யாவரும் வெளியீடு - 26
இந்நூலுக்கான முன்னுரை நூலில் மிக முக்கியமான ஒன்று அதிலிருந்து
அவர் உதிர்க்கும் ஒரு விசயம் – ஒரு புதிய எழுத்தானது உடனடியான நிஜ வாழ்விலிருந்து சடக்கென்று
வியாபங்கொள்வதில்லை, மாறாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் பல நூற்றாண்டு இலக்கியங்களின்
வாயிலாக சுற்றி வளைத்துப் பயணித்த பின்னேயே உருவாகிறது என்று தொடங்கும் பிரம்மராஜனின்
முன்னுரையில், இளம் தலைமுறையினர் புதிய எழுத்துகளைத் தொடங்குவதற்கு, மொழிபெயர்ப்புகள்
அவசியமானது. அந்த வகையில் போர்ஹெயின் வரவு நமக்கு உற்சாகமளிக்கக் கூடியது.
இந்தத் தொகுப்பில் ஆலெஃப் என்கிற கதையோடு தொடங்கிய போர்ஹேயின்
படைப்புலகத்தில் எனது முதல் நுழைவு, ஏதோ ஒரு மூலையில் ஒமேகாவைப் பற்றி எழுதியதனால்
தான் சாத்தியமானதா என்ன?
சுமார் ஒன்னரை ஆண்டுகட்கும் முன்னராக – இணையத்தில் இந்த நூலினைக்
கொண்டுவர ஒரு Responsible Publisher வேண்டும் என்று அவர் பொதுவில் பதிந்திருக்கும்
போது எங்களுக்கு பத்தாவது நூல் கூட வந்திருக்கவில்லை. இதில் என் மீது வைத்திருக்கின்ற
நம்பிக்கை மட்டுமே இத்தனை கால தாமதமானாலும் அவரைப் பொறுமையாக இருக்க வைத்திருக்கிறது.
யாருக்கும் வெளிப்படையாக இந்த ப்ராஜக்ட் பற்றி சொல்லவில்லை என்றாலும் நிறைய நண்பர்கள்
என்னை ஆதரிப்பதைப் புரிந்து கொண்டேன்.
போர்ஹே ஏற்கனவே ஆங்காங்கு சில கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சிறுகதைத் தொகுப்பாகவும் வெளிவந்திருக்கிறது. பின்னவீனத்துவ புனைவு உலகில் தவிர்க்க
இயலாத பெயர் போர்ஹெஸ்
.
இந்த நூல் - நம்பிக்கையுள்ளோர்கள் பாதுகாக்கின்ற ஹோலி பைபிள்
போல. என்னைப் போன்று சிறுகதைகள் மீதும், புனைவுகள் மீதும் காதலுள்ளவர்களுக்கும் இருக்கும்
என்பது என் அசையாத நம்பிக்கை. அதனால் தான் வடிவத்திலும் இத்தனை Rich.
இதில் எடிட்டிங்கில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு வருடம்
– மிகத் தீவிரமான உழைப்பு, - ஜீ.முருகன், பிரதாப ருத்ரன் என இன்னும் சில நண்பர்களின்
உழைப்பிலும் உருவாகி இருக்கிறது.
இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுடன், கவிதைகள், கட்டுரைகள்
என மிக முக்கியமான பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆம். இந்த நூலுக்கான ஆக்கம் – இந்த இரண்டு வருடங்களில் அதன்
விலையைச் சற்று உயர்த்தியதுபோலவே..
இதில் Illustrationsமுதற்கொண்டு மூல புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டவையே
தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயன்படுத்தியிருக்கிறோம். அவரது மிகக்கடுமையான உழைப்பும்,
monotonousஆக இருந்தாலும் அவரை ஒருபொழுதேனும் உற்சாகமிழக்கச் செய்யவில்லை. மாறாக அவர்
எனது கடினமான நேரங்களில் உற்சாகப்படுத்தியே வந்தார். Proffessionalism,
Perfectionism, எதிலும் சமரசமற்றப் போக்கு என நாம் இன்னும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு
ஏராளமாக இருக்கின்றன.
சில விசயங்கள் பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இந்த
அறிவிப்பு முன்பதிவுக்கானது.
போர்ஹே – கெட்டி அட்டை – ராயல் சைஸ் – 320 பக்கங்கள் – விலை ரூ:550/-
போர்ஹே
- கதைகள், கட்டுரைகள் & கவிதைகள்
மொழிபெயர்ப்பு - பிரம்மராஜன்
முன் பதிவில் ரூ – 500 தபால் செலவு - இலவசம்
யாவரும் பதிப்பகத்தின் வங்கிக் கணக்கு விவரம்-
A/c no.34804520231(Yaavarum Publishers)
SBI Bank- Chinmaya Nagar Branch
IFSC code.SBIN0007990
பணம் அனுப்பிவைத்த UTR நம்பருடன் உங்கள் செல் நம்பர் – முகவரியை அனுப்பி
வைக்கவும்.
பின்னர் முக்கியமாகச் சொல்ல வேண்டியது என்னவென்றால் இது ஒரு
limited edition. அடுத்த பதிப்பில் Paperback தான். என்னடா இது முன்பதிவிலேயே அடுத்த
பதிப்பு பேசுகிறான் என்று தோன்றுகிறதா? அப்படித்தான் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக