என் வலைப்பூவிற்கு அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் என் வணக்கங்கள் மற்றும் தமிழர் திருநாள், பொங்கல் வாழ்த்துகள்.
சில புத்தகங்களை நான் recommend செய்கிறேன்.. கவிதைகளில் என் வாசிப்பு பற்றி அவ்வளவு தூரம் நம்பிக்கை இல்லாததால், முதல் பதிவாக சில சிறுகதைத் தொகுப்புகளை முன் வைக்கிறேன்
1. தானாய் நிரம்பும் கிணற்றடி: - அய்யப்ப மாதவன்
ஒரு கதாப்பாத்திரத்திற்கு கூட பெயர் இல்லை, நீங்கள் தான் வைத்துக் கொள்ள வேண்டும். அமானுஷ்யமாக ஆரம்பித்து, பல தளங்களில் உளவியல் பார்வையோடு அடுத்தடுத்து நகரும் கதைகளில் நம் வாசிப்பு புது பயணம் கொள்கிறது. ஒரு கவிஞனின் மனநிலையில் சில கதைகள் நகர்கிறது. நட்பு, இல்லறம், காதல், பிரிவு என்று எல்லாமே வார்த்தைகளால் காட்சிப் படுத்தப்பட்டவையே...
வந்து மூன்று வருடங்கள் ஆகியும் கவனம் கொள்ளப் பெறாத சிறுகதைத் தொகுப்பு.
இந்த சுட்டியைப் பாருங்கள்:-
http://kalidasanj.blogspot.in/2011/10/1.html
2.பெருந்திணைக்காரண் - கணேச குமாரன்
கும்கியில் மக்களைக் கொல்லும் கொடூரனாக கொம்பனைப் பார்க்கும் பொழுது இந்த தொகுப்பு கண் முன் வந்து சென்றது
இந்த புத்தகம், சென்ற வருடம் சிறுகதைக்கென தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு வாசகனாக அத்தனை விருதுகளின் நம்பகத்தன்மை மீதும் இழந்திருக்க காரணமாக இருக்கிறது, இனி விருதுகள் தன். ஒரு கதை போல் இன்னொரு கதை இருக்காது, ஆனால் பெரும்பாலானக் கதைகளில் இதயத்தில் கத்தி சொருகும் அபாயம் இருக்கிறது. ஏன் இப்படி எழுதியிருக்கிறார் என்று முகம் சுழித்தால் அது தான் வெற்றி. இப்படி முகம் சுழிக்க வைக்கும், அதிர்ச்சியுற வைக்கும் சமூகத்தில் தான் நாம் நம் பொழுதை நல்ல படியாக தூங்கிக் கழிக்கிறோம். ஆனால் நமது படுக்கை நமக்கானது அல்ல, Music chair விளையாட்டு போல் சிலர் தூக்கத்தை தள்ளி விட்டு தான் நாமும் அமர்ந்து கொள்கிறோம்.
இந்த தொகுப்பை வாசித்து முடிக்கும் போது தெரியும் கொம்பன் உண்மையில் யார் என்று?
இந்த சுட்டியைப் பாருங்கள் :-
http://kalidasanj.blogspot.in/2012/05/blog-post_04.html
- ஜீவ.கரிகாலன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக