வியாழன், 7 அக்டோபர், 2010

பூம், பூம் , பூம் !!!!! ரோபோ டா

1.http://pitchaipathiram.blogspot.com/
2.http://www.athishaonline.com/2010/10/blog-post.html
3.http://thenaali.com/inner.php?id=281
4.http://idlyvadai.blogspot.com/2010/10/blog-post_5154.html
5.http://idlyvadai.blogspot.com/2010/10/fir.html
சும்மா மேற்கண்ட பட்டியல் ஒரு sample தான்.எந்திரன் பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட வெவேறு விமரிசனங்கள் வந்துவிட்டன.நம்மளும் 350 /- கொடுத்து பார்த்தோமே ! அதனால் அந்த உரிமையோடு ஆரம்பிக்கிறேன்.

 Dot 1. படம் வெறும் 25 ரூபாயில் DVD -ல பார்க்கலாம் ,இல்லன்னா நெட்ல டவுன்லோட் பண்ணலாம்கிற ஐடியா இருக்கலாம் .ஆனால் வீட்டில் ஜெடிக்ஸ் பார்பதற்கு சமானம் .காசு அதிகம் கொடுக்க மனம் வாரதவர்கள் கொஞ்சநாள் (அதிகபட்சம் 10௦ நாளில் குறையும்) கழித்து பார்க்கலாம் .
Dot 2.அரசியல், சன் குடும்பத்தின் அராஜகம் , ஆங்கிலப் படத் தழுவல், ஆளுங்கட்சியின் சினிமா,தேவையில்லாத செலவு இது ஒரு சினிமா ஏகதிபத்தியம்,கலாச்சாரத்திற்கு எதிரானது, லாஜிக் இல்லாதது என்று எவ்வளவு பேர் முனுமுனுத்தாலும், ஒரே ஒரு வார்த்தை அவ்வளவு குறைகளையும் ஈடு கட்டும் ர ஜி னி.
.

எந்திரன்  1.0௦

சிட்டி எனும் ரோபவை நம் ஹீரோ உருவாக்குதல்- ஐஷுவிடம் கொஞ்சுதல் -சிட்டி சென்னையில் வலம் வருதல்- சேட்டைகள்-பாட்டுகள் என ஆரம்பித்து தான் சிட்டிக்கு அங்கீகாரம் கிடைக்காமல் செய்யும் வில்லனின் செயல்-அதனால் நம் ஹீரோ சிட்டி எனும் இயந்திரம் மனிதனுக்கு ஈடான உணர்வுள்ள என்திரனாக மாற்றுகிறார் .இடை வேளை.

dot 4 .பொதுவாக இப்படிப் பட்ட படங்களில் ஹீரோவின் என்ட்ரி எப்படி இருக்கனும்,பூசணிக்காயை தலையில் ஒடிச்சு, குதிரை வண்டியில் தாவி ஏறி, ஒரு காலால் ரவுடியை உதைத்துக் கொண்டே முகத்தை காமெராவுக்கு காண்பிக்கும் நம்ம ஹீரோவின் என்ட்ரி சாதரணமா ரோபவை உருவாகும் விஞ்ஞானியா வருகிறார்.(அதுக்குத் தான் BOX OFFICE COLLECTION ல செம opening -ஆம்)

dot 5. ஐஷு, அடடா ....இந்தம்மாளுக்கு அப்படி என்னதான் வரம் கிடைத்ததோ, அப்படியோரு படைப்பு. அந்த அழகுக்கு மசிமும் stunning costume எல்லாமே ஒரே படத்துல கொடுத்திருக்கிறார்கள்.அம்மணிக்கு படம் முழுதும் வரும்
கெட்டி ரோல்.மத்த எல்லாருமே (வில்லன் உட்பட )எல்லாரும் சும்மா வந்து போகும் ரோல் தான்,படத்துக்கு ஒட்டாத ரெண்டு பீசு சந்தானமும்,கருணாசும் .ஏனெனில் சர்வமும் ரஜினி மயம்.ரஜினி fansக்கு செம விருந்து தான்.

dot  5 . சிட்டி செய்யும் லீலைகள் நமக்கு நேரம் போவதை மறக்கடிக்க செய்யும். காந்த சக்தியை உபயோகப்படுத்தி சவுண்ட் சிஸ்டத்தினை ஆப் செய்வது,ரௌடிகல்ன் ஆயதங்களை கவர்வது போன்றவை மிகவும் ரசிக்கும்படியான காட்சிகள்.அதிலும் ஒரு பிரசவம் பார்க்கும் காட்சி இருக்கே top .ஐசுக்கு பிட் அடிக்க உதவுவது, முடி திருத்தும் கடையில் ,புத்தகம் படிப்பது, ரோபோவை அறிமுகம் செய்யும் போது ரஜினியை கடவுள் என்று சொல்லும் போது.ரஜினியின் நடிப்பு .............................

dot 6 .எந்திரனை அங்கீகரிக்காமல் செய்ய எந்திரனை குழப்பும் வில்லன் அருமையான வரவு தான்,ஆனால் ரஜினிக்கு முன்னாடி யாருமே நிக்கவில்லை.

எந்திரன் 2 .0

எந்திரனை அங்கீகரிக்காமல் வில்லன் தடை செய்ய,மறுபடியும் ஒரு மாதக் கெடு கேட்டு.உணர்சிகளை புரியவைக்கிறார் வசீகிரன்(ஹீரோ ரஜினி).ரோபோவுக்கு உணர்ச்சி வரும் முதல் காட்சியே நம்மை கிட்ட வைக்கிறது. பிரசவம் பார்த்த ரோபக்கு ஐசு முத்தம் கொடுக்க.ரோபோ முதல் உணர்ச்சியாய் காதலை உணர்கிறது.காதலுக்கு குறுக்கே நிற்கும் வசீகரனை ரோபோவுக்கு பிடிக்காமல் செல்ல.இராணுவத்துக்கு எந்திரனை கொடுக்க நினைக்கும் வசீகரனை அவமானப்படுத்த வில்லனின் ஆலோசனையில் ,ரோபோவுக்கு வைக்கும் டெஸ்ட்டில் வேண்டும் என்றே சொதப்புகிறது .
ஏமாற்றமடைந்த வசீகரன் துண்டு துண்டாய் வெட்டிப்போட, ரோபாவின் மறு அவதாரம்  அசுரனாய்,மற்றவை வெள்ளித் திரையில் dot

-ரஜினி எப்படிப்பட்ட நடிகன் என்பதை இங்கு பல முறை நிருபித்துள்ளார். ஐஷுவிடம் காதல் அணுக்கள் பாடும் போது காதல் மன்னனாய் (படு கேஷுவல்),தான் சீனியருடன் தோற்கும் போது ,ரோபாவாய் baaa  baaa  என்று ப்ளாக் சீப்பை கண்டுபிடிக்கும் போது முன்னணி வில்லன்களே 10 அடி தள்ளி நிக்கணும். I want to live , i want to love என்று ஒரு எந்திரன் வேதனைப்படும் காட்சியிலும்,தன்னை தானே கழட்டி போடும் காட்சியிலும் அவர் தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என நமக்குப் புரியும்.மத்தபடி ஐசக்கும் விட்டான காரெக்டர் என்பதால் அவரின் நடிப்பும் பிரமாதம்.

சுஜாதாவின் எழுத்துகளை படித்து தான் எழுதும் பழக்கமே வந்தது என்று சொல்லும் ௧௦௦௦ amature writers -இல் நானும் ஒருவன்.
"என்னடா நக்கலா","இல்ல நிக்கல்";
''உன் அட்ரஸ் என்ன ?'' "எனக்கு வெறும் ip அட்ரஸ் தான் இருக்கு"
,"என்னடா பிட்டா ""இல்ல byte",
"சார் cash-ஆ ,card-ஆ ","இல்லைடா gun னு  "

இதெல்லாம் சில துளிகள்.சுஜாதாவுக்கு ஒரு ராயல் சல்யுட்.

ரஹ்மான் பாட்டெல்லாம் சும்மா பிச்சு எடுக்குது. ஒவ்வொரு பாட்டும் ரொம்ப ரொம்ப மெனக்கெட்டு எடுத்திருக்கார். பாடல் செய்யப் பட்ட விதம் பற்றி விமர்சனம் செய்ய ஒரு குறையும் இல்லை.ஆனால் தேவையில்லாத இடத்தில் வரும் (எனக்கு மிகவும் பிடித்த பாடல் )மொஹஞ்சதாரோ படத்தின் நீளத்திற்கு காரணம் ஆகிறது.அதுபோல் தான் சந்தானமும்,கருணாசும் (இரண்டு பேரையும் ஒரு scientist கூடத்தில் பார்ப்பது ரொம்ப பரிதாபம் , மன்னிக்கவும் சங்கர்).

கத்திப்பாரா சார் சேசிங் காட்சி ரொம்ப மெனக்கெட்டாலும், 100 +200 பேர் சுடும் போது ஐஸ்க்கு ஒன்னும் ஆகாதது ஒரு உறுத்தல்,அப்புறம் அந்த கோர்ட்டு சீன்.இன்னும் எத்தனை வருசத்துக்கு தான் தீர்ப்பு சொன்னதும் நிறுத்துங்க யுவர் ஆனார் என்று உண்மை சொல்லும் காட்சி வரும் என்று தெரியவில்லை.இவ்வளவு ஜாம்பவான்கள் இருந்தும் இப்படி யோசிக்கிறாங்களே!!

எவ்வளவு குறை இருந்தாலும் ரஜினி என்கிற சுனாமி நம்ம எல்லாரையும் விழுங்கிவிடும்...
இன்னும் ஒரு நாலு தடவை பார்த்துவிட்டு மறு-விமர்சனம் எழுதிறேன்.டிக்கெட் விலை ஜாஸ்தி என்பதால் யாரவது sponsor செய்யுங்க dot





1 கருத்து: