புதன், 25 ஏப்ரல், 2012

காலங்களில் அவள் வசந்தம்

             அது ஒரு மாலை நேரம் மாலை வெயில் ஈரமான சாரலையும் சேர்த்து தூரிக்கொண்டிருந்தது. முடிந்த அளவு கரும்புகை கக்கி வந்த பெரிய முகம் வைத்த பச்சை நிறப் பேருந்து ஒன்று நெல்லைச் சீமையின் ஜங்சனில் "ப்பாம்" என்ற ஹார்ன் சப்தத்துடன் வந்திறங்கியது. அதிகக் கூட்டமில்லாத அப்பேருந்திலிருந்து , ஒரு கையிலே தண்ணீர் கூஜாவும் இன்னொரு கையில் ஒரு சிறு பையுடனும் உடலை ஒட்டிய வெள்ளை சட்டையும், சாம்பல் நிற பேண்ட்டும் அணிந்து தன்னை காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் ரவிச்சந்திரன் போல் தோற்றமளிக்க முயற்சிக்கும் வாலிபன் ஒருவன் அப்பேருந்திலிருந்து இறங்கினான். முகத்தில் கொஞ்சம் வெக்கமும், கொஞ்சம் காதலும் இழையோடிருந்தது, தனது பாக்கெட்டில் இருந்த கடைசி சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டே நடக்கலானான்,

         தலையை ஒட்டிச் சீவியிருந்த முடி சற்றுக் கலைந்ததை உணர்ந்து தன் சட்டைப் பையில் வைத்திருந்த சீப்பினால் தலையினை வாரிக்கொண்டே, கடை வீதிக்குச் சென்றான். நெல்லை அந்த மாலை வேலையில் வணிக முகம் கொண்டு பரபரப்பாய்க் காட்சி அளித்தது. அன்று, தெய்வமகன் படத்திற்காக சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை அறிவித்தது தினத்தந்தியில் தலைப்பு செய்தியாக வந்திருந்தது, அதற்குக் கீழே "கிழக்கு பாக்கிஸ்தானில் நடந்து வரும் மேற்கு பாக்கிஸ்தானைச் சேர்ந்த பூட்டோவின் அராஜகத்தினை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் சூளுரை " என்ற பெட்டிச் செய்தியை வாசிக்கும் பொறுமை இல்லாதவன், அருகிலிருந்த லாலாக் கடைக்குச சென்று ஒரு கிலோ அல்வா வாங்கினான். 


        தானும் அந்த அல்வாவைச் சூடாக சுவைப்பதற்காக ஒரு ஐம்பது கிராம் தனியாகக் கேட்டான், அப்பொழுதுதான் இறக்கிவைக்கப் பட்ட அந்த கோதுமை அல்வாவினை சிறியதாய் நறுக்கிய வாழை இலையில் வைத்துக் கொடுத்தார்கள். வாழை இலையின் பச்சைவண்ணம் பழுப்பு நிறமாய் மாறிக்கொண்டிருக்க,  அந்தச் சூட்டோடு அவசரமாக விழுங்கிக் கொண்டு நடந்தான்.நெல்லையப்பரை தரிசிப்பதற்காக வந்திருந்த வடநாட்டு பெருங்கூட்டம் ஒன்று ஹிந்தியோ/ சௌரட்டிரமோ பேசிக்கொண்டு அவர்களும் அல்வாவை வாங்கினர். அவர்களில் ஒருவன் ஆங்கிலத்தில் அல்வாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் ஊரில் இருந்து தான் இந்த ஊருக்கு அல்வா வந்தது என்று, "அல்வா என்பது தமிழ் வார்த்தையா ?வடமொழியா ?"என்று யோசித்துக் கொண்டே நகர்ந்தான், பின்னே கல்லூரியில் கிடைக்கும் விடுமுறையைக் கணக்கில் கொண்டு நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீசிடம் அடி வாங்கி ஓடியவர்களில் ஒருத்தன் தானே இவன்?

              நெல்லைச் சீமை தன் கிராமம் போல் அல்லாது, தன்னைப் போல் பலரும் பேண்ட் அணிந்தே  நடமாடினர். தன் கிராமத்தில் பேண்ட் அணிந்து, தெய்வமகன் படத்தில் வரும் மகன் சிவாஜிகணேசன் போலே நகம் கடித்துக் கொண்டே வீதியில் நடந்து சென்றால், மொத்த கிராமமும் அவனை மட்டும் ஆச்சரியமாய் வேடிக்கை பார்க்கும். இங்கே இந்த நெல்லைச் சீமையிலோ  அவனைக் கண்டு கொள்வாரே இல்லை. சில இட்லிக் கடைகளில் வைத்திருக்கும் எள்ளு மிளகாய்ப் பொடியின் வாசம் அவனைச் சுண்டி இழுத்தது, ஆனால், அவனது கவனமோ அருகிலிருந்த மல்லிகைப்பூவின் மேலே சென்றது. அவன் சிறுவயதில் அவளுக்கு பூ வாங்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது , சிரித்துக் கொண்டான்.

                  சிவரஞ்சனிக்கு மல்லிகைப்பூ வாங்கலாமா என்று யோசித்தாலும், அதை கொடுக்கும் அளவுக்கு அவனுக்கு தைரியம் இல்லாததால் தன் நடையினை விரைவாகத் தொடர்ந்தான். பேட்டை எனும் பகுதியில் அவன் தாய் மாமன் வசித்து வருகிறார், அவனின் தாய் மாமனுக்கு மொத்தம் நான்கு பெண்களும் இரண்டு மகன்களும். அதில் தன் வயதுக்கு ஏற்ற மூத்த மகளின் பெயர் தான் சிவரஞ்சனி. ஆனந்தின் இளம் வயதில் அவனுக்கு இருந்த முக்கியமான எதிரி, காரணமே இல்லாமல் ஒரு பெண்ணை வெறுப்பது தானே மிகப் பெரிய ஆபத்தை தரும். அது இவன் வாழ்க்கையிலும் சரியாகப் பொருந்தும், தன் இளம் வயதில் விடுமுறை நாளில் வரும் அவளைக் கண்டாலே அவனுக்கு கொஞ்சம் கூடப் பொறுக்காது , அவர்கள் திரும்பச்  செல்லும் நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளுக்காகவே காத்துக் கொண்டே இருப்பான். இவனாவது பரவாயில்லை , அந்த சிவரஞ்சனிக்கும், ஆனந்த் என்றால் கொஞ்சம் கூட ஆகவே ஆகாது. எப்பொழுதும் அவனை கிண்டலடித்துக் கொண்டே இருப்பாள்.

               ஆனால் இன்று சிவரஞ்சனியைப் பார்க்க ஆனந்த் மிகுந்த ஆசையோடு சென்றுக் கொண்டிருந்தான், அவனுடைய  மாமன் வசிக்கும் வீட்டை விசாரித்து , அந்தத் தெருவில் நுழையும் பொழுது மாலை ஐந்தரை மணி இருக்கும். பொதுவாக அவன் ஊரில் உள்ள பெரும்பான்மையான பெண்மணிகளை சில சமயங்களில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே பார்க்க முடியும்.  பொதுவாக அதிகாலை எழுந்து கோலம் போடும் வேளையிலோ,  இல்லை தண்ணீர் பிடிக்க ஊரணிக்கு/கிணற்றுக்கு அல்லது கண்மாய்க்கு  செல்லும் வேளையிலோ தான் பார்க்க முடியும். அப்படியும் இல்லாவிட்டால், இந்த அந்தி மாலை நேரத்தில் பார்க்கலாம், அந்நேரத்தில் ஊரில் உள்ள எல்லோர் வீட்டினிலும் இருக்கும் பெண்கள் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து , வீட்டினில் லாந்தர் விளக்கினையும், பிற மண்ணெண்ணை விளக்கினையும் துடைத்து வைத்து, மண்ணெண்ணை ஊற்றி, கண்ணாடியைப் பொருத்தி இரவுக்குத் தயாராவார்கள். ஆனால், ஆனந்த் சென்றுகொண்டிருந்த அந்த தெருவிலோ அப்படி ஒரு சுவடே இல்லை.  ஏனென்றால், அவன் வசிப்பது  பட்டிக்காடு, ஆனால்அவன் வந்திருப்பது நெல்லைச் சீமைக்கு அல்லவா? எல்லோர் வீட்டிலும் பல்புகள் தங்கள் பணியைத் தொடங்கும் பொருட்டு தொங்கிக்கொண்டிருப்பது போல் அவனுக்கு தோன்றியது . 


        சிவரஞ்சனியைப்  பார்க்கும் ஆசையோடு வீட்டிற்கு அருகில் வந்த ஆனந்தைக் கண்டு, அவன் மாமன் பேரதிர்ச்சியுற்றார். அதை விட பன் மடங்கு ஆனந்துக்கு காத்திருந்தது, ஆம், அவன், அன்று அங்கே வந்திருக்க கூடாது தான், ஏனென்றால் அப்பொழுது தான் சிவரஞ்சனியை பெண் பார்க்க ஒரு கூட்டம் அவர் வீட்டிற்கு  வந்திருந்தது, எல்லோர் முகத்திலும் தெளிவாய் தெரிந்தது சங்கடம்..


1 . விதி, எப்படியெல்லாம் காலங்களோடு விளையாடுகிறது ??
2 . காலம் எப்படியெல்லாம் காதலோடு விளையாடுகிறது??
3 .காதல் -

எந்தக் காதலும் அவ்வளவு எளிதாக வடிவம் பெற்றுவிடுவதில்லை.
பழைய வாசகம் ஒன்று உள்ளதே ,'எல்லாக் காதலும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று 'அப்படி மோதல்களில் பரிணாமம் பெற்றது தான் இவர்கள் காதல். அவர்களின் பழைய மோதல்களுக்குள் செல்வோமா ??

-----------------------------------------------------------------------------------------------------
           
              "மழை என்றால் தீபாவளி அன்று மட்டும் வந்து தங்கள் மகிழ்ச்சியைத் தடுக்கும் இறைவனின் ஏற்பாடு" என்று பொறுமும் சிறுவர்கள் வசிக்கும் - ஆனந்தினுடைய கரிசல் காட்டுக் கிராமம், ஒவ்வொரு வருடத்திலும் மூன்று மாதங்களாவது குற்றாலச் சாரலைப் பெறும், தங்கத் தாமிரபரணி பாயும் எழில்மிகு மாநகரம் சிவரஞ்சனியின் வசிக்கும் திருநெல்வேலி. பட்டிக்காட்டில் வசித்தாலும் பண்ணையார் வீட்டு பிள்ளை போல் இருப்பவன் ஆனந்த், ஒரு சாதாரண போலிஸ் காரரின் மூத்த மகள் சிவரஞ்சனி, ஆனந்தின் முறைப்பெண். அதனால் தான் என்னவோஆனந்தினை கண்டால் முறைத்துக் கொண்டே இருப்பாள்.

        ஆனந்த், எப்படி இருப்பான்?? பதினான்கு வயது வரை வெறும் கால் சட்டை அணிந்தே இருப்பான், கால் சட்டைக்கு கீழே விழாமல் இருக்க அரைஞான் கயிறு இருந்தாலும், அந்த கால்சட்டையில் இருந்து இரண்டு பட்டைத் துணி தோள் பட்டையின் மேல் தாங்கிக் கொள்ளும் , நெற்றியிலே சுருண்டு விழும் மயிர்கள் சில, எப்பொழுதும் இடப்பட்டிருக்கும் நேர்த்தியான திருநீறு என்று கிராமத்து ஒல்லி தேகத்துடன் தோற்றமுடையவன்.

                 சிவரஞ்சனி கருப்பு நிறம், ஆனால் அந்தக் காந்தக் கண்கள், கருமையினால் உயிர்பெற்று ஆனந்தை அவ்வப்போது அடக்கும் சக்தி பெற்றது. அவளுக்கு இரட்டை சடைப் பின்னல் இரண்டாய் மடித்து தோள்களில் நிலை கொண்டிருக்கும். வித, விதமான சாந்து பொட்டுகள் சிவரஞ்சனியின் தனிச் சிறப்பு, படிப்பில் சுமார் தான் என்றாலும் ஆணவம் கொண்ட அறிவாளி போல எப்பொழுதும் செருக்குடன் தான் நடமாடுவாள்.இல்லையில்லை அவள் நடப்பதே இல்லை எப்பொழுதம் பாப்பா நொண்டி தான் அடிப்பாள், தன்னை மனதில் சரோஜா தேவியை பாவிப்பவள் அப்படித் தானே நடப்பாள்.

          மாமன் மகள் சிவரஞ்சனி நெல்லையில் பிறந்து வளர்ந்ததால் அவளுக்கு ஆனந்தை விட கொஞ்சம் உலக விஷயம் அதிகம். ஆனால், ஆனந்த் எஸ்.எஸ்.எல்.சி முடிக்கும் வரை அம்மாவின் முந்தானையை பிடித்து தான் வெளியே வருவான் அதனால அவனைப் பலர் கிண்டலடிப்பது உண்டு, ஆனந்திற்கு அம்மாவிற்கு நிகரான ஒரு அக்கா உண்டு. அந்த அக்காவிடம் சிவரஞ்சனி மிகவும் நெருக்கமாய் பழகுவாள், ஒவ்வொரு விடுமுறையும் தவறாமல் வந்துவிடுவாள். அவள் மட்டும் வந்துவிட்டால் போதும் ஆனந்த் யாருடனும் சரியாக பேசமாட்டான், அவன் அக்காவுடன் எரிந்து விழுவேன் , வேலை சொன்னால் செய்யமாட்டான். ஆனால் அவளோ அவனை வேண்டும் என்றே வம்பிழுப்பாள், அவனை பயந்தாங்கோலி , அம்மாபிள்ளை என்று பெயர் வேறு . ஆனதும் அவளை "ராட்சசி" என்று திட்டிய நாட்கள் பல உண்டு.

      ஆனந்த் அவளை வெறுக்க சில காரணங்கள் உண்டு,

காரணம் ஒன்று,

                            தென்காசியில் சிவரஞ்சனியின் அப்பா மாற்றலாகி வேலைப் பார்த்து வந்த போது, குற்றால சீசனில் வந்து கொஞ்ச நாள் இருந்து விட்டு வரலாமே என்று ஆனந்தை அழைத்துக் கொண்டு தென்காசிக்கு சென்றாள், அவன் தாய் இராசாத்தியம்மாள். மற்றக் குழந்தைகளை தன் மூத்த மகள் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் ஆனந்தை மட்டும் கூட்டிக் கொண்டு தென்காசி கிளம்பிச் சென்றாள். ஆனந்த் தான் அம்மாவின் பிள்ளை ஆயிற்றே! அம்மாவின் காபி கூஜா ஒன்று, தண்ணீர் கூஜா ஒன்று என்று இரண்டு அடங்கிய கூடை ஒன்றையும் துணிகள் வைத்திருந்த கைப்பை ஒன்றையும் வைத்துக் கொண்டு அம்மாவுடன் சென்றான். தென்காசி வந்தவுடன் வீட்டிற்கு செல்லும் போது பலகாரம் வாங்கிக் கொண்டிருந்த  அம்மாவிற்கு, "பூ வாங்க வேண்டும்" என்று ஞாபகப் படுத்தினான்.


                         அண்ணன் வீட்டிற்கு சென்றவுடன்,  தயாராக இருந்த அவள் அண்ணி குற்றாலம் ஐந்தருவிக்கு சென்று குளிக்கலாம் என்று அண்ணன் ஏற்பாடு பண்ணி வைத்த வில்லுவண்டியைக் காட்டினாள். அருவி என்றவுடனே ஆனந்திற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது , பின்னே இருக்காதா ? கரிசல் காட்டில் பிறந்த அவன் - எப்போதாவது நிரம்பும் கண்மாயிலேயே கால் நனைக்கவே பயப்படுவான், நண்பர்களுடன் சென்றாலும் அவன் அங்கே குளிக்காமல் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பான். திடீரென்று ஐந்தருவி என்றதுமே அவன் ஊர் பேய்ப் புளியமரத்தை விட பயமாய் தோன்றியது. குற்றாலத்திற்கு கிளம்பலானர்கள். தன் இரு மகள்களுடன் கிளம்பிய சிவரஞ்சனியின் தாயார் மகாலெட்சுமி, ஆனந்தையும், ராசாத்தியம்மாளையும் வில்லு வண்டியில் முதலில் ஏற்றினாள். தன் இருமகள்களுடன் ஏறிய அவள், மூத்தவள் சிவரஞ்சனியை முன்னே அமரச் சொன்னாள். வண்டிக்காரனின் இரு மருங்கிலும் சிவரஞ்சனியும், ஆனந்தும் அமர்ந்தார்கள். வில்லு வண்டியும் தென் மேற்கு மலையை நோக்கி "ஜல் ஜல்" என்ற மாட்டின் சலங்கை சப்தத்துடன் கிளம்பியது. சின்ன சின்னதாய் காற்றுடன் சேர்ந்து வந்து விழுந்த குற்றாலத் தூறலும், வாழையும், மாங்காயும் பிசைந்த வாசமும் சேர்ந்து ஆனந்தை கிறக்கம் கொள்ளச் செய்தது, தன ஊரை இவ்வூரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டான். பிரமாண்டமாய் மடிந்து உயர்ந்து இருக்கும் மேற்கு மலைத் தொடரின் முகட்டில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் அடர்மேகம் அவனுக்கு பயத்தையே அளித்தது .


                               சிவரஞ்சனி மஞ்சள் நிற சட்டையும் , ஊதாப்  பூ பிரின்ட் போட்ட  பாவடையும் அணிந்திருந்தாள். நேர்த்தியான வகிடு எடுத்து இரட்டை ஜடையுடன், மீன் போன்ற அச்சில் சாந்துப் பொட்டும், அந்தக் கண்களைக் கூர்மையாக்கும் கரு மையும் தீட்டிய அவளை, ராசாத்தியம்மாளின் கண்கள் ஆசையோடு பார்க்க வைத்தது. ஆனந்தோ வெள்ளை நிற மேல் சட்டையும், தோள் பட்டை வரை செல்லும் காக்கி கால் சட்டையும் அணிந்திருந்தான், அந்தப் புதுக் கால் சட்டை தொளதொளவென மூட்டு வரை நீண்டிருந்தது, ஆனாலும், அவர்கள் இருவரும் ஜோடியாகவே இரண்டு தாய்களின் கண்களுக்கும் தெரிந்தனர். அப்போது இராசாத்தியம்மாள் பெருமையாக , " மதினி !! ஒன்னு தெரியுமா ?? நான் கூட இங்கவரும் போது பலகாரம் மட்டுமே வாங்கியாந்தேன், ஆனந்துதான் மறந்துட்டியாம்மா என்று பூக்கடையப் பாத்து கை நீட்டினான் மதினி" என்று சொன்னாள். வண்டிப் போகும் பாதையை அமைதியாக பார்த்து வந்த ஆனந்த் தலைக் கவிழாமல் சிவ்ரஞ்சனியைப் பார்த்திருந்தால் வெட்கத்தில் சிவரஞ்சனியின் நெற்றியில் வைக்கப் பட்ட மீனின் உருவம் கொண்ட சாந்து அச்சு, மீன் நீந்துவது போன்ற காட்சியாய் பாத்திருப்பான். ஆனால் அவன் பார்த்ததோ எல்லாரும் ஆனந்தமாய் ஐந்தருவியில் ஓடி ஆடிக் குளிப்பதைத் தான். அவனைக் குளிக்கச் சொல்லி எல்லோரும் கேலி பண்ண, அவமானம் தாங்கமுடியாமல் ஐந்தருவியின் ஒரு அருவியோரம் சின்ன ஓடை போல வடிந்துக் கொண்டிருந்த பகுதிக்கு சென்று கைகளைக் கட்டியபடி நின்றான்.

                                   அந்த ஓடைத் தண்ணீரே முதுகில் ஈட்டி எறிவது போல் உணர்ந்த, அவன் "ஐயோ" என்று அலறியபடி அங்கிருந்து உடனே ஓடினான். முழுதும் நனைவதற்கு முன்பே, குளியலை முடித்துவிட்ட சிவரஞ்சனியும் அவன் தங்கை பத்மினியும் சேர்ந்து அவனை கிண்டலடித்து அழ வைக்காத குறையாய் பண்ணிவிட,  அதில் நேர்ந்த அவமானத்தால் அவர்களை வெறுக்க ஆரம்பித்தான். சகோதரிகள்  இரண்டு பெரும் சேர்ந்து அவனை "பயந்தாங்கொள்ளி அத்தான்" என்று வீடு வரும் கிண்டலடித்தனர்.இதைப் போருக்க முடியாமல், ஆனந்த் - தன் அம்மாவிடம் சென்று "அம்மா அவுங்க ரெண்டு பெரும் என்னைப் பார்த்து 'வெவ்வே ன்னு வலிக்கிறாங்க' " என்று அங்கலாய்த்தான். "எல்லாம் ஒரு முறைனு இருந்தா அப்படித்தான்டா இருக்கும், வேணும்னா நீயும்  வலி ச்சுக்கோ" என்று அவனை சமாதப் படுத்தினாள், அவனால் அது முடியவில்லை.

காரணம் இரண்டு


                          அது ஒரு கோடை விடுமுறையின் மாலை நேரம், ஆனந்த் தன் தங்கச்சிகளுக்கு கதை சொல்லிக் கொடுப்பது, புளியம் பழம் , கொடுக்காப்புளி பறித்துக் கொடுப்பது, வீட்டினில் இருக்கும் பஞ்சைத் திருடி விற்று ஓலைக் கொட்டான் நிறைய கருப்பட்டி மிட்டாய் வாங்கிக் கொடுப்பது, அவர்களுடன் "கல்லா?? மண்ணா??", "நொண்டி" என்று கூடவே விளையாடுவான். சிவரஞ்சனியிடம் யாரும் சேரக்கூடாது என்று தன் தங்கச்சிகளுக்கு சொல்லி வைக்க, சிவரஞ்சையோ ஆனந்தின் அக்காவுடைய சிபாரிசில் விளையாட்டில்  நுழைந்தாள். சதுரம் போன்று நான்கு வீடுகளுக்கு மத்தியிலமைந்த சாணத்தால் மொழுகிய மண் தரையில் தங்கைகளுடனும், சிவரஞ்சனி மற்றும் அவள் தங்கையுடனும் நொண்டி விளையாட ஆரம்பித்தான் ஆனந்த்.

                            அது சிவரஞ்சனியின் முறை அவள் வேறு யாரையும் குறிவைக்கவில்லை, நேராக ஆனந்தை விரட்ட ஆரம்பித்தாள், தன்னைத்தான் விரட்டுகிறாள் என்று கவனித்தவுடன் அவனுக்குப் பதட்டம் அதிகமானது , போயும் போயும் இவளிடம் நாம் மாட்டுவதா என்று வேகமாக ஓட்டம் பிடித்தான், அவளும் விடாப்பிடியாக துரத்த ஆரம்பித்தாள். ஆனந்தோ "இவளிடம் நாம் மாட்டினால் நமக்கு தான் பெருத்த அவமானம் மட்டுமே மிஞ்சும்" என்று நினைத்துக் கொண்டு வளைந்து வளைந்து ஓடினான். பதட்டத்துடன் ஓடிய ஆனந்தை மிக நிதானமாய் நெருங்கி வந்து, அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி ஒன்று வைத்தாள். தன் ஐந்து விரல்களும் பதியுமாறு ஓங்கி அடித்ததில் சிவரஞ்சனி உட்பட எல்லோருமே அதிர்ச்சியாய் பயத்தில் உறைந்துவிட்டனர். அவளும் அவ்வளவு சப்தத்துடன் அவன் முதுகில் தன கை படும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனந்தின் அக்காவும் , தங்கைகளும் அதிர்ந்து நின்றனர் , முதலில் ஒரு அடிச் சத்தம் கேட்டும், பின்னர் அங்கிருந்த நிசப்தத்தின் விளைவையும் கற்பனை பண்ணி எழுந்து வந்த அவன் அம்மா அங்கிருந்த எல்லாரையும் உற்று நோக்கினாள். அம்மாவைக் கண்ட ஆனந்த் அங்கு நேர்ந்த அவமானம் தாங்கமுடியாமல் "அம்மா என்று அலறிக் கொண்டே போனான்".

                          அதற்கு பின் அவர்கள் விளையாட்டு நின்றதோடு மட்டுமல்லாமல், சிவரஞ்சனியை வாயில் வந்த வார்த்தைகளைக் கொண்டெல்லாம் திட்டித் தீர்த்தாள். அவ்வளவு திட்டையும் பொறுமையாய் வாங்கிக் கொண்ட சிவரஞ்சனியின் கண்கள் சிவந்திருந்ததே தவிர கண்ணீர் வரவில்லை. அவள் கோபத்தை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்தாள். அதை உணர்ந்த அவள் அத்தை, சிவரஞ்சனி மீது காட்ட முடியாத கோபத்தை ஆனந்த் மீது காட்டினாள், "பொட்டப் பிள்ளைங்களோட உனக்கு என்ன மயித்துக்கு வெளையாட்டு??" என்று அவனை இரண்டு தட்டு தட்டினாள்.

                 அதற்கு மேல் சிவரஞ்சனியால் பொறுக்க முடியவில்லை, தன் அப்பா அடுத்த நாள் வருவதாக சொல்லியிருந்தார், அவருடன் அன்றே கிளம்பிவிட  வேண்டும் என்றும் அதற்குப் பின்னர் இவர்கள் வீட்டிற்க்கே வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அவள் நினைத்ததை ஆனந்தின் அக்காவிற்கும் சொல்லிக் கொண்டிருந்தாள்.அதை ஆனந்தும் கேட்டுக் கொண்டிருந்தான், தன்னால் தான் அவளுக்கு இத்தனை அவமானம் நேர்ந்தது என்று எண்ணி வருத்தப் பட்டாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தான்.அவளும் இனி "அங்கே வரவேக் கூடாது" என்று எண்ணிக் கொண்டாள்.


               ஆனந்தும், சிவரஞ்சனியும்  பரஸ்பரம் எதிரியாய் தங்களை பாவித்துக் கொண்டு இருந்தனர். அதே சமயம் அவர்களின் பெற்றோர்களான, அண்ணன் தங்கை உறவிலும் சிறிது விரிசல் வர ஆரம்பித்தது. ஆகவே, ஆனந்த் மற்றும் சிவரஞ்சனி ஆகியோரது  பிரிவு இந்தக் கதையில் வரும் சாத்தியம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

உறவுகளுக்குள் விரிசல்கள் வருவதும் போவதும் சாதாரண விஷயம் தானே ! எவ்வளவு மாற்றங்கள் வந்துக் கொண்டிருந்தாலும், பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் நம் சமூகத்தின் பெருங்காரணம், அவர்கள் ஒரு மரத்தின் கிளைகள் என்று அறிய வைக்கும் அடிவேர் என்பது நம் கலாசாரம், நமது பண்டிகைகள், நம் வழிபாடுகள்.


                 அப்படித்தான் சிவரஞ்சனி பெரிய மனுஷியாய் ஆனபோது மீண்டும் அண்ணனும் த்னகயும் இணைந்தனர். அன்றும் அவன் தாய்க்கு துணையாய் அவனே வந்திருந்தான், அப்போது சிவரஞ்சனியின் அப்பாவிற்கு சங்கரன்கோயிலில் மாற்றல் , அன்று ராசாத்தியம்மாள் சங்கரன்கோயில் பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பொழுது உடன் வந்த ஆனந்தின் கையில் ஒரு பெரிய அண்டா முழுதும் சீனி லட்டுகள் அமர்ந்திருந்தன. மிளகாய் மண்டியில் அந்த வார பறிப்பில் விற்ற அத்துணை பணத்தையும் எடுத்துக் கொண்டு தன் அண்ணன் மகளை பார்க்க கிளம்பிஇருந்தால் ராசாத்தியம்மாள். காலேஜ்ஜில் பீ.யூ.சீ படித்துக் கொண்டிருந்த ஆனந்த்தும் பல வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் வீட்டிற்கு மீண்டும் வந்தான். சிவரஞ்சனியும் அவன் வேஷ்டிக் கட்டியிருப்பதை தன் தங்கை சொல்லி அறிந்தாள். ஆனந்தும் அவளை தண்ணீ ஊற்றுவதற்கு அழைத்து செல்லுகையில் அரை வினாடி பார்த்திருந்தான். அதில் எதுவும் அற்புதம் நிகழவில்லை. அற்புதம் நிகழ்வதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. அதனால், ஆனந்தின் அக்காவுடைய திருமனத்திற்கு அவள் வந்திருந்த போது தான் அவளை நன்றாக பார்த்திருந்தான்.

               அந்த வயதில் பார்த்த அதே திமிர் பிடித்த முகம் தான், மாறவில்லை, அதேப் பொலிவும், அழகும் இருந்தது. ஆனால் அவள் ஒரு மிகப் பெரிய திறமை ஒளித்து வைத்து வைத்திருப்பதை அவன் அன்று அறிந்துக் கொண்டான். அந்த வஸ்து தான் அவள் "குரல்", அந்தக் கல்யாண வீட்டில் எல்லா பெண்களும் ஒன்றாக அமர்ந்துக் கொண்டு பாட்டு பாடி விளையாட, சிவரஞ்சனியோ "பளிங்கினால் ஒரு மாளிகை " என்றக் கிறக்கம்  தரும்  பாடலை பாடியும் , ஆடியும் அவன் அக்கா, தங்கைகளுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். கதவுத் தாழ்வார ஓட்டையின் வழியாக ஆனந்தும் அவன் தம்பி சுந்தரமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அண்ணனின் பார்வையை உணர்ந்த சுந்தரத்தில் கண்களில் அவள் அண்ணியாக மாறினாள்.

      இப்போது ஆனந்த் பீ.யூ.சீ முடித்து, B.A வை முடித்துக் கொண்டு வேலை தேடுவதற்காக அவன் அக்கா வசிக்கும் சென்னைக்கு சென்றுவிட்டான். அவன் செல்லாமல் இருந்தால் அண்ணனுக்கும் தங்கைக்கு இடையே பெரிய பிரச்னையாக உருவாகாமல் இருந்திருக்கலாம்.

        ஆனால், அப்படி இருக்கவில்லை ,ஆனந்தின் மாமன் தன் தங்கைக்கு கடனாய் கொடுத்த மூவாயிரம் ரூபாய் அவர்களிடையே பகையை புகையாய் வளர்க்க ஆரம்பித்தது. அந்தக் கரிசல் காட்டு விவசாயத்தில் ஆனந்தின் பெரிய வீட்டுப் பொருளாதராம் ஊதாரித் தனத்திலும், பொருப்பின்மையிலும் முக்கியமாய் மழையின்மையிலும் தேய்ந்துக் கொண்டிருந்தது. அந்த மூவாயிரத்தை வைத்து தென்காசியில் ஒரு மச்சு வீட்டையே விலைக்கு வாங்கியிருக்கலாம் என்று தன் ஆயுள் முழுதும் மகாலெட்சுமி சொல்லிக் கொண்டிருந்தாள். கடைசியாய் வந்தக் கடிதத்தில் அந்த மூவாயிரம் அவர்களுக்கு மிகவும் அவசரமாய் தேவைப்படுகிறது என்று மிகக் காட்டமாய் இருந்தது . மேலும், அதில் ராசாத்தியின் கணவரைத் திட்டியும் நாலு வரி இருந்தது.

                    அண்ணனின் கடிதம் கண்டு வெறுத்துப் போன அவள், அதற்கு அதே அளவு காரமான பதில் தர விரும்பினாள்."அடுத்த மிளகாய் அறுப்பு காசு வந்ததும் உன் எல்லா காசையும், உன் மொகத்துலே எரிஞ்சுடுறேன்" என்று அவள் கூறியதை அப்படியே சொல்வதற்கு, அப்போது ஊருக்கு வந்த ஆனந்தை அனுப்பிவைத்தாள். சென்னையில் மெரீனா, ஸ்பென்சர் என்று நவ நாகரிக உலகைக் கண்ட ஆனந்திற்கு, காதல் அரும்புவதும், தேவைப்படுவதும்  இயற்கை தானே. தன் தாய் சொல்வதை எல்லாம் கேட்கும் போது தன் காதல் கதை தொடங்கிவிட்டதாய் நினைத்துக் கொண்டே வந்தான். இப்பொழுதெல்லாம் அவன் அடிக்கடி கிசோர் குமாரின் இந்திப் பாடல்களைத் தான் பாடுகிறான்.

        நெல்லைக்குப் பேருந்தில் ஏறியவுடன் பல கனவுகள் இந்திப் பாடலின் பின் புலத்தோடு வந்தது, அவன் கனவில் அல்லது கற்பனையில் அவன் மாமன், அத்தை , சிவரஞ்சனியின் தங்கை , தம்பி என எல்லோரும் அவளை விட்டு விட்டு ஊருக்கு சென்றதாகவும் நினைத்துக் கொண்டே வந்திறங்கினான் நெல்லையில்.

----------------------------------------------------------------------------------------------------------

                                 ஆனால் இங்கோ அவளை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார்  வந்துள்ளார்கள் என்று தெரிந்தவுடன் ஆனந்தின் இதயம் வெடித்துச் சிதறியது. அதை வெளிக்காட்டாமல் தலை கவிழ்ந்த படி அவ்வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். தன் கடைசித் தம்பி, "ஆனந்த் அத்தான் நம்ப வீட்டுத் திண்ணயிலே இருக்கான் கா!" என்று சிவரஞ்சனியிடம் சொல்ல, சிவரஞ்சனி அவன் மீது கரிசனம் கொண்டாள், ஜன்னலின் வழியே அவனைப் பார்க்க முடியுமா என்று யோசித்தாள், யோசிக்க மட்டும் செய்தாள். பெருத்த ஏமாற்றத்துடன் ஆனந்தும் அங்கிருந்து திரும்பினான்.


                             வாழ்க்கை எப்பவும் அப்படித்தான்,  ஒரே புள்ளியில் மக்களை இணைத்துப் பிரித்து ,மறுபடியும் சேர்த்து வைத்து, தாயம் வீசும் பகடையைப் போலே நம்மை உருட்டி விளையாடுகிறது . வெறும் மூவாயிரம் ஏற்படுத்திய விளைவு தான் அவர்களுக்கு முதலில் உதவியாக, பின்னர் அதுவே உபத்திரமாக , பின்னர் தவிப்பாக, ஏமாற்றமாக இருந்து வந்தது. அவர்கள் அந்த மூவாயிரத்திற்கு அவசரம் காட்டியதன் காரணமும் அன்று தான் ராசத்தியம்மாளுக்கு விளங்கிற்று. "அந்தப் பணம் சிவரஞ்சனியின் கல்யாணத்திற்கு தான்" என்று, தன்னிடம் கூட ஒருவார்த்தை சொல்லாமல், தன் மருமகளிற்கு வரன் பார்க்கும் தன் அண்ணனிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்க அங்கு சென்றாள் ராசாத்தியம்மாள். இந்த முறை ராசத்தியம்மாளுடன் செல்வது ஆனந்த் இல்லை, அவள் கணவன்.

                        மூவாயிர ருபாய் விஸ்வரூபம் எடுத்தது , அவர்கள் பேச்சில் சிதறல்கள் வந்தன, பழையக் கதைகள் எல்லாம் விவாதம் செய்யப் பட்டன. திடீரென்று ராசாத்தியம்மாள் அழுதாள், மயங்கினாள், ஒரு லூட்ட காபி குடித்தாள். மறுபடியும் சண்டை, மறுபடியும் அழுகை தங்கை அழுதவுடன், அண்ணனும் அமைதியானார் வானிலை மாறியது.

           கரிசல் காட்டில் இருந்து சந்தைக்கு செல்வதற்காக மிளகாய் தோட்டத்தில் முதல் அறுப்பில் வந்த , காய்ந்துக் கொண்டிருந்த வரமிளகாயில் ஒரு கைப்பிடி எடுத்த ஆனந்தின் ஆச்சி பிச்சம்மாள்,  இன்னும் கொஞ்சம் உப்பையும் எடுத்து சேர்த்துக் கொண்டு , வண்டியில் இருந்து இறங்கி வந்த புதுமணத் தம்பதியான "ஆனந்த் , சிவரஞ்சனி" இருவரையும் மூன்று முறை சுற்றி , திருஷ்டிக் கழித்து பால் காய்ந்துக் கொண்டிருந்த மண் திட்டு அடுப்பினுள் தூக்கி எறிந்தாள்.


                 அடுப்பினுள்ளே, காரமான நெடியுடன் ஒரு கரிசல் மண்ணின் சோகக் கதை போல் அந்த விறகில் எரிந்துக்கொண்டிருந்த சிவப்பு நிற வரமிளகாய் வெடித்துக் குமுறிக் கொண்டிருந்தது, அந்த விறகின் மேலே இருந்த அடுப்பினுள் கொத்தித்துக் கொண்டிருந்தப் பாலின் அளவு அன்று அவர்கள் இரவு உணவு நிலாச்சோறு தான் என்பதையும், அன்று பவுர்ணமி என்பதையும் உறுதிப் படுத்தது ...


        எனது நெடுங்கதை ஒன்றும் அவர்களின் வாழ்க்கையோடு தொடங்குகிறது - ஜீவ கரிகாலன்

              "நிலாச்சோறும் , மிளகாய் வற்றலும்"



      

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஜூஜூ - வெறும் பொம்மையல்ல

இந்தியாவில் - ஹட்சிசன் நிறுவனத்தின் சிறிய வரலாறு அல்லது ஜூஜூவின் வரலாறு :
1 .1992இல் திறந்துவிட்ட உலகமயமாக்கல் கதவில் நுழைந்த ஹட்சிசன் வம்போவா நிறுவனம் மாக்ஸ் கருப்புடன் இணைந்து ஹட்சிசன் மாக்சாக தொடங்கியது.அதன் பெயர் HMTL .
2 . எஸ்ஸார் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் 2000ஆம் ஆண்டில் கொல்கத்தா,டெல்லி,குஜராத் ஆகிய இடங்களில்"ஹட்ச்"எனும் பெயரில் தன் சேவையைத் தொடங்கியது.
3 .2003ஆம் ஆண்டு ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஹரியானா ஆகிய இடங்களில் ஏர்செல் டிஜிலின்க் எனும் நிறுவனத்தை வாங்கியதன் மூலமும், 2005இல் BPL நிறுவனத்தை வாங்கியதன் மூலம் தமிழகம், கேரள , மகாராட்டிரம் என்று வழுவாகக் கால் ஊன்றியது.
5 . 2007இல் தன் 67 % விகிதப் பங்குகளை கிட்டத் தட்ட 12000 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வோடஃபோன் நிறுவனத்திற்கு விற்று ஈட்டிய கொள்ளை பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு ஒரு ருபாய் கூட வரி செழுத்தாமல் தன் நாட்டிற்கு சென்றுவிட்டது.

வெளிநாட்டு மொபில் போன் நிறுவனமான வோடஃபோன் வாங்கிய தொகைக்கு வரிகேட்டு மத்திய அரசு வழக்குத் தொடர இந்தியாவிற்கு வெளியே நடந்த ஒப்பந்தத்தில் வரி செழுத்தும் கடமி தனக்கு இல்லையென சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய, வழக்கின் தீர்ப்பும் ஹட்சிசன் செழுத்த வேண்டிய வட்டிஎன்பதால் வோடஃபோனை நிர்பந்திக்க கூடாது என்று தீர்ப்பளித்தது.

நாம் அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜூஜூ விளம்பரத்திற்கு பின்னே இப்படி ஒரு கொள்ளை நடந்ததை நாம் உணருவோமா ??



Auditor. M.R Venkatesan அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் 

வோடஃபோன் நிறுவனம் மீதான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினைக் கண்டு சீன விடுதலைப் படை (PLA ) சிரித்துக் கொண்டிருப்பது ஏன்??

வோடஃபோன் மீதான இந்த தீர்ப்பு இது போன்ற மற்ற வழக்குகளில் ஒரு முன் மாதிரியாக (precedent )எடுத்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. இத்தீர்ப்பிலிருந்து இருந்து உலகம் முழுக்க எடுத்துக்  கொள்ளப்படும் ஒரு குறிப்பாகவும் இருக்கும், இதே போன்ற சூழலில் சிக்கியிருக்கும் சீனாவைப் போன்ற பல தேசங்களுக்கும் இந்த தீர்ப்பிலிருந்து பல வரைவுகள் உருவாகும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் குழுத் தலைவர் ஃப்ரெட் தாம்சன் அவர்கள் , சீன வணிக நிறுவனமான "CRE" பற்றிக் கூறும் பொழுது "பார்ப்பதற்கு நட்பாய்ப் பழகிவிடும் என்று தோன்றினாலும் புலி மிகவும் ஆபத்தானது" என்று குறிப்பிடுகிறார். அந்த சபை தன் விசாரணையில் ,1996 -ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் தன் திட்டங்களை செயல்படுத்த முயன்ற சீனாவின் முயற்சியை , CRE தான் ஒரு ஊடகமாய் அரசியல் , பொருளாதார மற்றும் இராணுவத் தகவல்களை உளவு பார்க்க உதவியது என்று கண்டறிந்தது. இதில் தற்செயலானது என்னவென்றால், சீன ராணுவத்தின் அமைப்பான PLA க்கு தான் CRE சொந்தம் என்பது தான்.


மற்றொரு போக்குவரத்துத் தளவாட நிறுவனமான COSCO வும் PLA-விற்கு சொந்தமானது என்றும் , அந்நிறுவனம் லிபியா, ஈராக், ஈரான் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சீனாவின் ஏவுகணைகளையும், ஏவுகணை உபகரணங்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஆயுதத் தொழில்நுட்பங்களைக் கொடுத்துள்ளது என்று விமர்சிக்கப் பட்டது.

சைனாவின் ஆயுத விற்பனைகளுக்கு, பாலி டெக்னாலஜீஸ் (poly technologies ) எனும் நிறுவனத்தின் அதிபரான வாங் ஜுன் ஆயுதத் தரகராகச் செயல்பட்டார் எனவும் அந்த அறிக்கை கண்டறிந்தது.
இந்த ஜுன் என்பவர், சீன நடுவன் அரசின் முக்கிய முதலீடு ஈட்டும் கரமான CITIC நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினர் என்பது கூட தற்செயலானது தான்.

'ஜுன்' உடன் அமர்ந்திருக்கும் மற்றொரு உறுப்பினர் தான் 'லீ கா சிங்', இவர் "ஹட்சிசன் வேம்போவா" நிறுவனத்தின் தலைவர்.ஆம், இதே நிறுவனம் தான் இந்தியாவின் தனது தொலைதொடர்புத் துறை பங்கினை வோடாபோனுக்கு விற்றது.

ஜனவரி 2012 ல் வந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, "விற்றுமுதலில் ஈட்டிய லாபத்தினில் இந்தியாவிற்கு,  பன்னிரெண்டாயிரம் கோடி டாலர் மதிப்பிற்கு எந்த ஒரு வட்டியும் வோடஃபோன் நிறுவனம் கட்டத் தேவையில்லை என்று இருந்தது". லீ கா சிங் மற்றும் அவருடைய ஹட்சிசன் வேம்போவாவிர்க்கும், PLA விற்கும் இந்தக் காரணம் போதாதா சிரிப்பதற்கு?? 

அகன்று வரும் இரும்புத் திரை:-

முதலில், இந்த லீ கா சிங் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்?, நிறுவனத்தின் வலைதளத்திலிருந்து கிடைக்கும் தகவல் படி, மொத்தம் 53 நாடுகளில் உள்ள கிளைகளில் 260000 பேர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைவராக லீ கா சிங் இருக்கிறார்.

ஹாங்காங்கில் கூட, இக்குழுமம் தனது 8 துணை நிறுவனங்களின் சந்தை மதிப்பாக சராசரி ஏழாயிரத்து நாற்பத்தி ஏழு கோடி ஹாங்காங் டாலர்கள் உள்ளது. ஃபார்ச்சுன் நிறுவனத்தின் தலை சிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.


நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போல் இருக்கும் என்று  லீயின் கதை இருக்கலாம். ஆனால், தற்பொழுது அவரது தொழில்கள்  ப்ராபெர்ட்டி டெவலப்மன்ட், ஹோட்டல்கள், தொலை தொடர்புத் துறை, மின்-வணிகம், நிதி - முதலீடு, சில்லறை வணிகம், துறைமுகம் மற்றும் போக்குவரத்து, எரிசக்தித் திறன், கட்டுமானம், மூலப் பொருட்கள், ஊடகம் , பயோடெக்னாலஜி என்று பரந்து, விரிந்துள்ளது .

சரி இருக்கட்டும் லீயால் நமக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா??
அவரைப்பற்றித் தெரிந்து கொள்வோம், ஆகஸ்ட் 1999 இல், ஹாங்காங்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் இவரைப் பற்றிக் கூறுகையில்,"பெய்ஜிங்கில் இருக்கும் எந்த ஒரு முக்கிய புள்ளியுடனும் நேரடியாக தொழில்முறை உறவுகள் ஏற்படுத்திக் கொள்ள இவரால் முடியும் " என்று சொன்னது.

மேலும் இவர் பற்றிக் கூறுகையில் , " இவர் ஹாங்காங் பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு சீனத் தொழிற் சக்ரவர்த்தி. எதேச்சதிகாரம் உடைய பலம் பொருந்திய முதலாளியான இவர் ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லை. இந்த உண்மை , ஹாங்காங் நாட்டில் அந்த அரசு பொருளாதாரக் கொள்கையினை மாற்றி அமைத்து ஜனநாயக அடிப்படையில் உருவாக்கியதால், இவர் தனது 1.3 பில்லியன்  அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு செயல்திட்டத்தை ரத்து செய்தார்".
newsmax.com என்னும் வலைதளத்தில் ஸ்மித் என்பவரது கட்டுரையில் ஹாங்காங்கைச் சேர்ந்த கோடீஸ்வரர்களைப் பட்டியலிட்டார். இதில், லீயை பற்றிக் குறிப்பிடுகையில் அவரை "வாசிங்டன், பெய்ஜிங் , ஹாங்காங் என்ற ஊர்களில் சிறப்பு வாய்ந்த மனிதன்" குறிப்பிடுகிறார். மேலும் லீயை, "கம்யுனிஸ்ட் சீன அரசின் அங்கமாக அவர் திகழும் ஆதாரங்களை அவர் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்" என்றும் குற்றம் சாட்டுகிறார்.

 தகவலறியும் சட்டத்தின் மூலம் திரட்டிய தகவல்களில், "சீன அரசாங்கத்துடன் லீயுடனானத் தொடர்பு மிகவும் உறுதியானது" என்று தெரிகிறது.

அந்த அறிக்கையில்,"லீ ,சீனா ரானுவத்தினுடனான நேரடித் தொழில் தொடர்பை தமது ஆயுதத் தொழிற்சாலையான பாலி(poly ) டெக்னாலஜீஸ் இனக் மூலம் கொண்டிருந்ததை அறியலாம் , இந்த தகவல்கள் யாவும் 1997 -இல் வெளி வந்த சீனா ராணுவ தொழிற்சாளிகளின் மீதான ராண்ட் கார்ப்பரேசன் ரிப்போர்ட்டில் எனும் அறிக்கையில் இருக்கிறது ." 

அந்த அறிக்கையின் படி, "ஹாங்காங்கின் ஹட்சிசன் வேம்போவா நிறுவனம் அவ்வூரின் கோடீஸ்வரரான லீ கா சிங்கிற்கு முழுவதுமாக கட்டுப்பட்டது ,அந்நிறுவனம் பாலி நிறுவனத்தின் 'யான்க்பு டெவலப்மென்ட் கம்பெனியின்' பங்குகளை வாங்கியது, இந்த கம்பெனியோ சீனாவிலுள்ள ஹைனான் தீவின் முழுக் கட்டுமானத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது" என உள்ளது 

ராண்ட் ரிப்போர்ட்டில், "CITIC பாலி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் முன்னோடியாக இருந்து வந்தது" என்றும்,  மேலும் அதில், "CITIC (China International Trust and Investment Corporation) ராணுவத்  தொழிற்சாலையான பாலி டெக்னாலஜீசைப் போன்றே, ராணுவத் தளவாடங்களுக்கு உதவி செய்து வந்தது" என இருக்கிறது. 

"1980களில் பாலி நிறுவனம் உலகம் முழுக்க தனது வாடிக்கையாளர்களான தாய்லாந்த், பர்மா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் அமரிக்கா என பெரிய அளவில் ஆயுதங்களை விற்றுள்ளது" என ஸ்மித் தன் வலைதளத்தில் எழுதியுள்ளார்.

லீ கா சிங்கும் இந்தக் கட்டுரையில் சீனா ராணுவத்திற்கு சட்டத்திற்கு புறம்பாக விற்ற நிறுமத்தின் சொந்தக்காரர்களுள் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏசியா சேட்டிலைட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தினுடைய வணிக கோப்புகளில் மூன்றில் ஒரு பங்கினை லீ கா சிங் வைத்திருப்பதை அறியலாம். ஏவியேசன் வீக் அன்ட்  ஸ்பேஸ் டெக்னாலஜீஸ்-ன் கூற்றுப் படி ஏசியா சாட்டின் மற்றொரு உரிமையாளர் சீன ராணுவம் ஆகும்.

 சீன ராணுவத்தின் கீழுள்ள நிறுவனங்களுக்கும் , PLA வின் பிரிவகளுக்கிடையேயான ராணுவத் தொடர்பு மற்றும் பரிமாற்றங்களை ஏசியா சேட்டிலைட் மட்டுமே தாங்கி வந்தது.

லீ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வேதச அளவில் நடைபெறும் மோசடியான ஒப்பந்தங்களைக் கூட நேர்த்தியாக, சரியான கோப்புகளைக் கொண்டு கையாண்டார்.1996இல் பனாமாவிலுள்ள கால்வாயினை மேற்பார்வையிடும் பொறுப்பை ஹட்ச் நிறவனம் ஏலத்தில் எடுக்க, அதற்கு சீன அரசு 40 கோடி டாலர்களை கடனைக் கொடுத்துள்ளது.

இது எதனால் தெரியுமா?  இந்த நிதியளிப்பு மூலம் சீனாவின் கட்டுப்பட்டிற்குள் பனாமா கானல் வந்துவிடும் அல்லவா, இதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு மூன்று பெரிய பாதுகாப்பு அம்சங்கள் இந்த பனாமா கால்வாய் ஏற்பாடுகளினால் தேவைப்பட்டது .

இவற்றில்,  அங்கு மறைந்துள்ள சீன உளவு அமைப்பினைக் கண்காணிப்பது, சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் ஏற்ப்படும் பிளவுகளில் தந்திரமாக அமெரிக்காவிற்கு மறுக்கப்படும் விஷயங்கள் மற்றும் அமெரிக்க வளர்ச்சிப் பணிகளில் சீனாவின் பலம் பொருந்திய அரசியல் சக்திகளின் மூலம் வரும் இடையூறு ஆகியன முக்கிய அம்சங்களாக இருந்தது.

இந்த ஒப்பந்தத்தினை அமெரிக்கர்கள் ஒன்றும் எதிர்க்கவில்லையா? பனாமாவின் அமெரிக்கத் தூதர் வில்லியம் ஹக்ஸ் இந்த ஏலத்தினை மரபில்லாத ஒப்பந்தம் என எதிர்த்தார், மேலும் விசாரணைக்காக முயற்சி எடுத்தார் ஆனா பலனளிக்கவில்லை. நான் ஏற்கனவே  சொல்லவில்லை ?? "லீ உலகம் முழுக்க செல்வாக்கு மிக்கவர்" என்று .

அதே போல அமெரிக்க நாடுளுமன்ற அவைக்குறிப்பின் 145ஆம் தொகுதியில் இருபதாம் குறிப்பில், அதாவது நவம்பர் நான்கு முதல் பதினாறு ,1999 வரை இருந்தக் குறிப்பு "அவர்கள் ஹான்காங்கைக்  கைப்பற்றும் வரை கம்யுனிஸ்ட் சீனாவின் நம்பகத் தகுந்த கூட்டாளியை அவர் இருந்ததைச்' சொல்கிறது.

அதேபோல் , இவருடைய சீன ஆட்சியாளர்களுடனானத் தொடர்பு டெங் சியோபிங்கிலிருந்து இன்று வரை இருப்பது நன்குத் தெரிந்த விஷயமே.இதுவே, அவர் CITIC போர்டின் உறுப்பினராய் இருக்கும் காரணத்தை விளங்க வைக்கும்

Lax Legislature, Incompetent Executive, Liberal Judiciary?
இத்தனையும் இருக்க நம்மை ஆச்சரியப்படுத்தும் உண்மை என்னவென்றால், 1992 -இல் இந்தியாவில் தொலைதொடர்புத் துறையில் முதன் முதலாக கால்  எடுத்து வைத்த நிறுவனங்களுடன் ஹட்ச்சும் இணைந்துக் கொண்டது தான், அந்தக் குழுமம் ஒரு இந்தியக் கூட்டு வர்த்தகத்தில் (joint venture) முதலீடு செய்தது அதன் பெயர் HMTL (Hutchison Max Telecom Limited).

இதற்கு காரணம் மிக வெளிப்படையானது இங்கு நடைபெறும் வர்த்தகம் அவர்களுக்கு மேலும் ஒரு தொழிலாய் இருப்பதோடு; தந்திரமான தொழிலாகவும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியா நாட்டின் நலனுக்கு எதிரான சக்திகளுக்கும் இவை உதவும்.

இந்த மாதிரியான அபாயங்கள் தான் நம்மை ஒரு முக்கியமான கேள்வி ஒன்றை நம் அரசின் மீது எழுப்ப வைக்கிறது ? நம் நாட்டில் இந்த மாதிரியான FDI முதலீடுகளின் இயங்குமுறைகளை ஒழுங்குபடுத்த முடியுமா?? என்பது தான். நாம் திறந்து விட்டுள்ள தானியங்கி வழியில்(automatic route for FDI Inflow ) வரும் அந்நிய முதலீடு வரையறுக்கப்பட்டத் துறைசார்ந்த முதலீட்டிற்கு மட்டுமே உட்பட்டதாகிவிடும் , அப்படி வருகின்ற அந்நிய முதலீட்டின் தரம் குறித்து கண்காணிப்பதற்கு எந்த ஒரு இயங்குமுறைகளும் (mechanism) இல்லை.

அந்நிய முதலீட்டில் தானியங்கி வழிமூலம் வர முடியாத முதலீட்டாளர்கள் அல்லது வரையறுக்கப்படாத துறைசார்ந்த முதலீட்டாளர்கள் தங்களுடைய திட்டங்களை FIPB (The Foreign Investment Promotion Board ) யிடம் தெரிவிக்கும் பொழுது, அந்த அமைப்பு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிக்கும். 

FIPB ஒரு ப்ரோமொசனல் போர்டு என்றிருந்தாலும், அதன் அமைப்பானது அந்நிய முதலீட்டை வரையறுப்பதில்லை, ஆதலால் அது பலனிக்ககூடிய அமைப்பாக விளங்குவதுமில்லை, அது வலியுறுத்தும் தேவைகளும் எந்த அர்த்தங்களையும் கொடுப்பதில்லை.

*அந்நிய முதலீட்டினையும் அதன் தரத்தையும்  வரையறுக்க FIRB (foreign investment regulatory board ) உருவாகும் நேரம் வந்துவிட்டதா ??
  
இந்த ஹட்ச் -வோடஃபோன் அனுபவம் நமக்கு விளக்குவது, ஹட்ச் வெளியேறியதால்  கைவிட்டுப் போன வெறும் வரியை மட்டுமல்ல, நாம் எப்படி ஹட்ச் நிறுவனத்தை இந்தியாவில் முதலாவதாக வர வைக்க முடிந்தது?? மேலும் அதற்கு சீன ராணுவத்தினுடன் இருக்கும் தொடர்பை அறிந்தும்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், லீ மற்றும் வம்போவா பற்றிய தகவல்களை யாவும் எல்லோருக்கும் கிடைக்கும் இணையத்திலிருந்து சில மணி நேரத் தேடலில் கிடைத்தன. இவ்வளவு வெளிப்படயாக இருந்தும், இடை ஏன் நமது அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை ??

இதற்கும் மேலே, அகண்ட பார்வையுடன், நடைமுறைகள் தேவைப்படும் இந்த அந்நிய முதலீட்டில், ஹட்ச் தனக்கான நிதித் தேவையில் எப்படி தன் பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது ?? என்ற கேள்வி எழும்புகிறதே !

ஹட்ச் நம் நாட்டை விட்டு செல்லுகையில் சம்பாதித்த மலையளவு பணத்தில் கொஞ்சம் கூட வரியாகக் கட்டும் அவசியமில்லாமல் போனதில் ஆச்சரியப் படும் வகையில் ஒன்றும் இல்லை. சீனத்து PLA நம்மைப் பார்த்து ஏளனப்படுத்துவதை ஒன்னும் செய்ய இயலாத வேளையில், நம் நிலைக்கு இத்தகைய எதிரி நமக்கு வேண்டுமா ???

நமது நாட்டில் அணிய முதலீடு என்ற வழிப்பாதையில் சீன இராணுவமானது  ஹட்சிசன் எனும் பெயரில் நுழைந்து, நமது படுக்கை அறை வரை வந்துள்ளது.நாம் அதை கவிநிக்காது அதைக் கொண்டாடியுள்ளோம்.

நமது தாரளமயமாக்கல் மற்றும்  உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் இதே போன்ற பிரச்சனைகளைத் தான் நாம் சந்தித்து வருகிறோம் .

இதைப் போன்ற பன்னாட்டு  நிறுவங்களுக்கு வரிவிலக்கு போன்றன அளிக்கப்பபட்டு அவர்கள்  லாபத்தை மென்மேலும் பெருக்குவதற்கு மட்டுமே நமது தாராளமயமாக்கல் கொள்கைகள் பயன்படுகின்றன என்றும் எடுத்துச் சொல்லி வருகிறோம். 


We hailed such investment-infrastructure friendly tax-regime. As they existed the Supreme Court tells us that under the extant law taxing such capital gains would be tantamount to handing a capital punishment to capital investments!

Under these circumstances, that by definition makes India a banana republic. Isn't it?

திங்கள், 23 ஏப்ரல், 2012

ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் -விமர்சனக் கூட்டம்


                  நேற்று கவிஞர் அய்யப்ப மாதவனின் ஆப்பிளுக்குள் ஓடும் ரயில் என்ற புத்தக விமர்சனக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் , இதற்கு முன் எந்த விமர்சனக் கூட்டத்திலும் கலந்து கொண்டது கிடையாது , இருந்தாலும் இந்த புத்தக விமர்சனக் கூட்டத்தில் புத்தகம் குறித்த மதிப்பீடுகளும்,  விமர்சனங்களும் குறைவாக இருந்ததாக என் கருத்து, ஆனால் சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை, அதற்கு தலைமை கவிஞர் யவனிகா அவர்களும் முக்கியக் காரணம் . நல்லதொரு நிகழ்வை Discovery Book palace-ல்  செய்திருந்தார் அதன் நிறுவனர் திரு.வேடியப்பன்.
        

             கவிஞர் அய்யப்ப மாதவனின் நண்பர்கள் பார்வையில் கவிஞரின் வாழ்க்கை, எழுத்து, அவர் பயணம், அவர் முந்தையப் புத்தகனகள் என்று சென்றுக் கொண்டிருந்தது. முதலில் வாசிக்கப் பட்டக் கட்டுரையைத் தவிர மற்றவர்கள் spontenous ஆக பேசிக்கொண்டும், சில கவிதைகளை மேற்கோளிட்டும் வந்தனர். கரண்ட் இல்லாத பொழுதும் அங்கு வந்திருந்தோர் களைந்து சென்றுவிடவில்லை. மணிக்கு ஒரு முறை கவிதை எழுதும் கவிஞர், முக புத்தகக் கவிஞர், பார்க்கும் பொருளையெல்லாம் கவிதயாக்கும் கவிஞர்  என்றெல்லாம் அவரை வாழ்த்திப் பலர் சொன்ன போது எனக்கு ஒன்று சொல்லத் தோன்றுகிறது , அவரைப் பொறுத்தவரை அவரின் கவிதைகளை அவரிடம் இருந்து பிரித்துச் சொல்லவே முடியாது , அவர் கவிதையாகவே வாழ்கிறார் அல்லது அவரே ஒரு கவிதை தான். கவிதையைத் தவிர உரைநடையில் அவர் அதிகம் கவனிக்கப் படும்போது வேண்டுமானால் அவர் உரைநடையோடு ஒப்பிட்டு இந்த மாதிரியான கணக்கைப் பேசலாம்.

               கவிஞர் ஆத்மார்த்தி சொன்னது போல "முக புத்தகத்தில் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது" என்று. முகநூல் மூலம் இலக்கியமும் அடுத்தக் கட்டத்திற்கு சென்று விட்டது. ஓலைச் சுவடியிலிருந்து, மை பாட்டிலுக்கு நம் இலக்கியம் மாறும் போது இத்தகைய ஒரு ஏற்காமை இருந்துரிந்ததா என்றுத் தெரியவில்லை, இன்று உலக நாவல்களையெல்லாம் வீடு அலமாரி போல் நம் மடிக்கணினியிலோ, கைப்பேசியிலோ பார்க்கும் வழக்கம் வந்துவிட்டது. கல்கியும் சாண்டில்யனும் கூட அதில் இடம் பெற்று விட்டனர், இனி வரும் காலங்களில் நல்ல கவிதை புத்தகங்கள் ஆப்பிள் ஸ்டோரிலோ  , android ஸ்டோரிலோ, இனி புத்தகம் பதிவிடலாம். இலக்கியம் ஒரு hardware இல்லை அது ஒரு சாப்ட்வேர் என்பதால் அது எளிதாகவோ/ சிரமப்பட்டோ தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும். கிழக்குப் பதிப்பகம்,ஆனந்த விகடன் போன்ற முன்னோடிகள் அதைச் சாத்தியம் ஆக்குவார்கள். முகநூல் போன்ற தளங்களில் இனி Virtual இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும் , ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. முகநூலில் இருப்பவனும் புத்தகம் வாங்குவான்.


                 முன்பே சொன்னது போலே அந்தப் புத்தகத்தில் பெரிய விவாதங்கள் நடைபெறவில்லை மதுரையிலிருந்து வந்திருந்த கவிஞர் ஆத்மார்த்தி தன் கட்டுரையை முன் வைத்தார், கவிஞர் அசதாவின் கட்டுரை கவிஞர் கண்டராதித்தன் அவர்களால் வாசிக்கப்பட்டது, கவிஞர் நேசமித்திரன் சில கவிதைகளை மேற்கோளிட்டு தன் வாசிப்பைப் பகிர்ந்துக் கொண்டார்.

1 . கிளிசலாடை படர்ந்த இடுப்பில் அமர்ந்து நிர்வாணம் மறைக்கும் குரங்கு
2 . விற்பனையாளன் விற்காத கதவுகளின் கதவற்ற வீடுகளைக் கற்பனித்துக் கொண்டிருக்கிறான்.
3 . ரயில் பயணத்தை சாட்சி சொல்லும் ஆப்பிள்

இது போன்ற கவிதைகள் நன்றாகப் பேசப்படும், விமர்சிக்கப் படும் என்று பார்த்தேன், சமூகத்தை அரசியலை தனது மைக்ரோ கண்களால் கண்டு நுண்ணிய விசயங்களில் கருத்துச் செரிவை சமூகத்திற்கு ஊட்டும் கவிஞனின் இந்தப் புத்தகம்,  ஒருவேளை மறுபடியும் இணையத்திலோ முகநூலிலோ நடக்கும் என்று அதற்க்கான முயற்சிகளை (Virtual புக் review ) நான் மேற்கொள்வேன் என்றும் இங்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.கடல் கடந்து நிற்கும் அவரது ஏராளாமான வாசகர்களும் அதில் தம் பங்கை அளிப்பார்கள் என்று நான் உறுதிபட கூறுகின்றேன் 

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

Payback பூதம்

                       என் தம்பி ஒருவன் பன்னாட்டுத் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் ஒரு கடந்த ஐந்து மாதங்களாக வேலை பார்த்து வருகிறான். சென்ற மாத இறுதியில், தமக்குப் பணக் கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான். எனக்கோ அது மிக ஆச்சரியமாக இருந்தது, சிக்கனமாய் வாழ்வதை ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தில் இருந்தவன் அவன் , இந்த வேலையில் சேர்வதற்கு முன்பு அவன் பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலோ இப்போது வாங்கும் சம்பளத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் வாங்கி வந்தான். இப்படி மிகவும் சிக்கனமாய் இருந்து வந்தவன், பணக் கையிருப்பைப் பற்றிக் கவலைப்பட்டதால் ,"வேறு எதுவும் அவசரத் தேவை இருந்ததா?" என்று அவனிடம் நான் கேட்டேன், அவன் "இல்லை" என்று சொன்னான். அவன் பணம் எப்படி கரைகிறது என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அவனைச் சுற்றி ஒரு சதிகாரக் கும்பல் விரித்த ஒரு மாய வலையில் அவன் சிக்கியிருப்பதை அறிந்துக் கொண்டேன், அந்த வலை எப்படி விரிக்கப் பட்டது என்பதை நாம் அலசுவோம்  ...........


                           நலிவடைந்துக் கொண்டிருந்த நம் நாட்டைக்  காப்பாற்றிக் கொள்ள, ஒரு பெரியக் கதவு 1991 ல், "நாட்டு நலன்" என்ற பெயரில் நமது மத்திய அரசால் திறந்துவிடப்பட்டது. அதுவரை வெறும் 1.50% மட்டுமே இருந்தே நமது நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி, படிப்படியாக உயர்ந்து 9% வரை உயர்ந்து உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியில் ஒன்றாக தன்னையும் நிறுபித்தது என்று நடுவன் அரசு தன் சாதனையை சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியும், வீழ்ந்துக் கொண்டிருக்கும் ரூபாயின் மதிப்பும், பெரியாதாகிக் கொண்டிருக்கும் பணக்கார-ஏழை இடைவெளியும், உலக அரங்கில் இந்தியாவின் வலிமையை எந்த விதத்திலும் குறைக்காது என்று தன் கொள்கையில் உறுதியாய் இருந்துக் கொண்டு, அந்தக் கொள்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றது . சரி, இதற்கும் என் தம்பியின் பணப் பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? தொடர்ந்து படியுங்கள் ... 

            நமது அரசின் தளர்த்தப்பட்ட பொருளாதரக் கொள்கைதான், நமது சமூகப் பொருளாதாரக் கொள்கையினை மாற்றியமைத்திருக்கிறது என்கிற காரணம் தான் என் தம்பியைப் போன்ற பலரின் திண்டாட்டங்களுக்கு காரணம். முதலில், ராக்கெட் உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியிலும், கட்டுக்குள் அடங்காது போன நகரமயமாக்கலும் நடுத்தர மற்றும் பாமர மக்களுக்கு வசதியான வீடு, சுகாதாரமான சூழல், தரமான மருத்துவம், கல்வி  ஏன் அத்தியாவசியமான குடிநீர் , மின்சாரம் போன்றவற்றைப் பெறுவதற்கு 365 நாட்களும் அல்லலுறுகின்றனர். இது ஒருபுறமிருக்கட்டும், என் தம்பியைப் போன்ற நல்ல ஒரு உத்தியோகத்தில் ( வங்கியில் , மின் பொறித் துறை, தகவல் தொழில் நுட்பம் போன்ற white collar job) இருப்போர் கூட எதற்காக இப்படிப் புலம்ப வேண்டும் ?? முன்பே சொன்னது போல சமூகப் பொருளாதரக் கட்டமைப்பு மாறியிருக்கிறது என்பது நமது சேமிப்பு பொருளாதாரம் நம்மைச் செலவு செய்யும் பொருளாதாரமாக மாறிவருகிறது.

                       ஆம், முன்பெல்லாம் நம் வருமானத்தில் ஒரு பகுதியை (நடுத்தர, மேல் நடுத்தர மக்களின் நிலை ) சேமிப்பதற்கு என்றே முதலில் எடுத்து விடும் வழக்கம் இருக்கிறது. ஆனால், இன்று சேமிக்கும் வழக்கம் நமக்கு குறைந்துகொண்டே வருகிறது. இது ஏதோ நம்மை திடீரென்று மாற்றிய மாயஜாலம் இல்லை, எப்படி நம் வீட்டிற்குள் தினமும் காலையில் பருகக் கிடைக்கும் நீராகாரத்தை காப்பி(காபி/டீ) துரத்திவிட்டு அமர்ந்து கொண்டதோ அப்படித்தான் மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று மறுபடியும் நாம் நீராகாரம் பக்கம் செல்வோமா ? இதேபோலத் தான் மெல்ல வந்து நம் சட்டைப் பைகளில் அமர்ந்துக் கொண்டது இந்த கிரெடிட் கார்ட் யமன்!!.

                        கிரெடிட் கார்டின் ஆபத்து , இது நம்மை வெறும் கடனாளியாக்குகிறது என்பதோடு  மட்டுமல்லாமல் நம் கலாச்சாரத்தையும் மாற்றிவிடுவதைத்தான் இந்தக் கட்டுரையில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாம் வாங்கியச் சம்பளக் கவரைப் பிரிக்காமல் வீட்டிற்குக் கொண்டுவந்து தாயிடமோ, பூஜையறை விளக்கு முன்போ அல்லது மனைவியிடமோக் கொடுத்து அதற்கு நாம் மரியாதை செய்கிறோம், பின்னர் அதை  நம் வருங்காலத்திர்க்கோ, குழந்தைகளுக்கோ அதைத் திட்டமிட்டு சேமிக்கிறோம். இன்று, கார்ட் கலாசாரம் என்று மாறிய பின்பு "பாதுகாப்பு" என்ற பெயரில் வங்கிக் கணக்கிலே வைத்துவிடுகிறோம். வங்கிகள் நம் சேமிப்புகளை சூறையாட எல்லா வேலைகளையும் செய்கிறது.அவசரத் தேவைக்கு கடன் வாங்குவதை விட்டு விட்டு ஆடம்பரத் தேவைக்கு நம்மை வாங்க வைக்கும் வேலையைச் செய்து வருகின்றன.இதை எளிமையாக விளக்கும் பொருட்டு ஒரு தனி நபரின் வாழ்க்கை முறையை எடுத்துக் கொள்வோம்.

                              அந்தப் பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்க்கும் அவனுக்கு மாதச் சம்பளம் 25000 /- ரூபாய், அதில் பெர்குசைட்ஸ் (perquisites ) என்று மீல் வவுச்சர்களும் (i.e Sodexo Meal Pass) அல்லது food கார்டு என்றோ கிட்ட தட்ட 3000 ரூபாயை அவன் மாதச் சம்பளத்தில் இருந்து கழித்து விடுகிறார்கள், அதை வருமான வரி விலக்கு என்று அவர்களுக்கு கூறி அதை ஏற்க வைத்து விடுகிறார்கள். முதலில் Staff welfare என்ற அடிப்படையில் கொடுக்கப் படும் இந்த சலுகை வருமான வரிச் சட்டத்தின் FBT - Perquistes Act on food coupon /meal vouchers ன் கீழ்  Rule 3(7)(iii ) படி ஒரு நிறுவனத்தில் வேலை நிமித்தமாக, வேலை நேரங்களில் மட்டும் தரப்பட வேண்டிய ஒரு கூப்பனின் விலை ரூபாய் 50/- அதிகபட்சம் ஒருநாளைக்கு இரண்டும்ரை கூப்பனை உபயோகிக்கலாம் என்று இருக்கும் சட்டத்தின் கண்களில் கறுப்புத் துணி கட்டி விட்டு,  பிரபல  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் Sodexo / orange போன்ற உணவுக் கூப்பன்களும், food கார்டுகளும் எப்படியெல்லாம் உபயோகப் படுத்தப்படுகின்றன என்று பார்க்கும் பொழுது, நம் அரசுக்கு வரியேய்ப்பும், நமது நுகர்வுத் தன்மை மாறிவருவதையும் தெளிவாகப் பார்க்கலாம்.

                               ஆம், அரசு தரும் வரிச் சலுகையானது (As per the IT act) ஐம்பது ரூபாய் வவுச்சர்களுக்கு மேலே பொருந்தாது, ஆனால் sodexo பாஸ் கூப்பனில் 100 மற்றும் 200௦ ரூபாய் வவுச்சர்கள் அதிகமாய் இருக்கும். Food card தேய்க்கப் படும் இடங்கள் எப்படி இருக்கும் உங்களுக்கு தெரியாதா என்ன ? KFC , MacDonald's, Pizza hut போன்ற பன்னாட்டு உணவகங்களோடு நாம் நாட்டு பெரிய நிறுவனங்களான அடையார் ஆனந்த பவன், சரவணா பவன் . வசந்த பவன் , ஸ்ரீ மிட்டா , அஞ்சப்பர் என்று நவநாகரிக ஆடம்பர உணவகங்களில் மட்டுமே இந்த Food கார்டுகளை தேய்க்க முடியும் என்றால் நாம் எப்படிப்பட்ட ஒரு பொறியில் சிக்கிக் கொண்டோம் என்று புரிகிறதா ?? 

                                   இதுவரை தன் வாழ்க்கையில் நூறு ரூபாய்க்குள் மிகத் தாரளாமாக மூன்று வேளையும் உணவு உண்டு வந்த என் தம்பிக்கு, இப்பொழுது ஒரு வேளைச் சாப்பாடே நூற்றைம்பதுக்கும் குறையாமல் இருக்கிறது என்றால் அவனை எப்படி ஒரு கிணற்றில் தள்ளிவிடுகிறது இந்தக் கார்ப்பரேட் கலாசாரம். என் தம்பியும் அந்த கார்டினை வைத்து பத்து - பதினைந்து நாட்கள் சாப்பிடுகிறான், பணம் தீர்ந்தவுடனும் கூட நாவில் ஒட்டியிருக்கும் மாய ருசி அவனை அங்கேயே தொடர்ந்து சாப்பிட வைக்க உந்துகிறது. இந்த இடம் தான் நம் நுகர்வுக் கலாசாரம் மாறும் புள்ளி, இதற்குப் பின் சுவையாக,ஆரோக்கியமாக, மலிவான விலையில் கிடைக்கும் ஏதாவது சிறிய ஓட்டல்களிலோ அவன் சாப்பிடப் போவதில்லை. அதை அவன் மறந்தும் கூட செய்யாதிருக்க அவன் வேலை பார்க்கும் வளாகத்திலே இருக்கும் ஆடம்பர உணவகங்களில் வேலை செய்யும், நுனி நாக்கு ஆங்கிலத் திறமை கொண்ட நவ நாகரிக யுவ யுவதிகளின் விருந்தோம்பல் பண்பினில் (hospitality), அவனுக்கு ஒரு இமேஜ் உண்டாக்கப் பட்டிருக்கும்.

                                 இந்த food கார்டுகளை அவன் காய்கறி, பழம் வாங்க உபயோகித்தாலும் அதையும் "ரிலையன்ஸ் ஃபிரெஸ்", "மோர்", "ஸ்பென்சர்" போன்ற மெகா பஜார்களில் தான் வாங்கவேண்டும். அது போன்ற கவர்சிகரமான ஸ்டோர்களில் சில நேரங்களில் அவன் விலை குறைவாகக் கொடுத்தாலும், தேவையற்ற உணவுப்பண்டங்களை அவன் நுகர்வு செய்வதை அவனால் கட்டுப்படுத்த முடியாது, சில நேரம் தியேட்டர், மால்களில் உள்ள கேண்டீனில் கூட அவன் உபயோகிக்கிறான் என்றால் , இதற்கு வருமானவரி விலக்கு தரும் அரசிற்கு எவ்வளவு நன்மை?. எல்லாவற்றிக்கும் மேல் சாப்பிடும் பண்டங்களுக்கு கொடுக்கும் கூப்பன்களில் நமது நுகர்வு போக எவ்வளவு மீதம் இருந்தாலும் திரும்ப வராது என்பது இதில் பெரிய கொடுமை. இது  போல ஏதாவது ஷாப்பிங் மால்களில் ( ஸ்கைவாக், எக்ஸ்ப்ரெஸ் அவென்யு) இருக்கும் food கோர்ட்டுகளில் மீதம் என்பது கிடையாது.

                     இனி கிரெடிட் கார்டுகள், ரிவார்ட் பாய்ண்ட்டுகள், மற்றும் பேபேக் கார்டுகள் எப்படியெல்லாம் நம்மை சீரழிக்கின்றன என்று பார்ப்போம், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் சில E-ஷாப்களில் நீங்கள் கடன்காரனாய் (கிரெடிட் கார்டை வைத்திருந்தால்) மட்டுமே ஷாப்பிங் செய்ய முடியும், கிரெடிட் கார்டுகளுக்கு டெபிட் கார்டுகளை விட கட்டணம் குறைவாக இருக்கும். இந்தக் கிரெடிட் கார்டுகளை வாங்கி கட்டணக் கொள்கையினை(கொள்ளை) அறிந்து மிகத் துல்லியமாக செலவு செய்து கட்டணத்தில் இருந்து தப்புவோர்கள் நிறைய இருப்பதால், பாங்க்குகள் யோசிக்க ஆரம்பித்து கண்டுபிடித்த மற்றுமொரு கவர்சிகரமான திட்டம் தான் ரிவார்ட் பாயிண்ட்ஸ் , போனஸ் பாய்ண்ட்ஸ் முறை.

                        பல ஷாப்பிங் மால்களிலும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும் உங்கள் முதல் நுகர்விலேயே உங்களுக்கு ஒரு உறுப்பினர் அட்டை ஒன்று வழங்கப்படும் அதில் உங்கள் நுகர்விற்கு ஏற்ப உங்கள் அட்டைக்கு போனஸ் பாயிண்ட்டுகள் வழங்கப் படும். அதை உபயோகித்து நீங்கள் மறுபடியும் சில விதிமுறைக்குட்பட்ட ( லாபகரமான) பொருளை வாங்கலாம். ஆனால் அந்தப் பரிசினைப் பெறுவதற்குள் உங்கள் பொறுமையின் எல்லைக்கே செல்ல வேண்டும் ( குறைந்தப்பட்ச ரெடிமபில் வேல்யு 2000  பாயின்ட்டுகளாவது இருக்கும்). 

           இப்பொழுது, ஒரு புதிய பல்பொருள் அங்காடி (குஜராத்தை தலைமையிடமாகக் )கொண்டு NMART என்ற பெயரில் வந்துள்ளது. இந்தக் கடையில் நீங்கள் உறுப்பினராக சேரும் போது ரூபாய் ஐந்தாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் (உங்கள் வசதிப்படி பத்தாயிரம், பனிரெண்டாயிரம் கூட கொடுக்கலாம்). அதற்கு உங்களுக்கு 220 ருபாய்க்கான பரிசு வவுச்சர்கள் நாற்பத்தெட்டு மாதங்களுக்கு வழங்கப்படும் (ஆனால் அதை நீங்கள் எண்ணெய், நெய் , சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைத் தவிர்த்து வேறுப் பொருட்களை மட்டுமே வாங்கலாம்). இது போக நாற்பதெட்டு மாதங்களுக்கு ரூபாய் 1500/-க்கான கடன் வசதி உங்கள் உறுப்பினர் அட்டையில் வழங்கப்படும், அதற்கு முப்பது நாட்களுக்குள் நீங்கள் அதை செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு மாதம் நீங்கள்  செலுத்தத் தவறினால் உங்கள் அனைத்து சலுகைகளும் பறிக்கப் படும். இதற்கெல்லாம் நாம் கட்டுப் பட்டு எழுபத்திரெண்டாயிரம் ரூபாய்க்கான பொருட்களை நான்கு ஆண்டுக்குள் வாங்கியிருந்தால், நம் கட்டியிருந்த உறுப்பினர் தொகை பதினோராயிரமாகத் திரும்பக் கிடைக்கும்!!! 

                       இது போன்ற திட்டங்கள் உறுப்பினர் சேர்க்கை, மல்டி லெவல் மார்கெட்டிங் ஆகியன இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வரும் unclaimed ப்ரீமியம் போல செயல்படாத உறுப்பினர் வைப்புத் தொகையினை சுருட்டி வைப்பதில் தான் அதிக கவனம் காட்டுகின்றன. ஆனால் நாமோ!! சேமிப்பின் அவசியத்தை மறந்து தேவையற்ற நுகர்வுகளின் மூலம் நம் குடும்ப நிம்மதி, எதிர்காலத் திட்டங்கள் , பணியோய்வு போன்ற பல காரியங்களை இழந்து. இது தொடர்ந்து மாறிவந்தால் மேற்குலகை அழுகிப் போன கலாசாரமாய் மாற்றிய நுகர்வுப் பொருளாதாரம் நமது ஆணிவேரையும் பிடிங்கிவிடப் பார்க்கும்.

                    SBI கார்டிலிருந்து ICICI கார்ட் வரை, தங்கள் வாடிக்கையாளர்கள் கடன் அட்டையினைத் தொடர்ந்து உபயோகிக்க அவர்களின் நுகர்விற்கு ஏற்ப போனஸ் பாயிண்ட்டுகளை வழங்குகிறது. பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் பாயின்ட்டுகளுக்கு பரிசாக கொடுப்பவை( இதற்கு நாம் குறைந்தது இரண்டாயிரம் பாயின்ட்டுகளையாவது யாதெனில் சில லிட்டர் பெட்ரோல் அல்லது ஏதாவது ஒரு தீம் பார்க் , ரீசொர்ட்களில், விமானப் பயணங்களில் உல்லாச விடுமுறைகளில் சொற்பத்தள்ளுபடி அல்லது ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள், வாட்சுகள் என மறுபடியும் ஒரு ஆடம்பரச் சலுகைகளைக் கொடுத்து அவர்களை மேலும் நுகர்வு செய்யத் தூண்டுகிறது. இதில் ICICI போன்ற வங்கிகளோ நுகர்வு செய்தப் பொருளின் மதிப்பில் வரும் போனஸ் பாயின்ட்டுகளுக்கு ஏற்ப பணமாகவே திருப்பிக் கொடுக்கிறது. இது போன்ற நுகர்வுகளை மட்டுமே நாம் விரும்ப ஆரம்பித்தால், நம் வீட்டின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும்,முகமறிந்து மட்டும் கடனளிக்கும் நம் மளிகைக் கடை அண்ணாச்சிகளையும், நமக்கென்று ஸ்பெசலாக தோசை சுடும் மாமிகளையும் நம் வாழ்வில் மறந்து விடுவோம். அதே போல ஒரு திடீர் செலவில் கட்ட முடியாமல் போன கிரெடிட் கார்ட் ட்யூவை வசூலிக்க உங்கள் தன்மானத்தை அடகு வைக்க வேண்டி வரும். 


Roger -Sinna says:
இதன் தொடரூட்டமாக, இந்தப் பதிவு இடுகிறேன்.
credit card என்பது payback பூதந்தான். வெளிநாடுகளில் இதனாட்சி மிகவும் அதிகம். நடுத்தரவர்க்கத்தை சுரண்டும் பூதம் இது.
இங்கு பார்த்தீர்களானால், இந்த cardit card , application உடன் பூதத்தின் வரவு ஆரம்பிக்கிறது. வருமானத்துக்கு ஏற்றவாறு வட்டிவீதமும் மாற்றமடையும். ஆரம்பத்தில் அது தெரியாது. இப்போ, 19 .5 % என்று வைத்துக்கொள்வோம். இந்த நடுத்தரவர்க்கம், தொடர்ந்து வட்டியை செலுத்துவதிலேயே குறியாயிருக்கும். இது, முதலில் மாற்றங்களை உண்டாக்காமல், மக்களை, இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும். பின்னர், ஒரு நிலையில், ஏதாவது தடங்கள் ஏற்பட்டால், உதாரணத்துக்கு, ஒருமாதம் கட்டமுடியாவிட்டாலோ, அன்றி தவணைக்குப் பிந்தி கட்டினாலோ, கூட்டு வட்டி முறை மூலம் செலுத்தவேண்டிய தொகை அதிகரிக்கப்படும். சில credit card vandors இந்நிலையைப் பாவித்து அவர்களின் வட்டிவீதத்தை அதிகரித்துக்கொள்வார்கள். இது மேலும் பாவனையாளர்களின் வங்குரோத்து நிலையை உருவாக்கிவிடும். இது ஒரு தொடர்கதை. இதன் பின்னணியிலும், விளைவிலும் பயங்கரம் மட்டுமே விளைவாயிருக்கும் சரியான அவதானம் இல்லாவிடினும், திட்டமிடல் இல்லாவிடினும், க்றிஸ் பூதத்தைவிட payback பூதம் கொடியது

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

நான்கு கால் நல்லது ரெண்டு கால் கெட்டது!!!


Animal Farm (George Orwell)  - புத்தக விமர்சனம் 

கம்யுனிசம் 

நம் நாட்டில் சமூகம் பற்றி அக்கறையுடன் பேசும் யாரையும் "நீ என்ன கம்யுனிசவாதியா" என்று கேட்கும் வழக்கம் உள்ளது, நாட்டைப் பற்றி ஏதாவது நானும் புரட்சிகரமாய் பேசினால் என்னையும் அப்படித்தான் கேட்பார்கள், எனக்கும் அப்படிக் கேட்கும் பொழுது முன்பெல்லாம் சந்தோசம் தான்  வரும். இந்த புத்தகத்தை வாசித்த பின்பு தான் உணர்கிறேன் இப்படிச் சொல்பவர்கள் ஜார்ஜ் ஆர்வெல்லின் இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தான் நம்மை இப்படி கேலி செய்கிறார்களோ?? என்று.. 

உலகம் நன்கு அறிந்த வெற்றிகரமான எழுத்தாளர்களுள் ஒருவரான ஜார்ஜ் ஆர்வெல்லின் மிகப் புகழ்பெற்ற நாவலான Animal Farm, மொழிபெயர்க்கப்பட்டு "விலங்குப் பண்ணை" என்ற பெயரில் வெளிவந்துள்ளது (கிழக்குப் பதிப்பகம்). இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வந்த வேறெந்த புத்தகமாவது இன்று வாசிக்கையில் இவ்வளவு எளிமையாகவும், சுவாரசியமாகவும் இருக்குமா என்பது கேள்விக்குறியே??

ஆங்கிலத்தில் "Satire" என்று சொல்லுவார்கள், நையாண்டித் தன்மையுடன் சமூகத்தின் அவலங்களை சுட்டிக் காட்டும் முறை என்று சொல்லலாம், ஹாஸ்யத்துடன் சேதி சொல்லும் அரசியல் கேலிச் சித்திரங்களைப் போல எழுதப்பட்டிருக்கும், மேலும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த Fairy tale நாவல், எளிமையான தமிழில் வந்துள்ளது. சரி,கதைக்குள் செல்வோம்.

கதை :- 
இங்கிலாந்தில் உள்ள ஜோன்ஸ் "மோனார் பண்ணை " எனும் ஒரு பண்ணையின் முதலாளி, அவர் பண்ணையில் பன்றி , குதிரை , நாய் , மாடு , கழுதை, வாத்து , கோழி  என சகல விலங்குகளையும் வளர்த்து வந்தார். எல்லா விலங்குகளும் தன் எஜமானனுக்கு அடங்கிய விலங்குகளாகவே வாழ்ந்து இருக்கும், அந்தப் பண்ணையில் ஓல்ட் மேஜர் என்றொருவர் இல்லாவிட்டால். ஆம், அந்தப் பண்ணையில் ஓல்ட் மேஜர் எனும் கிழட்டுப் பன்றியும் வசித்து வந்தது (கிழட்டுப் பன்றியை நீங்கள் லெனினுடனோ இல்லை முக்கியமாக காரல் மர்க்சுடனோ எளிதில் ஒப்பிடலாம் ).அது விலங்கினங்கள் மனிதனிடம் அடிமைப்பட்டு சந்தித்து வரும் பெரும் இன்னல்களை எல்லாம் வைத்து புதிய ஒரு சமுதாயம் பற்றிய சிந்தனையை உருவாக்கியது. ஒரு நாள், அந்தப் பண்ணையில் உள்ள எல்லா விலங்குகளையும் ஒன்று திரட்டி , விலங்குகள் மத்தியில் முதன்முறையாக அது உரை ஆற்றியது. "தோழர்களே!!" என்று ஆரம்பிக்கும் அந்தப் பன்றியின் பேச்சு மற்ற விலங்குகளுக்கு புதிதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது மற்ற விலங்குகளுக்கெல்லாம் ஒரு புது நம்பிக்கையை அளித்தது, புரட்சி, கலகம் (ஒரு வேளை  நம் ஊரில் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பின் கலகத்துடன் கழகம் என்ற சொல்லாடல்களும் வந்திருக்கலாம்) என்கிற வார்த்தைகள் எல்லாம் புதிதாய் அவற்றிற்கு கற்றுக் கொடுக்கப் படுகின்றன.

புரட்சியைப் பற்றி கனவை விதைக்கும் ஓல்ட் மேஜர் பன்றி, திடீரென்று இறந்துவிட , அச்சிந்தனையை தன் மக்களுக்குக் கொண்டு செல்லும் பணியை இரண்டு பன்றிகள் கையில் எடுத்துக் கொள்கின்றன, முதல் பன்றி ஸ்நோபெல் (லியான் ட்ராட்ஸ்கி), இரண்டாம் பன்றியான
சர்வாதிகாரி நெப்போலியன் (ஜோசெப் ஸ்டாலின்) ஆகிய இரண்டும் ஜோன்சின் உடைமையான மேனார் பண்ணையில் புரட்சிக்கு வித்திடுகின்றன. எல்லா விலங்குகளும் எதிர்பார்த்தது மாதிரி திடீரென்று ஒரு நாள் கலகமும் ஏற்படுகிறது, அதன் விளைவாக 'மேனார் பண்ணை', விலங்குகள் வசமாக "விலங்குப் பண்ணை" ஆகியது.


விலங்குப் பண்ணையில் முதலில் ஸ்நோபெல் தலைமை ஏற்று நடத்துகிறது, விலங்குப் பண்ணையில் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. "இங்கிலாந்தின் தேசிய கீதமே!!" என்ற ஒரு பாடல் அப்பண்ணையின் தேசிய கீதமாகிறது, "நான்கு கால் நல்லது, இரண்டு கால் கெட்டது" என்ற வாக்கியம் ஒரு தாரக மந்திரமாகிறது. 

ஒரு நாள் விலங்குப் பண்ணையின் மீது ஜோன்ஸ் தொடுத்த போர் கூட விலங்குகளால் முறியடிக்கப் படுகிறது. விலங்குப் பண்ணையின் புகழ் நாடெங்கும் பரவுகிறது. விலங்குகளின் ஒற்றுமை கண்டு மற்ற பன்னயாலர்களும் பயப்படுகிறார்கள் , தங்கள் பண்ணையிலும் கலகம் ஏற்பட்டுவிடுமோ என்று. ஆனால், விலங்குப் பண்ணையில் விலங்குகளின் அயராத உழைப்பிற்கு மத்தியில் சில மர்மங்களும் நடைபெறுகின்றன. ஒரு நாள் ஜெஸ்ஸி மற்றும் ப்ளூ பெல்லின் ஒன்பது குட்டிகளும் காணாமல் போகிறது. அதுபோலே ,அங்கு தினசரி கரைக்கப்படும் பால் கூட காணமல் போகிறது,அங்கே சில மர்மங்கள் நடப்பது வேறு எந்த விலங்குகளுக்கும் தெரியவில்லை.


ஒற்றுமையாய் வாழும் விலங்குகள் கடுமையாய் உழைத்து விவசாயத்தில் வெற்றி பெறுகிறது, ஸ்நோபெல் ஒரு காற்றாலைப் பற்றிய கனவினை மற்ற விலங்குகளுக்குத் தெரிவிக்க, முதலில் அதை எதிர்க்கும் நெப்போலியன் பன்றி, ஒரு நாள் தான் ரகசியமாய் வளர்த்து வந்த ப்லூபெல்லின் ஒன்பது நாய்க் குட்டிகளை வேட்டை நாய்களாக தன் படையாகக் காட்டி - ஸ்நோபெல்லைத்  துரத்திவிட்டு; ஆட்சியைப் பிடித்து தன் மேனார் பண்ணை நிர்வக்கும் கதை தான் விலங்குப் பண்ணை.

 ஒரு fairy tale நவீனம் மூலம் ஜார்ஜ் ஆர்வல் கம்யுனிச ரஸ்யாவின் மனித உரிமை மீறல்களையும், கம்யுனிசத்தின் அடிப்படை ஆபத்தாக தனிமனிதச் சுதந்திரம் பறிபோவதை மிக எளிமையாய்ச் சுட்டிக் காட்டுகிறார்.

விலங்குப் பண்ணையில் முதலில் ஓல்ட் மேஜர் உரை நிகழ்த்தும் போது விலங்குப் பண்ணை எனும் கனவு பொதுவுடமையைப் பற்றி நாம் முதன் முதலில் காணும் கனவை ஒத்தது. 

ஒரு ஒப்பிட்டுப் பட்டியல் :
கதையில் வரும் எதைச் சொன்னாலும் தலையாட்டும் செம்மறியாடுகளைப் போலவோ , யார் ஆண்டாலும் நமக்கென்ன நமது வேலை பொதி சுமப்பது என்னும் கழுதைகளைப் போலவோ, கனவில் சுய சிந்தனை இழந்து வஞ்சகத்தை அறியாமல் ஒரு சித்தாந்தத்தை நம்பித் திசைமாறும் 
குதிரை போலவோ, மட வாத்துகளைப் போலவோ; கோழிகளை போலவோ , நாம் ஏதோ ஒரு விலங்கின் சாரம்சமாக இருந்து வருகிறோம் என்பது இந்த நாவல் 
உணர்த்தும் மற்றொரு உண்மை.

பொதுவுடைமை என்ற வார்த்தையால் மயங்கும் விலங்குகள், ஒட்டு மொத்த விலங்குகள் நலன் என்ற பெயரில் கடுமையாக உழைத்து வரும்போது, பன்றி இனம் மட்டும் மூளையால் வேலை செய்வதாக தங்களைக் காட்டிக் கொண்டு, மற்ற விலங்குகளைக் காட்டிலும் பன்றிகளே அதிகம் விலங்குப் பண்ணைக்காக உழைப்பதாகவும் -ஆதலால் தங்களுக்கு அதிக சலுகைகள் இருப்பது தான் நியாயம்  என்று சொல்லிக் கொண்டன. 

தங்கள் பண்ணை அமைக்கும் பொழுது வைத்திருந்த ஏழு சட்டங்களில் ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தன, 
1 .அதாவது "எந்த விலங்குகளும் படுக்கைகளில்(கட்டிலில்) உறங்காது "என்கிற சட்டம். எந்த விலகுகளும் கட்டிலில் மெத்தை (bed sheets ) மீது உறங்காது" என்று மாற்றம் செய்யப்பட்டது , 

2 .அது போல "எந்த விலங்குகளும் குடிக்காது" என்ற சட்டமும்,  "எந்த விலங்குகளும் அளவுக்கு மீறி குடிக்காது" என்றும் ;

3 . "எந்த விலங்கினமும் மற்ற விலங்குகளைக் கொல்லாது என்கிற சட்டம்", "எந்த விலங்கினமும் அவசியமின்றி மற்ற விலங்குகளைக் கொள்ளது என்றும் மாற்றப் படுகிறது.

உழைப்பாளர்களின் நலனைக் கொண்டு உருவாகிய பொதுவுடைமையில், வயதான விலங்குக்கு ஓய்வூதியத்துடன் பனி ஓய்வுத் தரப்படும் என்று முதலில் சட்டம் இயற்றிய பன்றிகள், ஒய்வு அளிக்கும் திட்டத்தையே புறக்கணித்தன. ஆண்டுகள் செல்ல செல்ல, விலங்குகள் "மனிதனிடம் அடிமையாய் இருந்தோம், இப்பொழுது சுதந்திரம் பெற்றுள்ளோம்" என்ற பாடத்தை(வரலாற்றைத்) தவிர இரண்டு வார்த்தைகளுக்கும் உண்டான வித்தியாசத்தை மறந்து விட்டன.

இங்கு நாம் , ஸ்டாலின் தன் ஆட்சிக் காலத்தில் தனக்குள்ளே முரண் பட்ட விசயங்களான: முதலில் " கடவுளை மக்கள் வணங்குவதை எதிர்த்ததும்", பின்னர் இரண்டாம் உலகப் போரில் மக்கள் ஆதரவிற்காக " சர்ச்சிற்கு செல்வதை ஆதரித்து  சர்ச்சுகளை  மீண்டும் திறத்து விட்டதையும் ,  "ஒட்டுமொத்த மனித நல்லிணக்கம் என்னும் Totalarianism -த்தை ஆதரித்த ஸ்டாலின் பின்னர் அரசியல் கைதிகளான 25 ,700 பேரை கொன்றதையும் நாம் நினைவு கூறலாம்.

ஸ்பானிஸ் உள்நாட்டுப் போரின் போது, ஸ்பானியக் கம்யுனிசக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட NKVD எனும் ரஸ்சிய ராணுவ ஏஜன்சி மீது கொண்ட வெறுப்பில், ஸ்டாலினின் அக்கிரமங்களை சித்தரிக்க தன் நாவலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல், தன் எழுத்தின் மூலம் காலம் கடந்தும் உலகம் முழுமைக்குமான சேதிகளைச் சொல்லியுள்ளார்.

பொதுவுடைமை எனும் கொள்கையின் பற்றுதல் சர்வாதிகாரத்தில் தான் கால்கொள்கிறது. (சர்வாதிகாரம் இன்றி பொதுவுடைமை சாத்தியப்படாது), கம்யுனிச ஆட்சியில் (கலகக்காரர்களைத் தவிர்த்து) இருக்கும் பொதுமக்கள் அடிமை விலங்குகளுக்குச் சமானம் ஆவார்கள் (பட்டியல் ஏற்கனவே மேலே கொடுக்கப் பட்டுள்ளது) என்று தான் கதையும் மூலம் சொல்கிறார்.

இதன் தமிழாக்கம் பி.வி.ராமஸ்வாமி அவர்கள், இது அவரது முதல் தமிழாக்கம் இந்தப் புத்தகம் என்றாலும் ஆங்கில நாவலின் சுவை குன்றாமல் எழுதியிருப்பதை நீங்கள் உணரலாம். உதாரணமாக, விலங்குப் பண்ணையின் கட்டளைகள் சுவற்றில் எழுதப்படும் பொழுது, அந்த இடத்தில் வரும் சிறிதும் நகைச்சுவை உணர்வு குன்றாமல் இருக்க அவர் "அந்த எழுத்துக்களில் சந்திப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் இருந்தன" என்று நமக்கு எளிம்யைச் சொல்லும் இடம் மிக ரசனையானது.

ஆர்வெல், விவசாயிகள் எப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடமும் சுரண்டலுக்குள்ளாகிறார்கள் என்று நாவலின் இறுதியில் உணர்த்திவிடுகிறார். குழந்தைகள் முதல் அனைவரும் படிக்க வேண்டிய இந்நூல், பல இடங்களில் ரஸ்சிய அரசை மறந்துவிட்டு நமது நாட்டின் அரசின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போல தோன்றுவது தவிர்க்க முடியாதது, அதுதான் 1946 ல் வெளி வந்த அந்நூல் இன்றும் புத்துணர்வுடன் வாசிக்க வைக்கும் மூலப் பொருளாய் இருக்கிறது .

நாவலை முடித்தவுடன் நான் மேனார் பண்ணையில் இருந்தால் என்ன விலங்கினத்தைச் சேர்ந்தவனாய் இருந்திருப்பேன் என்று ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன் !!