திங்கள், 17 அக்டோபர், 2011

தீபாவளி

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது..                                                                  


இந்நாள் நுகர்வு கலாச்சாரத்தில், தங்களுடைய பணக் கையிருப்பையும், கடன் அட்டையினை முழுவதும் செலவழிக்கவும் வழி செய்யும் நாள் மட்டுமே . நம் சமூகத்தில் இப்படி ஒரு விழா கொண்டாடும் அளவுக்கு எந்த அற்புதச் சம்பவங்களும் இந்த ஆண்டில் நிகழவில்லை? என்றோ அழிந்த யாரோ ஒரு அரக்கன், இன்று எதனை அரக்கர்களையும், சுயநலப் பேய்களையும் நாம் பார்க்கிறோம் ?? அப்படியெனில் இட்ன்ஹா தீபாவளி என்ன உணர்த்துகிறது உங்களுக்கு ? பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே திருப்தியையும், மற்றோருக்கெல்லாம் அடுத்த தீபாவளியை நன்றாக கொண்டாடுவோம் என்கிற தேற்றமோ!! இல்லை ஏமாற்றமோ மட்டுமே மிஞ்சுகிறது ..... உணருங்கள்.

1 கருத்து:

  1. //இந்நாள் நுகர்வு கலாச்சாரத்தில், தங்களுடைய பணக் கையிருப்பையும், கடன் அட்டையினை முழுவதும் செலவழிக்கவும் வழி செய்யும் நாள் மட்டுமே//
    100% i agree with you ஜீவ கரிகாலன்....
    இதனை ஒவ்வொருவரும் உணரும் வரை, உணர்ந்து திருந்தும் வரை நாம் (அவர்கள் பார்வையில்) பைத்தியக்காரர்களாய்த்தான் தெரிவோம்....

    பதிலளிநீக்கு