·
அது
என் கடிகாரத்தை ஒளித்து வைக்கும் பிரயர்த்தனத்தில்
தூங்க ஆரம்பித்துவிட்டது.. இந்தமுறை தலையனை வைத்தல் கழுத்தை
நெறித்தல் இரண்டிற்குமே ஆசைப்படுகிறேன்..
*****
·
அது
என்னைக் கட்டுப்படுத்துகிறது, சாந்தப்படுத்துகிறது, சமாதானப்படுத்தவும் செய்கிறது... பின்னர் தூங்கிவிட்டேனா என்று
எழுப்பிப் பார்க்கிறது ஒவ்வொரு முறையும்...
*****
·
அவன்
தந்த யோசனைப்படி தான் கச்சிதமாக அடக்கம்
செய்துவிட்டு வந்தேன்.. ஆமென்!! வீட்டிற்கு வந்தால்
கதவைத் திறந்து விடுகிறது அது
*****
·
நீ
உண்மையில்லை என்றேன், அதனால் தான் அனுமதிக்கப்படுகிறேன்
என்கிறது அது
*****
·
என்னதான் வேண்டுமென்றேன் , முதுகில் தன் பெயரெழுதிக் கண்டுபிடி
என்றது, அது.
*****
·
கதை
சொல்லித் தூங்க வைக்கிறேன் என்றது. பின்பு
அது சொல்லத் துவங்கியது என்னைப்
பற்றிய கதை ஒன்றினை.
*****
·
என்
கனவுகளில் தன் இஷ்டத்திற்கு ரீரிகார்டிங்
செய்கிறது அது
*****
·
இறுதி
வாய்ப்பு தரலாமா என்று யோசிக்கிறேன்.
ஆனால் பயமின்றி அலட்சியமாய் மல்லாக்கப்
படுத்திருக்கிறது அது.
*****
·
ஒரேயொரு
பொய் சொன்னேன். அது சம்பவித்தது. இப்போது, அவள்
அதனைக் கடந்து
செல்கிறாள், நான்
அவர்களை கடந்துவிட்டேன். அஸ்தமனத்திலும் ஒலித்த
குரலைப் பத்திரப்படுத்துவிட்டேன். இனி இங்கில்லை
அது
*****
·
அது
சாகவில்லை துடிக்கின்றது
*****
·
அது
துடித்திருக்கவும் இல்லை. மௌனிக்கிறது
*****
·
அது
நான். நானே அது.... தந்திகள்
மீட்டப்படட்டும்
*****
·
மவுனித்திருந்தது
மறைந்து கொண்டது... அது
*****
·
அதனை
வெல்ல அதுவாகவே இரு
·
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக