தேசிய கீதத்திற்கு
மரியாதை செலுத்தாதது
குற்றமில்லை,
எந்த மதத்தின்
பூஜாதிஸ்தோத்திரதொழுகை
சப்தங்களுங்கும்,
புனிதமாக்கப் பட்ட
மொழியை, இனத்தைப்
போற்றுமுணர்ச்சிக்
கவிகளுக்கு
நீங்கள் கோஷம்
போடுவது
அவசியமில்லை…
எந்தப் புனிதங்களும்
இல்லா உலகில்,
யாரையும் மதிக்கத்
தேவையில்லை.
ஆனால் அந்த
வார்டு கவுன்சிலருக்கு
நீங்கள்
மரியாதை செலுத்தாவிடின்
இன்றிரவுக்குள்
கொல்லப்படலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக