சனி, 19 மார்ச், 2016

அறம் வெல்லும் அஞ்சற்க

http://www.piraththiyaal.com/2016/03/blog-post_17.html

சர்ச்சைக்குரிய சாகாள் எனும் அகரமுதல்வனின் கதைக்குரிய இணைப்பு மேலே

இந்த செலக்டிவ் அம்னிஷியா கோதா ஒருபுறம் இருக்கட்டும்.. 

  • கவே மற்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிட்டு அகரமுதல்வன் எழுதியதாலேயே எதிர்ப்பவர்கள் மற்றொரு புறம் இருக்கட்டும்
  • இது தான்டா வாய்ப்பு என்று தாவிக் குதிச்சு ஒடி வந்திருக்கும் சிவப்பு, கறுப்பு, பச்சை, நீல சில்வண்டுகளின் ‘ஙொய்’சப்தங்களையும் விட்டுவிடலாம். 
  • பழிவாங்குதற்காக கவிதைகளை முன்வைத்து ஏற்கனவே சீண்டிவிட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட பருத்திவீரர்களையும் தவிர்த்து விடுவோம்.

புலம்பெயர்ந்து வாழும் அநீதியிழைக்கப்பட்ட வாழ்வில், ஏதோ அறியப்பட்ட அந்த இளைஞனை கண்டணம் என்று சப்பைக்கட்டு சொன்னாலும், தனிமைப்படுத்திய நண்பர்களை நினைத்து வருந்திதான் இப்பதிவினை இடுகிறேன்.

 தவிர இவர்களில் பெரும்பாலானோர் தம்மை இலக்கியப் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். அகரமுதல்வனின் சிறுகதையை  விமர்சிப்பதற்கான விஷயமாக எடுத்துக் கொண்ட இடம் தான் உண்மையில் கண்டனத்திற்குரியது.

  1.          . ஒரு பெண் புலியாக இருந்தவரைப் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடுதல் அல்லது உண்மையாக இருந்ததென நம்பப்படும் தகவலை வெளியிடுதல்.
  2.    சித்ரவதை முகாம்களில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் சித்ரவதைகளை இவர் சொல்லியிருக்கும் விதம்
  3.         ஆச்சரியமான விஷயமாக – இராணுவம் மீது அகரமுதல்வன் வைத்திருக்கும் அபாண்டக் குற்றச்சாட்டு
இப்படியான வகையில் ஏதோ ஒன்றை முன்வைத்து தான் அகரமுதல்வனுக்கு கண்டனங்கள் எழுகின்றன. மிகத் தந்திரமான முறையில் அகரமுதல்வனின் நண்பர்களும் கண்டனம் தெரிவிக்குமளவு ஒரு நெருக்கடியும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று உணர முடிகிறது.
*
இப்போது கேள்வியை மிகவும் பொதுப்படையாக வாசிப்பு, எழுத்து என இயங்கும் எல்லோர் முன்னும் வைக்கிறேன்: அகரமுதல்வன் எழுதியக் கதையில் வரும் பாத்திரம் உண்மையாக வாழ்ந்த ஒருவரின் சாயலுடையதாக இருப்பதால் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் கண்டனங்களை எழுப்புகின்றனர். இதற்கு உரிமையில்லை என்று இவர்கள் முன்வைக்கும் காரணங்களை மதிப்பீடு செய்வதற்கு முன் கருத்துச் சுதந்திரம் தடைபடுவது நெருடலாய் இருக்கிறதா? இல்லையா!!
                        *
இலக்கியத்தில், தன் படைப்புகள் மூலம் போரின் வலிகளைப் பேசும் சயந்தன் இராணுவத்தினரின் மீது கோபத்தைக் கிளறும் என வலிந்து நினைத்து எழுதப்பட்ட அக்கதை, எழுதியவர் மீதே மிகச் சினத்தையும், கோபத்தையும் உருவாக்கிவிட்டிருந்தது. அக்கதையில் வரும் சிவகாமிஎவராயும் இருக்கட்டும், ஆனால் பெண் போராளிகள் எனில் அவர்கள் நிச்சயமாகப் பாலியல் வன்புணர்விற்கு ட்பட்டேயிருப்பார்கள் என உறுதியாக நம்புகின்றஎழுதியவரின் குரூரமனநிலையை அதிர்ச்சியோடே எதிர்கொண்டேன்” இப்படிச் சொல்கிறார்.

(கருத்துச் சுதந்திரம் பற்றிய கேள்வியை இங்கே எழுப்ப வேண்டிய அவசியமில்லாதிருந்தாலும்)

1.   இராணுவத்தினரின் மீது கோபத்தைக் கிளறும் என வலிந்து நினைத்து
ஆஹா, போரினால் பாதிக்கப்பட்டவனும், சித்தரவதையை அனுபவித்தவனும், உறவுகளையும், ஊரையும் இழந்தவனும் செய்யக் கூடாத மாபாவம் அதற்கு காரணமாயிருந்த இராணுவத்தின் மீது இவ்வாறு கோபத்தைக் கிளறுவது. அல்ல?
2.   ஆனால் பெண் போராளிகள் எனில் அவர்கள் நிச்சயமாகப் பாலியல் வன்புணர்விற்கு ட்பட்டேயிருப்பார்கள் என உறுதியாக நம்புகின்ற” … -
என்னே தவறு, உலக வரலாற்றில் எந்த போருக்குப் பின்னும், வெற்றி கொண்ட இராணுவப் படை எவ்வாறு எதிரிநாட்டு குடிமக்களை கண்ணியமாக நடத்தியதோ அவ்வாறு தான் இலங்கை இராணுவமும் நடத்தியது என்று அகரமுதல்வன் சொல்லவேண்டுமென்று விரும்புகிறார். அல்ல?

இதில் பெருமையிலும் பெருமை… கருணாகரனின் அக்கறையுள்ள பதிவு தான்.
//சாகாள்என்ற கதையை அகரமுதல்வன் எழுதியதற்கான காரணம் என்ன? அவருடைய அரசியல் தெரிவே. அதுவே அவரை இப்படி எழுத வைத்துள்ளது. இப்படிச் சிந்திக்க வைத்துள்ளது. பெண்ணுடலை எப்படிப் படையினர் பார்ப்பார்கள், பயன்படுத்துவார்கள் என்ற அனுமானத்தை அவர் தன்னுடைய கற்பனையினால் வளர்த்தெடுத்திருக்கிறார். இந்த இடத்தில் அகரமுதல்வன் சித்தரிக்கின்ற படையினர் செய்கின்ற வேலையை விடக் கேவலான முறையில் செயற்பட்டிருக்கிறார். //

பெண்ணுடலை எப்படிப் படையினர் பார்ப்பார்கள், பயன்படுத்துவார்கள் என்ற அனுமானத்தை அவர் தன்னுடைய கற்பனையினால் வளர்த்தெடுத்திருக்கிறார்.

ஆக, அகரமுதல்வனின் அரசியல் தேர்வு தான் இராணுவத்தினர்களின் செயல்பாட்டைத் திரித்து கொச்சைப்படுத்தியதாக கருணாகரன் முன்வைக்கிறார். ஆக கருணாகரனின் அரசியல் தெரிவு எது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது

·         இதில் விபச்சார எழுத்து என்று ஒரு குரல்,

·         ஏற்கனவே கவிதை குறித்த உரையாடலில், வாய்க்கால் தகராறு ஒன்றை உருவாக்கிய விமர்சகர்/கவிஞர் தன் எச்சரிக்கையைப் பதிவு செய்கிறார்.

·       (தமிழ்நதியின் கண்டனப் பதிவில் கருத்தாக வந்த )  //  புலி எதிர்ப்பாளர்கள் நம்மை அவமானப்படுத்தியதைவிட இக்கதை நம் பெண்களை மிக குரூர வக்கிர மனநிலையில் அவமதிக்கிறது. அகர முதல்வனுக்கு என் வன்மையான கண்டனங்கள். அவர் இதற்கு மன்னிப்பு கேட்பது நல்லது.//  ஆமாம் இது அகரமுதல்வன் தன் கற்பனைத்திறனைக் கொண்டோ அல்லது உலகத் திரைப்படங்களைப் பார்த்தோ இப்படி சித்தரித்திருக்கிறான் அதனால் தானே அவனிடம் மன்னிப்பைக் கோருகிறோம். இதுவே, உண்மையென்றால் பெண்களை அவமதித்த இலங்கை இராணுவத்தை அல்லவா மன்னிப்புக் கேட்கச் சொல்லி பதிவு போட்டிருப்போம்.. ஆனால் தவறு இழைத்தது அகரமுதல்வனாயிற்றே!! என்று முழுமையாகச் சொல்லியிருக்கலாம் பதிப்பகத்தார்

(ஆனாலும் இவ்விடத்தில் ஆணாதிக்க சமூகம் தன் பங்குக்கு ஏதாவது சொல்லாதா? ஈழத்தின் போர்ச்சூழலிலிருந்து அகரனைப் போல் புலம்பெயர்ந்த எத்தனையோ ஆண்களின் குறிகளில் இரத்தம் கசிந்த செய்தியகளுக்காக ஆண் சமூகமே பொங்குங்கள்!!  ஏன், அகரனே நாளை ஆண் குறிகளில் சிங்கள இராணுவத்தினர்கள் செய்திராத சித்ரவதையைப் பற்றி ஒரு புனைவு எழுதக்கூடும். ஆண்களின் சார்பாகவும் கண்டனம் தெரிவியுங்கள் அதை அட்வான்ஸ் புக்கிங்காக வைத்துக் கொள்ளலாம்.)

·         இதில் மற்றொரு காழ்ப்புணர்வில் சிறந்த விமர்சனம் :  லிவின் எழுதியது (நேரடித் தாக்குதல்)
அகரமுதல்வனைத் தமிழகத்தின் எழுத்தாளர்கள் கண்டிக்காதது ஏனென்றால், அகரமுதல்வன் ஒரு கடைச்சரக்காகத் தென்படுகிறான் என்பது தான். //சயந்தனோ, சோபாசக்தியோ அவ்வாறுத் தெரிவதில்லை பதிப்பகத்தார் கண்களில் என்று சொல்கின்றாரா
//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்..// அறம் வெல்லும் அஞ்சற்க எனும் கவிதைத் தொகுப்பை வாசித்தவர் தானே நீங்கள் // உன் இரண்டாம் கவிதை தொகுப்பில் இருந்து அறம் வெல்லும் அஞ்சற்ககவிதை மொழியின் பாய்ச்சல் நான் சற்றும் எதிர்பாராத ஒன்று. உனக்கு நவீன கவிதை கைகூடுகிறது. உன்னுடைய முயற்சியும் அன்று விமர்சனங்களை நீ காது கொடுத்து கேட்டதுமே உன்னை இந்த இடத்திற்கு நகர்த்தியிருக்கிறது. // என்ன செய்ய இரண்டு நாக்கு இருப்பவர்கள் அடிக்கடி வாய் திறக்கக் கூடாது தான்.

//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்.. அவனுக்கும் நேர்மையான அரசியலைவிட அதை விற்கும் கடைச்சரக்காகவே அணுகுகிறான்..// புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று வந்தாலே பதிப்பிக்கத் தயாராகத்தான் இருப்பார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது , நானும் ஒத்துக்கொள்வேன். மற்றபடி புலிகள் மீது விமர்சனம் செய்தால் தான் இன்றைய சந்தை நிலவரப்படி நீங்கள் விற்கும் பண்டம் ஆவீர்கள் தெரியுமா.. 

