திங்கள், 31 அக்டோபர், 2011

கூடங்குளம் அணுமின் திட்டம்




இந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

கடலோர மற்றும் நதிநீர் பாதுகாப்பு இயக்கம் கடலோர மாநிலங்கள் இணைந்து 1989 களில் மிக பெரிய போராட்டம் நடத்தினர்.

இப்போதைய மக்களின் போராட்டம் ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே அதிகரித்துள்ளது.ஓரிரு மாத ஆலோசனைகளுக்கு பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டது.இத்தனை வருடங்கள் இல்லாத அளவு போராட்டம் நடைபெற வளர்ந்துவிட்ட மீடியாவும் காரணம்.

அணு உலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூட வைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

ஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது

சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணு உலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர்.

பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக்காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத நிலை உள்ளது.

அணு உலைக் கம்பெனியான அரெவா திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்து விட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாதகாலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973லிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை நாளொன்றுக்கு 22
கோடி யூனிட்....
தமிழ்நாட்டு இயற்கை வளமான நிலக்கரியைக் கொண்டு தமிழர்களின் உழைப்பால் தயாரிக்கப்படும்
நெய்வேலி மின்சாரத்திலிருந்து , தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் மறுத்த கர்நாடகத்திற்கு
இந்திய அரசால் நாள் தோறும் சுமார் 11
கோடி யுனிட்களையும்
முல்லைப் பெரியாற்று அணை நீரை மறுக்கும் கேரளத்திற்கு சுமார் 9
கோடி யுனிட்களையும்
பாலாற்றைத் தடுக்கும் ஆந்திராவுக்கு சுமார் 9
கோடி யுனிட்களையும் அள்ளித் தந்துவிட்டு ( யார் வளத்தை யார், யாருக்கு பங்குபோடுவது ? )
தமிழனுக்கு மட்டும் ( வேறெந்த மாநிலமும் ஒத்துக் கொள்ளாத ) உயிர் கொல்லும் அணு உலைகள் .....
இதற்குப் பெயர்தான் " இந்தியம் " என்றால் அதை எதிர்ப்பதே நம் கடமை...

நான் திருச்சியிலும்,தேனியிலும் பாதுகாப்பாக இருக்கிறேன். கூடங்குளத்திலும், தூத்துக்குடியிலும் இருப்பவன் செத்தால் எனக்கென்ன?. அல்லது அவங்களுக்கு எத்தகைய கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் எனக்கென்ன? என்ற உயர்ந்த மனோபாவமே இதற்கு காரணம் ஆனால், இதுவரை வெளிவந்த தவகல்களின் படி கூடங்குளம் அணுஉலைகளின் அழிவு எல்லை 250 கிலோமீட்டர் வரை நீள்கிறது. 




அணு கதிர்கள் ஒன்றும் பஸ் பிடித்து தூத்துக்குடி வழியாக மதுரைக்கு வருவதில்லை. எனவே அன்பு நெஞ்சங்கள், பறவை பார்வையில், விமான வழி தட பார்வையில், தங்கள் வீடு இருப்பிடங்களை பார்த்து கொள்ளவும் கண்ணை வித்து சித்திரம் வாங்கலாமா? பல கோடி மக்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி விட்டு மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதா? இவ்வளவு செலவு செய்து விட்டு மூட முடியுமா என்பது அறிவுடைய சான்றோர்களின் அடுத்த வாதம். 500 ரூபாய் கொடுத்து பால்டாயர் வாங்கி விட்டோம் என்பதற்காக அதை குடித்து விடலாமா? 




கல்கத்தா அருகே ஹால்தியா என்னும் இடத்தில இதே போன்ற நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பின்னர்,HFC என்ற மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்ப்புகளால் கை விடப்பட்டது என்பது எத்தனை தோழர்களுக்கு தெரியும். இது வெறும் உர தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. 1989 -ம் ஆண்டு கூடங்குளத்தில் நிலம் கையகப்படுதபட்டது. அப்போது நடந்த போராட்டங்களில் இரண்டு பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். நிறைய ஊர்வலங்கள், பாத யாத்திரைகள் நாகர்கோயிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. இது போன்ற வரலாற்று நிகழ்வுகள், நிறைய பேர் ஏதோ இன்று தான் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று பிதத்துகின்றனர். 




காரணம், எவனோ செத்தால் நமக்கென்ன என்ற எண்ணமும், ரஷ்ய மலமும் அல்வாவை போல சுவையானது என்ற தோழர்களின் மனோ பாவமும் தான். ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்களின் தரமும், Tuplov பயணிகள் விமானங்களின் தரமும் உலகறிந்த ஒன்று. மிக்-21 போர் விமானத்தை பறக்கும் சவ பெட்டிகள் என்றே வட இந்திய பத்திரிகைகள் எழுதுகின்றன எண்ணி துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அணு மின் நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகள்
பூவுலகின் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் தெரிந்த சில விடயங்கள்.




* அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மட்டுமல்ல அது இயங்கினாலே ஏற்படும் கதிர் வீச்சுக்களின் விளைவு மோசமாக இருக்கும். கல்பாக்கத்திலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நிறைய பேருக்கு தைராயிட் புற்று நோய் , ஆறு விரல் அபாயம் , எலும்பு மஜ்ஜை நோய் முதலியன தாக்கப்பட்டு இறந்து இருக்கின்றனர். அரசு தரப்பில் நஷ்ட ஈடு தருவதே இல்லையாம்


* கல்பாக்கம் வடிவமைக்கப்பட்டது ZONE 2 ( நில நடுக்கம் ஆறு ரிக்டர்க்கு கீழ்) அடிப்படையில் . பருவ மாற்றங்கள் காரணமாக அது இப்போது ZONE 4 ( 8 ரிக்டர் வரை ) ஆனா போதும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .


* கல்பாக்கம் கடல் அரிப்பே ஆகாத பகுதி என்று சொல்கிறார்களாம். ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 55 Cm வரை கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறதாம் .


* மேலும் கல்பாக்கத்திற்கு தென்கிழக்கே 180 கி மீ மற்றும் பாண்டிக்கு 100 கி மீ தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை உள்ளதாம். கிட்டத்தட்ட 6 - 8 கி மீ கீழே உள்ள லாவாக் குழம்புகள் மெல்ல மெல்ல எழும்பி வருகிறதாம்.




* 3 கி கிராம் யுரேனியத்தை குளிர்விக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீர் மற்றும் 72000 லிட்டர் கடல் நீர் தேவைப்படுகிறதாம் . இதனால் கல்பாக்கத்திற்கு பாலாறில் இருந்தும் கூடங்குளத்திற்கு பேச்சிப் பாறை யிலிருந்தும் நீர் எடுத்து உபயோகிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைவதோடு தரமும் தாழ்ந்து போகிறது.


* செர்னோபிலில் விபத்து ஏற்பட்ட போது ஐந்தரை லட்சம் வீரர்கள் கதிர்வீச்சைத் தடுக்க போராடினர். இதில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். நிறைய பேர் பின்னாளில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டனர். கதிர் வீச்சின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருபது நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன ( CONTAMINATED ) . எனவே கதிர் வீசினால் கூடங்குளம் மட்டுமல்ல நம் தென் மாநிலங்களுக்கே பெரும் அபாயம் உள்ளது.


நாம் இதை எதிர்த்து போராடா விட்டால் நாம் மட்டுமின்றி நம் பிள்ளைகளும் மற்றும் பின் வரும் சந்ததியினரும் பெரும் பாதிப்பு உள்ளாவர்கள் என்பது உண்மை. சினிமா, அரசியல் போன்றவற்றை ஊறுகாயாக பயன்படுத்துவோம். இந்த பிரச்னையை முழு வீச்சுடன் அதிக வீரியத்தோடு எதிர்ப்பது நமது கடமை. உயிரோடு இருந்தால்தான் ஊழலைக் கூட எதிர்த்துப் போராட முடியும் நண்பர்களே.


இந்தியாவுக்கு அணுவுலைகள் மின்சாரம் உற்பத்திக்காக தேவை என்பதைக் காட்டிலும், அணு ஆயுதங்கள்   உற்பத்தி செய்ய தேவை என்பதே நிஜம், நாட்டின் நலன் என்ற பெயரில் சில கிராமங்களின் ( அதுவும் நம்மை போன்ற இளிச்சவாயங்களின் ஊர்களில்) அழிவை இந்த அரசாங்கம் பொருட்படுத்தாது. அவதார் படம் போல வியாபாரம் செய்ய கூடங்குளம் தேவை, மக்கள் ஒழிந்தால் ஒழியட்டும் .... மாற்று மின்சாரம் எனும் வெறும் விளக்கங்கள் பத்தவே பத்தாது, உலக அரசியல் அல்லவா இது...  



கீழே சில இணைப்புகள் கொடுத்துள்ளேன். மேலும் பல விவரங்களுக்கு


https://plus.google.com/117613176275291517362/posts/bzf73BZGiAB


http://poovulagu.blogspot.com/2011/05/blog-post.html


http://nuradiation.blogspot.com/2011/04/milk-of-japan-mother-affected-by.html




http://internationalnews.over-blog.com/article-kazakhstan-s-radioactive-legacy-graphic-pictures--39193788.html

http://josephinetalks.blogspot.com/
 —







நன்றி திரு. சரவணக் குமார் & அருள்மணி சாமுவேல் மற்றும் இதர FACEBOOK  நண்பர்கள் 






தங்கள் கருத்துக்களை பதியவும்.




கரிகாலன்  



-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக