்டணி
அமைத்து பிரபஞ்சக் கட்சியிலிருந்து,
 பூமியை நீக்கிட அசுரப் போர்
தொடுத்தும் - தோற்றிடுமாம்
 மனிதம் முன்னே !!!!

 அன்று  நல்ல நேரம் பார்த்து
 வந்த பிரளயத்தை முந்தியது மனிதமே.
 ஆம் ,முந்தைய நாளில்தான் முடிந்தது
  மூன்றாம் உலகப் போர் - இன்று
 பூமி வெறும் வெற்றிடம் தானே!!- .....