வியாழன், 25 ஏப்ரல், 2013

அவன்,இவன்,இன்னொருவன்


அவனுக்கும், இவனுக்கும், இன்னொருவனுக்கும்
தனித்தனியாகக் கூட்டம் இருக்கின்றது....

இவன் இங்கே கெட்டவன்,
அங்கே நல்லவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
மற்றொரு இடத்தில் மகத்தானவன்.

அவன் இங்கே அப்பாவி,
அவன் அங்கே நல்லவன்,
அவன் இன்னொரு இடத்தில் கெட்டவன்,
மற்றொரு இடத்தில் மறைந்து வாழ்பவன.

இன்னொருவன் எங்கேயும் நல்லவன்,
எங்கேயும் கெட்டவன்,
இன்னொரு இடத்தில் அப்பாவி,
அதே இடத்தில் சதிகாரன்
மற்றொரு இடத்தில் கோமாளி

நீங்கள் எந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்??
எந்த நாட்டைச் சேர்ந்தவர்??


ஜீவ.கரிகாலன்

2 கருத்துகள்:

  1. கவிதைக்கு பொருத்தமான படம் . உங்கள் கேள்விகள் எனக்கு பிடித்திருகிறது ..நானறியேன் என் கூட்டமதை ..:(

    பதிலளிநீக்கு
  2. நன்றி!!! உங்கள் கருத்துக்கு நன்றி, வருகைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு