1.சொர்கமென்ப பொன்னன்று பொருளன்று -யாதொரு
மயக்கமென்ப மதுவன்று மங்கையன்று - பிரிதறு
உறவென்ப தாயன்று,தாரமன்று எல்லாமன்று
சிவனென்றி ருத்தலே மெய்
2.
யாக்கைகொண்ட குருதியும்-மலமும் நோய்செய் கிருமியும்-எமை
யாட்கொண்ட பேரருளாஞ்சிவனடி பற்றிட; எம்மை விட்டகன்றிட
3.
நித்தமும் பயிலும் யோகமும், தியானமும்
சித்தமெல்லாம் சொல்லும் சிவாய மந்திரமும்
பித்தனைச் சேர்வதில்லை; ஞானமென்ப பலனன்று
வினையருத்து நின்ற வெற்றுமனம்
4.இம்மையில் ஆற்றிய வினை கரைந்தொழிய
மறுமையில் யாதொரு முயர்ச்சியு மற்று,
இயல்பினொரு ஒருமையினைக் கண்டு- மதமெனுஞ்
செயல்துறந்த நானே சிவன்
5.விடுவிடுவென விட்டுநின்ற சுற்றமுஞ் சொந்தமும்
5.விடுவிடுவென விட்டுநின்ற சுற்றமுஞ் சொந்தமும்
படபடவென பட்டுப்போன பாசமுஞ் சோகமும்
கடகடவென பாய்ந்துவந்த பக்தியெனு நதியிலே
சிவசிவனென சந்தமாய் மூழ்கினேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக