செவ்வாய், 6 நவம்பர், 2012

பிதற்றல்கள் - 2




ஒரு பூந்தோட்டத்தின் வழியே
ஒரு மலரைக் கூட தொடாதவனே
தன் காதலைச் சொல்லாமல்
 வாழ்ந்து முடிக்கிறான்

---------------------------------------------------------------------------------------------------------
மூழ்கித் தான் போய்விடுகிறது
வாழ்க்கை - அறிவின் கொடை;
வாழ்வதை மறந்து விட்டு

---------------------------------------------------------------------------------------------------------
காதல் குழப்பமானது
குழப்பம் விடுதலை தராது
மரணம் தெளிவு தரும்
தெளிவு காண்பது தீர்வல்ல

ஆதலால் காதலே மேல்

----------------------------------------------------------------------------------------------------------------
அவள் தான்!!

நான் -
பெண்ணையே தேடிக் கொண்டிருக்கிறேன்
அவள் கவர்ச்சியாய் இருக்கிறாள்
அவள் தோலுக்குள் சென்றால் தானே
தெரிகிறது
இரத்தம்
சதை
எழும்பு
சீழ்
சளி
புழு - என்னிடமும் தான்,
ஆமாம், காதல் இருந்த தடம் எங்கே??
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


அது ஒரு காதல் கதை

நாளை தன் காதலுக்காக -யாரேனும்
கொலை செய்யப் படலாம்

ஒரு வேளை நேற்று அவர்கள்
களவு கொண்டிருக்கலாம்

அதற்கு முந்தையநாள் அவர்கள்
சண்டையிட்டும் இருந்திருக்கலாம்

அதற்கும் முந்தைய நாள்
சந்திப்பதற்கே தவம் செய்திருக்கலாம்

இன்று அவர்களைப் பார்ப்பதற்கு
அவர்கள் என்றென்றும் காதலிப்பவர்கள்

நேற்றைக்கும் இன்றைக்கும்
நடுவே ஒரு நாளிருந்தால்
காதலுக்காகவே தற்கொலை நிகழ்ந்திருக்கும்

இருக்கட்டும் நாளை மறுநாள் தான் ஊழி!!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பரம்பொருளைப் பருகிய பின்னும்
இறுதிப் பரம்பொருள் ஒன்று எட்டிப் பார்க்கிறது
இதைக் கொன்று அல்லவா தின்ன வேண்டும்??

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது ??

காதல் 
அடையாத வரை இது
அடைந்துவிட்டால் அது
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதல் எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டது.
இனி நான் உறங்கச் செல்ல வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுக்கடங்காத காதலை சங்கிலியால் பிணைத்து வைத்து, மறுமுனையை ஒரு சுவற்றில் கட்டி வைக்க மறந்தேன்.

அது சங்கிலியை இழுத்துக் கொண்டே அலைகின்றது,
இப்போது சங்கிலியும் நடமாடுகிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக