வியாழன், 9 பிப்ரவரி, 2012

காய்ச்சல் நிவாரணி
அனலடிக்கும் காய்ச்சலில்
ஊறிக் கொண்டிருக்கும்
என் உடலில், இன்றைய கனவில் 
நிச்சயத்திருக்கும் அவளோடுடனான
காதல் காட்சிகள் யாவும் 
நீர்த்துப் போய்விட்டன !!

இப்போதையத் தேவை,
நல்ல மருந்து மட்டுமே 
ஆக வேண்டினேன் ,

என் தாயின்  

வெதுவெதுப்பான கரங்களும்

ஒரு வெள்ளை நிற உப மாத்திரையும்

1 கருத்து:

 1. //ஆக வேண்டினேன் ,

  என் தாயின்

  வெதுவெதுப்பான கரங்களும்,

  ஒரு வெள்ளை நிற உப மாத்திரையும் //
  அந்த அன்புக்கரங்களின் மெதுவான வருடல் மட்டுமே போதும்...... காய்ச்சலாவது.....?

  பதிலளிநீக்கு