வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாட்டி என்பவள் பிரபஞ்சம்



நீ பூமியைச் சுற்றும் நிலா தானே ?
இங்கே உன் பூமியின் எண்ணிக்கை 
ஒன்றுக்கும் மேல் - அது 
உன் மகன்களின் எண்ணிக்கை.

நீ ஒரு சூரியன் தானே?
உன்னை மையம் கொண்டு தான்
உன் குடும்பமே சுற்றிக்
கொண்டிருக்கும் வரையறுக்கப்பட்ட
இடைவெளிகளில் .

நீ ஒரு வால் நட்சத்திரம் தானே ?
உன் விழுதலில் தான்
உயிர் தோன்றல்கள்
சாத்தியப் பட்டுள்ளன .

நீ ஒரு விண்மீன் தானே??
ஒரு நிலாப் பெண்ணின்
இல்லாமையில் மட்டும் ஊருக்குத்
தெரியும் உன் அருமை.

நீ ஒரு விடிவெள்ளி தானே!!
வாழ்க்கையின் ஒவ்வொரு
குழப்பத்திலும் என்
நம்பிக்கையின் திசை
உன்னை வைத்துத் தான்
தீர்மானிக்கப் படும் .

நீ ஒரு கிரகம் தானே!!
பாசம் என்ற ஒரே
நீள் வட்டப் பாதை
தானே உன்னுடையது??

2 கருத்துகள்:

  1. எனது பாட்டியின் ஞாபகத்தை தூண்டிவிட்டது தங்களது கவிதை..என்ன கருத்தான வரிகள்..மனதை தொட்டுவிட்டது..என் நன்றிகள்..
    சைக்கோ திரை விமர்சனம்

    பதிலளிநீக்கு