வெள்ளி அன்று ரிலீசு ஆன "வாடா" என்கிற காவியக் கருமாந்திரத்தை பார்த்த என் பாவத்தை கழுவ என் தம்பி,தங்கையுடன் சென்று எந்திரன் படத்தினை இரண்டாம் முறை பார்க்கச் சென்றேன்.
எந்திரனை பற்றி கேவலமாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், சாரு என்கிற திமிர் பிடித்த யானை( எழுத்துலகில் தன்னை அப்படி காட்டிகொள்ளும் ஆள்) எழுதிய விமர்சனம் என்னை ரொம்ப கடுப்பேற்றியது. சினிமாவை சினிமாவாக மட்டும் பார்ப்பவர்கள் தான் இனி விமர்சனம் எழுதவேண்டும் என்று சட்டம் வைத்தால் பரவாயில்லை. சுஜாதா மீதிருந்த பொறாமையின் காரணமாக, இறந்து போன ஒரு legend என்றும் பாறாமல் கேவலமாக எழுதி(டுபாகூர் எழுத்தாளர் என வர்ணித்துள்ளார் *****) என் கடுப்பை ஏற்றினார். எங்களை போன்ற வெகுஜனங்களை வாசிக்க வைக்கும் பழக்கமே அந்த மனிதரின் படைப்புகளில் தான் என்பது இந்த அற்ப இலக்கிய வியாதிகளுக்கு ஏன் புரியவில்லை??இவரின் படைப்பான zero degree எனும் நாவலை வீட்டுக்கு வாங்கி வந்து சில பக்கங்களை படிப்பதற்குள் ஏதோ ஒரு 3-ம் ரக புத்தகம் படிப்பது போல் இருந்தது.
இலக்கியமாக ஒரு சினிமாவை எடுத்தாள் ஓட வைப்பது யார்??
கமல் ஹாசனின் ரசிகனான நான் ரசித்த ரஜினி படங்களில் நம்பர் 1 இது.
படம் அழகாக செதுக்கப் பட்ட ஒரு technical சிற்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக