சனி, 24 மே, 2014

அன்பு சிவன் எப்படிப் பறந்தான்??

அன்பு உனக்கு நான் இரங்கற்பா பாட முடியாது ஏனென்றால் எனக்குத் தெரியாது.



அன்புக்கு வேறு என்ன தெரியும்?? அன்பைத் தவிர யாராவது அன்பானவர்களைப் பற்றி பேசினேன் என்று தான் அநேக நாட்களில் இப்படி உறையாடல் துவங்கும்.

அய்யப்ப மாதவனிடம் அந்த நாவலை முடிங்கன்னு சொன்னேன், வேல்ஸ் என் கவிதைக்கு லைக் போட்ருக்கார் பார்த்திங்களா, நாளைக்கு ஜிந்தாவா பார்க்க அங்க வர்றேன் கரிகாலன், அமுதா தமிழ் கிட்ட சேட் பண்ணா எவ்ளோ உற்சாகம் வரும் தெரியுமா - such an energetic girl she is, கணேசகுமாரன் கிட்ட பேசினேன்,ரமேஷ் ரக்சன்னு புதுசா ஒருத்தன் கவிதைய வாசிச்சேன் அவன் டைம்லைன்ல பாருங்க, வாசு தான் என் புத்தகம் போடனும்னு அக்கறையா கேக்குற மனுசன் நீங்களும் இருக்கிங்களே, பாலசுப்ரமணியன் பொன்ராஜை ஏர்போர்ட்ல பார்த்தேன் - ரொம்ப ஸ்மார்டா இருக்காரு அந்த மனுஷன், மஹேந்திரன் என்ன அப்பா மாதிரின்னு சொல்லுவான், மழைக்காதலன் என் மகன் மாதிரி தான் அவன் என் மேல கோபப்பட்டால் கூட அதைப் பத்தி நான் கவலப்படல - ஆனா காலம் கொஞ்ச காலம் அவனோட அன்பு பாராட்டாம இருக்கச் சொல்லுச்சு, அ.மார்க்ஸ் - தமிழச்சி தங்கபாண்டியன் ரெண்டு பேர்களோட பேச்சைக் கேட்பதற்கு மட்டும் தான் ஒரு கணம் கூட நான் யோசித்துப் பார்த்தது இல்லை, MP உதயசூரியன் மாதிரியான ஜெண்டில் மேநை பார்ப்பது கஷ்டம், ராமச்சந்திரன் அவரு கொழந்த மாதிரி, கவிதைக்காரன் டைரி அதெல்லாம் வாசிச்சுட்டா கவுத எழுத முடியுங்கற அளவுக்கு நான் வொர்த் இல்லப்பா, இந்தக் கண்ணதாசன் பையன் எழுதவே மாட்டானா? ஈரோடு கதிர பார்த்துவிட்டுத் தான் வந்தேன், , பாலா ஒரு கொழந்தப்பய, சுந்தரபாண்டியனும், தினகரனமும் தான் என் வாழ்வின் பெரும் சம்பாத்யங்கள், அடுத்த உறவுகள் கூட்டத்திற்கு உங்களைக் கூட்டிட்டு போறேன், யவனிகா எங்கையோ இருக்காரு, ஆனா எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி, இந்த அமிர்தம் சூர்யாக்குன்னே ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும், புகழேந்தியோட பேச்சக் கேட்டேன் நைட்டெல்லாம் தூங்கமுடியல, கரிகாலன் - வா.ம ஒரு இண்ட்ரெஸ்டிங் கேரக்டர்..



கரிகாலன் நம்ம சீக்கிரமா பப்ளிஷிங் ஆரம்பிக்கனும், தனியிதழ் ஆரம்பிக்கனும் கண்மணி குணசேகரன், பெருமாள் முருகனல்லாம் கூப்பிடனும் - எனக்குத் தான் சில பேரோட பிணக்கு வந்துவிட்டது நீங்க அவுங்களுக்காக தாராளமாக கூட்டங்கள் நடத்தலாம் நான் அதுல interfere ஆகமாட்டேன்.

எல்லோருக்கும் ஏதாச்சும் செய்யனும் போல இருந்துச்சு அதான் இந்த பேக்காவது ஆளுக்கு ஒன்னு கொடுக்கலாமே என்று இருந்தேன்..

நாம எல்லாருமே ஒரு நாள் வெளியில் எங்காவது போகனும்....

எனக்கும் சாத்தப்பனுக்கும் ஆயிரம் இருக்கும் அத நாங்களே பார்த்துப்போம்.

கரிகாலன் கடைசி வரைக்கும் என் கவித புத்தகத்த வரவிட மாட்டிங்க போலிருக்கே என்ற பிராண்டட் சிரிப்பு சத்தம்

இறுதியாக ஒன்று ஞாபகம் வந்தது

 “கரிகாலன் நான் எடைய கொறைச்சுட்டேன் அடுத்தது நீங்கதான்.. ”

******

உச்சியைத் தொட்டிராத சூரியனின் வெப்பம் நினைவில் இருந்தது. கிழக்கில் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு தூர தேசத்துப் பறவையின் குரல், அந்த மலைப் பிரதேசம் முழுவதும் எதிரொலித்தன. எப்போதும் கூட்டமாகவே பறக்கின்ற இயல்பை உடைய பறவை அரிதாகத் தான் தனியாகப் பறக்கும், தன் கூட்டாளிகளோடு வரும் பொழுது பாதையைத் தொலைத்து விட்டதோ!! மனிதர்களின் மனநிலையா பறவைகளுக்கு, பின்னர் அவை எப்படி பாதையை தொலைக்கும்? அது புதிய பாதையிலோ வேறு பாதையிலோ போய்க் கொண்டிருக்கிறது. குரல் ஒன்றினை வைத்துக் கொண்டே தான் அதனைப் பறவை என்று நினைத்துக் கொண்டேன், அருகில் வந்தால் தான் அது பறவை என்று உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும். மிக வேகமாகத் தான் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது அது. ஆனால் அது தலைகீழாகத் தெரிந்தது. இல்லை நான் தலைகீழாக மலை முகட்டில் இருக்கின்றேன், அத்தனை வேகமாக வந்துகொண்டிருக்கும் பறவை தான் அத்தனை நிதானமாக ஒவ்வொரு அங்குலமாக நகர்வதையும் என்னால் உள்வாங்கிக் கொண்டிருந்தது, அது எனக்கான பறவையல்ல என்று எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பறவை என்ற கணக்கு பற்றி இன்னும் சில விநாடிகள் கடக்கும் வரை தெரியவில்லை தான். அந்த வெயிலில் மலை முழுதும் படர்ந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ குளிரான பனித்திரை மூடிக்கொண்டிருந்தது, எனக்குத் தெரியவே தெரியாது பனித்திரைக்கு இப்படி ஒரு சுகந்தம் இருக்குதென!! என்ன நறுமணம். அது இப்பொழுது நெருங்கிவிட்டது, அது பறவையே தான், என்ன விநோதமான ஓசை அதனுடையது..

ஆம் நேராக பறந்துக் கொண்டிருக்கும் பறவை ஏன் அந்தரத்திலேயே நிற்கிறது அதுவும் எனக்கு நேராய்!!

அந்த விநாடி வந்து விட்டது - பறவையானது என் முகத்தை பார்த்ததும், அது என்னை நோக்கு வர ஆரம்பித்தது அது எனக்கான பறவை..

அன்பு சிவனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்

- ஜீவ கரிகாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக