வெள்ளி, 1 ஜூன், 2012

வாழ்தல் இனிது -Aathmarthi's Blog

வாழ்தல் இனிது, பதினான்கு தலைப்புகளில் ஒரே கட்டுரையில் ஒருவன் எழுத வேண்டும் என்றால் ஒருமுறை , இரண்டுமுறை முயற்சிக்கலாம் . ஆனால் இதுவே ஒரு தொடராக  எழுதுகிறான் என்றால்,  அவருடைய வாழ்நாளில் ஏதாவது சிறப்பு கால நீட்டிப்பு என்று கடவுளிடம் வரம் கிடைத்திருக்குமா என்று தோன்றுகிறது.(சுஜாதாவிடம் இப்படி கேட்டதற்கு அவர் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார் என்று ஒருமுறை வாசித்திருக்கிறேன்)


தலையங்கம் , தத்துவம் ,கேள்வி, கவிதை , வலைபூ , இணையம், புத்தகம் , சினிமா, கவிதை, காதல் இது எல்லாவற்றோடு ஒரு குறுங்கதை என வண்ண வண்ண பூக்கள் இருக்கும் மலர்ச் செண்டு போல் அல்லது பலவகைப் பதார்த்தங்களோடு  படைக்கப்பட்ட தாளி மீல்ஸ் போல ஒரு அனுபவம் இதில் .

வாழ்தல் இனிது, அதனினும் இனிது.."வாழ்தல் இனிது" "ஆல் இஸ் வெல்" போன்ற ஒரு மந்திர வார்த்தையாய் எனக்குத் தோன்றுகிறது.

முக்கியமாக பல படைப்பாளிகளை இவர் அறிமுகம் செய்து வைக்கும் பாங்கு, மிக மிக பாராட்டவேண்டிய ஒன்று. அவர் தன் பதிவுகளில் ,முக்கியமான படைப்பாளிகளை மற்றும் அயல் தேசத்து படைப்பாளிகளை மட்டுமல்லாமல் சீரியசாய் இயங்கிக் கொண்டிருக்கும் சில வலைப்பூ  எழுத்தர்களைக் கூட அறிமுகப் படுத்துகிறார். மிகவும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் அவருடைய மொழி புதிய சொல்லாடல்கள், சுவாரஸ்யமாக சொல்லுதல், தேவையான அளவு ஹாஸ்யத்தை எப்பொழுதும் தன் சமையலில் தூவுதல் போன்றன இவர் தனிச் சிறப்பாய் நான் கருதுபவை.

இந்த பதிவுகளை கோர்ப்பதற்கு அவர் கொணரும் பூக்கள் எத்தனித் தோட்டத்தில் மலர்ந்திருக்க வேண்டும்? இவரும் அதைப் பறிக்கா எங்கெல்லாம் தேடி அலைந்துக் கொண்டிருக்கவேண்டும். தேடல் மட்டும் தானே நம் வாழ்தலை வெறும் இருத்தலுக்கும் மேலானதாக செய்யும் செயல் ? 

அவரது முதல் தொகுப்பான அதனினும் இனிது பெற்ற வெற்றியைப் போல் அதன் மெருகூட்டிய வடிவம் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று வாசிக்கும் பழக்கத்தை நிறைய மக்களிடம் எடுத்து செல்ல ஒரு காரனியாய் அமைய வாழ்த்தும் நண்பன். 

என் நண்பர்கள் இந்த வலைப்பூவிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் -http://aathmaarthi.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81/

- ஜீவ.கரிகாலன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக