திங்கள், 5 மார்ச், 2012

ஏன்

ஏன் நீ முறைக்கவில்லை 
ஒரு அன்னியனாய் நான் 
உன் பெயர் கேட்ட பொழுது,

ஏன் நீ மறுக்கவில்லை 
உன் கைகளில் நான் 
ரோஜாவைத் திணித்த பொழுது, 

ஏன் நீ தடுக்கவில்லை 
ஒரு இளவேனில் மாலையில் 
என் விரல் வந்து 
உன்னைத் தீண்டிய பொழுது,

ஏன் நீ மறக்கவில்லை,
நான் வேண்டாம் என்று, 
என்னை மாற்றிய பின்பும் 
உன் மணவோலை அனுப்ப  

1 கருத்து:

  1. கரிகாலன், அதெப்படி உங்களால் மட்டும் முடிகிறது உயிரின் நுனி வரை வலியை உணர்த்திச் செல்ல?

    பதிலளிநீக்கு