பிரிவின் ஆற்றாமை என்ன செய்யும்
கொடிய மூளை நினைவுகள்
மீட்டும் பொருளிலெல்லாம்
உன் பிம்பங்களைக்
கசக்கிப் பிழியும் மோகங்கள்
வடிக்கின்ற உன் ஓவியத்திற்குள்
என் தாபத் தூரிகைகள் ;
வியர்க்கும் கனவுகளில்
உன் வண்ணம் குழைக்கிறேன் .
இருளில் விலகும் வெளிச்சம்
உன் உடல் மீது மட்டும்.
நிர்வாணம் கொண்டு போர்த்திய
உன் வஞ்சத்தை கறுப்பு வண்ணம்
கொண்டு மறைக்கின்றேன்.
கோடி முறை சேகரித்த
உன் பார்வையை தான்
உன் சித்திரமாக்கியிருக்கின்றேன ்
உன் இதழ்களில் வடிந்த
சிவப்பைத் துடைக்க மட்டும்
கொடுத்தேன்
முதல் முத்தம்
இந்த ஓவியம் திரும்பவும்
ஆண்டுகள் பல கடந்தும்கொடிய மூளை நினைவுகள்
மீட்டும் பொருளிலெல்லாம்
உன் பிம்பங்களைக்
கசக்கிப் பிழியும் மோகங்கள்
வடிக்கின்ற உன் ஓவியத்திற்குள்
என் தாபத் தூரிகைகள் ;
வியர்க்கும் கனவுகளில்
உன் வண்ணம் குழைக்கிறேன் .
இருளில் விலகும் வெளிச்சம்
உன் உடல் மீது மட்டும்.
நிர்வாணம் கொண்டு போர்த்திய
உன் வஞ்சத்தை கறுப்பு வண்ணம்
கொண்டு மறைக்கின்றேன்.
கோடி முறை சேகரித்த
உன் பார்வையை தான்
உன் சித்திரமாக்கியிருக்கின்றேன
உன் இதழ்களில் வடிந்த
சிவப்பைத் துடைக்க மட்டும்
கொடுத்தேன்
முதல் முத்தம்
இந்த ஓவியம் திரும்பவும்
முற்றுப்பெறவே இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக