வியாழன், 5 ஏப்ரல், 2012

புறவொழுக்கம்


சூழ்நிலைகள் சமைத்துவிடும்
சொர்க்க நரகங்கள்
ஒரு நொடியில் நிகழும்
மாற்றத்தைப் பொறுத்தது தான்

மங்கிய விளக்கொளி
மயக்கும் மாலைப் பொழுது
மஞ்சத்தின் இருமருங்கிலும்
நாம்...

பருவம் வந்து பத்து வருடமும்,
நட்பு கொண்டு ஐந்து வருடமும்
முடிந்திருக்கும்..

நம்மை கேட்பதற்கு யாருமில்லை ,
நாம் கேட்பதற்கு "இளையராஜவின் வயலின் மீட்டல் ".

ஐஸ்க்ரீமோடு உணவு முடிந்தது ,
பதினேழு டிகிரியில் அறையும் குளிர்ந்தது.

அன்றின் நினைவில் இருப்பதெல்லாம்
திடீரென ஒரு செல்லத் தும்மல் ,
நாம் எடுத்த இரு புகைப்படங்கள்
அன்று தெரிந்த மூன்றாம் பிறை ,
தூக்கத்தில்
நான்கு முறை உரசிய உன் கரம் ,
விழித்திருந்தும்
ஐந்தாம் முறை என் கரம்
ஆறு தம்ளர் தண்ணீர் ...
.
.
.
.
.
.

ஏழாம்தேதி உன் திருமணம்
என்னை அழைக்கவில்லை


போர்வைக்குள்ளே புழுங்கிக்
கொண்டிருந்தது நானல்ல ,
என் புறவொழுக்கம்

என்பது
எட்டு வருடம் கழித்து
இன்றுதான் தெரிகிறது ...

நன்னெறிகளால் விளைந்தத்
தனிமை உணர்த்துகிறது
நான் நரகத்தில் வசிப்பதை...

ஜீவ கரிகாலன்
30.மார்ச்.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக