புதன், 27 அக்டோபர், 2010

ஆக்டோபஸ் பால் மறைந்தார் (ரொம்ப முக்கியம் )

சுட்டவும் :
தினமலரின் விசேஷ செய்திகளில் இன்று :(கிட்ட தட்ட எல்லாப் பத்திரிக்கையிலும் பக்கம் நிரப்பும் வேலையில் இன்றைய சிறப்பு பங்கு ஆக்டோபஸ் பால்- அவர்களுக்கு )

இன்றைய மீடியாவின் கவர் ஸ்டோரிகள் மிகவும் மடத்தனமானவை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டு

ஆக்டோபஸ் பால் மறைந்தார் 


எப்பா உங்க கொடுமை தாங்க முடியல டா .... கால்பந்து விளையாட தகுதியே இல்லாத நாட்டில்( கிரிக்கெட்டை தொழும் பூமியில்) , ஆருடம் சொல்லும் ஜீவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரிக்கைகளுக்குத் தெரிந்த ஒரு சின்ன பட்டியல் தருகிறேன். RIP சொல்ல கீழ் கண்ட காரணங்களை பத்திரிக்கை பயன்படுத்தியதா?

1 .ஈழத்துல தினம் தினம் செத்துக்கிட்டு இருக்காங்க நம் தமிழர்கள் , 
2 .காஷ்மீர் முஸ்லிம்  சாகுறது மீடியால கூட வருவது கிடையாது ... 
3 .நம்ம நாட்டுல இன்னும் யானை வேட்டை நடக்குது ,புலி, சிட்டுக் குருவி,தேசிய பறவை மயில் என எல்லாம் அதன் இனத்தின் கடைசி சாட்சிகளாய் இந்த உலகத்தில் வாழ்கிறது  , 
4.நம்ம கடல் எல்லையில் கொரியன் மீனவர்கள் சுறா மீன்களின் 50% அழித்துவிட்டனர் (இந்து மஹா சமுத்திரம் சுறா மீன்களின் சொத்து, மீனவர்களில் கன்னியாகுமரி மீனவர்கள் தான் மிகவும் hi -tech. நமது அரசு கொரியன் மீனவர்களுக்கு நம் கடற் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி குடுக்க, அவர்கள் சுறா வம்சத்தை சூறையாடிவிட்டுவிட்டார்கள்)

ஹ்ம்ம்  நாம் உப்பு போட்டு உணவுண்ணும் நடுத்தர மனிதர்கள் தானே,ஆதலால் ஆக்டோபஸ்க்கு சொல்லலாம்  ரிப்.இல்லையேல் நமீதாவை கடத்திய செய்தியையும் எல்லாப் பத்திரிக்கைகளிலும் படிக்கலாம்.. நான் லிங்க் கொடுக்க மாட்டேன்.
-- 

கரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக