சனி, 17 செப்டம்பர், 2016

மோன நிலையிலே


அம்முவுடன் பேசும் போதெல்லாம் ஒரு நதியின் சலசலப்பு பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்… வெகு சீக்கிரத்தில் அவள் சிரித்துவிடுவாள் இரண்டு நதிகள் ஒன்றுடன் ஒன்று கொஞ்ச ஆரம்பித்தது போல் இருக்கும்.

நதிகள் ஓடாத வன்புணர்வு செய்யப்படும் தடங்களே உள்ள பூமியில் பிறந்தவனுக்கு நதிகள் சங்கமிப்பதாக கற்பனை செய்து கொள்ள முடிகின்றது என்பது ஒரு ஆர்கஸமிக் உணர்வு. பொதுவாக, இப்போதெல்லாம் க்ளோஸ் அப் டூத் பேஸ்டை நினைத்தாலே ஆர்கஸம் உண்டாக்கும் விளம்பரத் தந்திரயுகத்தில். நதிகளையும், மரங்களையும், பறவைகளையும், பூக்களையும், சங்கீதத்துடனும், ஸ்ரிங்காரங்களோடும், ஓவியங்களோடும் பேசுபவள் இவள். இத்தனைக்கும் மேலே கவிதைகள் வேறு தனியாக, (இரண்டாவது நதியைப் போலே, இரண்டாவது கவிதைகளும்) உண்மையில் பேசுபவள் கேட்பவனாகவா நாங்கள் இருக்கிறோம். இல்லை அம்முவின் நர்த்தனம் இது ஆனால் நான் கேட்கிறேன். இதுவும் ஒரு புலன் மயக்கம் தான். இதில் அறிவு கூட கூர்மையடைகிறது.உபொருள்.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாள்

அவளது செல்பேசியும் அவளைப் போலவே, அவள் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறாள் என்பதை ஒவ்வொரு முறை அழைக்கும் போதும் ஒவ்வொரு மொழியில் என்னிடம் சொல்லும், அவளைப் போலவே.

இப்போது மூன்றாவது நதியைப் பற்றி என்னிடம் ஆரம்பித்தாள், இந்த முறை அவள் ஹரியானாவில் ஒரு பகுதியிலிருந்து, சரஸ்வதி நதியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். சரஸ்வதி நதி புண்ணிய நதி என்று வணங்கப்படும் நதி. அந்த நதி பாயும், ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து என்னை அழைத்திருக்கிறாள். அவள் அந்த கிராமத்தின் நிலக்காட்சியை எனக்கு வர்ணித்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு கையில் தூரிகை இருந்திருந்தால் ஒரு ஓவியம் கிட்டியிருக்கும் என்று நான் நம்புகிறேன். ஒரு ஓவியம் கித்தானிலோ, ஒரு காகிதத்திலோ , என்ன ஒரு ஊடகத்திலேயோ உருவாகும் போது. அந்த ஊடகம் என்னவாக இருக்கிறது என்பதை உணர முடியுமா.
இதோ நான் உணர்கிறேன். நான் என்னவாக இருக்கிறேனோ அதுவாகவே அந்த ஊடகமும் இருக்கும்.

 “அந்த கிராமத்தில் காக்கைகள் இல்லைப்பா” என்று அவள் சொல்கிறாள்.

ம்ஹ்ஹும் என்ன ஆச்சரியம் வந்து விடப்போகிறது, நாம் வானத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகியிருக்கின்றது. எத்தனை பறவைகள் பேர் தெரியும். அவள் தினமும் பறவைகளை அதன் சப்தங்களை அனுப்புவது தான் குட் மார்னிங் ஆக இருக்கிறது. அவள் காக்கைகளைக் காணவில்லை எனும் த்வனியில் ஒரு பதட்டம் இருந்தது, ஒரு அக்கறை இருந்தது. எனக்கு வெறும் கேள்வி மட்டுமே இருந்தது “( ? )”.

“இந்த கிராமத்தில் காக்கைகள் இல்லை காளிதாஸ்”
“அப்படியா அம்மு.. ஏன் அவை அங்கு விப்பில்ல

அறிவியல் ரீதியாக எத்தனையோ பேசியிருக்கிறோம். அவள் காக்கைகள் இல்லையென்றவுடன், அவள் அந்த ஊரில் வேறு என்னவெல்ம் இல்லை என்று விசாரித்ததைச் சொன்னாள். அந்த ஊரில் எருமைகள் கூட இல்லையாம்.

 “அப்படியென்றால் கரிய நிறத்தில் எதுவுமே இல்லையா” நான் என்னினத்ுக் கேட்டிருக்கிறேன் என்பு அவுக்கத் ெரியும்.

மூன்றாவது நதியருகில், இரண்டாவது நதியின் சலசலப்பு. நானும் ூட சிரித்தேன்.

“காளிதாஸ் காக்கைகள் இல்லை என்றவுடன் அந்த ஊரில் சடங்குகள் எப்படி செய்யப்படுகின்றன என்று கேட்டேன் ” என்றாள். நக்கஏன் இப்பிக் கேட்கத் ோன்றுவில்லை என்ு என்னானே கேட்டுக்கொண்டு.

காக்கைகளின் மறைவுக்குப் பின்னர், சடங்குகள் பலவற்றைக் கைவிட்டுவிட்டோம் என்று ஊர்மக்கள் சொல்லியிருக்கிறார்கள், அந்த ஊரில் கள் அனுமதி, மது அனுமதி, புலால் அனுமதி கூட கிடையாதாம். இந்து மதத்தில் காக்கைக்கு செய்யும் சடங்குகள் ஒரு முக்கியமான பகுதி, அவ்வூர் மக்கள் காக்கைகளின் இழப்பிற்குப் பின்னர் தங்கள் வாழ்வை பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுடன் மாற்றியிருக்கிறார்கள் என்றாள்.
இப்பவும் கூட எனக்கு அதில் என்ன எடுத்துக் கொள்ள இருக்கிறது என்று தெரியவில்லை.

சமூகக் கட்டமைப்பில் ஒரு இயற்கையாக நடக்கும் சிறிய இழப்பு அல்லது மாற்றம், எத்தனை பெரிய மாற்றங்களையோ அல்லது பேரிழப்புகளையோ கூட உருவாக்க இயலும் எனப் புரியவில்லையா என்கிறாள். அம்முவக்கு என் மீது கரிசனமிருக்கிறது.  உண்மையில் முழுமையான அறிவு என்ப கரிசனமிக்கது, அரைகுறை தான் மூடி மறைத்துக்கொள்ளும் + கொல்லும்.

ஆம் இது கயாஸ் தியரி போலிருக்கிறது என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். இந்த மாற்றங்களை அவள் தொன்மத்திலிருந்து, அறிவியலிலிருந்து, கலையிலிருந்து என அடிக்கடிப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறாள்.

ஆம் இப்படியான மாற்றங்கள், ஒன்று சாதிக் கொடுமைகள், பிரிவினைவாத, வர்க்க பேதங்கள் போன்றவற்றை அழிப்பதற்கான தந்ரோபாயங்களைச் சொல்லிக் கொடுப்பது போலவும் (உதாரணம் அண்மையில் வந்த சென்னைப் பெரவெள்ளம்), மற்றொன்று அதில் கட்டமைக்கப்படும் சந்தர்ப்பவாத அரசியல் அல்லது பாஸிஸத்தைப் பற்றி புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கின்றன (50 ஆண்டுகால திராவிட மனநிலை ) என நான் உள்வாங்கிக் கொண்டதை, இம்ப்ரெஸனிஸ்ட் பாணியில் ஏதாவது ஒன்றாக,ையாகச் செய்துக் காட்ட வேண்டும்.

ஏன் (இன்றைக்கு) பெரியார் பிறந்தநாள் நினைவாக ஏன் இதைப் பார்க்கக் கூடாது, ஹெல்லொ இன்றைக்கு மோடிஜியின் பிறந்தநாள் என்று அவன் சொல்கிறான். நமக்கு எதுக்கு வம்பு??

ஆனாலும் நான் அவளது ஊடகமாக இருப்பதை கௌரவமான உத்தியோகமாகவே நினைக்கிறேன்.

அம்மு இன்று மிகவும் அழகாக இருக்கிறாள். நீ பார்க்கும் நிலவை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

My hugs on the Air, Kisses on the moon

- ஜீவ கரிகாலன்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

ட்ரங்கு பெட்டிக் கதைகள் நண்பர்கள் விமர்சனம்


நூல் வெளியாகி பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நண்பர்களிடமிருந்து ஓரளவுக்கு நல்ல செய்தியாகத் தான் வந்திருக்கிறது.

நண்பர்களது கருத்துகளை ஒரே திரட்டாகப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

 ****

ட்ரங்கு பெட்டிக் கதைகள் குறித்து எழுத்தாளர் கலைச்செல்வி

டிரங்கு பெட்டிக்கதைகள் படித்தேன். எழுத்தாளர் ஜீவ கரிகாலன் ன் சிறுகதைத் தொகுப்பு. அவரின் முகம் வேறாக அறிந்திருந்தேன். எழுத்தாளர் என்பதும் இத்தனை காத்திரமான எழுத்தாளர் என்பதும் அதை படித்த பிறகே புரிந்தது. அதிலும் இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தன. ஒன்று கணையாழியில் வெளியான கதை. சைக்காலஜி படித்த இளைஞன் ஒருவனின் எதிர்பாராத மரணத்தை அவனே அணுகியிருந்த விதமாக காட்டி .. எதிர்பாராதவிதமாக கதையை முடித்திருப்பது யாரும் எதிர்பாராதது. படித்த பிறகு மீண்டும் கீழிருந்து மேலாக படித்தேன். கனத்தை உள் வாங்க முடிந்தது. பொதுவாக எல்லா கதைகளும் வசனங்களால் நகர்த்தப்படுகின்றன. சில இடங்களில் அது பலமே. அடுத்தது மஞ்சள் பூ. தகப்பனும், மகளும், சூழலும், பூவும் அந்நியப்பட்டு மொழிப்பெயர்ப்பு கதைக்குரிய தன்மையை தந்தாலும் நுணுக்கமாக அணுகியிருக்கும் விதம் அருமையாக இருந்தது. தோழர் ஜீவகரிகாலனின் இம்முகம் மிகவும் பொலிவானது. வாழ்த்துகள் தோழர் ஜீவ கரிகாலன்

 ****

ட்ரங்கு பெட்டிக் கதைகள் குறித்து கவிஞர் பிறைமதி


தொடர் பணியின் காரணமாக ஒரு வாரமாய் கொஞ்சம் கொஞ்சமாய் படித்து வந்த நண்பர் ஜீவ கரிகாலன் அவர்களின் " ட்ரங்கு பெட்டி கதைகள் " இப்போதுதான் படித்து முடித்தேன். முதல் 5 அல்லது 6 பக்கங்கள் சிறு தொய்வை கொடுத்தது ( எனக்கு மட்டுமாகக் கூட இருக்கலாம்) அதற்கு அடுத்து வந்த அத்தனை கதைகளுமே சிறப்பு. ஒரு மகளை பெற்றவன் என்ற வகையில் " மஞ்சள் பூ " வை கவலையுடனே கடக்க முடிந்தது அருமை. 

தூத்துக்குடி கேசரி - அழகாய் நகர்த்தியிருந்தார்.
வசந்த மண்டபத்தின் சாபம் - செம்ம
தேய்பிறை, மேற்கிலிருந்து - இரண்டையும் முடித்ததும் சிறிது நேரம் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன்.

சிறப்பான எழுத்து நடை. அனுவனுவாய் நடந்து கொண்டிருக்கும் சிறு அசைவுகளைக் கூட விடாமல் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர்.

அவரின் உள்ளாசை ஓவியங்களில் இருக்கிறது என்பதை பக்கத்திற்கு ஒரு வரியிலேனும் அழகான வார்த்தைகளால் பதிந்துள்ளார்.

வாழ்க வளர்க.
அலாதி
பிரியமுடன்
--
பிறைமதி
 ****

ட்ரங்கு பெட்டிக் கதைகள் குறித்து இயக்குநர் திண்டி பரத்

அண்ணன் ஜீவ கரிகாலனின் சிறுகதைத் தொகுப்பானட்ரங்கு பெட்டிக் கதைகள்நேற்று வெளியீட்டின் போதே அவரிடம் கையெழுத்திட்டு வாங்க முடிந்தது. இன்று முழுவதுமாக படித்தும் முடித்துவிட்டேன். அண்ணன் அவர்களின் எழுத்துப் பற்றி பேசவோ எழுதவோ எனக்கு அனுபவம் போதாது. அண்ணன் மேல் இருக்கும் அபிமானத்தில் படிக்க ஆரம்பித்தாலும், புத்தகத்தின் சுவாரஸ்யத் தன்மைனாலேயே அதை முழுவதுமாக படிக்க முடிந்தது. அப்புத்தகத்தில் லயித்துப் படித்து சில வரிகளில் இங்கு பதிவிடுகிறேன்.
“…நேராக எனக்கு எதிரில் வந்து அமர்ந்தாள். சற்றுப் பூசிய உடல் தான். சுமாரான உயரம். தன் உடல் மேல் அதிகம் அக்கறை கொள்ளாதவளாய், அதை வெளிப்படுத்த உதவாத சேலை அது. அவ்வப்போது என்னைப் பார்த்தால். அது எதிரில் இருக்கிறேன் என்கிற ஒரே ஒர் அந்தஸ்து மட்டுமே. கரிசனமல்லை…”
“…நீயும் நானும் பார்த்துக்கிட்டிருக்கிற நிலாவை ஒரே ஜன்னலில், ஒன்னாப் பார்க்க முடியுமான்னு கேட்டேன்…”
“…அதுவரை என் கண் கூசச் செய்யும் அவளுடைய கூர் கண்கள், நான் வருவதை அறிந்ததும் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு ஒளிந்துகொண்ட நொடிஅது எனக்கான நொடி. எனக்கான கணம்…”
இன்னும் இன்னும் நிறைய மேற்கோள் காட்ட வேண்டும் என நினைத்தேன். சிலது ஒரு பத்தியையும் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. எனவே சுருக்கமாக கூறும் பொருட்டு இந்த மூன்று வாக்கியங்களை மட்டும் மேற்கோள் காட்டுகிறேன். அண்ணே, வாழ்த்துகள்.
அன்புடன்,
தம்பி பரத்

 ****

எழுத்தாளர் இன்பா சுப்ரமணியன் அவர்களுன் பதிவு

ஜீவ கரிகாலனின் தூத்துக்குடி கேசரி... 
செம ஜாலியான கதை...
ஜாலியாக சமையல் செய்யும் செட்டியைத் தேடி இருவர் வரக்காப்பி குடிச்சுட்டு மட்டப்பாறை தாண்டி திருக்கம்பட்டி, சல்லகுளம்,மார்க்கமா பயணிக்கும் கதையில் நாமும் அங்கங்கு அம்மாயி,பாட்டன், பெரியப்பனோடு கதச்சு செட்டி வீட்டை அடைகிறோம்.. கதை சொ
ல்லி ஜீவ கரிகாலன் நம்மையும் கூட்டிச் செல்கிறார். காட்சியாய் விரியும் கதையில் நாமும் விவாதிக்கிறோம்.. 
சமையல் செட்டி தூத்துக்குடி கேசரி ஸ்பெஷலிஸ்ட். 
சமையல் செட்டி செய்தது தூத்துக்குடி கேசரி இல்லண்டு ஒரு விவாதம் கிளம்புகிறது. 
கேசரி ஸ்பெஷல்... (எனக்கு இப்போ வேணும் ) நா அதுல தூத்துக்குடி போட்டேன் தூத்துக்குடி போட்டென்னு செட்டி சொல்ல, பொய்ன்னு சொல்கிறார் அருள்.
இப்படியான ஒரு சுவைமிகு உரையாடல் முடிவில் தெரிகிறது செட்டி கேசரியில் போட்டது " டூட்டிஃப்ரூட்டி" 
இடையில் கதை நகர்த்தியிருக்கும் விதம் செம ரகள.. 
உப்ஃஃ.. சிரித்துச் சிரித்துக் கண்ணில் நீர்.. 
ஜீவ கரிகாலன் ஒவ்வொரு கதையும் ஒருவிதமாக எழுதியுள்ளார்.. 
தொடர்ந்து எழுதுவேன்..
#செட்டியார் சமையல் * என்பது சரியாக இருக்காது. கல்யாணங்களில் சமையல் செய்பவர்கள் செட்டு சமையல்க்காரர்கள் என அழைக்கப்படுவர். செட்டு சமையல் என்பது திரிந்து செட்டி சமையல் பின் செட்டியார் என திரிந்து விட்டது போலும்.. 
நிற்க, அந்தச் சமையல் செட்டி என் உணர்வுகளில் சற்று பருமனான, நறைத்த நெளி முடியோடு, நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்து, முரட்டு குழந்தை போல் பிடிவாதம் நிறந்தவராக ஒரு காட்சி எனது நினைவுகளில். 
நிற்க, இடுப்பில் ஒரு மனிபர்ஸ் வக்கப்பட்ட பச்சை பட்டை பெல்ட் அனிந்திருப்பார் போலும்... வெகுளியாக ஒரு புறம் இருந்தாலும் , மிகவும் பிடிவாதமான , ஒரு மனிதன் போலும்... கொஞ்சம் மொன்னை நாக்கோ?? அருமை.. ஜீவாவிடம் இத்தகைய ஹாஸ்யம் நிறைந்து இருப்பது வரவேற்கத்தக்கது..
இன்று கேசரி ஸ்பெஷல். :
****
  ****
***ட்ட்ரங்கு பெட்டிக் கதைகள் குறித்து பதிப்பாளர், எழுத்தாளர், விமர்சகர், கவிஞரல்லாத கவிஞர் வேடியப்பன் அவர்கள் எழுதியது
மை போட்டு மாடு கண்டுப்பிடிக்கிற கதை !
நண்பர் ஜீவ கரிகாலன் எழுத்தி வெளிவந்துள்ள ட்ரங்கு பெட்டிக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று இக்ஷா மையத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது
பொதுவா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்பாங்கல்ல. அப்படித்தான். ஆனா நான் ரெண்டு கதைய படிச்சிட்டு விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டேன்.
ஊர்ப்பக்கம் வீட்டுக்கு நாலு ஆடு மாடு இருக்கிறதும், அதுல ஒன்னு எங்கையாவது திசைமாறி காணாப் போறதும் நடக்கும்தானே? . அப்படிப் போகும்போது அதை எப்படிக் கண்டுபிடிப்பாங்க தெரியுமா?
வழி-1 .
தோரயமா மேய்ச்சல்காரன் சொல்ற மேய்ச்சல் பாதை அடையாளங்களையும், காணாமப் போன மாட்டோட குணத்தையும் வெச்சு சுத்துவட்டாரத்தில நடையா நடந்து தேடிப்பாப்பாங்க. கழுத கெட்டா குட்டிச்சுவரு மாதிரிதான் இந்த மாடு காணாமப் போற கதையும். மிஞ்சு மிஞ்சுப் போனா பக்கத்து தோட்டத்து வைக்கப்போர்ல தலையவுட்டு கொடைஞ்சுகிட்டி நிக்கும். இல்லாட்டி எங்கையாவது பச்சையில் பூந்து வெளையாடிட்டி சண்டையமூட்டிவிடும். தோட்டக்காரன் பிடிச்சு கட்டிப் போட்டிருப்பான். பொறுப்பா பேசி சமாதானமாப் போனா மாட்டை மீட்டரலாம். இல்லாட்டி மேஞ்சதுக்கு நஷ்ட ஈடுதான். வேலை முடிஞ்சது. இது ஒரு எதார்த்தமான அனுபவம்
வழி-2
முதல் வழிங்கிறது நம்ம கண்ணுபடுற எல்லைக்குள்ள மாடு கிடைச்சிடும். ஆனா உண்மையாவே மாடு வழி மாறி திக்குத் தெரியாம எங்கையாவது போயிடுச்சுன்னா ரொம்பக் கஷ்டம்தான். நாலஞ்சு நாளானாலும் கிடைக்காது. அப்போ இருக்கவே இருக்கு சாமியாடி, கோயில் குளம் இப்படி. அப்படியொன்னுதான் வெத்தலைல மைப்போட்டுப் பாக்கிறது.
வெத்தலைல மைபோட்டு ஜோசியர் காட்டுவார். அதோ தெரியுதுபார் உங்க மாடு. பசியோட கட்டிப்போட்டு வெச்சிருக்காங்க பாருங்க. தெரியுதான்னு அதட்டிக் கேட்டா மாட்டப் பரிகொடுத்தவன் தெரியுது சாமின்னு சொல்லிடுவார். இங்கிருந்து காத்துவாக்கில 5 மைல் போனீங்கனா உங்க மாடு கிடைக்கும்மார். மாட்டத்தேடி காத்து அடிக்கிற தெசைல போக வேண்டியதுதான். காத்து காலைல மேக்க நோக்கி அடிக்கும், மதியம் வடக்க பாத்தடிக்கும். சாயங்காலம் கெழக்க அடிக்கும். அதுக்கூட பரவாயில்ல. காணாமப் போணது ஆடிமாசபோலன்னா எடைல சொழல்காத்துவேற அடிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில எந்தப் பக்கம் மாட்டத் தேடிப்போகன்னு கண்ணாம்முழி பிதுங்கும். கடைசில மாடு கெடைக்குமா கெடைக்காதான்னு உத்ரவாதமில்லாம உக்காந்திட்டிருக்கும்போது பத்துநாள் கழிச்சு அதுவா எங்கிருந்தோ கயித்த அத்துட்டு ஓடிவந்து அம்மான்னு நிக்கும். 
-----------
ஓகே இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா நண்பர் ஜீவகரிகாலனின் கதைகள் வெத்தைல மைப்போட்டு மாட்டத் தேடறமாதிரி கதைய கண்டுப்பிடிச்சுக்க வேண்டியதுதான். கதை இருக்கும். ஆணா கண்டுபிடிக்கனும். எதார்த்தமான அனுபவங்களை தருவதற்குப் பதிலாக , கச்சிதமான கதைச் சொல்லும் உத்திகளை வைத்துக்கொண்டு நம்மை சுழட்டி விடுகிறார். தேடி அலைஞ்சு தலை சுத்தி கிறுகிறுன்னு உக்கார வேண்டியுள்ளது.
குறிப்பு : இது இரண்டு கதைக்கான விமர்சனம் மட்டுமே (கதைகள்: 1. மஞ்சள் பூ. 2. மான்செஸ்டரிலிருந்து கரூர் வரை )
 ****
கவிஞர் அகரமுதல்வனின் கருத்து
ஜீவகரிகாலனின் கதைகள் அதீதத் தனங்கள் கொண்ட தளத்தில் பயணிக்கும் சின்னஞ்சிறிய வெளிப்பாடுகளில் இருந்து தொடங்குகிறது. அவரின் கதைகளில் உயரிய பார்வைகளைத் தேடுகிற வாசகனுக்கு அது கிடைக்கப்போவதில்லை. கதைகளுக்கும் அதைத் தரவேண்டும் எனும் கட்டாயம் இல்லை. கதைகளுக்குள் செழிப்பான குழப்பங்கள் அசரீரியைப் போல வாசகனுக்கு வந்து கொண்டேயிருக்கிறது. நிதானித்து நிதானித்து சுவாசிக்க வேண்டிய நறுமணத்தின் பண்பு இவரின் கதைகளுக்கு உண்டு.
நீரில் ஊறிக்கிடந்து குளிக்கும் ஒருவனின் உடல் பூத்துப்போகும் தருணத்தைப் இவரின் சில கதைகள் எனக்குத் தந்திருக்கிறது.
ட்ரங்குப் பெட்டிகள் வாழ்வின் மிச்சத்தையும் பழமையையும் தான் எமக்குத் தரவல்லது என்று நாம் நம்புவது உண்மை கிடையாது. வாழ்வின் கடந்த காலங்களின் இரத்தப் பிசுபிசுப்பை பிடிமானமாகக் கொண்டு அது எம்மை வாழத் தூண்டிக் கொண்டேயிருக்கும் ஒரு முதுசப் பொருள்.
வாழ்வின் மிச்சத்தை பரண்களில் கிடக்கும் ட்ரங்குப் பெட்டிகளில் வைப்பதைப் போல வாழ்வின் தரிசனங்களை கலையாக்கி இந்த ட்ரங்குப் பெட்டியில் எமக்குத் தருவித்திருக்கும் ஜீவகரிகாலனுக்கு வாழ்த்துக்கள்.
   - அகரமுதல்வன் 
 ***
ட்ரங்கு பெட்டி கதைகள் -ஜீவ கரிகாலன்
------------------------------------------------
நான் இதை எழுதும் வேளை இங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. (எங்கு கதை முடிந்ததோ அங்கிருந்துதானே தொடங்க வேண்டும்.) எவ்வளவு வெம்மையோ அவ்வளவு குளிர்த்துகிறது இந்த கதைகள். 

மிகைப்படுத்தாத சமநிலை எல்லா கதைகளையும் சுற்றி, ஊடுருவ ஏதுவான ஒரு நீர்ம தன்மையை உருவாக்குகிறது. அதனாலே அதன் மையம் எப்போதும் தன் வெதுவெதுப்பை தக்க வைக்கிறது.
கதை முழுக்க நிறைந்து கிடக்கும் படிமங்களும், ஓவிய பாங்கும், இசங்களையும் அவ்வளவு எளிதாக கடக்க முடியாத, நின்று ரசிக்க வைக்கும் அழகியலையும் தாண்டி இயல் வாழ்க்கையின் மீது நிகழ்த்த கூடிய பார்வை அசாதாரணமானது. கதைகள் வெறும் புனைவுகள் தானே என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை எளிமையை கொண்டாடுகிற பக்குவம் எவ்வளவு உழைப்பை ,காலமற்ற சிந்தனையை எடுத்து கொண்டது என்று வாசிக்கும் போதே புலப்படுகிறது.
கடவுளை பற்றி பேசுவது போல அன்பையே பேசுகிறது. காதலை, பிரிவை பேசுவதை போல அன்பையே பேசுகிறது. ஞானமும் , திறனும், பல்நோக்கு பார்வையும் அவ்வளவு எளிதாக உடைக்கப்படும் போது மனிதர்களை அபத்தங்களின் வழியாக compare செய்கிறது
கனவுலகம் தான் எனக்கு நிஜவுலகம் என்பது ஒரு மாயை போல சுற்றி கொண்டிருப்பதன் உள்ளே limitation களில் சோர்ந்துவிடும் மனிதனை தட்டி எழுப்புகிறது. நிஜ உலகத்திலிருந்து விழித்து கொள்ள அவனுக்கு அது தேவையாக இருக்கிறது.
அளவான படிமங்களும், fringe of concious உம் கதையோடு ஒன்றி போய் விடுவதனாலேயே திகட்டாத ஒன்றாய் இருக்கிறது. படிமங்களின் உள்ளே நிகழ வேண்டிய பயணமும், கதையின் மைய நீரோட்டமும் தனித்து இயங்குவது நம்மை கதையிலிருந்து வெளியே வீசிவிடாதவாறு அமைந்து வாசிப்பை எளிதாக்குகிறது.
வண்ணங்களும், அவற்றின் இயக்கங்களும் கதை முழுக்க பரவி ஓவிய அறிவில் கதையில் வருவது போல தூத்துக்குடி கேசரியாக இருந்த என்னை டூட்டி ஃபுரூட்டியாக மாற்றியது.
ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களின் மீது மனம் ஏற்படுத்துகிற பிரக்ஞையற்றதன் விளைவுகளை "தேய்பிறை" கதை காட்சிப்படுத்தும் வேறு உலகத்தில் தான் எவ்வளவு ஒரு அழகான உலகம். சட்டென்று அந்நியமாகிவிடுகிற மரணம் உணரும் மனத்தில் தான் எவ்வளவு தாய்மை.
"மஞ்சள் பூ" கதை மனதை நெகிழ வைத்த தகப்பனின் அன்பு. ஜென்சியின் அந்த மாற்றம் பிரிவின் மீது நாம் வைத்திருந்த எதிர்பார்ப்பு நிகழ்ந்துவிட்டதை போல நம்பமுடியாததாகிறது. உருக உருக ஏற்றுகொள்ளும் ஒரு தந்தையை மீறி நிற்கிற பருவம் திரும்ப சொல்லப்பட்ட கிளாரா கரடியின் உருவாக்கத்தை போலவே காலசாட்சியாக மாறுகிறது.
"நீரோடை" - எல்லா கனவுகளுக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் கனவுகள் புள்ளியின் நீட்சியாக இருந்ததை மனம் நம்ப விரும்புகிறது. விடுதலையும், பசியும் இருப்பின் மீது விளங்கி கொள்ள முடிந்த பிடிப்பை உணர்த்துகிறது. மரணமோ அதன் எதிர்முனையில் தன் பிடியை தளர்த்துகிறது.
பொதுவாக எல்லா கதைகளிலும் உள்ள படிம நேர்த்தியும், கதாபாத்திரங்களும் மனதிலே தங்கிவிடுகின்றன.
"புறாவின் கால்நகங்களில் ஒட்டியிருக்கும் இதயத்தின் வண்ணம்".... விடுதலையை, இளைப்பாறுதலை, அமர்ந்து எழும் போது கூர்நகங்கள் அழுத்தும் வலியை வண்ணமாக எஞ்சுவதை திரும்ப திரும்ப வாசித்து கொண்டிருந்தேன்.
ஒலிவியா தன் துப்பாக்கியை வளர்ப்பு மிருகத்தை போல் தடவி கொடுக்கிறாள். ஜென்சியின் அப்பா ஒரு பனிகட்டியை உயர வீசி அழுகை உடைகிறான். சிவப்பு ஒழுகி ஓயும் ஒரு கோடு ஒன்றை முத்தமாக பார்க்கிறான் ஒருவன். கடற்கரை மண்உப்பலில் வைத்திருக்கும் படகு நிழலில் ஒருவன் என எல்லா கதைகளிலும் விரவி கிடக்கும் அழகியலை வியந்து கொண்டே இருக்கிறேன்.
ஒரு நிறைவான வாசிப்பை தந்த இந்த கதைகள் எனக்கு நிறைய கனவுகளை திறந்துவிட்டிருக்கிறது.
நான் நனைவேன் ஓய்ந்த மழை அமைதியில்.
ஜீவ கரிகாலன் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
பிரியங்களுடன் 
அண்ணல்.

***
எழுத்தாளர் மதுமிதா ஸ்ரீ அவர்களின் கருத்து
' தேய்பிறை ' - கதை படித்து நான்கு நாட்கள் ஆகிறது . இது ஒருவரின் படைப்பு என்பதை அறிந்தும் இன்னமும் அந்த தாயுடனே பயணிக்கிறது மனம். மற்ற கதைகளுடன் விரைவில்.....

வாழ்த்துக்கள் ... நண்பர் ஜீவ கரிகாலன்
# டிரங்கு பெட்டி கதைகள் 

Collection of emotions .. All d best / 19
/08/16