சனி, 28 நவம்பர், 2015

பஜ்ஜி-சொஜ்ஜி - 88 கோபுவுக்கு KUDOS

சூடாக இரு கோப்பைத் தேநீருக்காக இரண்டு, மூன்று முறை ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டியிருந்தது எலக்ட்ரிக் கெட்டிலை. அவனைப் பற்றி கொஞ்சம் எழுத வேண்டியிருந்தது. நட்போ, ப்ரியமோ, ரஸனையோ சொல்வதற்கு எத்தனையோ இருக்கின்றன ஆனால் அவை ரகஸியமாக என்னுள் வைத்துக் கொண்டு வேறு திசைக்கு செல்கிறேன். எனக்கு எதிர்புறமாய் அவனும், ஆகவே தான் அவன் ரகஸியம் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பவர்களுக்குச் சமர்பிக்கிறான். நானோ ரகஸியத்தைப் பாதுகாத்துக் கொண்டதாய் நம்புகிறேன்.

அவன் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்குவான் என்ற நம்பிக்கையிருக்கிறது, அந்தத் துணிச்சலை நான் உணர்கிறேன். அதன் மேல் அவனுக்கு நம்பிக்கையுமில்லை, அக்கறையுமில்லை. இருந்தும் புன்னகைக்கவும், பகிர்ந்து கொள்ளவும் நிறைய இருக்கின்றன ரகசியமாய்.

கோபுவிடம் பேசுவதற்கு முன்பு ம.ரா ஐயாவிடம் ஒரு நீண்ட உரையாடலுக்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த வருடம் அப்படித்தான் எங்களிருவரையும்  பல அரிய மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

கோபுவிடம் MASONIC ART ஒன்று ILLUSTRATION பண்ணுங்க என்று கேட்டோம். அது அழகியலாக மட்டுமோ அல்லது அடர்த்தியாகவோ இருக்கக்கூடாது என்றும் தோன்றியது. 

Umberto Eco, Don Brown-லிருந்து ரூஸ்வெல்ட், விவேகானந்தர், மேரி மாதா, High Renaisance-னு பேச ஆரம்பித்தோம். என் மனதிலிருந்த எந்த Geometrical design-ம் என்னைத் தாண்டி போகவில்லை. ஆனால் ஒரு விபரணைப் படம் அதன் வெற்றியை ஈட்டியிருக்கிறது, அதோடு நானும் பயணப் பட்டிருக்கிறேன். சிவனின் லிங்கத்தை எப்படி Phallus என்றும், சாபத்தால் உருவான இந்திரனின் குறிகள் (yonic) கண்களாகத் தெரிவதை நம் புராணங்களில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம்.. மூன்றாவது கண்ணினை All seeing eye ஆகப் பார்க்க முடியுமா என்றால், முடியும் என்று ஒரு Virtual installation நடந்த தருணம் மிக முக்கியமானது.

ஒரு அட்டைப் படத்துக்குள் இருந்து சொல்லப்படம் கதை மேற்கு நோக்கி பயணித்தாலும், நகரத்தில் வசிக்கும் ரமேஷும், சொந்த மண்ணில் காலூன்றிக் கொண்டோ, பற்றித் தொங்கியபடியே இருக்காமல். நகரத்துவாசியாகி இடமாறுதல்களைச் சகித்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனால் ஒரு பெண்ணை ஆழ்ந்து தரிசிக்க முடிகிறது. தரிசித்தல் எனும் பதம் அவனுக்கு சகிக்கக் கூடியதா என்று தெரியவில்லை. நான் அடைந்த சந்தோஷம் கோபுவிடமிருந்து.....

புனிதமெனச் சொல்லும் மேரி மாதாவின் நீலமும், பீனிக்ஸ் என்றும், யகோவா என்றும் சாத்தானென்றும் சொல்லப்படும் மேற்குலகத்தின் வண்ணம் சாம்பல் (சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பறவை). புராணங்களில் இருக்கும் Syncretism (பல்மதக் கட்டமைப்பு) தான், அதன் ரகசியங்களை விட சுவாரஸியமானவை….

ஆதலால் ரகசியம் இருப்பதாய் …. நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு


1 கருத்து:

 1. நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்..

  நீலமும் சாம்பலும் அடர்ந்து பெருகுகிற அந்த முக்கோணத்தில் அடைபட்டிருக்கும் ஒற்றை கண்களும், விழியை மட்டும் நீலமாய் விட்டு மீதத்தை சாம்பலாக்கிக் காட்டியிருக்கிற இந்த அட்டைப் படம் இன்னொரு ரமேஷை எங்களுக்கு காட்டும் என்று காத்திருக்கிறேன்..

  பெண்ணின் கருவிழியில் நீலம்.. சாம்பலிருந்து பீனிக்ஸ் பயணம்..

  சொந்த மண்ணில் காலூன்றிக் கொண்டோ, பற்றித் தொங்கியபடியே இருக்காமல். நகரத்துவாசியாகி இடமாறுதல்களைச் சகித்துக் கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனால் ஒரு பெண்ணை ஆழ்ந்து தரிசிக்க முடிகிறது.

  இந்த இடம் ஏற்படுத்தும் நியாயமான எதிர்ப்பார்ப்பை, கையில் வந்து சேரக் காத்திருக்கும் அந்த புத்தகத்தை நோக்கி விரித்து வைத்திருக்கிறேன்..

  இவ்வருடம் யாவருமில் இருந்து வரவிருக்கும் நான்கு புத்தகங்களுக்கும் வாழ்த்துகள் அண்ணா..

  ரமேஷின் புத்தகம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆவலை தூண்டியிருக்கிறது

  வாழ்த்துகள் அனைவருக்கும்

  பதிலளிநீக்கு