அடுத்த மணிரத்னம் படம் பற்றிய பதிவு இது மிஸ்டர் பாரதி, காற்று வெளியிடை படத்தை ஒட்டி கேட்கப்பட்டு வரும் கேள்வி காற்று வெளியிடை என்றால் என்ன என்று..
பாரதியாய் மாறி இந்த பதிலைக் கண்டுணர முடியாது என்பது சாஸ்வதம்.
ஆனால் கண்ணம்மா இருந்தால் ஒருவேளை இதைக் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கும் என்று தோன்றியது.
ஏற்கனவே மூணு நாளு பக்கிங்க என்னிடம் கேட்டுவிட்டதால், முயற்சிக்கிறேன்.
- வெளியிடை..
- இடைவெளி
சொல்லிப்பார்த்தாயிற்று… இப்போது பாடலை ஒருமுறை
காற்று வெளியிடைக்
கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக்
களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும்
விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின்
மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள
மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித்
தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! -
இந்தக் (காற்று)
நீ யென தின்னுயிர்
கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப்
போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள்
நினைப்
பொன்னெனக் கொண்ட
பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும்
போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக்
(காற்று)
இந்த சிவப்புநிற வார்த்தைகளில் கிடைக்கின்ற
விஷயத்தை வைத்து கிடைக்கின்ற யோசனை…. நமக்குத் தெரிஞ்ச தமிழில் அவ்வளவு தான்
யோசிக்க முடியும். நாம என்ன கவிஞர் மகுடீஸ்வரனா?
இந்த மனுசன் கண்ணம்மாவை எவ்வளவு அருகில்
இருந்து பார்த்து வியந்தபடி பாடியிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன். இதைப்
புரிந்து கொள்ளனும்னா இரண்டாவது விஷயத்தை ஆராயனும், அமுதூற்றினை ஒத்த இதழ்களும்- மொதல்ல இதழில் இருந்து
தான் மனுஷன் ஆரம்பிக்கிறாப்ல. இதழ்களில் அமுது
ஊறுகிறது என்று சொல்லுமளவிற்கு கண்ணம்மாவிற்கு கிட்டே இருப்பதனால் தான், முதல் வரியான “காற்று வெளியிடை” சமாச்சாரம் வருதுன்னு நினைக்கிறேன்.
- அப்படியென்றால் தழுவிக்கொண்டோ அல்லது மிக நெருக்கத்திலோ இருக்கலாம்..
காற்று வெளியிடை கண்ணம்மா
- 1. உனக்கும் எனக்கும் இடையிலே காற்று தான் கண்ணம்மா இடைவெளியாக இருக்கிறது. (ஆச்சரியக் குறி)
- 2. நமக்கிடையே காற்று இன்னும் இருக்கிறதே கண்ணம்மா (ஏக்கமும் /வருத்தம் கலந்த தொனி)
- 3 முத்தத்திற்கு தாமதிக்காதே கண்ணம்மா அல்லது தடுக்காதே கண்ணம்மா (இதுக்கு தான் இத்தனை பிரயர்த்தனமா)
L
ம்ம்ம் எப்படியோ நல்லா இருந்தா சரி.
நிலவூறித் ததும்பும்
விழிகளும் – அடுத்த வரியெல்லாம் அடுத்தடுத்த நிலை.. இப்போதைக்கு இதுவே போதும்டா சாமி.
இந்த காலத்தில் மறைவுகளற்ற
அதேசமயம் முகமூடிகளில் திரிகின்ற, பழைய வாழ்வியலைக் குலைத்துப்போட்ட தொழில்நுட்ப உலகில்.
இந்த வரியை எப்படி தான் எழுத முடியும்…
பாரதி இப்போ இருந்தா (நாங்க
பங்காளிச் சண்டை தான் போடுருப்போம் – அது வேற விஷயம்) இப்படி வேண்டுமானால் எழுதுவாரா…
(ஸ்மைலிகள் மட்டுமே பறிமாறப்படும்
முத்தங்களாக இருக்கும் பொழுது)
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
– அதே இரண்டாவது வரி
ஆனால்
முதல் வரி
ஸ்பெக்ட்ரம் வெளியிடை கண்ணம்மா – வாஸ்தவம் தான கண்ணம்மா.
3Gயா, 4Gயா என்று கேட்பவர்கள் வண்டியில் செல்லும்போது
தண்ணீர்லாரி காது கிட்ட வந்து ஹாரன் அடிக்கும் சப்தமா…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக