திங்கள், 24 அக்டோபர், 2011

எனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் கிணற்றடி -அய்யப்பமாதவன்

தானாய் நிரம்பும் கிணற்றடி
            -அய்யப்பமாதவன் 

இந்த யதார்த்தமான தலைப்பே அந்தப் புத்தகத்தை கண நேரத்தில் வாங்க வைத்தது. அய்யப்பமாதவன் அவர்கள் முகநூலில் மிகவும் பரிச்சயம் என்பதால் அந்தப் புத்தகத்தினை ஒரே  மூச்சாக படித்துவிடத் தீர்மானித்தேன். 

மொத்தம் 11 கதைகள், வரிசையாக சிறிதும் இடைவெளியின்றி படித்து முடித்தேன். ஆம் , கதைகளின் வெளியே என்ற ஆசிரியரின் முன்னுரை மிக கனமான ஒரு சிறுகதை தரும் உணர்வையே தந்தது. தன் கவிதைகளிலிருந்து உரைநடைக்கு மாறிய எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் பற்றிப் படிக்கும் பொழுது உங்களுக்கும் அந்த உணர்வு வரும். அவ்வுணர்வு வந்ததால் தான் இந்த விமர்சனமே ஒரு நல்ல தொகுப்பிற்குக் காரணமாய் அமைந்ததை உணரலாம். இக்கவிஞர் (கதாசிரியர்) ஒவ்வொரு கதையிலும் தன் வலியினை ஏதோ ஒரு இழையில் பிரதிபலிக்கிறார். உதாரணம் முதல் கதையில் வரும் புரண்டுகொண்டிருக்கும் புத்தகப் பக்கங்களில் கூட கவிஞரின் வாசனை தெளித்திருக்கும் , பீடிக்காரனிடம் , அவன் நண்பனிடம், இரண்டாம் கதையில் வரும் சொர்க்கவாசியிடம் கூட ஆசிரியர் தமது முன்னுரை விசயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.

ஒரு கூட்டாஞ்சோறு உண்பது போல், ஒவ்வொரு கதையிலிருந்து மற்றொரு கதையின் தளமும் , சுவையும் மாறுபட்டிருக்கிறது. இருப்பினும் எல்லாக் கதையின் மையத்திலும் ஒரு சோகம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக ”தானாய் நிரம்பும் கிணற்றடி"யினை முதல் கதையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு பாராட்டு. 

இந்தத் தலைப்பைப் பார்க்கும் போது யதார்த்த உலகிலிருந்து ஒரு கதையினை எதிர்பார்த்து பயணிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி, ஆம் இக்கதையில் தங்கையின் ஆவி (ஆவி என்று ஆசிரியர் எந்த இடத்திலும் சொல்லவில்லை) போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்கு கிடைக்கிறது. ஆசிரியர், இக்கதையில் தங்கையின் மரணம் பற்றிய எந்தக் காரணமும் சொல்லாது, மரணம் ஏற்படுத்தும் விளைவு அதீத பாசம் கொண்டவர்களுக்கு ஏற்படும் ஒரு மாயையாகக் காட்டுகிறார் . மிகவும் எச்சரிக்கையாகத் தேவையற்ற கதை மாந்தர் உரையாடல்களை தவிர்த்திருக்கிறார். பூவாய்,சருகாய், நீராய் தன் தங்கையை (அவள் மாய பிம்பத்தினை ) பார்க்கும் அக்காவைப் பார்க்கும் போது நமக்கு பரிதாபம் ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதை, தங்கக் கயிறு - ஏற்கனவே சொன்னது போல் எழுத்துலகம் எப்படிப்பட்டது என்று நையாண்டித் தனமாக நமக்கு காட்டுகிறார். இதை நீங்கள் கதையின் இறுதியில் பயணிக்கும் போது தெளிவாகப் புரியும். பிரிக்க முடியாதது ,"வறுமையும் புலமையும்".  ஆசிரியர் காட்டும் சொர்க்கம் சுவாரசியமாக இருக்கிறது, அந்த எழுத்தாளன் எடுக்கும் திரைப்படத்திலும் எழுத்தாளன் கதைதான் என்பது மீண்டும் முன்னுரையினை நினைவுக்கு கொண்டு வருகிறது .

ஏழேழு ஜென்மத்திற்கும் மீனும், பாலும் வாங்கியவள் ...பூனைகளைக் குழந்தையாக, தன் குடும்பமாக வளர்க்கும் அவள் அசிங்கப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகத்தின் label , இக்கதையிலும் சரியாக ஒட்டப்பட்டுள்ளது. சமூகம் புறத்தோற்றதினை
வைத்துதான் மனிதர்களை எடை போடுகிறது என்பது இக்கதையில் எதேச்சையாக உருவாக்கபட்ட கதாபாத்திரத்தின் வழியே நாம் உணரலாம். ஆனால் ஆசிரியரின் முயற்சி பூனைகளோடு வாழும் அப்பெண் பூனையினைப் போன்ற தோற்றம் அவளுக்கு இருப்பதாகக் காட்டுகிறார் (அவளுக்கு முளைத்திருக்கும் லேசான மீசை மயிர் ) என்று நான் நினைக்கிறேன் .

ஊதாநிறப் புகை கிறுக்கியப் பீடிச்சுருளும் சில காலி மதுபுட்டிகளும், இலக்கியத்தில் எந்த இடம் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஒரு ரசிகனுக்கு இந்தக் கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் எரிச்சலுடனும், அறுவருப்புடனும் கூடிய ஒரு குடிகாரன் ஒரு ரயில்நிலையத்திலோ, ஒரு பேருந்து நிறுத்ததிலோ நாம் பலரை பார்க்கிறோம் அல்லவா, அவர்களில் ஒருவன் குடிகாரன், புகைத்துக்கொண்டே இருப்பவன், அழுக்கு ஆடையில் மட்டுமே தோற்றமளிப்பவன், பெண்களை உரசுபவன் - ஆனால் அவன் ஒரு எழுத்தாளன்...  எப்படி இருக்கிறது ?? இதுவே அதிர்ச்சி என்றால் இவனைப் போன்றே ஒரு நண்பன் இவனுக்கு இருக்கிறான். இருவரும் தன்னைப் பிரிந்த பெண்களை மறக்க தினமும் குடிக்கின்றனர்.அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது , நட்பு இருக்கிறது, அக்கறை இருக்கிறது ...ஆக அவர்கள் ஒரு குடும்பமாக தீர்மானிக்கிறார்கள். சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?? இக்கதையில் அந்தக் குடிகாரர்களின் குடும்ப வாழ்க்கையும், அவர்கள் குழந்தையான அந்தத் தெரு நாயும் மிக அழுத்தமான பாத்திரங்கள், குடும்பத்தின் ஆணிவேரைச் சாய்த்துப் பார்க்க வைக்கும் வலிமையான பாத்திரப் படைப்பு. அன்புக்கு நிகர் எந்த உணர்வும் இல்லை - உணரலாம் இக்கதையில்.

மாறுகண்கள் கொண்ட ஒரு பெண்ணின் கதை, தூக்குப் பானை சலம்பும் புதை ரகசியம் , மரப்பாச்சியைக் காணவில்லை என்ற அழுத்தமான மூன்று கதைகளும். குறுக்குவெட்டுப் பாதைகளில் உலவும் செல் பேசி , தொந்திக் கணபதியின் வாகனம் இவ்விரண்டு கதைகளும் சுவைபட எழுதியிருக்கிறார். 

மேற் சொன்ன ஐந்து கதைகளில் மரப்பாச்சியைக் காணவில்லை என்ற கதையினைப் படிக்கும்போது அந்தத் தாயின் மீது மிகுந்த வெறுப்பை தருகிறது. இன்னும் இது மத்திய மாவட்டங்களில் சிசுக் கொலையாக நடப்பதை நினைத்தாலும், பெண்ணின் இழி நிலைக்கு பெண்களும் பெரிய காரணம் என்று உணர முடிகிறது .

மாறு கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் நிலை இப்படித் தான்(கதையில்) முடியும் என்று யூகம் செய்ய முடிகிறது. பெண்களைப் பற்றிய சமூகக் கதைகள், திரைப்படங்கள் ஆகட்டும், இரண்டாம் தர பத்திரிகை ஆகட்டும், ஒரு அபலைப் பெண்ணின் கதை இப்படித் தான் முடிகிறது. அபலைப் பெண்களை ஒரு insisting போதைப் பொருளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற நிலை சமூகத்திற்கு இருப்பது போல் திணறுகிறது . ஆனால் கதையின் இறுதியில், அந்த முதிர்கன்னியின் , தங்கையின் ஒரு கேள்வி "ஜீரணம் செய்வது கடினம்" .

இறுதிக் கதையான, ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது ஒரு தத்துவ ரீதியினாலான தலைப்பா? ஒரு கவிதையே தலைப்பா ? கதைக்குள் சென்றால் காதலின் யதார்த்தம் பற்றி அப்பட்டமான உண்மையினை வெளிக் கொணருகிறார். ஹார்மோன்ஸ் செய்யும் லீலையாக, நீண்ட நாள் காதலிக்கும் காதலனை மறக்கச் செய்யும், தன்னைச் சுற்றிவரும் ஒரு பைத்தியக்கார stranger மீதான பரிவு. பெண்ணின் பலவீனம், ஆணின் குருட்டு மோகம் இவற்றை நேரடியாய்ச் சொல்லாமல் எளிதாய் ஒரே நாளில் நடக்கும் சம்பவமாக சொல்கிறார்.

மேலும், இந்த சிறுகதையில் அவன், அவள் ,அவர்கள் என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன .. அதில் எழுத்துப் பிழைகள் நிரம்ப இருப்பது போல் தோன்றிற்று .. ஒரு வேளை, நள்ளிரவு தாண்டி படித்த அயற்சியா என்று புரியவில்லை.

உதாரணம் :-  அவள் குளக்கரையில் நின்று முகம் கழுவும் போது .... அவன் என்கிற வார்த்தை தவறாகப் பிரயோகப் படுத்தியாதாக ஒரு சந்தேகம் அதே போல், அவன் அவளுடைய பாயில் படுக்கும்போதும் அவள் மேல் படுப்பதாக நினைத்துக் கொண்டான் என்று வரும் அல்லவா ...அதுவும் அப்படித் தான் ..புனைவு என்று புலப்படுவதால் அதை எழுத்துப் பிழையாக கருதாமல் அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் போது கதை ஒரு மாதிரி இடறுகிறது ... கதையின் இறுதியில் வரும் ஒரு அதிர்ச்சி இவைகளை மறந்து, ஒரு நிமிடம் அவனின் வெட்டுண்ட கையின் வலிபோல்.. புத்தகத்தினை மூட யோசிக்கிறது 

இவர் தன் கதைகளின் மூலம் எழுத்துலக வாழ்க்கையினையும், நமது நம்பிக்கைகளான காதல், குடும்பம், திருமணம் மீது தன் கதைகளின் மூலம் ஒரு நேர்மையான பரிசோதனை கண்டு என்னைக் கவர்ந்துவிட்டார் .    

நினைவிருக்கட்டும் இது வெறும் ஒரு ரசிகனின் பார்வை மட்டுமே 

திங்கள், 17 அக்டோபர், 2011

தீபாவளி

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது..                                                                  


இந்நாள் நுகர்வு கலாச்சாரத்தில், தங்களுடைய பணக் கையிருப்பையும், கடன் அட்டையினை முழுவதும் செலவழிக்கவும் வழி செய்யும் நாள் மட்டுமே . நம் சமூகத்தில் இப்படி ஒரு விழா கொண்டாடும் அளவுக்கு எந்த அற்புதச் சம்பவங்களும் இந்த ஆண்டில் நிகழவில்லை? என்றோ அழிந்த யாரோ ஒரு அரக்கன், இன்று எதனை அரக்கர்களையும், சுயநலப் பேய்களையும் நாம் பார்க்கிறோம் ?? அப்படியெனில் இட்ன்ஹா தீபாவளி என்ன உணர்த்துகிறது உங்களுக்கு ? பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே திருப்தியையும், மற்றோருக்கெல்லாம் அடுத்த தீபாவளியை நன்றாக கொண்டாடுவோம் என்கிற தேற்றமோ!! இல்லை ஏமாற்றமோ மட்டுமே மிஞ்சுகிறது ..... உணருங்கள்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

விதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6


                விதி என்ற "வார்த்தை" மனித வாழ்வில் தவிர்க்க முடியாத சொல். தெய்வ நம்பிக்கை இல்லாதவன் கூட தன்னை மறக்கும் நிலையில் விதியினை பற்றி பேசுவான். விதி, இன்பம், துன்பம் இரண்டையுமே ஒரு விதிக்கபட்ட இடைவெளியில் மாற்றி மாற்றி நமக்கு வழங்குகிறது. அந்த விதி இக்கதையில் என்ன செய்கிறது??.

  
                பொருள் தேடி இடம் பெயர்ந்த வேடர் கூட்டமொன்று இந்த சிற்றூரில் தங்குவதில் விதியின் செயல்  ஒன்றும் இல்லை என்றாலும், குலத்தொழிலாம் வேட்டையாடுதலில் வீரன் செய்த புலி வேட்டை ஒன்றும் விதிப் பயன் இல்லை என்றாலும், ஏன் அவ்வூரில் வாழும் அர்ச்சகரை காண அரசியல் சூது கொண்ட முத்தன் அவ்வூருக்கு வந்தது கூட விதியால் அன்று, ஆனால் அப்பேதையாம் கோதையை காப்பாற்ற கோயிலில் நுழைந்த வீரனின் செயலே அவ்விதியால் வந்தது எனலாம்.

             அவன் உள்நுழைந்ததனால் அவ்விதி யாது செய்யும் என்று கேட்டீர்களா ?? தன்னை காத்திட்ட வீரனை காதல் கொள்ள செய்யும் அல்லது அரசியல் செய்ய வேண்டி, அவ்வீரனை பகடையாய் தேர்ந்தெடுக்க வைக்கும். காதலோ, அரசியலோ ஒரு பெண் மையப் புள்ளியாக ஆகும் பொழுது என்ன குழப்பம் வேண்டுமானாலும் நேரலாம் என்பதும் அவ்விதியின் செயலே.


          கோதை தன்னை காப்பாற்றிய ஒருவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே என்று வருத்தமுற்றாலும், காதல் எனும் பயிர் முளைக்காத   பெண்ணாகவே தோற்றமளித்தாள். ஆயினும் தன்னில் விழுந்த காதல் விதயினையும் , அது துளிர் விடுவதும் விதியின் கையிலில் இருப்பதை அறியாமல், பக்கத்தில் வசிக்கும் மருத்துவச்சிக் கிழவியைக் காணச் சென்றாள். விதியும் அவள் பின்னே தொடர்ந்தது.


        தன்னளவில் ஒரு அந்தனப்பெண்ணிடம்  பேசுவதே ஒரு குற்றம் எனும் சமூகத்தின் மத்தியில், எந்த ஒரு விளைவையும் யோசித்து செய்யும் வீரநாயக்கன். கோதையைக் கண்டவுடன் தன்னை மறந்தான். எதோ ஒரு பிணைப்பு தன்னை அக்கோயிலுக்கு இட்டுச் சென்று அவளை தன கண் முன்னே நிறுத்தியதாக எண்ணினான்.


          அதிகாலைப் பொழுதிலே நீராடிவிட்டு கையில் எந்த வாழும் ஏந்தாமல் துரிதமாக கிளம்பினான்.தன் அண்ணன் எங்கே போகிறான் என்பதை அறிய முற்பட்டாலும், அவனிடம் வினவ தயிரியம் இன்றி மலங்க மலங்க விளித்த்க் கொண்டிருந்தாள், வீரனின் தங்கை நல்லாள்.தன் தோழன் பொம்மனுக்கு தெரியுமுன் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று தமக்குள்ள உளறிக் கொண்டே கிளம்பினேன். தன் தலைவர் எங்கோ செல்கிறார் என்பதை உணர்ந்த அவன் நாய் ஓய்யானும் அவனுடனே விரைந்தது. தன்னுடன் வரும் நாயை திரும்பிச் செல்லுமாறு சுட்டு விரல் காண்பிக்க, ஓய்யானும் திரும்பியது.


          அக்காலையில், செடிகளிலும் , புல்லிலும், வயல்வெளிகளும், காலைக் கதிரவன் தன் பொற்கரம் கொண்டு பொன்னாய்ச் சமைத்திருந்தான். இந்த மகோன்னதமான சூழலில் ஒருவன் காதல் உணர்வு கொள்ளும்போது. புது உலகமே தமக்காக சஞ்சரிப்பது போல் தோன்றும்.ஊருக்குள் ஒவ்வொரு வீடும் சாணமிட்டு மொழுகி, சிக்கலான மாக்கோலங்கள். அந்த ஊரின் தூய்மையினையும், ஒழுக்கத்தினையும் எடுத்துக் காட்டியது. புலிக்களின் தொல்லை வெகுவாக குறைந்து வருவதால் அதிகாலையிலே வயலுக்கு சென்றுவிட்ட கணவன்மார்களுக்கு, கஞ்சியும், தினைச் சோறும்  தயாரித்துக் கொண்டிருந்தனர்.அடுத்த நாள் வரும் சந்தைக்கு தயாராக அண்டை ஊர்களிலிருந்து மாட்டுவண்டிகள் வந்து கொண்டிருந்தன.

            கோயிலுக்கு அருகிலுள்ள வீதியிலிருந்து, மருத்துவக்கிழவியின்   வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கோதையினை, வெகு தொலைவிலே அடையாளம் கண்டு கொண்ட வீரன் ஒரு புன்னகையுடன் அத்திசையில் நடக்கலானான். இளம் பச்சை நிற கச்சையுடன், பச்சை நிற சேலையணிந்து வயல்வெளியில் ஒரு கையினை மேற்புறமும், மற்றொன்றை செய்தும்   நடந்துவரும் அழகினைக் கண்டு மெய்மறந்த வீரன் வேகமாக அவளை பின்தொடர்ந்தான்.


             கோதை மெதுவாக ஒரு குடிசையினுள் எட்டி பார்த்துக் கொண்டே "அம்மா " என்று அழைத்தாள். அக்கிழவியும் வந்திருப்பது யார் என்பதை அறிந்து ,"யாரது நாகங் கண்டு மயங்கிய பெண்ணா?? ம்ம் ..பூச்சியைக் கண்டு மயங்கியவள் புலியைக் கொன்றதேனோ?? "என்றாள். "போ !! கிழவி ..நானெங்கு கொன்றேன்? ஒரு வில்லேந்திய வீரனும் அவன் தோழனும் வந்தல்லவோ கொன்றனர் .பாவம் அந்த புலி கோயில் வாசலிலேயே உயிர் துறந்தது "என்று பரிதாபம் கொண்டாள். பாரப்பா "புலிக்கு பரிந்து பேசும் பேதையே" என்று மீண்டும் ஏளனம் செய்தாள்.

   
            மீண்டும் அக்கிழவி"ஆமாம் யாரோ ஒரு நொண்டி திருக்கோயில் மேற்பார்வைக்கு வந்தானாமே??"என்றாள், அப்பொழுது கிழவியின் முகம் சற்று மாறியிருந்தது.கோதையும் அவனை நினைக்கையில், தன் இடை பற்ற வந்த அவன் குரூர எண்ணம் அவள் மனதில் ஓட, அவளுக்கும் முகம் மாறியது .சட்டென்று அந்த பேச்சினை மாற்ற அக்கிழவி "ஆமாம் அவ்வீரன் எப்படி இருந்தான் ?" என்றாள்.தான் வீரனை நன்றாக கவனிப்பதற்குள் மூர்ச்சையுற்று விழுந்ததையும், பின்னர் நினைவு திரும்பியும் இரு ஆண் மகன்கள் இருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை எனவும் ,அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் அதற்கு அக்கிழவியின் துணையினை நாடி வந்ததாக கூறினாள்.

           இதையெல்லாம் கவனிக்காது அக்கிழவி, "ஓகோ!! அந்த வேடனைத் தேடித்தான் இப்பைங்கிளி இங்கு வந்ததா ??" என்று விஷமத்துடன் கேட்க. கோபம் கொண்ட அந்த பெண் "ஏ கிழவி!! நீ பொல்லாதவள் .. உன்னிடம் போய் நான் உதவி கேட்டேனே " என்று கத்தினாள். "கோபம் கொள்ளாதே பெண்ணே!! உன்னைக் கண்டால் யாருக்குதான் உன்னை கவர்ந்து போக எண்ணம் வராது?? ஒருவேளை அந்த வேடனே உன்னைத்தேடி வருவானோ என்னவோ" என்று அந்த பேச்சை முடிக்க எண்ணமில்லாது இழுத்துக் கொண்டிருக்க, அவளை இடைமறித்து "ஊஹும் !! என்னை கவர்ந்து சென்று வாழ முடியாது , ஒரு வேளை காலில் விழுந்தால் வாழலாம் " என்று அவளும் நகைத்தாள் .. சொல்லி வைத்தார் போல், அந்த வேடன் திடுமென கதவு திறந்து கொண்டு நேராக அந்த கோதையின் காலில் விழ, கோதை அலறினாள்.  விதியின் விளையாட்டும் ஆரம்பமானது ....


      வீரநாயக்கனின் வாயில் நுரை கொட்டியிருந்தது...


(தொடரும் )


      

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

அம்மா - நீ செய்த பிழை தான்
என்ன ??

பெண்ணாகப் பிறந்தது
மட்டுமே பிழையாக,
அதிலும் தமிழ்
பெண்ணாக பிறந்தது ...

அதுவும் மானமுள்ள
ஈழத்தின் குடிமகளாய்
பிறந்தது

உன் உடல் தின்ற
பிணந்தின்னும் கழுகுளால்
உனக்கு களங்கம் ஏற்படவில்லை

உனக்காக ஒரு துளி கண்ணீர்
சிந்திய ஓராயிரம் பேருக்கு
தாய்மை கொண்டு
பேரொளி பெற்றதம்மா
உன் வாழ்க்கை !!!

உன்னைப் போன்ற பெண்கள்
பலர் கொடுத்த ரணங்களின்
விலை !!!!
ஈடு கொடுக்க முடியாததாயினும் - அது
ஈழம் எனும் தேசம் கொடுக்கும்..

அச் சுதந்திரக் காற்றின்
ஒவ்வொரு சுவாசங்களிலும்
எம் மக்கள் உமது
கற்பினை உணர்வர்...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

எங்கே செல்கிறேன் ???


உதிர்ந்துவிட வேண்டிய
காட்டயத்திலிருக்கும் சருகாய்,

கதிரவன் மறையும் முன்பு
கடைசியாக பார்க்கும் சூரியகாந்தியாய்,

வெட்டப்படும் நேரம் நெருங்குவதையுணராது
உரிமையாளனின் காலில் தன்கொம்பினைச்
சொரியும் வெள்ளாடாய்,

காத்திருக்கும் வலையை நோக்கியே
அதிர்நீச்சல் அடித்து வரும் ஆற்றுமீனாய்,

நிலையற்ற வாழ்வில்
சூன்யத்தின் பிரதிபலிப்பாய்,

திசையறியாது - பாதை தெரியாது
பயணத்தின் முடிவு தெரியாது

மனதின் உந்துதலில் - ஏதோ ஒரு
பொக்கிஷமென காலிபெட்டியினைச் சுமந்து

உள்ளிருக்கும் விழிப்புணர்வை,
உலகெல்லாம் தேடியலையும் முட்டாள்தனத்துடன்
ஒரு தேடல்,
ஒரு விடியல்,
இன்னும் புலப்படாமல்.........

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

உங்களோடு பேச வேண்டி,,ஒரு நிமிடம்

கிருஷ்ணனும் , இயேசுவும் தங்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர், அவர்களை பற்றிய புராணங்களில் கூட கிருஷ்ணன் ஒரு யாதவச் சிறுவனை உயிர் பிழைக்க வைத்ததாகவும், இயேசுவும் தன்னை நம்பிய ஒரு ஏழை தாயின் இறந்துபோன மகனின் சடலத்தினை -மீண்டும் உயிருள்ள மகனை மாற்றிய அற்புதம் நிகழ்ந்ததையும் கேள்விப் பட்டுள்ளேன்.

இதே போன்ற வேளையில், புத்தன் மட்டும் தன்னை வேண்டி வந்த தாயிடம்,"மரணச் செய்தி  இல்லாத ஒரு வீட்டில் ஒரு பிடி அரிசி கொண்டு வா"என்று கட்டளையிட, ஒவ்வொரு வீட்டிலும் அந்த யாசகம் கேட்டு கிடைக்கததால் இறுதியில் புத்தனிடம் வந்தாள்.அப்பொழுது புத்தன் அவளிடம்" என்ன கிடைத்ததா? " என்று வினவ, மரணம் என்பது எல்லோர் வாழ்விலும் நடக்கும், பிறப்பு என்பது இறப்பின் தொடக்க புள்ளி, நிலையற்ற வாழ்வே நிலையானது என்று உணர்ந்து அந்த தாயும் புதனின் சீடன் ஆனாள்.

இதில் யார் செய்தது உண்மையில் அற்புதம் ???
1 .இயேசுவும்,க்ரிஷ்ணனுமா ?? - இல்லை
2. புத்தனா??

சனி, 30 ஜூலை, 2011

காதல் மெய் பொருள் காண்பதறிவு


                        அன்று ஜன நெருக்கடி மிகுந்த பெங்களுரு நகரத்தின் மகாத்மா காந்தி ரோட்டில் நவநாகரிக யுவ யுவதிகள் பாலின வேறுபாடுகளை மறந்து உற்சாகமான இரவு கேளிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தித் கொண்டும், உணவருந்திகொண்டும் வார முடிவினை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த பரபரப்பிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவன் வாடகை காருக்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான், அந்த நேரத்தில் மன்னார்குடி வரை செல்ல அவனுக்கு எந்த ஒரு டாக்சியும் கிடைக்கவில்லை.


                       இந்த கதையின் தேவை அறிந்தோ என்னவோ, அந்நகரத்திலும்  தமிழனுக்கு ஒரு கர்நாடகன் உதவினான். இறுதியில் அவனுக்கு ஒரு வாகனம் கிடைத்தது, வாடகை சற்று அதிகம் என்றாலும் அதை பொருட்படுத்த அவனுக்கு அவகாசம் இல்லை.தன்னை அந்த காருக்குள் நுழைத்துகொண்ட வேகத்திலே தன் கையிலிருந்த செல்போனை எடுத்து அவளுக்கு அவளை அழைத்தான்.ஒரு ரிங் முழுதும் அடிப்பதற்குள் அந்த அழைப்பு துண்டிக்க பட்டது. திரும்ப வரும் பதில் அழைப்புக்காக அவன் காத்திருந்தான்.


                     போனில் அழைப்பு மணி கேட்டது ,"அம்மு, அழாதே!! நான் தான் கிளம்பிட்டேன்ல, அழாத.. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்க இல்லையா.. உன் அப்பாவோட மிரட்டல் ரௌடித்தனம் எல்லாம் எங்கிட்ட பலிக்காது.. என் கஷ்டம் எல்லாம் நீ என்ன விரும்பறத என்கிட்டே சொல்லாமலே போயிடுவியோ என்று தான், இப்பவும் ஒன்னும் கேட்டு போகலையே நாளைக்கு ஒன்பது மணிக்கு தானே கல்யாணம் 5.30 மணிக்குள்ள நான் வந்துருவேன், நம்ம பசங்களும் ரெடி ஆயிட்டாங்க, கார் கூட கிளம்பிடுச்சு ..தைரியமா இரு ... ...ம்ம் " போனை அணைத்தான். 

                     கடைசியாக அவள் சொன்ன வார்த்தை ,"கண்ணா !! நான் உன்னை எவ்ளவோ காயப் படுத்தியிருக்கேன் , ஆனா உன்னை அத மாதிரி ஆயிரம் மடங்கு காதலிக்கறேன், என் உயிருள்ள உடலில் நீ போடும் தாலி மட்டும் தான் ஏறும்டா இது சத்தியம் " கண்ணனின் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது. ஓட்டுனரை கொஞ்சம் வேகமாக ஓட்டிசெல்ல பணித்துவிட்டு தன் கண்களை மெல்ல மூடினான் .....

********************************************************************************
                     "அம்மு" ... அன்று அவனுக்கு அறிமுகமான நாள் .. சினிமாவில் இருப்பது போன்று ரோஜா பூக்களுக்கு மத்தியிலும், ஆற்றினிலோ அல்லது அருவியிலோ அவள் தோன்றவில்லை.

                               மன்னார்குடிக்கு அருகிலே விவசாயத்தினை மட்டுமே அடிப்படையாக கொண்ட ஒரு சிற்றூர்.விவசாயம் தவிர வேறு எந்த பிரதான தொழிலும் இல்லாத அவ்வூரில் ,பருவம் மாறிய விடலைப் பயல்கள் சிலர் தங்கள் விடுமுறை நாளில் ஒரு நாள் கிரிக்கெட் ஆடிய களைப்பில் வேப்ப மரத்து நிழலில் ஆளுக்கு ஒரு ஐஸ் வாங்கி கடித்துக் கொண்டே முக்கியமான விவாதத்தில் இருந்தனர். தங்களுக்கான காதலி பற்றிய தொகுதி உடன்பாடு தான் அது.

அப்படி தங்களுக்குள் செய்து கொண்ட உடன்பாட்டின் படி கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
1 . ஒருவனுக்கு நிச்சயக்கப்பட்ட காதலி மற்றவர்களுக்கு தங்கை ஆவாள்
2 . அதே போன்று ஒருவனுக்கு காதலில் பிரச்சனை ஏற்பட்டால் மற்றவர்கள் அவனுக்கு துணை நிற்க வேண்டும் .
3 . அதே சமயம், காதலுக்காக தங்கள் அணியான சோழ பாய்ஸின் (உருப்படியாக எந்த ஆட்டங்களிலாவது விளையாடாமல் இருந்து அணிக்கு பலவீனம் சேர்க்கும் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது
ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன  "


                அதற்கு பின் தங்களுக்கான ஆள் யார், யார் என்பதை தீர்மானிக்கும் செயற்குழு ஆரம்பமானது. அணித்தலைவர் ராஜா,தன் பள்ளிக்கு வெளியில் சுண்டல் கடை வைத்திருக்கும் கிழவியின் பேத்தியான தமிழரசியை தேர்ந்தெடுத்தான், அடுத்ததாக வாத்தியின் மகன் சுரேஷுக்கு அந்த ஊரில் விடுதியில் தங்கி படிக்கும் சந்திரவதனாவினை தேர்ந்தெடுத்தனர், இந்த போட்டியில் இருந்து விலகிய கவியரசன், திலக் ஆகியோருக்கு அடுத்த முறை  பங்காளி - கண்ணனுக்கு வந்தது.

              
                 "சொல்லு பங்காளி உன் ஆளு யாருன்னு" என்று ஆர்வமாய் கேட்டான் ராஜா, ஏனோ ஒரு கணப்பொழுதில் தன் எண்ணத்தில் உதித்த தன் உறவுப்பெண் செல்வி எனும் அம்முவை தேர்ந்தெடுத்தான்.கண்ணனுக்குள் உடனே ஒரு கண்ணதாசன் உதாயமாகி ஒரு கவிதையை பெற்றெடுத்தான்.


1 ."நீச்சலே தெரியாத நான் 
அன்று கிணற்றிலே விழுந்தேன் 
பிழைத்துக் கொண்டேன் !!

இன்று உன் பார்வை பட்டவுடனே
செத்து விட்டேனே ..!!

- உதயமாகும் காதலன் - கவிஞன் -கண்ணன் .....   கண்ணதாசன் 




(தொடரும் - 1 )

                



















செவ்வாய், 19 ஜூலை, 2011

சொல்லடி சிவசக்தி


ஏனோ !!! எம்மினம் தொடர்ந்து அல்லலுற்று இருக்கையில்,- அவர்கள்
யாரென்று தெரியாமல் போயினும்,எம்மனம் பதறுகிறது

40000 பெண்கள் 8 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில்
கொடுமைபடுத்தப்பட்டு வருகின்றனர் என்று தெரியும் பொழுது

நிம்மதியான ஊரில் சாவகாசமாக சிந்தித்து காதல் கவிதை பாடவும்,
கற்பனையில் மிதக்கவும் மனம் லயிக்கவில்லை.

சில நூறு மையில்கள் தான் வலிமை படைத்தவன்
உருவாக்கிய தேசத்தின் எல்லைக் கோடு கடக்க

நான் மனிதனாய் கூக்குரலிடவா?
தமிழனாய் இனவெறி போற்றவா??

வியாழன், 26 மே, 2011

பசுவும் கன்றும் ...........


 காலம் - அது பல காயங்களின், வேதனைகளின், வலிகளின் மருந்து. அதே நேரம், எதிர்காலம் என்பது எந்த நொடியிலும் ஆச்சரியத்தினையோ,அதிர்ச்சியினையோ நமக்கு பரிசளிக்க ஒளித்துவைத்திருக்கும் ஒரு விளையாட்டு.

 பயணம் - மனித நாகரிகம் உருவெடுக்கவும், அவன் உலகில் அணைத்து உயிர்களை காட்டிலும் உயர்ந்ததாகவும் உருமாற அவன் கொண்ட பயணமே காரணம்.ஒவ்வொருவர் வாழ்விலும் - மாற்றம்,முன்னேற்றம்,தோல்வி,வெற்றி என எல்லா நிலைகளிலும் பயணம் ஒரு விளைவாகவோ அல்லது காரணமாகவோ இருக்கிறது.

ஒரு கால சுழற்சியில் நடக்கின்ற இரு ஒத்த பயணங்களை பற்றிய எண்ணங்கள்/ நினைவுகள்  இனி ;

பசுவும் கன்றும்  

மே திங்கள்  22 ,1992

அது ஒரு ஒரு மாலைப் பொழுது, தான் அடுத்த நாள் மேற்கொள்ள இருக்கும் பயணத்தை பற்றி அந்த சிறுவனுக்கு ஒரு மலைப்பு. தன் தாய் தன்னிடம் , "உனக்கு பிடித்த விளையாட்டு பொருள் ஏதாவது ஒன்றினை எடுத்துக்கொள் மற்றவை எல்லாம் நாம் பின்னர் எடுத்து கொள்ளலாம்"என்றாள். அது அவனால் முடியாத ஒன்று. ஏனெனில், தனக்கு மிகவும் விருப்பமுள்ள விளையாட்டுப் பொருள் தன் தாத்தாவின் ஊன்று கோல் தானே, தன் தாத்தாவின் ஊன்று கொலை பிடுங்கி கொண்டு சிலம்பம் சுற்றுவதும், பின்னர் தன் தாத்தவினைப் போலவே அடுத்தவர்களை அதிகாரம் பண்ணவும், பின் தாத்தாவோடு விளையாடவும் அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருள் தன் தாத்தாவின் ஊன்றுகோல் தான், அவன் தாத்தாவோ அவனுடன் வரவில்லை .

இது வரை மேற்கொண்ட பயணங்கள் தந்த உற்சாகம் அவனுக்கு அந்த பயணம் தரப்போவதில்லை. தனது ஐந்து வயதிலேயே, அவன் அந்த ஊரின் மைனரைப் போல் வாழ்ந்து வந்தவன்.அவன் உடைத்த மண் பானைகள், சில சிறுவர்களின் மண்டைகள், அவன் அண்ணனின் விளையாட்டு பொருள்கள் என நீண்ட பட்டியல் அவன் வரலாற்றில் உண்டு. அந்த தெருவில் அவன் தான் எல்லோருக்கும் செல்லப் பிள்ளை, எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பான், ஒருமையில் தான் பேசுவான்.சுருங்க சொல்லப் போனால் அவனது பயணம் புறப்படும் அந்த இடம் அன்று வரை அவன் ராஜ்ஜியம்.

 வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிழைப்பு தேடி வேறு ஒரு ஊர் செல்லும் போது அவர்கள் யார் முகத்திலும் முழிக்க முடியாது , அந்த நிலையில் தான் அந்த குடும்பமும் - அடுத்த நாள் காலை நான்கு மணிக்கே அவ்வூரை விட்டு கிளம்பிய ஒரு பேருந்தில் அவன் குடும்பம் இருந்தது, தன் தாய்,தந்தை மற்றும் அவன் அண்ணன் ஆகியோர் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தனர்.அன்று ,  ஜன்னல் சீட்டிற்காக அவன் அண்ணன் அவனுடன் சண்டை போடவில்லை.

       எந்த பேருந்து பயணத்திலும் அவனுக்கு கிடைக்கும் டொரினோ குளிர் பானம், அன்றும் கிடைத்தது.ஆனால், அதை வாங்கி தரும் வேளையில் அவன் தந்தை சொன்ன வார்த்தைகள் அவனுக்கு அந்த பானத்தின் ருசியினை குறைத்தது - "கண்ணா! நீ எது கேட்டாலும் இன்னைக்கு வரைக்கும் டாடி உனக்கு வாங்கி தந்துருக்கேன்.. ஆனா நாம புது ஊருக்கு போனதுக்கப்புறம் அப்படி எல்லாம் வாங்கித் தர முடியாது. நீயும் மம்மி -டாடி பேச்சல்லாம் கேட்டு நடக்கணும் ,எதுவும் வேண்டும் என்று அடம் பிடிக்க கூடாது ". 

       எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிக் கொண்டு குடிக்கும் தன் அண்ணனை பார்க்கும் போது பாவமாக இருந்தது.தானும் தன் அண்ணனைப் போல் தலையாட்டி, தன் தந்தையினை உற்று நோக்கினான்.அவர் கண்களில் கண்ணீர் துளி ஒன்று கட்டுப்பாடின்றி வெளியே வந்தது.மதுரையில் பேருந்து மாற்றி ஏறியவுடன் இந்த முறை தாமாகவே வலிய வந்து தன் அண்ணனுக்கு ஜன்னலோரம் இடம் கொடுத்து தன் அம்மாவின் அருகில் வந்தான்.

         தன் அம்மா தன்னிடம் எதோ சொல்ல வந்து, பின் சொல்ல முடியாமல் இருப்பதை அவனால் உணர முடிந்தது.அப்படியே தன் தாயின் மடியில் படுத்துக்  கொண்டான்.அடிக்கடி கண்ணீரை துடைத்து கொண்டே வருவதால் தன் தாயின் சேலை முந்தி கொஞ்சம் ஈரமாய் இருந்தது, அந்த ஈரம் தூண்டி விட்ட ஒரு  உணர்வு அவன் அம்மாவிடம்,"தான் இனிமேல் சேட்டை பண்ண மாட்டேன் , என் வாழை சுருட்டி வைத்து விடுவேன், நல்ல பிள்ளையாய் நடந்து கொள்வேன் " என்று சில உத்திரவாதம் கொடுத்தது.தன் பிள்ளையை தன் மாரோடு அணைத்து கொண்டு அந்த பயணத்தில் ஆழ்ந்திருந்தாள்.

            கடன் தொல்லையால் தன் வாழ்க்கையில் தோல்விகளுக்கும், அவமானங்களுக்கும் கொடுத்த விலையே அக்குடும்பம் அவ்வூரை விட்டு வேறு ஒரு ஊருக்கு வரவழைத்தது.அந்த பயணம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று.அந்த பயணத்தின் அர்த்தம் அவர்களுடைய அவ்விரண்டு பிள்ளைகளே.அப்பிள்ளைகளுக்காக எப்படிப் பட்ட கடினப் பாதையினையும் கடந்து செல்ல அந்த பயணம் அவளுக்கு ஒரு வைராக்கியம் அளித்தது.தனது மனைவியின் பார்வையை கண்டே அவள் உள்ளம் உணர்ந்த கணவனும் அந்த பயணத்திற்கு தயாரானார். அந்த பேருந்துப் பயணத்தில் தொடங்கிய அச்சிறு குடும்பத்தின் பயணம் தங்கள் முதல் பயணத்தினை நிறைவு செய்ய சரியாக 20௦ வருடங்கள் பிடித்தது.

மே திங்கள் -22 ,2011   :-

    அடுத்த பயணத்துக்கான நாள் தேதி குறிக்கப்பட்ட நாள், இந்த பயணத்தில் அவனும் ,அவன் அண்ணனும் தங்களுடைய பெற்றோர்களை அழைத்து செல்ல இருக்கின்றனர். அந்த பயணத்தில் ''தன்னை குறும்பு பண்ணக்கூடாது ,நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறி வந்தவர்கள், இன்று எந்த நிலையில் வருவார்கள் ?? தனக்கென்று ஒரு வீடும் இல்லாத அவன் தாய், நிலையான உத்தியோகமும் - பணவரவுமில்லாத தன கணவனோடு தன பிள்ளைகளை மட்டும் நம்பி எப்படி வருவாள்? "பசுவின் பின் கன்று வந்த காலம் போய், கன்றின் பின்னால் பசு செல்லும் காலம் எத்தகையது?"

  தனது முழு வாழ்க்கையை தன பிள்ளைகளுக்காக அர்பணித்த அவன் பெற்றோர்கள், தனக்கென்று ஒரு வீடோ மற்ற பொருளோ சேர்த்து வைக்கதோர் தம் மக்களை முழுதுமாக எதனை காலம் நம்பி இருப்பர், அவர்களுக்கு மணமாகும் வரை இருக்கலாம், அதற்கு பின்னர் ஒரு தவிர்க்கமுடியாத ஒரு இடைவெளி நம் கலாச்சாரத்தால் உருவாகிறது.

 நமது வாழ்க்கையில் நிம்மதி,சுதந்திரம்,அன்பு இவற்றிற்கு மட்டும் தான் விலையே கிடையாது. இது நம்மால் வாங்க முடியாத ஒன்றும் கூட, கலாச்சாரம் , பாசம், பண்பாடு, பொறுமை என்ற சக்கரங்களில் வாழ்க்கையை  ஒட்டிக் கொண்டிருக்கும், இந்த பசுவின் நிலை காலத்தின் கைகளில்...

அதோ அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.மேலும் ஒரு பயணம் தொடர்கிறது எந்த ஒரு அர்பணிப்பும் இல்லாமல் ...


திங்கள், 2 மே, 2011

அருளமுது - Nama Shivaya




1.சொர்கமென்ப பொன்னன்று பொருளன்று -யாதொரு 


மயக்கமென்ப மதுவன்று மங்கையன்று - பிரிதறு 
உறவென்ப தாயன்று,தாரமன்று எல்லாமன்று 
சிவனென்றி ருத்தலே மெய்  

2.
அகங்கொண்ட கோபமுங்காமமும் பொல்லா பாசமும் 
யாக்கைகொண்ட குருதியும்-மலமும் நோய்செய் கிருமியும்-எமை 
யாட்கொண்ட பேரருளாஞ்சிவனடி பற்றிட; எம்மை விட்டகன்றிட
யாம் நின்றோம் ஆனந்தவெற்றிடமாய். 


3.
நித்தமும் பயிலும் யோகமும், தியானமும்

சித்தமெல்லாம் சொல்லும் சிவாய மந்திரமும்

பித்தனைச் சேர்வதில்லை; ஞானமென்ப பலனன்று

வினையருத்து நின்ற வெற்றுமனம்

4.இம்மையில் ஆற்றிய வினை கரைந்தொழிய


மறுமையில் யாதொரு முயர்ச்சியு மற்று, 
இயல்பினொரு ஒருமையினைக் கண்டு- மதமெனுஞ்   
செயல்துறந்த நானே சிவன் 


5.விடுவிடுவென விட்டுநின்ற சுற்றமுஞ் சொந்தமும் 

படபடவென பட்டுப்போன பாசமுஞ் சோகமும் 
கடகடவென பாய்ந்துவந்த பக்தியெனு நதியிலே 
சிவசிவனென சந்தமாய் மூழ்கினேன் 

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

Anna Hazare!!!


Namaste !
I was not aware of this person... so thought of sharing it... with you all...
...

1. Who is Anna Hazare?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra

3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.
In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.

4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.

8. It's an entirely new thing right..?
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).

7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.
Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

8. Fine, What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Notlike, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.

9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.
Prominent personalities like Aamir Khan is supporting his cause.

10.Ok, got it. What can I do?
At least we can spread the message. How?
Putting status message, links, video, changing profile pics.

At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India.
At least we can hope that his Hunger Strike does not go in vain.
At least we can pray for his good health.

Thanks for reading.

புதன், 30 மார்ச், 2011

10 things to learn from Japan

The positive thing we need to learn from Japanese in this present condition are
1. THE CALM
Not a single visual of chest-beating or wild grief. Sorrow itself has been elevated.
2. THE DIGNITY
Disciplined queues for water & groceries. Not a rough word or a crude gesture.
3. THE ABILITY
The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
4. THE GRACE
People bought only what they needed for the present, so everybody could get something.
5. THE ORDER
No looting in shops. No honking & no overtaking on the roads. Just understanding.
6. THE SACRIFICE
Fifty workers stayed back to pump sea water in the N-reactors. How will they ever be repaid?
7. THE TENDERNESS
Restaurants cut prices. An unguarded ATM is left alone. The strong cared for the weak.
8. THE TRAINING
The old & the children, everyone knew exactly what to do. And they did just that.
9. THE MEDIA
They showed magnificent restraint in the bulletins. No silly reporters. Only calm reportage.
10. THE CONSCIENCE
When the power went off in a store, people put things back on the shelves & left quietly





They have the awareness to face such calamities





செவ்வாய், 8 மார்ச், 2011

-என் ஆச்சி சொன்ன கவிதை

அன்பு வாசகர்களே !!


உங்கள் ஆதரவுக்கு நன்றி 


முதுமையில் பெண் :

விழுதுகளை நம்பியிருக்கும் வேர் !!
-என் ஆச்சி சொன்ன கவிதை.



கவிதை எப்படி இவளவு அழகா? கேட்டவுடன் சொன்னாய்? என்று வினவியபோது. இது என் வாழ்க்கையின் சாராம்சம் என்றாள். 


இதை வைத்து நான் இன்னொரு தொடர் கதை எழுத ஆசைப்படுகிறேன். எனவே,வீர நாயக்கனை முடித்துவிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளேன் . எனக்கு பரீட்சை வேறு வருவதால்.. சற்று குழப்பமாகவும் உள்ளது.பாப்போம் மார்ச் மாதம் எப்படி என்று ??

காளிதாசன்