அகரமுதல்வன் போல் இருந்தால் போனியாகாது//அவன் எழுதும் குப்பையையும் இங்கு பதிப்பிக்க தயாராக இருக்கிறார்கள்.. அவனுக்கும் நேர்மையான அரசியலைவிட அதை விற்கும் கடைச்சரக்காகவே அணுகுகிறான்..// புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று வந்தாலே பதிப்பிக்கத் தயாராகத்தான் இருப்பார்கள் என்ற கூற்றில் உண்மை இருக்கிறது , நானும் ஒத்துக்கொள்வேன். மற்றபடி புலிகள் மீது விமர்சனம் செய்தால் தான் இன்றைய சந்தை நிலவரப்படி நீங்கள் விற்கும் பண்டம் ஆவீர்கள் தெரியுமா.. அகரமுதல்வன் போல் இருந்தால் போனியாகாது

*


சமீபத்தில் யாழிடி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நதியா எனும் பெண் ஐரோப்பிய யூனியனில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கு எதிரான தன் உரையைப் பேசும் போது, பெண்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி பேசினார். ஒரு பெண்ணாக இருந்தும் சக பெண்களின் வாழ்வை அவமதித்த நதியாவுக்கு ஒரு கண்டனம் என்று போடவேண்டியிருக்கிறது போராளிகளே. அதற்கும் முன்னர், நெப்போலியன் காலத்திலிருந்து, மங்கோலிய மன்னர்களிலிருந்து, சிலுவைப் போர், உலகப்போர் என வரலாறு குறித்துவைத்துள்ள, வெற்றியடைந்ததும் போருக்குப் பின்பான இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் கூட பொருத்தமேயில்லாத அபாண்டமானக் குற்றச்சாட்டை அகரமுதல்வன் சொல்லிவிட்டான் என்பதால் அவனுக்கு எதிராகக் கண்டனத்தை எழுப்புங்கள்



இந்தக் கதைகளில் சொன்னவற்றைத் தான் உலகம் முழுக்க சேனல் 4 இதை வைத்து தான் இன்ஸ்டால்மெண்டில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சீமான், இராமதாஸ், வைகோ முதற்கொண்டு திருமாவளவன் வரை எல்லோரும் ஒரு காலத்தில் இதையும் சொல்லி தான் ஓட்டு கேட்டனர்.

அதை ஒற்றைச் சிறுகதையாகப் பார்த்தால், சிவகாமியைத் தமிழினி என்று மட்டுந்தான் பார்க்கச் சொல்லும். முடிவடைந்துவிட்ட ஒரு போருக்குப் பின்பான சூழலின் பயங்கரத்தின் உச்சபட்சக் குறியீடு தான் சிவகாமி.

அகரன் இந்தக் கதையை எப்போது எழுதினான் என்று அறிந்திலேன், அது எனக்குத் தேவையானதும் அல்ல.

ஆனால், தமிழினி எனும் இறந்துபட்ட ஒரு போராளி. ஒரு பக்கம் சுயசரிதை எனும் கட்டுரைகளால் பிரச்சாரத்திற்குப் பயன்படுகிறாள் எனில், மற்றொரு பக்கம் ஏன் புனைவாக எழுதப்பட்டு பிரச்சாரப்படுத்தக் கூடாது.

வேடிக்கை என்னவென்றால் சர்ச்சைகள், அபுனைவுகளை புனைவு என்று சந்தேகிக்க வைப்பதும், புனைவுகளை உண்மை என்று நம்பவைப்பதுமாக நடந்தேறிட. இறுதியில் நிற்பது எது என்பது காலம் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம்.


இது அகரமுதல்வனுக்கு எதிரான கருத்துச் சுதந்திர உரிமைக்கான பதிவு என்று மட்டும் முடித்துவிடவில்லை.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு "தந்தையே ஏன் எம்மை கைவிட்டீர்" எனப் புலம்புவதைப் போல "ஏன் அண்ணா எங்களை இப்படி விட்டிட்டுப் போனவர்?" என்றொரு பெண் போராளி கேட்கிறாள். இக்கதை குறித்து பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ஃபேஸ்புக் விமர்சனம்

எந்த ஒரு பெரிய நிறுவனத்தின் கடின உழைப்பில், சரியானத் திட்டமிடலில் உருவானபொய் வரலாற்று நூல் உருவாக்கும் பிம்பத்தையும், ஒரு கதை மிஞ்சிப் போனால், நான்கே நான்கு பக்கங்கள் தான். ஆனால் அந்த பிம்பத்தைத் தகர்த்தெறிய முடியும் என்றால் ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது தான் “உண்மைத் தன்மை”

ஏனென்றால்                         
“அறம் வெல்லும் அஞ்சற்க”





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக