நேற்றிரவு இரண்டாவது முறையாக பிரெட் ஆம்லெட் வாங்கும்
போது சற்றே யோசித்திருக்க வேண்டும். ஹெவி லோட் பண்ணதுக்கப்புறம் உடனேயே தூங்க முடியாது
என்பதாலும் கைகள் வேறு பரபரத்துக் கொண்டிருந்தாலும் இதை எழுதியாக வேண்டும்.
சென்றே ப்ளீட்ஸிலே இது பற்றி விவாதிக்கனுமென்று
நினைத்தேன் முடியவில்லை. அது போல ஒரு நாள் சூர்யதாஸ் அண்ணன், அமிர்தம் சூர்யா இவுங்க
ரெண்டு பேரோடு இணையத்தில் தீவிரமாக இயங்கும் 2010க்குப் பிறகான புதிய கவிஞர்களின் படைப்புகளைப்
பற்றித் தான். சூர்யாவோடு அந்த டாபிக்கில் ஒரு நாலைந்து முறை விவாதித்திருப்போம். சூர்யாவும்
– இணையத்திற்கு முன்னும்,பின்னுமான வாசக – படைப்பாளி மனோநிலை என்கிற தலைப்பில் பிரமாதமாக
ஒரு உரை நிகழ்த்திய பின்பும் தொடர்ந்த விவாதம் அது.
இணையத்திலிருக்கும் வசதி – சீக்கிரம் கிடைக்கும்
அங்கீகாரம், ஆழ்ந்த வாசிப்பு அல்லது நிறைய வாசிப்பு, இலக்கியச் சூழல் பற்றிய அறிவு,
அனுபவங்கள், பயணங்கள் என எதுவுமே தேவைப்படாது போனதால். இணையம் வந்த பிறகு எழுதப்பட்டு
வரும் கவிதைகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது என்பதை முழுமையாக ஒத்துக் கொண்டோம். இணையம்
வாயிலாகத் தான் எனது முழுவளர்ச்சியும் நடந்தேரியது என்பதை ஒத்துக் கொண்டு தான் நானும்
தலையசைத்தேன்.
வாசிப்பில் – ஆழ்ந்து வாசிப்பது குறைந்தாலும், நமக்குத்
தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிக்க முடிகின்றது என்பது இணையத்திற்குப் பின்பாக
உருவெடுத்த வசதி தான். அதற்கு முன்னர் வரை – ராமாயணத்திலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்
கையாளும் ஒருவருக்கு இராமயணத்தை குறைந்தது ஒருமுறையாவது வாசித்திருக்க வேண்டும். இன்று
எனக்குத் தேவைப்படும் அந்த ஒரு உதாரணத்தை சரிபார்க்க இணையத்தின் வாயிலாகக் கிடைக்கப்பெறும்
அத்தனை இலக்கியங்களிலிருந்தும் அந்த REFERENCEஐத் தயாரிக்க முடியும். கவனிக்க கிடைக்கப்பெறும்
எனும் சொல்லில் UNDERLINE பண்ணியிருக்கிறேன். அந்த உதாரணத்திற்கு மிகப்பொருத்தமான இலக்கியம்
பற்றிய எந்தத் தகவலும் இணையத்தில் கிட்டவில்லையென்றால். இணையவாசிகள் அதைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை – “கல்லாதது செல்லளவு” என்று கமலஹாசன் ஸ்வாமிகள் சொன்னது போலாயிற்று.
நேற்றும் ஒரு விவாதம் தான் – வேல்கண்ணனின் ஃபேஸ்புக்
சுவற்றில் – படிமத்தை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி எழுதும் கவிதைகள் குறித்து விசனப்பட்டு
ஒரு ஸ்டேட்டஸ் – நானும் தெரியாத்தனமா மூக்கை நுழைக்க – இப்படி ஒரு பதிவு. கவிதைக்கான
வரையறுத்தலை ஒருவனால் முன்வைக்கவே முடியாது எனும் போது. இப்படியான விவாதங்கள் தேவைதானா
என்று ஐயப்படவில்லை.
ஏனெனில் - விவாதமில்லாமல் – எந்த நகர்வுமில்லை என்பது
தெளிவு. நான் ஏன் விமர்சிக்கனும் அல்லது விமர்சிக்கப்படனும் என்று கேட்பவர்கள் நிச்சயமாக
யாருக்குமே டேக் இட மாட்டார்கள் என்று நம்புவோமாக. கவிதைகளுக்காக டெஸ்க் ஒர்க் பண்ணி
பதிவேற்றும் நண்பர்களைப் பற்றி நான் இங்கே பேசவில்லை. தினமும் குறைந்தபட்சம் ஒரு கவிதை
போட்டே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டுத் திரிபவர்களைத் தான் சொல்கிறேன்.
அவற்றை ஒரு COLLAGE போல தான் பார்க்கிறேன். மெனக்கடலே இல்லாமல் பிரவாகமாக மகாகவிக்குத்
தான் ஓடும். மகாகவியும் தன் வாழ்நாளிலே மகாகவி என்று அழைக்கப்படப் போவதில்லை என்பதை
அறிந்தவன் தான்.
நட்பு மட்டுமே காரணமாக என்று வைத்துக்கொள்வோம்
(லைக்ஸ் கொடுத்து லைக்ஸ் வாங்கும் – இன்னொரு வழக்கமும் உண்டு) – இதில் நன்னா கவிதையெழுதும்
பெரியவா கூட ஆறுதலாகவோ அல்லது உற்சாகப் படுத்தும் விதத்திலோ பாராட்டிவிட்டால், அவ்வளவு
தான் – நம் கவிஞர்கள் VIRTUAL பீடாதிபதிகளாகிவிடுகிறார்கள். அப்புறம் அந்த வருட டிசம்பருக்குள்
குறைந்தபட்சம் ஒரு இருபதினாயிர ரூபாயுடன் “கவிதைத் தொகுப்பு ரெடி”.
இவர்களின் எழுத்தை நான் மறுக்கவில்லை – ஏனென்றால்
இவர்கள் தான் இன்றைய காலத்தின் உற்பத்திப் பொருட்கள். 2010க்குப் பின் என்று சொன்னால்
இவர்கள் தான் தெரிவார்கள் – ஆனால் சமகாலத்தின் பலவீனமான படைப்புகளுடன் - தொடர்ச்சியாக
80-90களில் இருந்த கவிதைக்கான உச்சக்காலத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கப் போகின்றோமோ??
படிமம் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்படவேண்டும்.
பிற கவிதைகளில் இருந்து அல்ல – சுகிர்தாராணியின் ஃபேஸ்புக் சுவற்றிலும் இதைப்போன்ற
ஒரு பதிவு – கவிதைகளில் இருந்து சொற்களை மாற்றிப் போட்டு உருவாக்கும் போலிக் கவிஞர்கள்
பற்றி. சுகிர்தராணியாவது முக்கியமான கவிதைகளை எழுதிக்கொண்டிருப்பவர் திருடுவதில் ஒரு
கு.பட்ச நியாயமாவது இருக்கலாம். ஆனால் தான் சில வருடங்களாக எழுதிய கவிதைகளை நிராகரித்துவிட்டுக்
கதைகளை நோக்கிச் செல்லும் என் நண்பன் ஒருவனின் கவிதைகளையும் போலி செய்து போடும் சில
நபர்களின் கவிதைகளை வாசித்தேன். ஆரம்பத்தில் சிலரது கவிதைகள் வாசிக்கப்படும் போது நன்றாகத்
தான் தோன்றுகிறது, புதிதாக இருப்பது போல் தெரியும் அப்புறம் சில நாட்களிலேயே தன் அசல்
கவிதைகளை எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதைக் காட்டி விடும்.
அந்த விவாதத்தின் போது – இப்படி நிறைய பேரை ஏத்தி
வுடுதிங்களே என்று நரநரத்ததற்கு – சூர்யா சொன்ன பதில்களில் சில நியாயம் இருக்கத் தான்
செய்கின்றன. ஆனாலும் உற்சாகப்படுத்துவதில் சில * மார்க்குகள், அடிக்குறிப்புகளெல்லாம்
வைக்காமல் விட்டால் ஆபத்துதான். அதிலும் கவிதைக்கு அடியில் இருக்கும் பெயரை நீக்கிவிட்டால்,
கவிதை யாருடையது என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது என்று சூர்யா சொல்லும் போது, நானும்
அவ்வாறே உணர்ந்திருப்பதை இன்னும் உறுதியாக நம்பமுடிந்தது. ஆம் அதில் உண்மையிருக்கிறது.
ஏனென்றால் நாங்கள் எங்கள் நட்பிலிருந்து தான் ஆரம்பித்தோம்.
கவிதையில் மரியாதையும், அக்கறையுமில்லாதது தான்
– ”எனக்குப் பிடித்திருக்கிறது நான் எழுதுகிறேன்,
யாரும் விமர்சிக்கத் தேவையில்லை, என் படைப்புகளில் நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன்,
உனக்கு என்னத் தெரியும், எங்கே கவிதையின் அளவுகோலைச் சொல்லு பார்ப்போம்” என்கிற டைலாக்ஸ்.
இளங்கோ வீட்டிற்கு செல்லும் போது அங்கங்கே தொங்கும்
கவிதைச் சுருள்களைக் கண்டேன். ” சரியான நேரத்திற்காகவும், டெஸ்க் ஒர்க்கிற்காகவும்
பல மாசங்களா அவனுங்க ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கானுங்க” என்று சொன்னார். இந்த டெஸ்க்
வெர்க் என்கிற சொல்லைக் கேட்கவும் தான் ஒரு யோசனை தோன்றியது அன்றைய விவாதத்தில், அதன்படி.
டேக்
இட்டுக் கருத்துக் கேட்கும் ஃபேஸ்புக்கிற்குப் பின்னான கவிதையெழுதும் கணவான்களே!!
(இருபாலருக்கும் பொருந்தும் தானே!!) – உங்கள் கவிதைகள் எந்த பதிப்பிப்பதற்கான அவசரமும்
கோரவில்லை, கவிதைக்கான குறைந்த பட்ச நியாங்களாக டெஸ்க் வொர்க் பண்ணியுள்ளோம், கவிதையை
வெறுமனே லைக்ஸ், கமெண்ட்ஸ் மண்ணாங்கட்டிக்காக எழுதவில்லை என்பவர்களுக்கு நான் வைக்கும்
CHALLENGE -
‘ONLY ME’ optionஐ பயன்படுத்தி பதிவேற்றுங்கள் – பதிவேற்றி ஐந்து நாட்கள் கழித்து தான்
நீங்கள் பப்ளிக் ஆப்ஷனுக்கு மாற்ற வேண்டும். அதன் பிறகு நீங்கள் டேக் செய்யலாம். குறைந்தபட்சம்
48 மணி நேரம். இது உங்கள் பக்கமிருந்து ஃபேஸ்புக் கவிஞர்கள் மீதான விமர்சனத்திற்கு
நான் சொல்லும் பதிலாகக் கூட இருக்கும். எந்த அவசரத்திலும், நிர்பந்தத்திலும் நாங்கள்
கவிதை எழுதவில்லை என்று நிரூபிக்க முடியுமல்லவா. இது ஆரோக்கியமானது தானே. இது எந்தச்
சுதந்தரத்தையும் தடுப்பதாக எண்ணுபவர்கள் – இந்தப் பதிவையே மறந்துவிட்டுப் போகலாம் இன்று
உங்கள் கவிதையைப் பதிவேற்ற வேளை வந்து விட்டது. ஆனால் இந்த CHALLANGEஐ எடுத்துக் கொண்டால்
– என்ன நடக்கும் ????
கவிதை தொடர்பாக நடக்கும் மொத்த விவாதங்களையும் இரண்டு
கோணங்களில் பார்த்து விட முடியும் :
1. What
is poetry?
2. What
you believe as a poetry
3. ரெண்டு
கோணம் தானே சொன்னேன். அதற்கு மேல் ஏன் வாசிக்கிறீர்கள் ? மூணாவது ஒன்னுமில்லை நான்
இந்தப் பதிவில் ப்ரெட் ஆம்லேட்டை ஒரு படிமமாகப் பயன்படுத்தியிருக்கிறேன் :D
hStay Chill & Happy Reading
JJay Kay
படிக்கப் படிக்க சிலபல முகங்கள் ஞாபகம் வந்தது.
பதிலளிநீக்குஒரு வாரம் கழித்து டேக் செய்யலாம் என்ற ஆப்சனை நீக்கிவிடலாம். வெறுமனே பப்ளிக் அல்லது நண்பர்கள் மட்டும் என்று போட்டுக்கொள்ளட்டும். இது என் சஜசன்.
அப்புறம் "அந்த ஒரு நண்பன்" நானில்லையே?
இப்படியான சேலஞ்சில் வருபவர்கள் - யாரும் டேகிடுதலை ஒரு பொருட்டாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குபார்ப்போம்