மீடியா- இன்று ஊடகம் தன் முகத்தினை முழுவதுமாக வியாபாரத்தினை மையப் படுத்தி வருகிறது .
ஒரு முக்கிய செய்தி கீழ்க்கண்ட இந்த 13 காட்சிகளிலும் இல்லை:
காட்சி 1.மும்பை தீவரவாதி தாக்குதல் நடக்கும் போது நேரடி அலைவரிசை காண்பித்து, ஓட்டலில் தங்கிய தீவிரவாதிகளுக்கு உதவியும் புரிந்து விட்டு. இந்த விசேஷ(?) செய்தியை உங்களுக்கு முதலில் தரும் எங்கள் சேனல் என்று லிப்ஸ்டிக் புன்னகையுடன் ஒரு காட்சி.
காட்சி 2 .ஐஸ்வர்யா-அபிசேக் திருமணம் நடந்த மூன்று நாட்களும் நேரடி அலைவரிசை செய்த அணைத்து செய்தி நிறுவனங்களின் TRP யும் எகிறியது என்று அதை அரை பக்க விளம்பரப் படுத்திய தமிழ் நாளிதழ் ஒன்றின் மீதிருந்த வாழைக்காய் பஜ்ஜி !!.
காட்சி 3. ஏதோ ஒரு புரட்சி எழுத்தாளன் அல்லது பசிவுடயவன் - அவன் காஷ்மீரிய குடிமகனாகவோ, இல்லை ஈழத் தமிழனாகவோ இல்லை அது நானாகவோ இருக்கலாம்- இவன் அனுப்பிய தன் இனத்தின் அழிவைப் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்ட கட்டுரையை, கொட்டாவி விட்டுக் கொண்டே வாசித்து விட்டு,தன் மனைவியிடம் என்ன சமையல்? என்ன உடை அணிந்திருக்கிறாய் என்று கொஞ்சி பேசிக் கொண்டிருக்க.(அவள் மனைவி தான் என்று நிச்சயமாய் எனக்கு தெரியாது)
காட்சி 4 . ஒரு வாசகன் எழுதிய இலக்கிய நயமிக்க வெண்பாவினையும், மற்றொரு வாசகன் எழுதிய அவன் வசிக்கும் ஊரின் அவல நிலை பற்றிய குறிப்பையும், இன்னுமொரு புதிய எழுத்தாளன் நூற்றி ஏழாவது தடவையாக முயற்சி செய்த ஒரு மாணவனின் சிறுகதையும் குப்பைக் கூடையை நிரப்பிக் கொண்டிருக்க, எலியானவின் படத்தை முன் அட்டையில் போட்டு,அனுஷ்காவின் படத்தினை நடுப்பக்தில் போடவும் முடிவெடுத்து சிகிரெட்டை அணைக்கும் எடிட்டர்
காட்சி 5 . தன் எடுத்த படத்தை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தே ஆகவேண்டும் என்று சட்டம் போடாத குறையாய் ப்ரோமோசன் வேலைகள் செய்யும் மீடியாவின் சிறப்பு காட்சி "தி மேகிங் ஆப் எந்திரன் மறு ஒளிபரப்பு "
காட்சி 6 . "எல்லா கோயிலுக்கும் சென்று யாகம் நடத்தும்,எல்லா இந்து பண்டிகையும் கொண்டாடும் ஜெயலலிதாவுக்கு எனன அருகதை இருக்கிறது பெரியாரைப் பற்றியும் பகுத்தறிவையும் பற்றிப் பேச" என்று கலைஞர் சாடும் காட்சி கலைஞர் டிவியில், "பகுத்தறிவு- என்று சொல்லிக் கொண்டு தஞ்சை கோயிலுக்கு பின் வாசலில் சென்று, மஞ்சள் துண்டுடுத்தி வலம் வரும்,குல தெய்வ வழிபாடு கொள்ளும், ஓட்டுக்காக நோன்பு கஞ்சி குடித்து இசுலாமிய நம்பிக்கையும் கொள்ளும் கலைஞருக்கு என்ன அருகதை" என்று ஜெய செய்திகளில் அலற, பெரியாரிஸ்டுகள் தாங்கள் யார் பக்கம் என்று தெரியாமல் ராசிபலன் பார்க்கும் ஒரு காட்சி.
காட்சி 7. நாமும் ஆரம்பித்தோமடா ஒரு தனியார் சேனல் என்று விஜயகாந்த், ராமதாஸ்,தங்கபாலு,திருமா என எல்லோரும் அண்டப் புழுகு புழுகிக்கொண்டிருக்க, ஒரு அனல் பறக்கும் விளம்பரம் ஒன்று பாருங்கள் ,"விரைவில் விஜய.டி.ராஜேந்தரின் 'குறள் டிவி' "
காட்சி 8. சுதந்திர தின ஸ்பெஷல் - வைகைப் புயல் வடிவேலு - ஒரு சிறப்பு பேட்டி;
நடிகை -களவானி ஓவியாவின் அடுத்த இலக்கு; கலைஞர் பெயர் வைத்த மானாட மயிலாட சிறப்பு நிகழ்ச்சி;(ஆ .... ரிமோட் வேலை செய்யாததால்) DD national-இல் பாரதப் பிரதமர் குண்டு துளைக்காத கூண்டில் அடைபட்டுக் கொண்டு, தேசிய பாதுகாப்பில் இந்த அரசு எவ்வளவு சாதனைகள் செய்தது என்று அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசி முடிக்கும் முன்னர் ரிமோட் வேலை செய்ய, காதலில் அதிகம் சொதப்புவது யார் ஆண்களா ?பெண்களா? என்று சன் டிவியில் சாலமன் அவர்களும்- கலைஞர் டிவியில் லியோனியும், ஜெய டிவியில் இன்னோர் பேராசிரியரும் நடத்தும்(நாட்டுக்கு மிகவும் தேவையான) பட்டி மன்றம் .விஜய் டிவியில் ஜாக்கிசான் படம் , கார்ட்டூனில் ஸ்கூபி டூவும், போகோவில் - வீர் ஹனுமனும், சுட்டி டிவியில் டோராவும் ஓட ....ஆங் இன்றைய ஸ்பெசல் என்ன தெரியுமா இந்தியா தொலைக் காட்சியில் முதன்முறையாக BF ஒளிபரப்பினர்.BF - அதாங்க best friend
காட்சி 9 : சலூன் கடை இந்தியா வாங்கிய மினி உலக கோப்பை மறு ஒளிபரப்பை (72 ம் முறை) பார்த்துக் கொண்டே ஒருவன் தலை கொடுக்க, ஸ்பெக்ட்ரம் ராஜா(புனைப் பெயர்) ஊழல் தொகை(உண்மையில் அது இழப்புத் தொகை - ஊழல் தொகை அல்ல) 176 ஆயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று கடைக்காரர் தலை கொடுத்தவனிடம் கேட்டார்.அடுத்து வரப் போகும் ஆள் தந்தியின் சினிமா விளம்பரம் பார்க்க, அந்த செய்தித் தாளின் மறுபக்கம் போட்ட 60 வயது கிழவியும் ,25 வயது வாலிபனும் செய்த திருமணம் பற்றிய செய்தியை இன்னொருவன் எட்டிப் பார்த்து படித்துக் கொண்டிருந்தான்
காட்சி 10௦: FM ரேடியோவில் traffic updates கேட்டுக் கொண்டே சென்று விபத்துக்குள்ளான ஒரு ஆள் அடிபட்டு முழுவதும் இறப்பதற்குள், செய்தி கிடைத்தது என படம் எடுக்க ஒருவன் சென்றான்.
காட்சி 11 : மேதாவியாய் தன்னை காட்டிக்கொள்ள (கொல்ல) நினைத்த ஒரு காளிதாசனும் , அழகான கட்டுரைகளால் மனம் கவரும் ஹெமந்தும் ப்ளாக் எழுதிக்கொண்டிருக்க(http://hemanththiru.blogspot.com/).ஏதோ ஒரு தர்கவாதி நீலப் படங்களை பதிவிறக்கம் செய்திக் கொண்டிருந்தான்.இன்னொருவன், என்னதான் நல்ல எழுதினாலும் சாரு நிவேதிதாவின் எழுத்தை படிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை மீறி படித்து முடித்து புலம்பிக் கொண்டிருந்தான்."ச்சே !! ஒரு மீரா ஷாம்பூவுக்காக, புதிய தலை முறை வாங்காமல் இதை வாங்கி வைத்துவிட்டேனே " என்று புலம்பியவாறே.
காட்சி 12 .நித்தியானந்தாவைப் பற்றி ப்றேமானந்தாவிடம் கேட்பது ஒரு இதழிலும், காமக் கொடுரனின் சல்லாபங்களை ஒவ்வொரு வரியை விவரித்து இன்னொரு இதழிலும், ரியல் எஸ்டேட்,pothys, joy alukkaas தவிர ஒரு மண்ணும் விளங்காத ஒரு இதழும் மிகப் பிரபலமாக விற்றுத் தள்ளுகிறது ஏகப்பட்ட பிரதிகளை.
காட்சி 13 .எப்போதும் போல் பரிந்துரைக்கப் பட்ட பங்குகளை வாங்காமல் இருக்க உதவிய பேப்பர் போடும் பையனுக்கு 5 ரூபாய் இனாம், அவன் அன்று தாமதமாக பேப்பர் போட்டதால் அந்த பங்குகளை வாங்காமல் விட, நிபிட்டி 200௦௦ பாய்ண்ட்ஸ் டவுன் -எல்லாம் டிவியில் காட்டிய கொரியப் போர்.
சிறப்புக் காட்சி :
*ஸ்பெக்ட்ரம் ஊழல் அல்ல;
*சன் மியூசிக் -BIG FM பாடல்களும் அல்ல;
*நெக்ஸ்லைட்டுகளின் துண்டுப் பிரசூரமோ - வீடியோவோ அல்ல;
*பிரணாப்,லாலு, ராகுல் , சோனியா,அத்வானியின் பீலாக்களும் அல்ல;
*ஏன், நித்தம் அறைகூவல் விடும் ஹோம் ஜிம் செட்டும் அல்ல, யுனானி மருந்தும் அல்ல;
*கிரிக்கெட் மாட்ச்சும் அல்ல ;
*உலகம் அழியும் பிரளயம் வந்து விட்டது(time for second coming), தேவனிடம் வாருங்கள் எனும் பிராத்தனையும் அல்ல,
*discovery of India-Micheal woods or Black hole theory- S.Hawking என டிஸ்கவரி சேனல் தமிழ் உல்டாக்களும் அல்ல;
அந்த முக்கிய செய்தி யாதெனில் :
>>>>>>>>>>> வனிதா விஜயக் குமார் தன் அப்பா,அம்மா, அண்ணா பற்றி குடும்ப நிகழ்வுகளை அம்பலமாக்கப் போகிறார்.
என்ன கொடுமை சரவணா இது ?????????
Are sure the topic is Kalidasan another face or else
பதிலளிநீக்குநானும் அந்த நிகழ்வுகளை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்!!
பதிலளிநீக்குYou cannot totally generalize it. there are so many news channels that have brought scams and scandals to light. there are so many films that is just focussed on the societal happenings. Its just that what you select to read and watch matters. Everything in the world has a commercial value attached to it. So, media cant deny it too. But still, media has never failed to act as a third eye of justice when needed. I can quote 13 examples for that.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குtake the case of spectrum issue focusing too bigger.Media says that total corrupted amount is 176000 crores.Its absolute wrong, that amount is not corrupted one and its a revenue loss to the government.(refer audit general statement).
பதிலளிநீக்குBut medias take this issue as corrupted.The crime has committed,but how the media presenting this issue to public.
NDTV show 30 minutes program on Raja's English fluency(when he called jayalalitha as 'he').Is that so vital than spectrum issue.
our media plays very vital role in our politics in negative character.
thats it
dossu...enna da pottuthakira
பதிலளிநீக்குNice... Generally its True.. Everyone working for their own wealth and, Tv and NewsPapers includes themselves too without knowing both are services to Public..
பதிலளிநீக்கு@Parkavi
If we watch any issues closely we can see two completely conflicting views for it.. Media support their own Political team( i mean the Party which they belong).. They are not interested in acting as a bridge between the public and Government.
@sathyan,
பதிலளிநீக்குThanks sathi.
My friend is about to launch a website, he is trying to publish as e-magazine.(let's share our contribution to his social responsible site)
Dass... sema CHECK !! True picture of today's media.. Today's India ! Not even 10% are working with responsibility. Majority is using the power and fame for own development not National development. One very important question is left out.. Adutha Superstar yaaru ????
பதிலளிநீக்கு