சனி, 4 பிப்ரவரி, 2012

மெரீனா: படம் சொல்லும் பாடம்:


மெரீனா :- நல்ல ஒரு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம், எதிர்பார்ப்புகளுக்கு குறை வைக்கவில்லை. படம் முழுவதும் மெரினாவிலே நடப்பதாய் இருக்கவேண்டும் என்பதால், இயக்குனர் பல இடங்களில் கதையினை மேலோட்டமாய்ச் சொல்வதும், சில இடங்களில் வரும் சின்ன சின்ன flashback-களும் வைத்துள்ளார்.

ஒளிப்பதிவில் மிகவும் சிரத்தை எடுத்து, பல கோணங்களில் மெரினாவை காட்டியிருப்பது அருமை, ஒளிப்பதிவாளர் கிடைத்த ஒரே தளமான கடற்கரையில் மழை,வெயில் , அந்தி, இரவு என்று நம்மை மெரினாவை காதலிக்க வைத்துள்ளார். பாடல்கள் எதுவும் இன்னும் எனக்கு சரியாக மனதில் ஒட்டவில்லை.

பக்கடா மற்றும் அவன் நண்பர்கள் - அவர்களுக்குள் ஏற்ப்படும் சண்டை, கூட்டுத் தொழில் உடன்படிக்கை, வியாபரத் தந்திரம், விளையாட்டு, குறும்புகள் , கல்வி மீது கொண்ட ஆசை என்று பாசிடிவான விசயங்களில் படம் பயணித்ததர்க்காக மட்டுமே இயக்குனருக்கு ஒரு மலர் செண்டு தர வேண்டும். குதிரைக் காரர்கள், பிச்சைக்காரகள், மன நலம் குன்றியவர்கள் என்று சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட மனிதர்களிடையே இருக்கும் அன்பை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிவகார்த்திக்- ஓவியா காதல் காட்சி,அவன் நண்பனின் தத்துவங்கள், மெரீனா வியாபார்கள் கலாய்த்தல், காதல் காட்சியில் ஏற்ப்படும் திருப்பம் என்றும் சுவாரசியத்திற்கும், சிரிப்பு வீடுகளுக்கும் பஞ்சமில்லை. 

இன்று நாம் பார்க்கும் எத்தனையோ முதியவர்கள் பொது இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். "அவர்களுக்கு பின் உள்ள கதை எவ்வளவு கொடூரமாய் இருக்கும் ?? "என்று கற்பனை செய்ய முடியவில்லை... "குடும்பம் எனும் தத்துவம் எப்படியெல்லாம் இங்கே சீரழிகிறது "என்று யோசிக்க வைக்கிறது .தன் பெற்றோரை இழிநிலைக்கு ஆளாக்கும் எந்த கொடியவனும், அவனை விட கொடுமையான ஒரு மகனை வளர்ப்பான் என்பது மட்டும் நிச்சயம்.


படம் முதல் பாதியில் police தேடும் சிறுவனைப் பற்றியே பின்னப்பட்டு , அது எடுத்துச் செல்லும் lead  கதையும் , இடைவேளைக்கு பின் எங்கே போகிறது என்பதை நாம் யூகிப்பது கடினம். அதனால் ,கொஞ்சம் திரைக்கதையில் சறுக்கிய மாதிரி தோன்றினாலும்( ஒரே சீராக படம் பயணிப்பதாய் எனக்குத் தோன்றவில்லை) மெரினா மற்றுமொரு அழுத்தமான படைப்பு.


போஸ்ட்மன் கதாப்பாத்திரமும், பிச்சைக்கார தாத்தா கதாப் பாத்திரமும் படத்தின் பெரிய தூண்கள் என்று மறுக்க இயலாது , நாட்டியாமாடும் சிறுமி சில இடங்களில் மனதைத் தொடுகிறாள். பக்கடா வின் "உஸ்ஸு" எனச் சொல்லும் மேனரிசமும், தத்தா இறந்தவுடனும் , நண்பனின் பிரிவிலும் மிக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.


படம் சொல்லும் பாடம் 



பெற்றவர்களை அலட்சியப்படுத்தும் மகன்களுக்கு ஒரு பாடம், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் மனிதர்கள் மீதான நம் தவறான பார்வைக்கும் ஒரு பாடம்.
"எத்தனை பெரிய நல்ல படமாய் இருந்தாலும் ரீமேக்கிட அவசியம் இல்லை, நம் வாழ்வியலில் இன்னும் சொல்லப்படாத கதைகள், காண்பிக்கப் படாத தளங்கள் இன்னும் நிறைய உள்ளன என்று மற்ற படைப்பாளிகளுக்கும் ஒரு பாடம்... .......  


அங்காடித் தெரு போன்று மெரினாவும் பேசப் படும். 

1 கருத்து:

  1. இனிய வணக்கம்,
    நல்ல படம் என்பதை தங்களது எழுத்துக்களே சொல்கின்றன..வாய்ப்பு கிடைப்பின் கண்டிப்பாக பார்க்கிறேன்.நல்ல விமர்சனம்.நன்றி.

    பதிலளிநீக்கு