செவ்வாய், 14 டிசம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 3




பாண்டிய நாட்டுத் தங்க நாணயம் 

சோணாடு கொண்ட சுந்தர பாண்டியன்.

நொண்டி முத்தன் என்று அவனை நாம் அழைப்பது அவன் மட்டும் அவன் காதில் விழுந்திருந்தால், இந்நேரம் நம் கழுத்து அவன் இடக்கையில் வைத்திருக்கும் ஒரு சிறு கத்தியால் கீறப் பட்டிருக்கும், அதுவே அவனை முத்துராஜா என்று அழைத்திருந்தோமானால்,அவன் கச்சையில் இருக்கும் தங்க நாணயம் அடுத்த கணம்  நம் கையில் விழுந்து விடும்.என்ன, இப்பொழுது நாம் முத்துராஜாவின் தங்க நாணயத்தினை பார்ப்போமா?

 அந்த இரட்டை மீன் பொறிக்கப்பட்டிருக்கும் நாணயத்தின் மறுபக்கம் "சோநாடுகொண்டான்" என்றும் பொறிக்கப் பட்டிருந்தது.இந்த நாணயத்தின் வரலாற்றில் இம்முத்தனின் பங்கும் ஒரு கடுகளவேனும் உண்டு.ஆனால் அது பெருமையான வரலாறு அல்ல.ஆம்,யார் இந்த முத்தன்?அவன் அன்று சோழ நாட்டின் பிரதான ஒற்றன். குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவன் தான் இந்த முத்தரசன். அவன் எப்படி பாண்டியனின் அதிகாரி ஆனான் ?.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

 இன்றிலிருந்து கிட்டத்தட்ட 1882 ஆண்டுகட்கு முன் ஒரு நாள், ஆயிரட்டளி ( இன்றைய தஞ்சை மாவட்ட) எனும் ஊரின் சோழ அரண்மனையின் மகுடாபிசேக மாளிகை மிகவும் ஆரவாரத்துடனும்,ஒரு வித பரபரப்புடனும் நிரம்பப்பட்டிருந்தது.வாகைப் பூமாலை சூடி யாக குண்டத்தின் எதிரே ஒருவன் அமர்ந்திருந்தான்.அவ்வூர் அன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்வுக்காக காத்திருந்தது.

வெற்றித் திலகமிட்ட அந்த இளைஞனின் உடலில் சில காயங்கள் இருந்தாலும், அவனுக்கு அணிவிக்க இருக்கும் மகுடத்தின் ரத்தினங்களை விட உயர்ந்ததாக காட்சி அளித்தது.ஆம் அது மதுரையை மீட்டு, சோழனை முடி கொண்ட அதிசய பாண்டிய தேவன் அல்லவா ?பொன் அமராவதியில், மூன்றாம் குலோத்துங்கனை வீழ்த்தி கலியுக ராமனென்றும்,சோணாடு கொண்டு முடி கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியத் தேவர் என்று வீரபிஷேகம் சூட்டப் பட்டது.

பல ஆயிரம் ஆண்டுகளாய் ஒளிர்ந்து வந்த பாண்டியனின் மகுடம்,தனது அண்ணனான குலசேகர பாண்டியன் காலத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் வீரத்தில் வீழ்ந்து,  அழிக்கப்பட்ட தமது பரம்பரையின் மகுடாபிசேக மண்டபம் தகர்க்கப் பட்ட போது சுந்தர பாண்டியன் எடுத்த சத்தியம் நிறைவேற்றப் பட்டது.

எந்த அரசும் தந்திரம் செய்யாமல் பிழைப்பதில்லை, தன் வீரத்தால் மட்டுமின்றி தன் விவேகத்தாலும் வெற்றி கண்ட பாண்டியனின் மகுடத்தில் முத்துக்கள் இருப்பது போல்,தமது ஆட்சியில் முத்துராசனுக்கும் ஒரு பதவி கொடுத்தான் பாண்டியன்.மணப்பாறையில்(இன்றும் திருச்சி அருகே உள்ள ஒரு ஊர்),குலோத்துங்க சோழனை வீழ்த்த தான் செய்த சூழ்ச்சிக்கு உதவியாக, பகடையாக உருட்டப் பட்டது குலோத்துங்க சோழனின் பிரதான ஒற்றர்களில் ஒருவரான முத்துராசன் எனும் நொண்டி முத்தன் தான்.

தான் செய்த ராஜ துரோகத்திற்கு பரிசாக, பாண்டியனிடம் லட்சம் பொன் அடங்கிய முடியும், தன் கீழுள்ள சேர நாட்டு மண்டலத்தில் ஆலயப் பணிகளை மேற்பார்வையிடும் வேலைக்காக சுந்தர பாண்டியனிடம் உரிமை பெற்ற மீன் பொறி பதித்த இலட்சினை கொடுக்கப் பட்டது. தனக்கு கொடுக்கப் பட்ட பரிசுகளை பார்க்கும் போது தனது வெட்டப் பட்ட காலின் காயத்தினையும் மறந்து பெருமிதத்தோடு உறுமினான்.

தான் வெட்டி வீழ்த்திய தன் சக ஊழியனான தன் எதிரி அருள் முருகனின் ஞாபகம் தான் அவனுக்கு வந்தது.,குலோத்துங்கன், ஆலோசகனான ஸ்ரீனிவாச ராகவ நம்பி எனும் அந்தணர் ஒருவரை- தன் பிரதான ஆலோசகராய் வைத்திருந்தார்.என்னதான் முத்தன் குலோத்துங்கனின் பிரதான ஒற்றனாய் இருந்தாலும், வேங்கி நாட்டு யுத்தத்திற்கு பின் வந்த இளம் வயது வஞ்சி வாலிபன் அருள் முருகனை அந்த அந்தணரின் அறிவுரையின் பெயரில் தலைமை ஒற்றனாக நியமித்தார்.

தன் வயதுக்கும், தனது இத்தனை நாள் விசுவாசத்துக்கும் மரியாதை தராத குலோத்துங்கனுக்கு பாடம் கற்பிக்கும் குரோத விஷச்செடி முத்தனுக்கு  முளைத்தது. தன் விசுவாசத்தினை பாண்டியனிடம் காட்டினான், குலோத்துங்கனிடம் தன் வேஷத்தினை காட்டினான். ஆம் , சோழனை வீழ்த்த குறிக்கப்பட்ட ஒரு நாளில், முதல் பலியாக - தன் எதிரியான அருள் முருகனின் முதுகில் தன் இடை வாளினைக் கொண்டு தன் பழியினை தீர்த்தான். முதுகினில் குத்திவிட்டு ஓடிக் கொண்டிருந்த முத்தனின் காலில் அருள் முருகனின் வேல் பாய்ந்தது.முத்துராசன் நொண்டி முத்தனாக உருவானான், அருள் முருகன் மறைந்தான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------.
பத்துப் பனிரெண்டு வருடங்கள் நொடிகளாய் கரைந்தன ,தனக்கு கிடைத்த மரியாதையை மிகவும் சுயநலமாக பயன் படுத்த தொடங்கிய முத்துராசனுக்கு தான் பழி வாங்க வேண்டிய ஒரு ஆள் நினைவில் வந்தார்.பெயர் -ஸ்ரீனிவாச ராகவ நம்பி. பத்து ஆண்டுகட்க்கும் மேலாகிவிட்டது அவரை பற்றிய செய்தி அறிந்து, குலோத்துங்கனின் அரசு கவிழ்ந்த பின், பெருமாளுக்கு சேவை செய்வதை தன் கடமையாய் ஏற்று புதுப்பித்து கட்டப் பட்டு வரும் வெள்ளியனை பெருமாள் கோயிலில் பனி புரிந்து வந்தார்.

கிட்ட தட்ட பனிரெண்டு வருடங்களுக்கு பிறகு தன் பழைய எதிரி ஒருவனைப் பார்க்க வெள்ளியனை வந்து சேர்ந்தான். நொண்டி முத்தனுக்கு ஒரு எதிரி உருவாகப் போவது இங்கே தான் என்று தெரியாமல்,கட்டப் பட்டுவரும் கோயிலை பார்த்துக் கொண்டே வர,ராகவ நம்பி அவன் எதிரிலே வந்து நின்றார்.ஆனால், அப்பொழுது நொண்டி முத்தனின் பார்வை அவருக்கு பின் நின்றுகொண்டிருந்த மஞ்சள் நிறப் பாவை கோதையை நோக்கியது...விஷமப் பார்வை காமப் பார்வையாய் மாற உத்தேசித்த நேரத்தில் ஒரு பெருஞ்சப்தம் ஊரின் கிழக்கு பகுதியில் இருந்து கேட்டது.

ஐயோ ஐயோ!! என்ற கூச்சல் ஊரிலே இருந்து எழ,உடம்பில் சிறு சிறு காயங்களுடன் ஊருக்குள்ளே  பாய்ந்து பாய்ந்து ஓடி வந்த ஒரு புலி ஒன்று முத்தனின் கண் முன்னே தோன்றியது..

(தொடரும்)

புதன், 8 டிசம்பர், 2010

Parvathamalai Trekking




Parvathamalai Trekking

The plan for this trekking initiated in my previous Sathuragiri trip. while climbing a hardest part of the hills i heard about this hills.My curiosity arose on that day itself.


The thrill from my previous trekking Sabarimala and Sathuragiri create much hype on Parvathamalai. I started to ask my friends to join this trekking, this time i expect huge crowd with me.Because our plan is to one night stay at Thiruvannamalai and next day climbing at Parvathmalai. But, the Team was not  ready till the Thursday.(whereas our program on Thursday Night)



Exactly the last Sunday, before the trekking i went Thiruvannamalai and  planned for route and lodge.Parvathamalai -4650 feet peak,Where a lingam
built before 2500 years(approx).It is believed that Rishi-Bogar formed that linga.


Story about Parvathamalai  


Lot of stories are believed about this hills.                                                                                    
1.The hill ranges look like a spread hair of women, in tamizh we called as (jadai).It says that hill is denoted as 'amma' -paarvathi (a goddess),where thiruannamalai is 'Appa'- lord Shiva.It is very special to get darshana in two lingams in same day


2.The Siddhas have spoken volumes about Pancha Nathana Nataraja. They say that this deity is such a rarity in the Universe that even the Devas would give anything just for the chance of worshipping him. They say that on the Nataraja Abisheka days which occur in certain Tamil months (Chitra, Aani, Aavani, Purattaasi, Margazhi and Maasi), the Devas perform their worship to this deity in subtle form. This kind of worship is similar to the sookshma worship done by the Devas at the peak of the Arunachala Hill and on the Parvathamalai Hill


3.It is also believed that devas and siddhas are worshipping Lord Mallikarjunaswamy every night here and so is a very auspicious hill.Parvathamalai is belived to have powerful vibrations from the religious point of view.


4.It is believed that Parvathamalai is formed when a piece of rock fell from Sanjeevi hill when Lord Anjaneya was carrying it and this has seven folds.
Its called as Sanjeeva Parvathamalai.The breeze with herbal scent coming from this hill heels all the incurable diseases.







வெள்ளி, 3 டிசம்பர், 2010

நான் மிகவும் ரசித்து உண்ட பத்து பதார்த்தங்களின் கதை:(full version)

நான் மிகவும் ரசித்து உண்ட பத்து பதார்த்தங்களின் கதை:

என்னோட ப்ளாக்னா என் இஷ்டத்துக்கு எழுதலாம்னு கிடைச்ச சுதந்திரத்தின் வெளிப்பாடு தான் இது ...

இந்த பதார்த்தமங்கள் எல்லாம் மிக ருசியானவையாக இல்லாமல் போனாலும்,நான் உண்ட சூழ்நிலையும் இடமும் தான் அதை நினைவில் கொள்ள செய்கிறது.

கொடைக்கானல் Carlton ஹோட்டல் 
10 .கொடைக்கானல் - என் வாழ்க்கையிலே நான் நினைத்த கனவு வேலை கிடைத்த நேரம் அது.நான் ஒரு ஷேர் புரோக்கிங் கம்பெனியில் சேல்ஸ் வேலை கிடைத்தவுடனே , அந்நிறுவனத்தின் ஒரு get-together கொடைக்கானலில் நடந்தது,அதுவரை நான் பார்க்காத luxurious life பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்த தருணம்.
coffee, tea, ice-cream , juice, salad, soup , cooldrinks, chinese, continental,north indian என எல்லா வகை உணவுகளையும் ஒரு பிடி பிடித்த தருணம்.அதுவும் ஒரு மில்க்ஷேக் வாங்கி,தேன் ஊற்றி,ஜாமூன் வைத்து decorate செய்து,என் ரூமில் இல்ல பாத் டப்பில் இதமான வெந்நீரூற்றி படுத்துக் கொண்டே சாப்பிட்டது ......
.ம்ம்ம் மறக்க முடியல(அதுக்கப்புறம் வயிற்றுப்போக்கால் பட்ட அவதி ஒரு தனி கதை)
9.முட்டைக் குழம்பு:-
            சென்னையில் எனது பிரம்மச்சாரி வாழ்க்கை ஆரம்பித்த பின்னர், செத்து போன நாக்கு பல நாட்களுக்கு பின் உயிர்த்தெழுந்த வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்( உபயம் : திரு .ரமேஷ்).அப்படி ஒரு முட்டைக்குழம்பு இனி என் வாழ்நாளில் நான் சாப்பிடுவேனா என்று காலம் தான் பதில் சொல்லும். . இரவு 11  மணி வரை சமையல் செய்து, சிறு குடலை பெருங்குடல் விழுங்கும் நிறம் பார்த்து , தட்டை எடுத்து அமர்ந்து ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தால் ...அனகொண்டா தீனி தான் ... வெஜிடேரியனாய் பிறந்ததற்கு இதனால் வருத்தப் படுகிறேன்..

8.கூட்டாஞ்சோறு:
      எல்லோர் வாழ்விலும் வசந்த காலமான கல்லூரி நாட்களில்,என் வகுப்புத் தோழி ஒருத்தியுடைய அண்ணனின் கல்யாணம் சென்று வந்து, சினிமா போகலாம் என்று திட்டம் போட்டோம். என் மிக நெருங்கிய தோழி ஒருத்தி எங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்று யோசனை சொன்னாள். அது வரை, நான் யாரையும் வீட்டுக்கு அழைத்ததில்லை. தோழியின் விருப்பப்படி எல்லோரும் எங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம் (நான் அழைக்கவில்லை காரணம்  -என் பொருளாதார சூழ்நிலையில் அப்படி ஒரு கும்பலை அழைக்கவும்,அவர்கள் வருகிறேன் என்று சொல்லும் போது மறுக்கவும் தைரியம் வரவில்லை).

                 அம்மாவிடம் எப்படியாவது சொல்லி(கெஞ்சி),கடன் வாங்கியாவது உபசரிக்கனும்னு நினைத்துக்கொண்டே போனோம்.நாங்கள் போன பேருந்து பஞ்சர் ஆகிவிட நடந்தே போனோம் அவ்வளவு களைப்பு, வீட்டிற்கு முன் பார்த்தால் எங்க அப்பா ."என்னடா ? கிளாசுக்கு கட்டா?" என்று சிரித்தவாறே எல்லோரையும் வரவேற்றார்.(அவர புரிஞ்சுக்கவே முடியாது).எல்லோருக்கும் பெப்சி வாங்கி கொடுத்து உபசரித்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.எங்க அம்மாவும், அந்த சூழ்நிலையில் எங்க ஒரு வாரத்துக்கு தேவைப்படும் காய்கறியை அந்த ஒரே நாளில் போட்டு கூட்டாஞ்சோறு செய்தார்கள்.(அன்று மிகவும் சுமாரான சமையல் தான்).அதை நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத பசுமை நினைவுகள்.மீண்டும் கிடைக்காத சந்தோசம் ..அந்த வறுமையிலும் கூட எங்கள் நிலை யாருக்கும் தெரியாமல் வாழக் கொடுத்த என் அம்மாவை நினைத்து இன்றும் பெருமிதப்  படுகிறேன்

7. கணேஷ்,கார்த்தி,இத்யாதி - பொங்கல் தீபாவளி:- இந்த பொங்கல், தீபாவளி என்ற இரண்டு விழாக்களின் முழுமையே என் ஊர் நண்பர்களாகிய கணேஷ்,கார்த்திக் ஆகிய இவர்களுடன் நான் சாப்பிடும், பகிர்ந்து கொள்ளும் பண்டங்கள்.முக்கியமாக எங்க வீட்டு வடை,பஜ்ஜி,கேசரி,மஞ்சள் உப்புமா,சொதி, கார்த்திக் வீட்டு மைசூர் பாகு,கணேஷ் வீட்டு ரவா லாடு,வீட்டுக்குள்ளே கிரிக்கெட், இரவு முழுதும் அரட்டை.கேவலமான சிரிப்பு. கொஞ்சம் அடிதடி,நக்கல், திருட்டு கொய்யா என நவரசமும் ததும்பும்.
 மீண்டும் வேண்டும் அந்த நாட்கள்.

6.karur burger -முட்டை கரம் - செட்:-
என்னுடைய பருத்த தோற்றத்திற்கு முதன்மை காரணம்.

தட்டை போன்று சிறிய அளவில், ஒரு ருபாய் நாணய அளவில் உள்ள தட்டை அடையில் இரண்டு வகை சட்னியுடன், காரட்,பீட் ரூட் ,வெங்காய கலவையினை சேர்த்து தருவார்கள். இதையே , முட்டையுடன்,முறுக்குடன், அப்பளத்துடன் என்று பல வகையில் செய்வார்கள். ஏழைகளின் பீஷா எனலாம்.

வெவ்வேறு நபர்களுடன் வகை வகையாக வெவ்வேறு கடைகளிலும் நான் வாடிக்கையாளராக வாங்கித் தின்ற காலம் .இரண்டு வருடம் கழித்து நான் சென்றாலும் என் முகம் மறவாத கடை முதலாளிகளும் உண்டு.அப்பப்பா எத்தனை வகை- நானே சில வகைகளை எப்படி போடுவது என்று கடை வைத்திருப்பவரிடம் சொல்வதுண்டு.

ஜேம்ஸ் பான்ட் தன் படங்களில் எப்படி விஸ்கி ஆர்டர் பண்ணுவாரோ ? அதை விட அழகாக நான் கரம் பொரி ஆர்டர் பண்ணுவேன்.என் பெயர் சொல்லி அக்கவுன்ட்டில் திண்ணவர்களும் உண்டு.என் நண்பன் ஜெகன் ,கணேஷ் ,கார்த்தி என்று கேட்டுப் பாருங்கள். உங்களுக்கும் ஆசை வந்து விட்டதா? வாருங்கள் போகலாம் கரூருக்கு(ஆனால், விலைவாசி ஏற்றத்தில் எல்லாம் இரண்டு மடங்கு ஏறிவிட்டது - ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார், "கடலை,பொரி,முட்டை எல்லாம் விலை ஏறிடிச்சு ஏதோ receission -ஆம் அவன் வந்து ஏத்தி விட்டுப் போயிட்டானாம் படு பாவி !!!" என்று ...

5.ஜகன் வீட்டு பிரியாணி:
                    தொடர்ந்து ஒரு நான்கு வருடம் december 25 கிருஸ்துமஸ் அன்று நண்பர்களுடன் ஜகன் வீட்டில் விருந்து நடக்கும்.10௦ பேர் வந்தாலும் தனி ஆளா சமையல் செய்யும் அவரின் அம்மா,சாப்பாடு பரிமாறினால் சும்மா ரெண்டு கை நிறைய இருக்கும்,அப்படி ஒரு அள்ளு அள்ளும்போதே  நமக்கு எச்சில் ஊற ஆரம்பித்துவிடும் .இரண்டாம் தடவை சோறு வாங்கினா அவனுக்கு இன்னொரு வயிறு இருக்குன்னு அர்த்தம்.அந்த சாப்பாடு செறிப்பதற்கு பனை மரம் தான் ஏற வேண்டும்.
             
                    அதே சமயம், நான்,முரளி என சைவர்களுக்கு தனி சமையல்,அதுவம் தடபுடலாக கேரள பாயசத்துடன் நிறைவடையும்.

அசைவமோ,வகை வகையா இருக்கும்.சாப்பாடு முடிந்த பின் அனகோண்டா பாம்பு மாதிரி நெளிந்து வருவோம்.ஆனாலும் மாலை நான்கு மணிக்கெல்லாம் 10 -15 பஜ்ஜி,1/4 கிலோ மிச்சர், 350ml இஞ்சி டீ,ஏதாவது ஒரு பாலிவுட் படத்துடன்.கேக் சாப்பிட்டுக் கொண்டே டாட்டா காட்டுவோம்.


4.சதுரகிரி சாப்பாடு:

                   போனதோ ஒரு கடுமையான மலைப் பயணம், பயணம் ஆரம்பிக்கும் முன்னரே, என் ஆச்சி செய்து கொடுத்த சப்பாத்தியை லபக்கி விட்டு,மலையின் ஒவ்வொரு முனையிலும் பஜ்ஜி,போண்டா, சுக்கு காபி,என விழுங்கிவிட்டு நடந்து கொண்டிருந்தோம்.ஒரு சிற்றோடையில் நல்ல குளியல்,உச்சியை அடைந்த பின்னர் ஒரு சிறுபசி ஆற்றினோம்.போதாதைக்கு அரை மணி நேர இடைவெளியில், நாங்கள் தங்கிய ஒரு மடத்தில் ரசம் சோறும்,கூட்டும் - அடடா .... ரசம் சோற்றை பார்க்காதது போல் நாங்கள் எழுவரும் சும்மா வெழுத்து வாங்கினோம்.

ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க்
சிவபாலன் 
இவ்வளவு தின்னா என்ன ஆகும் ?... அதே தான், இரவு மீண்டும் ரசம் சோறு சாப்பிட்டு விட்டு தூங்கினால், ஏதேதோ சப்தங்கள் என் வயிற்றில் இருந்து, ராக்கெட் லாஞ்ச் கவுன்ட் டவுன் போல், எனக்கு ஒரு கெடு வைத்தது இயற்க்கை. Nature's call யாரால் தடுக்க முடியும்? ஆனால் நாங்கள் தங்கியிருந்த மடத்திலோ 8.30 மணிக்கு மேல் யாரையும் வெளிய அனுப்புவதாய் இல்லை, ஒரு ஐடியா உதித்தது -இருக்கவே இருக்கான் என் நண்பன், ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடும் சிவபாலன்."நைட் வாக்" போகலாம் நட்சத்திர கூட்டத்தில் பளிங்கு மலை போல் இம்மலை தெரியும் வாடா என்று அழைக்க எனக்கு துணையாய் வந்தான்.

அவதார் படம் பார்த்த பாதிப்பில், அந்த குளிரில், இரவில், நிலவொளியில், மலைச் சரிவில் நடந்து வந்து,.................... (நடக்க வேண்டியவை எல்லாம் நடந்து). அங்கிருந்த சிற்றோடையில் கால் நனைக்க விரும்பி மீண்டும் கொஞ்ச தூரம் நடந்து வந்தோம்.மின்மினிப் பூச்சி தேசத்தை கண்டு மெய் மறந்து நின்ற எங்களை தோசை மனம் அழைத்தது.ஆஹா, ஆட்டுக்கல்லில் அரைத்த மாவில் ஊற்றிய தோசையும்,சட்டினியும் சும்மா எங்களை ஏதோ ஒரு உலகத்திற்கு கொண்டு சென்றது. அந்த பனி பெய்யும் இரவில் நாங்கள் உண்ட சாப்பாடு மறக்க இயலாதது.


3.ஸ்வீட் எடு கொண்டாடு காதலை:
             
                   ஒரு குட்டிக் கதை, மிகவும் திமிர் பிடித்த பகுத்தறிவுவாதி என்று பிதற்றிக் கொண்டும், கடவுள் இல்லை என்று உரைத்துக் கொண்டும் திரிந்த அவன் அன்று கோயிலில் நின்று கொண்டிருந்தான்."பெருமாளே !!" என் காதலை காப்பாத்து என்று கொஞ்சம் சப்தம் போடும் போது அருகில் இருந்த ஒரு கிழவி ,"ஏய் தம்!பி இது பெருமாள் இல்லை பிள்ளையார்" என்று என்னை கிண்டல் அடிக்க,களுக் என்ற சிரிப்புடன் எட்டிப் பார்த்தாள் ஒரு தேவதை. அவனுக்கு அப்படியே வெக்கம் வந்து விட்டது,ஆவலுடன் எப்படியாவது பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போது திடீரென்று அடைமழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

                               மாலை 5 மணி,மழை பெய்கிறது,தெரிந்தவர்கள் யாரும் அருகில் இல்லை, அவனை பார்த்து கொஞ்சம் புன்னகை வேறு, அவனுக்கு இந்த வாய்ப்பை தந்த மழைக்கு நன்றி சொல்ல- ஆ ஆ வென்று வானத்தை பார்த்து மழைக்கு நன்றி சொல்லி திரும்பினான் - அவளைக் காணவில்லை . கோயிலின் இரு மருங்கிலும் தேடினான் கிடைக்கவில்லை. அப்படியே நொந்து போய் கோயிலின் அருகில் இருக்கும் ஒரு கடை அருகில் போய் ஒதுங்கி நின்றான். ஒரு கருப்பு குடைக்குள் - வெள்ளை நிலவு ஒன்று அவனைப் பார்த்து கை அசைத்தது."பெருமாளே இது அவள் தான், என்னை கூப்பிடுறாள்"  என்று வேகமாய் மழையில் நனைந்து அருகில் சென்றாள். "பிரசாதம் -வாங்காமல் வந்துட்டியோ"என்று தன் கையில் வைத்த அந்த சிறிய இலையில் ஒரு மூலையில் அவள் சுவைத்து மீதம் வைத்த பொங்கலும்,ஒரு மூலையில் 16-ஆக மடித்த ஒரு கர்சீப்பும், 1/4 மல்லிகைப்பூவும் இருக்க.இதில் எதை எடுக்க என்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருந்தான்."என்ன முழிக்கிற, இந்த என்று அவன் நெஞ்சுக்கு நேர் அவள் நீட்டினாள்" அதை சுவைத்துக் கொண்டே,இருவரும் அம்மழையில் வந்து கொண்டிருந்தனர்.அந்த நொடி தான் அவனுக்கு தன் காதலை சொல்ல வேண்டிய உத்வேகம் பிறந்தது.ஆம், அவன் அநேகமாக தன் காதலை சொல்ல முடிவுக்கே வந்து விட்டான்.ஆனால் அவன் தன காதலை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர்,அவர்கள் நடந்து வந்த பாதையில் இருந்த ஒரு அகலமான பள்ளமும் அவர்களை வரவேற்றது.
(வாழ்க !! இந்திய நெடுஞ்சாலைத் துறை)




2.திருடி தின்னா - லீவு கிடைக்கும்
             சிவா - என் அத்தை பையன், ஆனால் அவனை நண்பன் என்று அழைப்பது தான் எனக்கு பிடிக்கும்.அவன் பிறந்த நாள் தான் எங்கள் நட்பின் வயது.ஏதோ ஒன்றை சாதிக்க பிறந்தவர்களாய் இன்று வரை பிதற்றிக் கொண்டிருக்கும் எங்களுக்குள்,உணர்ச்சிகள் தோன்றுவதற்கு முன் நட்பு என்ற பழக்கம் வந்து விட்டது.காலக்கிரமத்தில் நாங்கள் என்னவாகப்போகிறோம் என்று தோன்றுவதற்குள் நட்பு வந்துவிட்டது.ஒருத்தன் நட்பு கிடைப்பதற்காக 7 வருடம் பொருத்து பிறந்தேன் என்றும் நினைப்பதுண்டு,(அதனால் எங்களை கோப்பெருஞ்சோழன்,பிசிராந்தையார் என்று நினைக்க வேண்டாம்).ஒரே தட்டில் சாப்பிட்டது முதல்,கடைசியாக தாம்பரம் ரெஸ்டாரெண்ட்டில் சாப்பிட்டதுவரை எல்லலாமே என் நினைவில் இருப்பவை தான்,என் நெஞ்சில் இருக்கும் சம்பவம் ஒன்று :

அப்பொழுது, எனக்கு ஒரு 6 வயது இருக்கும் போது, ஒரு ஞாயிறு மாலை அவன் வீடு சென்றோம். விடிந்தால் பள்ளிக்கு போகணும்னு ஒரே மனக் கஷ்டம்.எல்லோரும் தூங்கிய பின்னர், நான் அவனிடம் என் காணாமல் போன 'மீனா' என்ற பூனையை பற்றி சொல்லி அவனிடம் அழுதுக் கொண்டிருக்க,அவன் என்னை தேற்றி வீட்டில் இருக்கும் சீடை ,முறுக்கு,லட்டு என திருடிக் கொடுத்து தின்ணச் சொன்னான்.ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தால், அவனுடய ஆச்சி - சும்மா M .N .ராஜம் effect -ல முறைத்துக் கொண்டு இருந்தார்.போச்சுடா,நாம மாட்டுனோம்னு திரு திருவென ரெண்டு பேரும் விழித்துக் கொண்டிருந்தோம்.எங்களுடைய ஆசையை புரிந்து கொண்டு அவனை லீவு எடுக்க சொன்னாங்க.அன்று நான் நினைத்தேன் திருடி தின்னா லீவு கொடுப்பாங்களோ என்று.
(என்னடா சிவா உனக்கு ஞாபகம் இருக்கா?)


1.அம்மாவும் - பால் சோறும் ,சப்பாத்தியும்:
கடைசியா நான் சொல்லப் போகும் உணவு எவ்வளவு மேம்பட்டதாய்,ருசியானதாய் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம்?

நான் இங்கு உணவைப் பற்றி சொல்ல இந்த இடுகையினைப்(ப்ளாக்) பதியவில்லை.நான் சாப்பிட்ட தருணங்களை சொல்லி வருகிறேன்.

நான் ஒரு பால்யச் சிறுவனாய், என் எட்டுவயது வாழ்க்கையில் செல்கிறேன்.

அன்று:-அதுவரை நான் ராஜா வீட்டுக் கன்று குட்டியாக வாழ்ந்து வந்தேன்.நான் கேட்காமலேயே அல்லது நான் விரும்புவதற்கு முன்னரே என்னைத் தேடி அவரும் புதுப்புது ஆடைகளும், விளையாட்டு சாமான்களும், சாக்கலேட்டுகளும், கேக்குகளும், பண்டங்களும் - முக்கியமாக மக்ரூன் எனப்படும் ( தூத்துக்குடியில் பிரபலம்) இனிப்பு,பால் பன் ,ரஸ்க், என என்னைத் தேடி குவிந்த பண்டங்களும் சலிப்பினை மட்டுமே கொடுத்தன,நான் அவ்வூரை விட்டு வரும்வரையில்.

இனி எனக்கு அந்த உபசாரம் கிடைக்க போவதில்லை,பள்ளி வாகனத்தில் நான் எந்த நிறுத்தத்தில்(அருகருகே மூன்று நிறுத்தம் உள்ளது) இறங்கினாலும் என்னை சைக்கிளில் வைத்து ஆரிய பவனுக்கு கூட்டி செல்ல ஆட்களும் இல்லை.லாலிபாப் இல்லாமல் பார்க்க வராத சேகர் மாமாவும் இல்லை,பஜ்ஜி வாங்கித் தரும் கங்கா மாமாவும்,முட்டை வேக வைத்துக் கொடுக்க சங்கரி அக்காவும் இல்லை.ஒரு இட்லிக்கும் மேல் நான் சாப்பிட்டாலும் அதிசயமாய் என்னைப் பார்க்கும் என் சுற்றம் இங்கு இல்லை. இது ஒரு புதிய ஊர் - அன்று நான் D- for Desert என்று பாலைவனத்தின் அர்த்தம் புரிந்தது.

எங்கள் ஊரில் ஒரு நாள், விளையாடி முடித்து என் நண்பன் குட்டி செல்வதை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என் நாய் blacky-உடன் வீட்டிற்குள்ளே நுழைந்தேன்.என் அம்மா, கொஞ்சம் கண் கலங்கியவாறு ஆட்டுக் கல்லில் மாவாட்டிக்கொண்டே, என் அப்பாவைப் பார்க்க வந்த புது விருந்தாளிகள் சொல்லும் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தார். எனக்கு கடன் என்பதன் அர்த்தம் தெரியாது ?

1 .அந்த கடன் என்ற வார்த்தை என் வாழ்க்கையைப் புரட்டி போடும் அளவுக்கு சக்தி வாய்ந்ததா?.
2 .எப்போதும் எனது உணவில் பாதியை திருட்டுத் தனமாய் வந்து தின்று செல்லும் என் அடிமை,என் செல்லம் blacky -ஐ என்னிடம் இருந்து பிரிக்கும் அளவுக்கு அந்த கடன் சக்தி வாய்ந்ததா?
புதிய ஊர் எனக்கு என்ன ஆச்சரியம் அளிக்க இருக்கிறது என்ற தொலை நோக்கு சிந்தனை இல்லாத வயதில்." (அன்று மாற்றம் எனும் பண்டத்திணை தின்று ஜீரணிக்க எனக்கு தெரியவில்லை அல்லது  வயதில்லை)"

               என்னை விட 2 வயது சிறிய என் தம்பி எதை வைத்தாலும் சாப்பிடக்கூடிய குணம் படைத்தவன் (இன்று வரை ), எனக்கு நேர் மாறானவன்.எப்போதும் போல் எனக்கு இரவு ரஸ்க் தானே என்று வாங்கி கொடுக்க, நான் சப்பாத்தி கேட்டேன் . அது தான் நான் முதன் முதலில் விரும்பி கேட்ட பண்டம் .என் அம்மா அப்போது அழுதாளா? , இல்லை சந்தோசப் பட்டாளா ?என்பது ஞாபகம் இல்லை. ஏனென்றால் நானாக விரும்பி உண்பதற்கு என்று எதுவும் கேட்டதில்லை, வற்புறுத்தி ,கதை சொல்லி, பிரயர்த்தனப் பட்டால் மட்டுமே கொடுத்ததில் பத்தியை உண்பேன் அதனால் சந்தோசப் பட்டு இருக்கலாம். அதே சமயம், அம்மா இந்த ஊருக்கு வரும்போது சப்பாத்திக் கல்லை எடுத்து வரவும் இல்லை, மறந்து விட்டாள்.

                                    ஆனால்,என் அம்மா சந்தோசப் பட்டிருக்கவே வேண்டும் இல்லையெனில் அவளுக்கு அந்த யோசனை வந்திருக்காது.ஆம், சாப்பிடும் தட்டினை கவிழ்த்து, ஒரு தம்ளரைக் கொண்டு சிரித்து சிறிதாக உருட்டி ,நேர்த்தியான,மிருதுவான சப்பாத்தியை சுட்டு, எனக்கு பிடித்தமாதிரி மொத்தம் வாங்கிய 250௦௦ மில்லி பாலில் பாதியை விட்டு,சர்க்கரை போட்டுக் கொடுத்தாள்.இன்னும் ஒன்று கேட்டேன் அவளுக்கு சந்தோசம் இரட்டிப்பு ஆனது. ஆனால் அவளுக்கு தெரியாது நான் சாப்பிடுவது , அனாதையாக்கப்பட்ட  என் செல்ல நாய் blaacky-இன் பங்கு என்று . எங்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர்


(உணவு அதன் சுவையில் நினைவில் நிற்கவில்லை, அது கொடுத்த உணர்வில் நிற்கின்றது )     

திங்கள், 29 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 2

முத்தனின் வருகை

பச்சைப் பட்டாடை உடுத்தும் வயல்வெளிகள் இல்லாதிருந்தாலும், கிணற்று நீர்,கண்மாய் பாசனத்தின் மூலம் உழவு செய்யும் அச்சிற்றூரின் பூர்விகக் குடிகள், உழைப்பதற்கு என்றும் அஞ்சாதோர்.அவர்கள் வீடு கிராமத்தில் இருந்தாலும், தங்கள் வயலிலும் ஒரு குடில் அமைத்து அதில் வசிக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். தங்கள் வாழ்க்கையில் அவர்கள் குழுவாகவே எந்த ஒரு நிகழ்விலும், அதாவது வயலில் நாற்று நடவது,அறுவடை, சந்தைக்கு கொண்டு செல்லுதல்,விழாக்கள் என கூட்டாக சேர்ந்து வாழும் பழக்கம் மிகுந்தவர்கள்.இன்றளவும் திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் வசிக்கும் சோழிய வெள்ளாளர்களை கூறலாம், அவர்கள் வாழும் குலமான 'மூன்று ஊர் எண்பத்து நான்கு மந்தை' என்று ஒரு கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றனர், இதே சாதியில் பிறந்தாலும் இந்த மூன்று ஊரை அடிப்படையாய்க் கொண்ட ஏதாவது ஒரு குடும்பத்தை தவிர வேறு ஒருவருடன் திருமண பந்தம் ஏற்படுத்த மாட்டார்கள்.

கிழக்கு வெளுக்கும் அந்த வேளையில், மங்கிய வெளிச்சத்தில், ஒரு கிழவி தன் சிறிய வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தாள்,அவ்வழியே புதிதாக கட்டப் பட்டு வரும் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த கோதை அக்கிழவியை பார்த்துக் கொண்டே,வரப்பு மீது நடந்து வந்தாள்.அப்பொழுது அவள் கண்ட காட்சியை அவளை என்னமோ செய்தது.

அக்கிழவி தன் வயலில் நாற்று நடும் போது பக்கத்திலே ஒரு சர்ப்பம் ஒன்று தலை நிமிர்ந்து அவளை பார்த்தபடி இருக்க, அந்நாகத்திடம் தன் சொந்த கதையை பாடிக் கொன்டிருந்தாள்.

வீரம் வெளைஞ்ச மண்ணு -எவ்
வீச்சருவா சாமி நின்னு,
வில்லுக் கொடி காப்பதற்கு
வின்னுலுகம் தேடி கொண்டு

பாசம் நெறஞ்ச மண்ணு
பாண்டியன் புடிச்ச மண்ணு
நீர்நாட்டு கொடிக்காகத்தான்
நிலத்துல சாஞ்சதடி,
எம் மகன் மூச்சும் ஒஞ்சதடி.

எம்புருசன் , பெத்த மவன்
நாட்டுக்காக போரிடத்தான்;
நாசமான காலன் வந்து
என்னை நட்டாத்தில் சிக்க விட்டான்

நடவு செய்ய யாரும் இல்ல,
இந்த நாகம் தானே எம்புள்ள .....

 என்று பாடிக் கொண்டிருக்க அவள் கதையை கேட்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தது.

வரப்பில் வந்துக் கொண்டிருந்த கோதை சர்பத்தினைக் கண்டதால் மூர்ச்சை அடைந்தாள்.அதைப் பார்த்த அக்கிழவி வேகமாக வரப்பின் மீது ஏறி அங்கு மயங்கிய நிலையில் இருந்த கோதையை தூக்கினாள்.கிட்டத்தட்ட ௮௦ வயது இருக்கும் அக்கிழவி கோதையை மிகவும் எளிதாக தூக்கிக் கொண்டு வரப்பிலே நடந்தாள். தன் தோளினில் தொங்கிக் கொண்டிருக்கும் கோதையை எண்ணி ,"ஒரு செண்பகப்பூ மாலையை தோளில் போட்டது போல் இருக்கிறதே, இந்த பருவக்கொடியை சூடப் போகும் வஞ்சி வீரன் யாரோ??"என்று அக்கிழவி தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அருகில் இருந்த ஒரு வேப்பமரத்து நிழலில் அவளைக் கிடத்தினாள்.

வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்த நீரில் தன் சேலை நுனியை நனைத்து வந்து கோதையின் முகத்தில் கொஞ்சம் தெளித்து விட்டு, தன் சேலையைக் கொண்டு துடைத்துவிட்டாள்,சிறிது சிறிதாக தெளிவடைந்த கோதை அக்கிழவியை பார்த்ததும் சற்று பயந்தவாறே நோக்கினாள்."ஏ - ஆயி, காலையிலே சோறு உண்ணாமல் இப்படி வெயிலில் வரலாமா ? செண்பகப்பூ வெயிலில் பட்டால் வாடிடுமே "என்று நமட்டுச் சிரிப்புடன் வருத்தப்படுவதுபோல் கூறினாள் அக்கிழவி.

அவள் கூறியதை கேளாமல் சர்ப்பத்தை பற்றே பீதியிலேயே அங்கும் இங்கும் தேடிக் கொண்டிருந்தாள்."அந்த பாம்பு தானே! அப்பவே போயிடுச்சு... பாம்புக்கு இப்படி பயப்படலாமா? அதுவும் நம்மள மாதிரிதான் நாம ஏதாவது துன்புறுத்தும் வரை அது நம்மள ஒன்னும் பண்ணாது" என்று சமாதானம் பண்ண வந்த அக்கிழவியை சுட்டெரிக்குமாறு நோக்கினாள்."ஏய்- ஆத்தி, அந்தணப் பெண்ணுக்கும் இவ்வளவு கோபம் வருமா??, எனக்கு ஏன் பொல்லாப்பு, சரி தாயி!! நீயா பத்திரமாப் போய் சேர், எனக்கு இன்னும் நடவு வேலை இருக்கு நான் வரேன்" என்று அவ்விடத்தில் இருந்து கிளம்பினாள்.

கிழவி அங்கிருந்து சென்றவுடன், கோதை அவ்வூரில் புதுப்பித்துக் கட்டிக்  கொண்டிருக்கும்,'பிரசன்னா வெங்கடேசப் பெருமாளின்' கோயிலுக்கு சென்றாள். அங்கே இருந்த ஒரு கற்குவியலின் மேலே அமர்ந்து, அக்கிழவி சொன்னதை நினைத்துப் பார்த்தாள்,"சர்ப்பம் என்ன செய்யும்.??." .

சர்ப்பம் என்ன செய்யும்??,  பாவம் என்பதன் அர்த்தம் கூடத் தெரியாத அப்பெண்ணின் வாழ்க்கையை சூன்யமாக்கியது ஒரு சர்ப்பம் தானே!புன்னகையை இதழில் ஒட்டி வைத்திருக்கும் முகமுடைய பெண்ணின் இதயத்தில் பாரம் இருக்க காரணமும் ஒரு சர்ப்பம் தானே!தன் பெயரான கோதை லக்ஷ்மி, வெறும் கொத்தாய் ஆனதன் காரணமும் ஒரு சர்ப்பம் தானே!மனமே புரியாமல் மனதால் விதவையாகப் பட்டிருந்த கோதையை - பேதை ஆக்கியதும் ஒரு சர்ப்பம் தானே!

இப்போது உங்களுக்கு புரியும் சர்பத்தினை பார்த்தவுடன் ஏன் மூர்ச்சை அடைந்தாள் என்பது  , ஆனால் இதே சர்ப்பம் தான் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தினை ஏற்படுத்த போகிறது என்பது தெரியாமல் அவள் அன்று முழுதும் மவுனத்திலே அமர்ந்தாள்.

உடம்பெல்லாம் சந்தனம் பூசிக்கொண்டு, தனது ஒடிந்த காலினை ஒரு மூங்கில் குச்சியின் உதவியால் ஊன்றி எடுத்து, இளம்பிராயத்தைக் கடந்த ஒரு ஆஜானுபாகுவான தோற்றமுடைய முத்தன், பெருமாள் கோயிலின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.முத்தன், இவனை நொண்டி முத்தன் என்றும் ஊர் அழைக்கும்.

தொடரும்

சனி, 27 நவம்பர், 2010

ஊடகம்- இந்தியாவின் இன்னொரு அவலம்

மீடியா- இன்று ஊடகம் தன் முகத்தினை முழுவதுமாக வியாபாரத்தினை மையப் படுத்தி வருகிறது .

ஒரு முக்கிய செய்தி கீழ்க்கண்ட இந்த 13 காட்சிகளிலும் இல்லை:

காட்சி 1.மும்பை தீவரவாதி தாக்குதல் நடக்கும் போது நேரடி அலைவரிசை காண்பித்து, ஓட்டலில் தங்கிய தீவிரவாதிகளுக்கு உதவியும் புரிந்து விட்டு. இந்த விசேஷ(?) செய்தியை உங்களுக்கு முதலில் தரும் எங்கள் சேனல் என்று லிப்ஸ்டிக் புன்னகையுடன் ஒரு காட்சி.

காட்சி 2 .ஐஸ்வர்யா-அபிசேக் திருமணம் நடந்த மூன்று நாட்களும் நேரடி அலைவரிசை செய்த அணைத்து செய்தி நிறுவனங்களின் TRP யும் எகிறியது என்று அதை அரை பக்க விளம்பரப் படுத்திய தமிழ் நாளிதழ் ஒன்றின் மீதிருந்த வாழைக்காய் பஜ்ஜி !!.

காட்சி 3. ஏதோ ஒரு புரட்சி எழுத்தாளன் அல்லது பசிவுடயவன் - அவன் காஷ்மீரிய குடிமகனாகவோ, இல்லை ஈழத் தமிழனாகவோ இல்லை அது நானாகவோ இருக்கலாம்- இவன் அனுப்பிய தன் இனத்தின் அழிவைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்ட கட்டுரையை, கொட்டாவி விட்டுக் கொண்டே வாசித்து விட்டு,தன் மனைவியிடம் என்ன சமையல்? என்ன உடை அணிந்திருக்கிறாய் என்று கொஞ்சி பேசிக் கொண்டிருக்க.(அவள் மனைவி தான் என்று நிச்சயமாய் எனக்கு தெரியாது)

காட்சி 4 . ஒரு வாசகன் எழுதிய இலக்கிய  நயமிக்க வெண்பாவினையும், மற்றொரு வாசகன் எழுதிய அவன் வசிக்கும் ஊரின் அவல நிலை பற்றிய குறிப்பையும், இன்னுமொரு புதிய எழுத்தாளன் நூற்றி ஏழாவது தடவையாக முயற்சி செய்த ஒரு மாணவனின் சிறுகதையும் குப்பைக் கூடையை நிரப்பிக் கொண்டிருக்க, எலியானவின் படத்தை முன் அட்டையில் போட்டு,அனுஷ்காவின் படத்தினை நடுப்பக்தில் போடவும் முடிவெடுத்து சிகிரெட்டை அணைக்கும் எடிட்டர்

காட்சி 5 . தன் எடுத்த படத்தை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தே ஆகவேண்டும் என்று சட்டம் போடாத குறையாய் ப்ரோமோசன் வேலைகள் செய்யும் மீடியாவின் சிறப்பு காட்சி "தி மேகிங் ஆப் எந்திரன் மறு ஒளிபரப்பு "

காட்சி 6 . "எல்லா கோயிலுக்கும் சென்று யாகம் நடத்தும்,எல்லா இந்து பண்டிகையும் கொண்டாடும் ஜெயலலிதாவுக்கு எனன அருகதை இருக்கிறது பெரியாரைப் பற்றியும் பகுத்தறிவையும் பற்றிப் பேச" என்று கலைஞர் சாடும் காட்சி கலைஞர் டிவியில், "பகுத்தறிவு- என்று சொல்லிக் கொண்டு தஞ்சை கோயிலுக்கு பின் வாசலில் சென்று, மஞ்சள் துண்டுடுத்தி வலம் வரும்,குல தெய்வ வழிபாடு கொள்ளும், ஓட்டுக்காக நோன்பு கஞ்சி குடித்து இசுலாமிய நம்பிக்கையும் கொள்ளும் கலைஞருக்கு  என்ன அருகதை" என்று ஜெய செய்திகளில் அலற, பெரியாரிஸ்டுகள் தாங்கள் யார் பக்கம் என்று தெரியாமல் ராசிபலன் பார்க்கும் ஒரு  காட்சி.

காட்சி 7.   நாமும் ஆரம்பித்தோமடா ஒரு தனியார் சேனல் என்று விஜயகாந்த், ராமதாஸ்,தங்கபாலு,திருமா என எல்லோரும் அண்டப் புழுகு புழுகிக்கொண்டிருக்க, ஒரு அனல் பறக்கும் விளம்பரம் ஒன்று பாருங்கள் ,"விரைவில் விஜய.டி.ராஜேந்தரின் 'குறள் டிவி' "

காட்சி 8. சுதந்திர தின ஸ்பெஷல் - வைகைப் புயல் வடிவேலு - ஒரு சிறப்பு பேட்டி;
நடிகை -களவானி ஓவியாவின் அடுத்த இலக்கு; கலைஞர் பெயர் வைத்த மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி;(ஆ .... ரிமோட் வேலை செய்யாததால்) DD national-இல் பாரதப் பிரதமர்  குண்டு துளைக்காத கூண்டில் அடைபட்டுக் கொண்டு, தேசிய பாதுகாப்பில் இந்த அரசு எவ்வளவு சாதனைகள் செய்தது என்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசி முடிக்கும் முன்னர் ரிமோட் வேலை செய்ய, காதலில் அதிகம் சொதப்புவது யார்  ஆண்களா ?பெண்களா? என்று சன் டிவியில் சாலமன் அவர்களும்- கலைஞர் டிவியில் லியோனியும், ஜெய டிவியில் இன்னோர் பேராசிரியரும் நடத்தும்(நாட்டுக்கு மிகவும் தேவையான) பட்டி மன்றம் .விஜய் டிவியில் ஜாக்கிசான் படம் , கார்ட்டூனில் ஸ்கூபி டூவும், போகோவில் - வீர் ஹனுமனும், சுட்டி டிவியில் டோராவும் ஓட ....ஆங் இன்றைய ஸ்பெசல் என்ன தெரியுமா இந்தியா தொலைக் காட்சியில் முதன்முறையாக BF ஒளிபரப்பினர்.BF - அதாங்க best friend

காட்சி 9 : சலூன் கடை இந்தியா வாங்கிய மினி உலக கோப்பை மறு ஒளிபரப்பை (72 ம்   முறை) பார்த்துக் கொண்டே ஒருவன் தலை கொடுக்க, ஸ்பெக்ட்ரம் ராஜா(புனைப் பெயர்) ஊழல் தொகை(உண்மையில் அது இழப்புத் தொகை - ஊழல் தொகை அல்ல) 176 ஆயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று கடைக்காரர் தலை கொடுத்தவனிடம் கேட்டார்.அடுத்து வரப் போகும் ஆள் தந்தியின் சினிமா விளம்பரம் பார்க்க, அந்த செய்தித் தாளின் மறுபக்கம் போட்ட 60 வயது கிழவியும் ,25 வயது வாலிபனும் செய்த திருமணம் பற்றிய செய்தியை இன்னொருவன் எட்டிப் பார்த்து படித்துக் கொண்டிருந்தான்

காட்சி 10௦: FM ரேடியோவில் traffic updates கேட்டுக் கொண்டே சென்று விபத்துக்குள்ளான ஒரு ஆள் அடிபட்டு முழுவதும் இறப்பதற்குள், செய்தி கிடைத்தது என படம் எடுக்க ஒருவன் சென்றான்.

காட்சி 11 : மேதாவியாய் தன்னை காட்டிக்கொள்ள (கொல்ல) நினைத்த ஒரு காளிதாசனும் , அழகான கட்டுரைகளால் மனம் கவரும் ஹெமந்தும் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்க(http://hemanththiru.blogspot.com/).ஏதோ ஒரு தர்கவாதி நீலப் படங்களை பதிவிறக்கம் செய்திக் கொண்டிருந்தான்.இன்னொருவன், என்னதான் நல்ல எழுதினாலும் சாரு நிவேதிதாவின் எழுத்தை படிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை மீறி படித்து முடித்து புலம்பிக் கொண்டிருந்தான்."ச்சே !! ஒரு மீரா ஷாம்பூவுக்காக, புதிய தலை முறை வாங்காமல் இதை வாங்கி வைத்துவிட்டேனே  " என்று புலம்பியவாறே.

காட்சி 12 .நித்தியானந்தாவைப் பற்றி ப்றேமானந்தாவிடம் கேட்பது ஒரு இதழிலும், காமக் கொடுரனின் சல்லாபங்களை ஒவ்வொரு வரியை விவரித்து இன்னொரு இதழிலும், ரியல் எஸ்டேட்,pothys, joy alukkaas தவிர ஒரு மண்ணும் விளங்காத ஒரு இதழும் மிகப் பிரபலமாக விற்றுத் தள்ளுகிறது ஏகப்பட்ட பிரதிகளை.

காட்சி 13 .எப்போதும் போல் பரிந்துரைக்கப் பட்ட பங்குகளை வாங்காமல் இருக்க உதவிய பேப்பர் போடும் பையனுக்கு 5 ரூபாய் இனாம், அவன் அன்று தாமதமாக பேப்பர் போட்டதால் அந்த பங்குகளை வாங்காமல் விட, நிபிட்டி 200௦௦ பாய்ண்ட்ஸ் டவுன் -எல்லாம் டிவியில் காட்டிய கொரியப் போர்.

சிறப்புக் காட்சி :
*ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல;
*சன் மியூசிக் -BIG FM பாடல்களும் அல்ல;
*நெக்ஸ்லைட்டுகளின் துண்டுப் பிரசூரமோ - வீடியோவோ அல்ல;
*பிரணாப்,லாலு, ராகுல் , சோனியா,அத்வானியின் பீலாக்களும் அல்ல;
*ஏன், நித்தம் அறைகூவல் விடும் ஹோம் ஜிம் செட்டும் அல்ல, யுனானி மருந்தும் அல்ல;
*கிரிக்கெட் மாட்ச்சும் அல்ல ;
*உலகம் அழியும் பிரளயம் வந்து விட்டது(time for second coming), தேவனிடம் வாருங்கள் எனும் பிராத்தனையும் அல்ல,
*discovery of India-Micheal woods or Black hole theory- S.Hawking என டிஸ்கவரி சேனல் தமிழ் உல்டாக்களும் அல்ல;











அந்த முக்கிய செய்தி யாதெனில் :
>>>>>>>>>>> வனிதா விஜயக் குமார் தன் அப்பா,அம்மா, அண்ணா பற்றி குடும்ப நிகழ்வுகளை அம்பலமாக்கப் போகிறார்.

என்ன கொடுமை சரவணா இது ?????????

சனி, 20 நவம்பர், 2010

வீர நாயக்கன் - பகுதி 1

 கதை முன்னோட்டம்





 13 -ஆம் நூற்றாண்டின் பாதியில் இக்கதை ஆரம்பிக்கிறது.....................


பகுதி -1 குளக்கரையில் ஒரு ஆபத்து

நித்திரைக்கு செல்ல வேகமாக தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான் கதிரவன்.பறவை எழுப்பும் சத்தம் தவிர அந்த ரம்மியமான சூழலை கெடுப்பதற்கு அவ்வேளையில் பொதுவாக யாரும் வருவதில்லை.ஆனால், அன்று மட்டும் அந்த வறண்ட காட்டுப் பகுதியில் சிறிது பதட்டம் நிலவிக் கொண்டிருந்தது.ஆம்பிராவதி நதியிலிருந்து 30 காத தொலைவில் உள்ள சிறிதும் அடர்த்தியற்ற ஆனால் ஆபத்தான அந்த காடு, அப்பொழுது அசாதரணமான தோற்றம் கொண்டிருந்தது.

அங்கிருந்த ஒரு குளக்கரைக்கு குளிக்க சென்ற சிலர் எதையோ விரட்டிக் கொண்டு வந்தனர்.கையில் அம்புடனும், வேலுடனும் மூன்று வாலிபர்களும் ஒரே ஒரு வேலினை ஏந்திக் கொண்டு ஒரு தோற்றத்தில் மிக சாதரணமான(இளைத்த தேகத்துடன்) ஒரு இளைஞனும் யாரையோ தாக்க ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு முன்னாலே அந்த குளத்தில் தாகம் தணிக்கச் சென்ற ஒரு புலி.ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டு, அந்நால்வரில் யார் நமக்கு முதல் விருந்து என்று நோட்டம் விட்டபடி உறுமிக் கொண்டிருந்தது.நால்வரும் வேடர்களாக இருந்தாலும்,பொழுது சாய்ந்த களைப்பிலும்,எதிர்பாராத இந்த சந்திப்பிலும்(புலியுடன்) சற்று பதட்டமடைந்து இருந்தனர்.எனினும், பொம்மன் எனும் வேடன் ஒருவன் கையிலிருந்த அந்த வில்லிலிருந்து ஒரு அம்பு நேராக புலியின் காலில் ஒன்றினை பதம் பார்த்தது.

கழுத்துக்கு வைத்த குறி காலில் பட்டதில், கொஞ்சம் நிதானம் தவறினான்,மறுபடியும் சுதாரிப்பதற்குள் அவன் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்தது அப்புலி.இந்த தாக்குதலை யாரும் எதிர்பார்க்காத போதிலும் கையில் வேல் மட்டும் ஏந்திய அந்த இளைஞன் புலியின் இடுப்பில் தன் வேலினால் குத்தினான்.சட்டென்று புலி அவனை நோக்கித் திரும்பியது.அவன் சுதாரித்துக் கொண்டு பாய்வதற்கு வந்த புலியிடம் லாவகமாக தப்பி அந்த குளக்கரை மேட்டில் ஓட்டம் பிடித்தான்.

அந்த புலியோ அம்மூவரையும் விட்டு விட்டு ,ஓட்டமெடுத்த அந்த இளைஞனைத் துரத்தியது.அம்முவரும் புலியின் பின்னரே தொடர்ந்து வந்து அம்பேய்தினாலும் அங்கங்கு காயப்படுதியவாறு உராய்ந்துச் சென்றதே தவிர அதன் துரத்தலை நிறுத்தவில்லை. ஆனால் அந்த வேட இளைஞனோ குளக்கரையின் சரிவான பகுதிகளில் புயலென ஓடினான்.அச் சரிவில் புலியினால் சரியாக காலினை ஊன்ற முடியவில்லை.

அவர்களுக்கு இடையே இருந்த தூரம் அதிகரிக்க, அங்கு அருகில் இருந்த ஒரு குன்றின் பாறையை பிடித்து தாவி ஏறினான்.துரத்தி வந்த அந்த புலியினைக் காணவில்லை, எண்ணெயில் தெறிக்கும் கடுகு போல் படபடத்துக் கொண்டிருந்த அவன் இதயத் துடிப்பு அப்பொழுதும் அடங்கவில்லை.சட்டென்று,வேகமாக அச்சிறிய குன்றின் உச்சியில் ஏறி, புலி எங்கு சென்றது என்று நோட்டம் விட்டான்.அவனுடன் வந்த மூவரும் பாறையில் நின்றவனைக் கண்டு நிம்மதியுடன் அவனை நோக்கி விரைந்தனர்

"ஏலே!! வீரா.. சரிதாம் ...புலியை விட உனக்கு சடுதியா ஓடத் தெரியும்னு நிருபிச்சிட்ட,, கீழ இறங்கி வா, ராவோட ஊருக்குள்ள போவம் " என்றவாறே அவன் தோழனான பொம்மன் அவனிடம்  சொல்லிக் கொண்டே அக்குன்றருகே சென்றான்.கொஞ்சம் நிதானத்துக்கு வந்த வீரனின் நம்பிக்கையை குலைக்கும் வகையில், பொம்மன் மறுபடியும் கத்தினான்."வீரா !!! புலி உமக்கு பின்னால நிக்குதுலே !! குதிச்சு வந்துடு !!! பெருமாளே...நீ தான் காப்பத்தொனும் "என்று உரக்க அலறினான்.

"எங்கப்பா ஆஆ "என்றவாறே திரும்பிக் கூட பார்க்காமல் அப்பாறையில் இருந்து வீரனும் குதிக்க,அவன் மேலேயே அப்புலியும் குதித்தது.40 அடி உயரத்திலிருந்து தொப்பென விழும் சத்தம் அம்மூவரின் நெஞ்சிலும் ஊசி இறங்குவது போல் இருந்தது.கண்களை திறத்து பார்க்கும் போது, கால் பங்கு உயிருடன்,கழுத்தில் வேலுடனும் உடம்பெல்லாம் குருதியுடனும் உறுமிக்கொண்டே இருந்தது அப்புலி.

வீரனோ,அப்பாறையில் இருந்த ஒரு இடுக்கில் ஒரே கையினை பிடித்து தொங்கியவாறே அந்த புலியை பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.எல்லோரும் அதிசயமாக அவ்வீரனை பார்த்துக் கொண்டிருந்தனர்."எப்பே !! நீ நெசமாலும் வீரன்தான்" என்று சிரித்தவாறே பொம்மன் அவனை பார்த்து சொல்ல.

வீரன் "உன்னை கொல்ல வந்த புலியை தான நான் குத்த,அது என்னை துரத்தியது..தொங்கிகிட்டு இருக்கிற என்னை தூக்கிவிடுரிகளா, இல்லை அந்த பாவப் பட்ட புலியோட நானும் போய்ச் சேரட்டுமா" என்றான்". கிடுகிடுவென அப்பாறை மீது ஏறி அவனை காப்பாற்றியவாறே,"ஏ வீரா!! அந்த புலிய ஒரே போடுல கொன்னுட்டு பரிதாபமா படுற ?? ஏய் !நீ சாதிச்சிட்ட டோய்! " என்றான் பொம்மன்.

"உசிரு மேல உள்ள பயம் டா! இனி என்னை எவனும் குறை கூறி சிரிக்க மாட்டிங்களே??!"என்றவாறே தன் மீது இருந்த சிராய்ப்புகளில் எச்சிலை தடவிக் கொண்டு அந்த புலியை நோக்கினான்.

இந்த புலி வேட்டையில் இருந்து தான் அவ்வூருக்கு ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய மாற்றம்..அங்கு ஆட்சிசெய்து வந்த மன்னனுக்கும் அவ்வூரிலேயே ஒரு தலைவலி ஆரம்பித்தது. ஒரு சாதாரண குடிமகனுக்கு  நாட்டின் அரசியலில் பங்குகொள்ளும் காலமும் நெருங்கி வந்தது.எல்லாம் அந்த சேரநாட்டின் சிறு கிராமமான வெள்ளியனை எனும் ஊரில் தான்.வெள்ளியனை எனும் சிற்றூர் சேர நாட்டில்,ஆம்பிராவதி ஆற்றில் இருந்து சுமார் 30௦ காத தூரம் தெற்க்கே செல்லும் காட்டு பகுதியின் தொடக்கத்தில் உள்ளது.அவ்வூர் முழுதுமாக நிர்மாணிக்கப் படவில்லை சில ரகசியக் காரணங்களுக்காக அங்கிருக்கும் காட்டு பகுதியில் அவ்வூர் நிர்மாணிக்கப் பட்டுவந்தது.இந்த சிற்றூர் பல அரசியல் முடிச்சுகளின் கூடாரமாய் அப்போது இருந்தது.

இந்நிலையில் அவ்வூரின் கிழக்கு பகுதியில் உள்ள கோயிலை ஒட்டிய குடியிருப்பில், எந்த பாவமும் தெரியாத ஒரு பூவை ஒருத்தியை நாம் காணப் போகிறோம், அவள்  கோதை என்ற பெயர் கொண்ட பேதை ஒருத்தி - அப்பொழுது பூக்களை தோரனமாக்கி கொண்டிருந்தாள்.யாருக்குத் தெரியும்? தான் நித்தம் தொழும் தன் தெய்வமான பெருமாள் ஒரு பெருஞ்சோதனையினை தனக்கு தருவார் என்று தெரியாமல், அப்பெருமானுக்கு மாலையை தொடுத்துக் கொண்டிருந்தாள்.




தொடரும்
கரி-காளி.

(உங்கள் விமர்சங்கள் வரவேற்க்கப்படுகின்றன )

புதன், 17 நவம்பர், 2010

சுவாமியே சரணம் ஐயப்பா

ஐயப்பனை பற்றிய என் பதிவு பாடல்களுடன், கீழே சொடுக்கவும்
   http://kaalidossan.hpage.com

1942 - sabarimalai

now


Please dont lit and keep the holy place clean, already the green environment of sabarimala is diminishing.

click the below link for sabarimala-satellite view
map

செவ்வாய், 16 நவம்பர், 2010

ஒரு கதை முன்னோட்டம்

சாண்டில்யன்,கல்கி ஆகியோரின் பாதிப்பு இல்லாமல் என்னால் எழுத முடியாது என்றாலும்,இலக்கிய உலகுக்கு சுஜாதா எனும் சாளரம் இன்றி இன்றைய சாமானியர்கள் அவ்வளவு எளிதாக நுழைய முடியாது.எனினும் சரித்திரத்தின் மீதான ஆவல் எனக்கு கமலஹாசனிடம் இருந்து தான் தொடங்கியது.திரு.கமல் அவரின் ரசிகர்கள் கூட தேடலில் ஊறி இருப்பார்கள் என்று இப்ப்போது எனக்கு விளங்குகிறது.(நம்மவர் படத்தின் வரலாற்று ஆசிரியருக்கும் என் நன்றி)

இந்த மூன்று நபர்களின் தாக்கத்தால் உருவான என் எழுத்து ஓரளவுக்கு என் வட்டத்தில் உள்ளோர் தந்த உற்சாகத்திலும்,ஊக்கத்திலும் நான் இந்நாவலை எழுத முயற்சிக்க வைத்தது.கிட்ட தட்ட 20 ,25 சிறுகதைகள் எழுதி வைத்து அதன் மூலம் முகவரி கிடைக்கும் முன்னர் இந்த நாவல் எழுதும் ஆசை வந்ததன் காரணம்,இதன் காரணமாய் நான் வாசிக்க இருக்கும் நூல்களின் எண்ணிக்கை தான்.ஆம்,இது ஒரு சரித்திர நாவல்.

இப்போதைக்கு இந்நாவலை சிறு குறிப்பாகவும், சில விளக்கங்களுடன்(ஆசிரியர் தலையீட்டுடன் ) ஆரம்பிக்கறேன்.உங்களது ஊக்கத்துடன் விமர்சனம் தான் எனக்கு மிகவும் தேவை.

இந்நாவலின் நோக்கம்,
1 .பொதுவாக மக்களுக்கு தெரியாமல் போன ஒரு சிறிய கோயில்,ஏரி மற்றும் அந்த ஊருக்கு வந்தேறிய மக்களின் அடையாளத்தை இம்மண்ணிற்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.எனது நாவலின் தலைவன் ஒரு சேனைத் தளபதியோ,இல்லை ஒரு இளவரசனோ இல்லை, அவன் சாதாரண குடிமகன் .
2 .அது மட்டுமின்றி உலக அளவில் தமிழின் மதிப்பு உயர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டிலும்,ஈழ தேசத்திலும் தமிழனின் நிலை தாழ்ந்து கொண்டே வருகிறது.
எம்மொழி உணர்வை, அதன் சிறப்பை, எம்மக்களின் மாண்பை நான் சித்தரிப்பதை வைத்து,கடைக் கோடியில் வாழும் தமிழன் கூட தமிழ் உணர்வில் எப்படி இருப்பான் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

மேலும் உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்,சரித்திரத்தை கரைத்து குடித்தவன் அல்ல நான். ஆகவே ஒரு வரலாற்று உண்மையினைச் சார்ந்து தான் இக்கதை ஓட்டம் சென்று கொண்டிருக்கும் ..இந்த அடிப்படை உண்மையிலேயே ஒரு சர்ச்சை இருப்பதால் ,ஒருவேளை எழுதும் போதே கதைக்களத்தினை மாற்றிஎழுதும் சூழல் ஏற்படலாம்.(ஹி ஹி... ஏனெனில், இது தான் என் முதல் நாவல் )

(இந்நாவலை முடித்தவுடன் உடனடியாக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் )

நன்றி:
சோழ தேசத்தை பற்றிய தகவல்களுக்கு எனது தோழன் ரமேஷுக்கும், கதை நடக்கும் களமான சேர தேசத்தை பற்றி களப் பனி செய்து தகவல்களை கொடுத்துவரும் என் கல்லூரித் தோழன் திரு.அருண்குமார் நாட்டாமை அவர்களுக்கும் என் நன்றி.என் வலைப்பதிவை பார்த்து வரும் உங்களுக்கும் என் நன்றி

சமர்ப்பணம்:
அழிந்து கொண்டிருக்கும் எம்மின மக்களின் கண்ணீருக்கும், வேதனைக்கும் இந்த புதினம்  மூலம் கிடைக்கும் நற்பெயரையும்,பாராட்டையும் சமர்பிக்கிறேன்.

நன்றி

இப்படிக்கு
கரி_காளி 


கதை :
தலைப்பு :   "வீர நாயக்கன்  "



















வெள்ளி, 29 அக்டோபர், 2010

பக்தி மனம்



முத்தை  தரு  பத்தி  திருநகை
அத்துக்கிறை  சக்தி  சரவண
முத்திக்கொரு  வித்து  குரு  பர  என  ஓதும் 

முக்கட்  பர  மாற்கு  சுருதியின்
முற்பட்டது  கற்பித் - திருவரும்
முப்பத்து  முவர்க்கத் - தமரரும்  அடி  பேனா 

பத்துத் - தலை  தத்தக்  கணைதொடு
ஒற்றைக் - கிரி மத்தைப்  பொருதொரு
பட்டப்- பகல் வட்டத் - திகிரியில்  இரவாக 
பத்தற்கிர தத்தைக் கடவிய 

பச்சைப்புயல்  மெச்சத்  தகு  பொருள்
பட்சத்தொடு  ரட்சித்  தருள்வதும்  ஒரு  நாளே 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிறத்த  படம் வைத்துப் பயிரவி
திக்கொட்க  நடிக்கக் கழுவொடு கழுதாட 
திக்குப்  பரி  அட்டப்  பயிரவர்
தொக்குத்தொகு  தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக  என  ஓத 

கொத்துப்  பறை  கொட்டக்  களமிசை
குக்கு  க்குக்  குகுகுகு
குத்திப்  புதை  புக்குப்  பிடியென  முதுகூகை 
கொட்புற்றெழ  நட்பத்ர்  அவுணர
வெட்டி  பலியிட்டுக்  குலகிரி 

குத்துப் பட  ஒத்துப்  பொரவல  பெருமாளே 

A real hero from Madurai

இமெயிலில் வந்த தகவல் 
 2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களேஅதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம்என்று மட்டும் நம்பி விடவேண்டாம்உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில்நேர்மையாகவும்தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும்உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராககாவல் துறைஅதிகாரியாகஆசிரியாராகசமுக சேவகராகதுப்புரவு தொழிலாளியாக மற்றும்நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம்அவர்களை சந்திக்கும்சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம்அவர்களில் யாரேனும் கவுன்சிலர்தேர்தலில் நிற்கக்கூடும்நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாகஅறிமுகபடுத்துகிறேன்இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலைசிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்ஒருதமிழனாகமதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன்இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறதுஇதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில்நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒருபெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள்இது CNN தொலைகாட்சியில் இந்தியநேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலைஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறதுஇதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும்தமிழனும்பெருமை பட வேண்டும்ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29இருப்பு : மதுரை
அப்படி என்ன செய்து விட்டார்?அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறுகருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம்சில சமயம்காசு போடுவோம்அதற்கும் மேல் என்ன செய்வோம்அதை மறக்க முயற்சிப்போம்.ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல்இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார்மழைபுயல்,தேர்தல்,கலவரம்,பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார்.தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லைஇது வரைஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தவிருதுகள் வென்ற செப் சமையல்கலை வல்லுநர் இவர்சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலைகிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்குவந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும்அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்துமதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்றுஉணவு கொடுக்க ஆரம்பிக்கிறார்இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவைதொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும்இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார்இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்இவரது அன்னை இவர் குறித்து கவலைபட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்கநான் என்ன செய்கிறேன் என்றுபாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துபோயிருக்கிறார்இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களைபார்த்துக்கொள்நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்றுசொல்லிருக்கிறார்இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததைஅடக்க முடியாமல் தவித்தேன்எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லிதலையில் வைத்து கொண்டாடுகிறோம்பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரைஎண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம்முதல் நாள்அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம்இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லைசரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள்தருகிறார்களாஅவர்கள் என்ன செய்தார்கள்நானும் கொடை செய்கிறேன் என்றுசொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள்.அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்இவர் தான் உண்மையானஹீரோசாகசம் செய்வது சாதனை அல்லஇல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை.எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோஇவரை பார்க்கவும்இவருடன் புகைப்படம்எடுத்துகொள்ளவும்இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும்,பொருள் உதவி செய்யவும்இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல்கொள்கிறேன்பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன்என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள்பொருளைப் பெற்றவன் சேமித்துவைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : 
ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம்ஒரு நல்ல விசயத்திற்கும்வோட்டு போடலாம் வாருங்கள்நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லைஎன்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம்.இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன்கேட்டுகொள்கிறேன்