புதிதாய் வாங்கிய மின்விசிறியின்
டெசிபல்கள்
செவிடாக்கிய பின்னும்
மிச்சமிருக்கிறது
அவள்
சொல்லாத வார்த்தையின் ஒலி
தற்கொலைக் கருவிகளான
எழுதுபொருட்களைக்
கொண்டு
கொண்டை ஊசிப் பயணம்
ஆறுதல் கிடைக்காத
வெறுமையில்
சுயவதை மட்டுமே
தீர்வாக இருக்கிறது.
கவிதைகளின் வழியெ
இறந்து பார்த்தபின்
பிழைகள் வழியே ஜனனம்
நேரிடுகிறது.
நீண்டு தனித்த
மலைப்பாதையில்
என்னைத் தொலைக்க
நினைக்கும் நேரம்
கைகளுக்கு வலிப்பு..
நிர ந்தரமா கட்டும்
-ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக