திங்கள், 31 அக்டோபர், 2011

கூடங்குளம் அணுமின் திட்டம்




இந்தத் திட்டத்தை எதிர்த்து 1989-ல் கன்னியாகுமரியில் நடந்த போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் மரணம் அடைந்தார்.

கடலோர மற்றும் நதிநீர் பாதுகாப்பு இயக்கம் கடலோர மாநிலங்கள் இணைந்து 1989 களில் மிக பெரிய போராட்டம் நடத்தினர்.

இப்போதைய மக்களின் போராட்டம் ஜப்பான் அணு உலை விபத்துக்கு பிறகு மக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாகவே அதிகரித்துள்ளது.ஓரிரு மாத ஆலோசனைகளுக்கு பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்டது.இத்தனை வருடங்கள் இல்லாத அளவு போராட்டம் நடைபெற வளர்ந்துவிட்ட மீடியாவும் காரணம்.

அணு உலை விபத்து ஏற்பட்ட ஜப்பானில் மொத்தம் இருந்த 54 அணு உலைகளில் 37 உலைகளை மூட வைத்துள்ளது. அந்நாட்டின் எரிசக்தி கொள்கையானது மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து புது உலைகளை கட்டுவதையும் புதுப்பிப்பதையும் நிறுத்தி வைத்துள்ளது.

ஜெர்மனியானது 17 உலைகளை கலைப்பதை தாமதிப்பது என்ற முடிவை தள்ளிப்போட்டுள்ளது

சீனத்தில் புதிய அணு உலைகளுக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸில் கட்டுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டு பெரிய உலைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இத்தாலியிலும் அணுஉலைகள் மூடப்பட அந்நாட்டின் அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 95 விழுக்காடு மக்கள் அணு உலைகள் அமைப்பதை எதிர்த்துள்ளனர்.

பிரான்சில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 62 விழுக்காடு மக்கள் அணு உலைகளை மூட வேண்டும் என்று வாக்களித்திருந்தனர். 15 விழுக்காடு மக்கள் உடனடியாக மூட வேண்டும் என்று தெரிவித்திருத்திருந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் செர்னோபிள் அணு உலை விபத்தின் அதிர்ச்சியிலிருந்தே மீளாத நிலை உள்ளது.

அணு உலைக் கம்பெனியான அரெவா திவாலாகும் நிலையில் உள்ளது. ஏனெனில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இக்கம்பெனியின் உலைகள் தோல்வியடைந்து விட்டன. இது தொடர்பாக கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 9 மாதகாலமாக அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்து வருகின்றன. இதில் அமெரிக்காவில் கடந்த 1973லிருந்தே எந்த புதிய அணு உலைகளும் கட்டப்படவில்லை.

நாட்டில் உள்ள அணு மின் நிலையங்களை எல்லாம் மூடக் கோரி, பிரஷாந்த் பூஷண் தலைமையில் உச்ச நீதிமன்றத்தில், பொது நல வழக்கு ஒன்று கடந்த 14&ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, மரபணு மாற்று பயிர்த் திட்டத்தை எதிர்த்து வரும் பார்கவா, பிரதமரின் முன்னாள் செயலர் கே.ஆர்.வேணுகோபால் உட்பட பலரும் இதில் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை நாளொன்றுக்கு 22
கோடி யூனிட்....
தமிழ்நாட்டு இயற்கை வளமான நிலக்கரியைக் கொண்டு தமிழர்களின் உழைப்பால் தயாரிக்கப்படும்
நெய்வேலி மின்சாரத்திலிருந்து , தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் மறுத்த கர்நாடகத்திற்கு
இந்திய அரசால் நாள் தோறும் சுமார் 11
கோடி யுனிட்களையும்
முல்லைப் பெரியாற்று அணை நீரை மறுக்கும் கேரளத்திற்கு சுமார் 9
கோடி யுனிட்களையும்
பாலாற்றைத் தடுக்கும் ஆந்திராவுக்கு சுமார் 9
கோடி யுனிட்களையும் அள்ளித் தந்துவிட்டு ( யார் வளத்தை யார், யாருக்கு பங்குபோடுவது ? )
தமிழனுக்கு மட்டும் ( வேறெந்த மாநிலமும் ஒத்துக் கொள்ளாத ) உயிர் கொல்லும் அணு உலைகள் .....
இதற்குப் பெயர்தான் " இந்தியம் " என்றால் அதை எதிர்ப்பதே நம் கடமை...

நான் திருச்சியிலும்,தேனியிலும் பாதுகாப்பாக இருக்கிறேன். கூடங்குளத்திலும், தூத்துக்குடியிலும் இருப்பவன் செத்தால் எனக்கென்ன?. அல்லது அவங்களுக்கு எத்தகைய கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டால் எனக்கென்ன? என்ற உயர்ந்த மனோபாவமே இதற்கு காரணம் ஆனால், இதுவரை வெளிவந்த தவகல்களின் படி கூடங்குளம் அணுஉலைகளின் அழிவு எல்லை 250 கிலோமீட்டர் வரை நீள்கிறது. 




அணு கதிர்கள் ஒன்றும் பஸ் பிடித்து தூத்துக்குடி வழியாக மதுரைக்கு வருவதில்லை. எனவே அன்பு நெஞ்சங்கள், பறவை பார்வையில், விமான வழி தட பார்வையில், தங்கள் வீடு இருப்பிடங்களை பார்த்து கொள்ளவும் கண்ணை வித்து சித்திரம் வாங்கலாமா? பல கோடி மக்களின் வாழ்வை கேள்வி குறியாக்கி விட்டு மின்சாரம் தயாரிப்பது ஏற்புடையதா? இவ்வளவு செலவு செய்து விட்டு மூட முடியுமா என்பது அறிவுடைய சான்றோர்களின் அடுத்த வாதம். 500 ரூபாய் கொடுத்து பால்டாயர் வாங்கி விட்டோம் என்பதற்காக அதை குடித்து விடலாமா? 




கல்கத்தா அருகே ஹால்தியா என்னும் இடத்தில இதே போன்ற நிலையில், கட்டி முடிக்கப்பட்ட பின்னர்,HFC என்ற மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்ப்புகளால் கை விடப்பட்டது என்பது எத்தனை தோழர்களுக்கு தெரியும். இது வெறும் உர தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. 1989 -ம் ஆண்டு கூடங்குளத்தில் நிலம் கையகப்படுதபட்டது. அப்போது நடந்த போராட்டங்களில் இரண்டு பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகினர். நிறைய ஊர்வலங்கள், பாத யாத்திரைகள் நாகர்கோயிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. இது போன்ற வரலாற்று நிகழ்வுகள், நிறைய பேர் ஏதோ இன்று தான் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று பிதத்துகின்றனர். 




காரணம், எவனோ செத்தால் நமக்கென்ன என்ற எண்ணமும், ரஷ்ய மலமும் அல்வாவை போல சுவையானது என்ற தோழர்களின் மனோ பாவமும் தான். ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்களின் தரமும், Tuplov பயணிகள் விமானங்களின் தரமும் உலகறிந்த ஒன்று. மிக்-21 போர் விமானத்தை பறக்கும் சவ பெட்டிகள் என்றே வட இந்திய பத்திரிகைகள் எழுதுகின்றன எண்ணி துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அணு மின் நிலையங்களால் ஏற்படும் ஆபத்துகள்
பூவுலகின் நண்பர்கள் நடத்திய கூட்டத்தில் தெரிந்த சில விடயங்கள்.




* அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மட்டுமல்ல அது இயங்கினாலே ஏற்படும் கதிர் வீச்சுக்களின் விளைவு மோசமாக இருக்கும். கல்பாக்கத்திலும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நிறைய பேருக்கு தைராயிட் புற்று நோய் , ஆறு விரல் அபாயம் , எலும்பு மஜ்ஜை நோய் முதலியன தாக்கப்பட்டு இறந்து இருக்கின்றனர். அரசு தரப்பில் நஷ்ட ஈடு தருவதே இல்லையாம்


* கல்பாக்கம் வடிவமைக்கப்பட்டது ZONE 2 ( நில நடுக்கம் ஆறு ரிக்டர்க்கு கீழ்) அடிப்படையில் . பருவ மாற்றங்கள் காரணமாக அது இப்போது ZONE 4 ( 8 ரிக்டர் வரை ) ஆனா போதும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .


* கல்பாக்கம் கடல் அரிப்பே ஆகாத பகுதி என்று சொல்கிறார்களாம். ஆனால் ஆண்டு ஒன்றுக்கு 55 Cm வரை கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறதாம் .


* மேலும் கல்பாக்கத்திற்கு தென்கிழக்கே 180 கி மீ மற்றும் பாண்டிக்கு 100 கி மீ தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு எரிமலை உள்ளதாம். கிட்டத்தட்ட 6 - 8 கி மீ கீழே உள்ள லாவாக் குழம்புகள் மெல்ல மெல்ல எழும்பி வருகிறதாம்.




* 3 கி கிராம் யுரேனியத்தை குளிர்விக்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீர் மற்றும் 72000 லிட்டர் கடல் நீர் தேவைப்படுகிறதாம் . இதனால் கல்பாக்கத்திற்கு பாலாறில் இருந்தும் கூடங்குளத்திற்கு பேச்சிப் பாறை யிலிருந்தும் நீர் எடுத்து உபயோகிக்கின்றனர். இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைவதோடு தரமும் தாழ்ந்து போகிறது.


* செர்னோபிலில் விபத்து ஏற்பட்ட போது ஐந்தரை லட்சம் வீரர்கள் கதிர்வீச்சைத் தடுக்க போராடினர். இதில் ஒரு லட்சம் பேர் இறந்தனர். நிறைய பேர் பின்னாளில் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டனர். கதிர் வீச்சின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருபது நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன ( CONTAMINATED ) . எனவே கதிர் வீசினால் கூடங்குளம் மட்டுமல்ல நம் தென் மாநிலங்களுக்கே பெரும் அபாயம் உள்ளது.


நாம் இதை எதிர்த்து போராடா விட்டால் நாம் மட்டுமின்றி நம் பிள்ளைகளும் மற்றும் பின் வரும் சந்ததியினரும் பெரும் பாதிப்பு உள்ளாவர்கள் என்பது உண்மை. சினிமா, அரசியல் போன்றவற்றை ஊறுகாயாக பயன்படுத்துவோம். இந்த பிரச்னையை முழு வீச்சுடன் அதிக வீரியத்தோடு எதிர்ப்பது நமது கடமை. உயிரோடு இருந்தால்தான் ஊழலைக் கூட எதிர்த்துப் போராட முடியும் நண்பர்களே.


இந்தியாவுக்கு அணுவுலைகள் மின்சாரம் உற்பத்திக்காக தேவை என்பதைக் காட்டிலும், அணு ஆயுதங்கள்   உற்பத்தி செய்ய தேவை என்பதே நிஜம், நாட்டின் நலன் என்ற பெயரில் சில கிராமங்களின் ( அதுவும் நம்மை போன்ற இளிச்சவாயங்களின் ஊர்களில்) அழிவை இந்த அரசாங்கம் பொருட்படுத்தாது. அவதார் படம் போல வியாபாரம் செய்ய கூடங்குளம் தேவை, மக்கள் ஒழிந்தால் ஒழியட்டும் .... மாற்று மின்சாரம் எனும் வெறும் விளக்கங்கள் பத்தவே பத்தாது, உலக அரசியல் அல்லவா இது...  



கீழே சில இணைப்புகள் கொடுத்துள்ளேன். மேலும் பல விவரங்களுக்கு


https://plus.google.com/117613176275291517362/posts/bzf73BZGiAB


http://poovulagu.blogspot.com/2011/05/blog-post.html


http://nuradiation.blogspot.com/2011/04/milk-of-japan-mother-affected-by.html




http://internationalnews.over-blog.com/article-kazakhstan-s-radioactive-legacy-graphic-pictures--39193788.html

http://josephinetalks.blogspot.com/
 —







நன்றி திரு. சரவணக் குமார் & அருள்மணி சாமுவேல் மற்றும் இதர FACEBOOK  நண்பர்கள் 






தங்கள் கருத்துக்களை பதியவும்.




கரிகாலன்  



-- 

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீபாவளி ஸ்பெஷல் - சிறுகதை டாம் - டாம் ..

அன்று ஒரு நாள்- வெள்ளிக்கிழமை, அந்தி வேளையில் பள்ளி விட்டு வந்து,  என் நண்பர்களுடன் ஒரு சிறிய பட்டாளம் திரட்டிக்கொண்டு, இரண்டு நாளில் வரும் தீபாவளிக்கு ஆயத்தமானோம் , இரண்டு மாதங்களாய் சேர்த்த பணத்தில் எங்கள் ஊரிலேயே தயாரிக்கும் டாம் டாம் ( பார்ப்பதற்கு சிறிய லட்சுமி வெடி போல் இருப்பினும் அனுகொண்டு வெடியின் சத்தம் கொடுக்கும், பாறையை உடைக்க பயன்படும் மருந்து வாங்கி illegal -ஆக விற்பனை செய்யும் வெடி என்று கூட சொல்வார்கள் ) எனும் வெடியினை வாங்கி, வீட்டிற்குத் தெரியாமல் மூன்று நாட்களுக்கு முன்னரே தன் வீட்டில் ஒளித்து வைத்திருந்த வெடியை எடுத்து என்னை பெருமையாக பார்த்துக் கொண்டேன்.

                    இந்த பட்டாசை வாங்க நான் என்னவெல்லாம் செய்தேன், தெரியுமா ? 

முதலில், எங்கள் தெருவில் உள்ள எல்லோர் வீட்டிலும் எங்கள் பெற்றோர்களிடையே ஒரு பொது உடன்படிக்கை நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.ஆம், எல்லாப் பெற்றோர்களும் தீபாவளிக்கு முதல் நாள் தான் எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவதாக சொல்லியுள்ளார்கள். பட்டாசு வங்கித் தருவதை deal-ஆ வைத்துக் கிட்ட தட்ட காலாண்டுத் தேர்வு முடிந்ததிலிருந்து இன்று வரை எங்களை தினமும் படிக்க வைத்து விட்டனர்கள். மேலும், எங்களை ஒன்று சேர்ந்து விளையாடாமல் இருக்கவேறு கட்டளையிட்டனர்(ஒன்று சேர்ந்தால் நாங்கள் ஊரையே அதகளம் பண்ணுவோம் என்று அண்டை வீட்டுக் கிழவன் ஒருவன் புகார் செய்து விட்டான்). இது ,எல்லாம் அவங்க காட்டும் தீபாவளி Blackmail தான் என்று புரிந்து கொண்டேன், வீட்டிற்குத் தெரியாமல் பக்கத்துச் சந்தில் போய் கிரிக்கெட் விளையாடப் போனதால், அந்த அண்டை வீட்டுக் கிழவன் எங்களை மேலும் ஒருமுறை போட்டுக் கொடுத்துவிட்டான். அவனால் தான் ஒருவாரம் முன்பு ஒரு பாக்கெட் பிஜிலி வெடியாவது வாங்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையும் போனது.

              ஆனால் இந்த அய்யா எப்படி, ஆண்டவர் மெட்ரிகுலேசன் ஸ்கூல் ஸ்டார் ஸ்டூடன்ட்-னா சும்மாவா ? இதற்காக ஒரு சிறிய சிறுசேமிப்பு நிருவனத்தினையே தொடங்கினேன். எப்படி இந்த யோசனை வந்தது தெரியுமா?? ஒரு நாள் மாலை - அப்பொழுது பிரபலமாக டீவீயில் விளம்பரம் பண்ணும் கலைமகள் சபா, அனுபவ் என்று பல நிறுவனங்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்று ஒரு சிவப்புத் துண்டு கோஷ்டி, கூட்டம் போட்டுக் கொண்டு கத்திக் கொண்டிருந்தனர், கடையில் பஜ்ஜி வாங்க சென்ற எனக்கு அப்பொழுது தான் உதித்தது அந்த யோசனை.

                       எங்கள் வீட்டுப் புழக்கடையில் வைத்திருந்த தோட்டத்திற்கு VGP என்று பெயரிட்டு நிறைய சாமந்திப் பூக்களும், டேபிள் ரோஜாக்களும், தக்காளிச்செடிகளையும் காலாண்டுத் தேர்வுக்கு முன்னரே நட்டுவைத்து, அதில் வளரும் ஒவ்வொரு செடிக்கும் என் நண்பர்கள் பெயர் வைத்து 25 பைசா , 50 பைசா என்று சேர்த்து வைத்து வந்தேன். இதில் சில சமயம் என் அம்மா வாங்க சொல்லும் காய்கறி லிஸ்ட்டில் தக்காளி இருந்தால் அன்று 2 , 3 ருபாய் வரை லாபம் கிடைக்கும். இதில் கூடப் பிறந்த தம்பியை வேறு சமாளிக்க அப்பப்போ mangobife , bigfun என்று கமிசன் கொடுக்க வேண்டும்..

                             இப்படி எல்லாம் சேர்த்த ஒரு 20 ரூபாயில், 10 ரூபாய்க்கு டாம் டாம் கட்டும் (25 உருப்பிடி), ஒரு பாம்பு மாத்திரை பாக்கெட், இரண்டு கலர் தீப்பெட்டி, அரை பாக்கெட் சாட்டைக் கயிறும் வாங்கும் போது, ஒரு கார்டூன் பொம்மை வெடியினையும் லபக்கினேன். வீட்டிலிருந்து கார்த்திக் ஒரு ஊது பத்தியை கொண்டுவந்தான்.

                 அம்மா வருவதற்கு எப்பவுமே ஆறு மணி ஆகும், இன்று போனஸ் போடணும் அதனால வர எழரையாகும் என்று காலையிலே சொல்லிவிட்டுப் போனார்கள். ஆகவே , திங்கள் கிழமை வரும் தீபாவளிக்கு இன்றிலிருந்து விடுமுறை கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியது. வேலைக்கு சென்ற அம்மா இன்னும் திரும்பவில்லை, நானும் எனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த டாம், டாம் பட்டாசினை எடுத்து கொட்டாங்குச்சியில், மரப் பொந்தில், பாறை இடுக்குகளில் என்று வித விதமாக வெடித்து மகிழ்ந்தோம்.

             அப்பொழுதுதான் எங்கள் பாதையில் அடிக்கடி குறுக்கிடும் கிழவனைப் பழி வாங்கும் திட்டம் உருவானது. கணேஷ், மிக புத்திசாலி, அழகு , அறிவு , நல்ல சிவப்பு அவன் கொடுத்த திட்டம் தான் அது. அருகிலிருந்த மாட்டுச் சாணத்தை எடுத்து அந்தக் கிழவனின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு, அதற்க்கடியில் இரண்டு வெடியை எடுத்துத் திரியைக் கிள்ளி வைத்து விட்டு நகர்ந்தான், அந்தப் புனிதமான காரியத்தினை செய்ய என் தம்பியை அழைக்க யாரும் அந்தத் தெருவில் நடமாடாத நேரம் மெகு விரைவாகச் சென்று பற்ற வைத்து விட்டு வந்துவிட, நாங்கள் எதிர்பார்த்த சாண மழை அந்தக் கிழவனின் வீட்டுச் சுவற்றில் ஓவியம் வரைந்தது.

                 எங்கள் சிரிப்பொலி அடங்குவதற்கு ஒரு அரைமணி நேரமானது, (கணேஷின் சட்டையில் விழுந்த சாணியின் கறை, அவன் வீட்டில் அடி வாங்கும் வரைத் தெரியாது). இப்படி கோலாகலமாகத் தொடங்கிய அந்த தீபாவளிக் கொண்டாட்டம் எனக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ச்சி தரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

                       மிஞ்சி இருந்த இரண்டு டாம் டாம் வெடியினையும் , ஒன்றாக இணைத்து தெருவின் முச்சந்திக்கு அருகில்,சாலையின் நடுவே வைத்தேன். கையிலிருந்த ரோஜா அகர்பத்தியை ஊதிவிட்டு, அந்த வெடியின் நுனியில் கொண்டு வைக்கும் பொழுது, "அறிவிருக்காடா உனக்கு ! ஆள் வர்றது உன் கண்ணுக்கு தெரியலையா !" என்று ஒரு பேய்க்குரல் ( அந்தக் குரலை பின்னர் நான் குயிலின் குரலோடு ஒப்பிட்டு பாடிய வரலாறு உங்களுக்கு தெரியாது).


                மஞ்சள் நிறச் சட்டையும்,வெள்ளை நிற கவுனும் போட்டுக் கொண்டு, கோபிப் பொட்டும், டிசம்பர் பூவைச் சூடியும் ஒரு பொண்ணு , முகத்தினை மட்டும் ஆனந்தராஜ்ஜை பார்க்கும் கௌதமி மாதிரி முறைத்துக் கொண்டு என் முன்னே நின்றாள். ஒரு பொண்ணு என்னை முறைப்பது, எனக்கு மிக அருகில் இருப்பது, கோபப் படும் பொழுது நெற்றி சுருங்கி அந்த கோபிப் பொட்டு பாம்பு போலே நெளிவது இவையெல்லாம் எனக்கு அன்று தான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. பார்ப்பதற்கு அப்போ நிரோஷா மாதிரி இருந்தாள், நானும் உடனே ராம்கி மாதிரி ஏதாவது பண்ணனும் என்று தோன்றியது . ஆனாலும், என்னை அத்தனை சிறுவண்டுகளுக்கு மத்தியில் அவள்"டா" என்று அழைத்துவிட்டாள் அல்லவா, அதனால் நான் அவளை பழிவாங்க வேண்டும். 

                   ஸ்கூல் டிராமா-வில் கூட நான் கட்டபொம்மனாய் நடிக்கும் பொழுது, எனக்கு சேவகர்கள் போதவில்லை என்று என் சீனியர்களே எனக்கு சாமரம் வீசினர், அப்படிப்பட்ட என்னை 'டா' என்று அழைத்த அவளுக்கு பாடம் புகட்டனும் என்று மீண்டும் அந்த டாம் டாம் வெடியை பற்ற வைக்க குனிந்தேன். ..இந்த நொடிதான் என் கதையினையே மாற்றிவிட்டது . ஆம் , நான் அந்த வெடியினை ஏற்கனவே பற்ற வைத்திருக்க வேண்டும், ஏனோ மெதுவாக எரிந்து வந்த திரி , நான் சரியாக குனியவும் அந்த இருவெடிகளும் என் மூஞ்சிலே வெடிக்கச் செய்தது . மூஞ்சிலே புகையும்,கரியும் , கையிலே அந்த வெடியில் இருக்கும் கல் தெறித்த வலியும், தலையிலே பேப்பர் சுருளும், காதில் "கொய்.." எனும் ரிங்காரம் மட்டும் ஒலிக்க, மெதுவாகத் திரும்பினேன், அன்று அந்தக் கிழவனின் நிலையை விட எனக்கு மோசமாக இருந்தது. எல்லோரும் ஒரே சிரிப்பு தான், அவளும் சேர்ந்து சிரித்தாள்.. அதற்கு பின் அந்த தீபாவளி எனக்கு சிறப்பாக இருக்கவில்லை .....ஏன், அவள் கூட இன்னும் அந்த சம்பவத்தினை மறக்காமல் என்னை பார்க்கும் போதெல்லாம் "களுக்'' என்று சிரிக்கிறாள். இப்போ வடிவேலு சொல்லும் "வடை போச்சே " என்ற வசனம் தான் ஞாபகம் வருகிறது.

         ஹலோ , நீங்களே சொல்லுங்க ! அந்த டாம் டாம் வெடி கொஞ்ச நேரம் கழித்தோ , இல்லை நான் குனியும் முன்னரோ வெடித்திருக்கலாம் அல்லவா ?? 
  "என்ன சொல்றிங்க !!??? "
"அட சத்தமா சொல்லுங்க" .. 
 ஓ அதுவா "Wish you the same , Happy deepavali " -- 
----------
நன்றியுடன் கரிகாலன்

திங்கள், 24 அக்டோபர், 2011

எனது புத்தகப் பார்வை -பகுதி - 1 தானாய் நிரம்பும் கிணற்றடி -அய்யப்பமாதவன்

தானாய் நிரம்பும் கிணற்றடி
            -அய்யப்பமாதவன் 

இந்த யதார்த்தமான தலைப்பே அந்தப் புத்தகத்தை கண நேரத்தில் வாங்க வைத்தது. அய்யப்பமாதவன் அவர்கள் முகநூலில் மிகவும் பரிச்சயம் என்பதால் அந்தப் புத்தகத்தினை ஒரே  மூச்சாக படித்துவிடத் தீர்மானித்தேன். 

மொத்தம் 11 கதைகள், வரிசையாக சிறிதும் இடைவெளியின்றி படித்து முடித்தேன். ஆம் , கதைகளின் வெளியே என்ற ஆசிரியரின் முன்னுரை மிக கனமான ஒரு சிறுகதை தரும் உணர்வையே தந்தது. தன் கவிதைகளிலிருந்து உரைநடைக்கு மாறிய எழுத்துக்கள் மீதான விமர்சனங்கள் பற்றிப் படிக்கும் பொழுது உங்களுக்கும் அந்த உணர்வு வரும். அவ்வுணர்வு வந்ததால் தான் இந்த விமர்சனமே ஒரு நல்ல தொகுப்பிற்குக் காரணமாய் அமைந்ததை உணரலாம். இக்கவிஞர் (கதாசிரியர்) ஒவ்வொரு கதையிலும் தன் வலியினை ஏதோ ஒரு இழையில் பிரதிபலிக்கிறார். உதாரணம் முதல் கதையில் வரும் புரண்டுகொண்டிருக்கும் புத்தகப் பக்கங்களில் கூட கவிஞரின் வாசனை தெளித்திருக்கும் , பீடிக்காரனிடம் , அவன் நண்பனிடம், இரண்டாம் கதையில் வரும் சொர்க்கவாசியிடம் கூட ஆசிரியர் தமது முன்னுரை விசயங்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறார்.

ஒரு கூட்டாஞ்சோறு உண்பது போல், ஒவ்வொரு கதையிலிருந்து மற்றொரு கதையின் தளமும் , சுவையும் மாறுபட்டிருக்கிறது. இருப்பினும் எல்லாக் கதையின் மையத்திலும் ஒரு சோகம் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பில் முதல் கதையாக ”தானாய் நிரம்பும் கிணற்றடி"யினை முதல் கதையாகத் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு பாராட்டு. 

இந்தத் தலைப்பைப் பார்க்கும் போது யதார்த்த உலகிலிருந்து ஒரு கதையினை எதிர்பார்த்து பயணிக்க ஆரம்பித்த எனக்கு ஒரு பேரதிர்ச்சி, ஆம் இக்கதையில் தங்கையின் ஆவி (ஆவி என்று ஆசிரியர் எந்த இடத்திலும் சொல்லவில்லை) போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்கு கிடைக்கிறது. ஆசிரியர், இக்கதையில் தங்கையின் மரணம் பற்றிய எந்தக் காரணமும் சொல்லாது, மரணம் ஏற்படுத்தும் விளைவு அதீத பாசம் கொண்டவர்களுக்கு ஏற்படும் ஒரு மாயையாகக் காட்டுகிறார் . மிகவும் எச்சரிக்கையாகத் தேவையற்ற கதை மாந்தர் உரையாடல்களை தவிர்த்திருக்கிறார். பூவாய்,சருகாய், நீராய் தன் தங்கையை (அவள் மாய பிம்பத்தினை ) பார்க்கும் அக்காவைப் பார்க்கும் போது நமக்கு பரிதாபம் ஏற்படுத்துகிறது.

இரண்டாவது கதை, தங்கக் கயிறு - ஏற்கனவே சொன்னது போல் எழுத்துலகம் எப்படிப்பட்டது என்று நையாண்டித் தனமாக நமக்கு காட்டுகிறார். இதை நீங்கள் கதையின் இறுதியில் பயணிக்கும் போது தெளிவாகப் புரியும். பிரிக்க முடியாதது ,"வறுமையும் புலமையும்".  ஆசிரியர் காட்டும் சொர்க்கம் சுவாரசியமாக இருக்கிறது, அந்த எழுத்தாளன் எடுக்கும் திரைப்படத்திலும் எழுத்தாளன் கதைதான் என்பது மீண்டும் முன்னுரையினை நினைவுக்கு கொண்டு வருகிறது .

ஏழேழு ஜென்மத்திற்கும் மீனும், பாலும் வாங்கியவள் ...பூனைகளைக் குழந்தையாக, தன் குடும்பமாக வளர்க்கும் அவள் அசிங்கப்பட்ட பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்கிற சமூகத்தின் label , இக்கதையிலும் சரியாக ஒட்டப்பட்டுள்ளது. சமூகம் புறத்தோற்றதினை
வைத்துதான் மனிதர்களை எடை போடுகிறது என்பது இக்கதையில் எதேச்சையாக உருவாக்கபட்ட கதாபாத்திரத்தின் வழியே நாம் உணரலாம். ஆனால் ஆசிரியரின் முயற்சி பூனைகளோடு வாழும் அப்பெண் பூனையினைப் போன்ற தோற்றம் அவளுக்கு இருப்பதாகக் காட்டுகிறார் (அவளுக்கு முளைத்திருக்கும் லேசான மீசை மயிர் ) என்று நான் நினைக்கிறேன் .

ஊதாநிறப் புகை கிறுக்கியப் பீடிச்சுருளும் சில காலி மதுபுட்டிகளும், இலக்கியத்தில் எந்த இடம் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. ஒரு ரசிகனுக்கு இந்தக் கதை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் எரிச்சலுடனும், அறுவருப்புடனும் கூடிய ஒரு குடிகாரன் ஒரு ரயில்நிலையத்திலோ, ஒரு பேருந்து நிறுத்ததிலோ நாம் பலரை பார்க்கிறோம் அல்லவா, அவர்களில் ஒருவன் குடிகாரன், புகைத்துக்கொண்டே இருப்பவன், அழுக்கு ஆடையில் மட்டுமே தோற்றமளிப்பவன், பெண்களை உரசுபவன் - ஆனால் அவன் ஒரு எழுத்தாளன்...  எப்படி இருக்கிறது ?? இதுவே அதிர்ச்சி என்றால் இவனைப் போன்றே ஒரு நண்பன் இவனுக்கு இருக்கிறான். இருவரும் தன்னைப் பிரிந்த பெண்களை மறக்க தினமும் குடிக்கின்றனர்.அவர்களுக்குள் ஒரு புரிதல் இருக்கிறது , நட்பு இருக்கிறது, அக்கறை இருக்கிறது ...ஆக அவர்கள் ஒரு குடும்பமாக தீர்மானிக்கிறார்கள். சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?? இக்கதையில் அந்தக் குடிகாரர்களின் குடும்ப வாழ்க்கையும், அவர்கள் குழந்தையான அந்தத் தெரு நாயும் மிக அழுத்தமான பாத்திரங்கள், குடும்பத்தின் ஆணிவேரைச் சாய்த்துப் பார்க்க வைக்கும் வலிமையான பாத்திரப் படைப்பு. அன்புக்கு நிகர் எந்த உணர்வும் இல்லை - உணரலாம் இக்கதையில்.

மாறுகண்கள் கொண்ட ஒரு பெண்ணின் கதை, தூக்குப் பானை சலம்பும் புதை ரகசியம் , மரப்பாச்சியைக் காணவில்லை என்ற அழுத்தமான மூன்று கதைகளும். குறுக்குவெட்டுப் பாதைகளில் உலவும் செல் பேசி , தொந்திக் கணபதியின் வாகனம் இவ்விரண்டு கதைகளும் சுவைபட எழுதியிருக்கிறார். 

மேற் சொன்ன ஐந்து கதைகளில் மரப்பாச்சியைக் காணவில்லை என்ற கதையினைப் படிக்கும்போது அந்தத் தாயின் மீது மிகுந்த வெறுப்பை தருகிறது. இன்னும் இது மத்திய மாவட்டங்களில் சிசுக் கொலையாக நடப்பதை நினைத்தாலும், பெண்ணின் இழி நிலைக்கு பெண்களும் பெரிய காரணம் என்று உணர முடிகிறது .

மாறு கண்கள் கொண்ட ஒரு பெண்ணின் நிலை இப்படித் தான்(கதையில்) முடியும் என்று யூகம் செய்ய முடிகிறது. பெண்களைப் பற்றிய சமூகக் கதைகள், திரைப்படங்கள் ஆகட்டும், இரண்டாம் தர பத்திரிகை ஆகட்டும், ஒரு அபலைப் பெண்ணின் கதை இப்படித் தான் முடிகிறது. அபலைப் பெண்களை ஒரு insisting போதைப் பொருளாக ஆக்கியே தீரவேண்டும் என்கிற நிலை சமூகத்திற்கு இருப்பது போல் திணறுகிறது . ஆனால் கதையின் இறுதியில், அந்த முதிர்கன்னியின் , தங்கையின் ஒரு கேள்வி "ஜீரணம் செய்வது கடினம்" .

இறுதிக் கதையான, ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கிறது ஒரு தத்துவ ரீதியினாலான தலைப்பா? ஒரு கவிதையே தலைப்பா ? கதைக்குள் சென்றால் காதலின் யதார்த்தம் பற்றி அப்பட்டமான உண்மையினை வெளிக் கொணருகிறார். ஹார்மோன்ஸ் செய்யும் லீலையாக, நீண்ட நாள் காதலிக்கும் காதலனை மறக்கச் செய்யும், தன்னைச் சுற்றிவரும் ஒரு பைத்தியக்கார stranger மீதான பரிவு. பெண்ணின் பலவீனம், ஆணின் குருட்டு மோகம் இவற்றை நேரடியாய்ச் சொல்லாமல் எளிதாய் ஒரே நாளில் நடக்கும் சம்பவமாக சொல்கிறார்.

மேலும், இந்த சிறுகதையில் அவன், அவள் ,அவர்கள் என்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன .. அதில் எழுத்துப் பிழைகள் நிரம்ப இருப்பது போல் தோன்றிற்று .. ஒரு வேளை, நள்ளிரவு தாண்டி படித்த அயற்சியா என்று புரியவில்லை.

உதாரணம் :-  அவள் குளக்கரையில் நின்று முகம் கழுவும் போது .... அவன் என்கிற வார்த்தை தவறாகப் பிரயோகப் படுத்தியாதாக ஒரு சந்தேகம் அதே போல், அவன் அவளுடைய பாயில் படுக்கும்போதும் அவள் மேல் படுப்பதாக நினைத்துக் கொண்டான் என்று வரும் அல்லவா ...அதுவும் அப்படித் தான் ..புனைவு என்று புலப்படுவதால் அதை எழுத்துப் பிழையாக கருதாமல் அவற்றிற்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் போது கதை ஒரு மாதிரி இடறுகிறது ... கதையின் இறுதியில் வரும் ஒரு அதிர்ச்சி இவைகளை மறந்து, ஒரு நிமிடம் அவனின் வெட்டுண்ட கையின் வலிபோல்.. புத்தகத்தினை மூட யோசிக்கிறது 

இவர் தன் கதைகளின் மூலம் எழுத்துலக வாழ்க்கையினையும், நமது நம்பிக்கைகளான காதல், குடும்பம், திருமணம் மீது தன் கதைகளின் மூலம் ஒரு நேர்மையான பரிசோதனை கண்டு என்னைக் கவர்ந்துவிட்டார் .    

நினைவிருக்கட்டும் இது வெறும் ஒரு ரசிகனின் பார்வை மட்டுமே 

திங்கள், 17 அக்டோபர், 2011

தீபாவளி

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது..                                                                  


இந்நாள் நுகர்வு கலாச்சாரத்தில், தங்களுடைய பணக் கையிருப்பையும், கடன் அட்டையினை முழுவதும் செலவழிக்கவும் வழி செய்யும் நாள் மட்டுமே . நம் சமூகத்தில் இப்படி ஒரு விழா கொண்டாடும் அளவுக்கு எந்த அற்புதச் சம்பவங்களும் இந்த ஆண்டில் நிகழவில்லை? என்றோ அழிந்த யாரோ ஒரு அரக்கன், இன்று எதனை அரக்கர்களையும், சுயநலப் பேய்களையும் நாம் பார்க்கிறோம் ?? அப்படியெனில் இட்ன்ஹா தீபாவளி என்ன உணர்த்துகிறது உங்களுக்கு ? பத்து சதவீத மக்களுக்கு மட்டுமே திருப்தியையும், மற்றோருக்கெல்லாம் அடுத்த தீபாவளியை நன்றாக கொண்டாடுவோம் என்கிற தேற்றமோ!! இல்லை ஏமாற்றமோ மட்டுமே மிஞ்சுகிறது ..... உணருங்கள்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

விதியின் பகடை - வீர நாயக்கன் பகுதி - 6


                விதி என்ற "வார்த்தை" மனித வாழ்வில் தவிர்க்க முடியாத சொல். தெய்வ நம்பிக்கை இல்லாதவன் கூட தன்னை மறக்கும் நிலையில் விதியினை பற்றி பேசுவான். விதி, இன்பம், துன்பம் இரண்டையுமே ஒரு விதிக்கபட்ட இடைவெளியில் மாற்றி மாற்றி நமக்கு வழங்குகிறது. அந்த விதி இக்கதையில் என்ன செய்கிறது??.

  
                பொருள் தேடி இடம் பெயர்ந்த வேடர் கூட்டமொன்று இந்த சிற்றூரில் தங்குவதில் விதியின் செயல்  ஒன்றும் இல்லை என்றாலும், குலத்தொழிலாம் வேட்டையாடுதலில் வீரன் செய்த புலி வேட்டை ஒன்றும் விதிப் பயன் இல்லை என்றாலும், ஏன் அவ்வூரில் வாழும் அர்ச்சகரை காண அரசியல் சூது கொண்ட முத்தன் அவ்வூருக்கு வந்தது கூட விதியால் அன்று, ஆனால் அப்பேதையாம் கோதையை காப்பாற்ற கோயிலில் நுழைந்த வீரனின் செயலே அவ்விதியால் வந்தது எனலாம்.

             அவன் உள்நுழைந்ததனால் அவ்விதி யாது செய்யும் என்று கேட்டீர்களா ?? தன்னை காத்திட்ட வீரனை காதல் கொள்ள செய்யும் அல்லது அரசியல் செய்ய வேண்டி, அவ்வீரனை பகடையாய் தேர்ந்தெடுக்க வைக்கும். காதலோ, அரசியலோ ஒரு பெண் மையப் புள்ளியாக ஆகும் பொழுது என்ன குழப்பம் வேண்டுமானாலும் நேரலாம் என்பதும் அவ்விதியின் செயலே.


          கோதை தன்னை காப்பாற்றிய ஒருவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே என்று வருத்தமுற்றாலும், காதல் எனும் பயிர் முளைக்காத   பெண்ணாகவே தோற்றமளித்தாள். ஆயினும் தன்னில் விழுந்த காதல் விதயினையும் , அது துளிர் விடுவதும் விதியின் கையிலில் இருப்பதை அறியாமல், பக்கத்தில் வசிக்கும் மருத்துவச்சிக் கிழவியைக் காணச் சென்றாள். விதியும் அவள் பின்னே தொடர்ந்தது.


        தன்னளவில் ஒரு அந்தனப்பெண்ணிடம்  பேசுவதே ஒரு குற்றம் எனும் சமூகத்தின் மத்தியில், எந்த ஒரு விளைவையும் யோசித்து செய்யும் வீரநாயக்கன். கோதையைக் கண்டவுடன் தன்னை மறந்தான். எதோ ஒரு பிணைப்பு தன்னை அக்கோயிலுக்கு இட்டுச் சென்று அவளை தன கண் முன்னே நிறுத்தியதாக எண்ணினான்.


          அதிகாலைப் பொழுதிலே நீராடிவிட்டு கையில் எந்த வாழும் ஏந்தாமல் துரிதமாக கிளம்பினான்.தன் அண்ணன் எங்கே போகிறான் என்பதை அறிய முற்பட்டாலும், அவனிடம் வினவ தயிரியம் இன்றி மலங்க மலங்க விளித்த்க் கொண்டிருந்தாள், வீரனின் தங்கை நல்லாள்.தன் தோழன் பொம்மனுக்கு தெரியுமுன் ஊருக்குள் செல்ல வேண்டும் என்று தமக்குள்ள உளறிக் கொண்டே கிளம்பினேன். தன் தலைவர் எங்கோ செல்கிறார் என்பதை உணர்ந்த அவன் நாய் ஓய்யானும் அவனுடனே விரைந்தது. தன்னுடன் வரும் நாயை திரும்பிச் செல்லுமாறு சுட்டு விரல் காண்பிக்க, ஓய்யானும் திரும்பியது.


          அக்காலையில், செடிகளிலும் , புல்லிலும், வயல்வெளிகளும், காலைக் கதிரவன் தன் பொற்கரம் கொண்டு பொன்னாய்ச் சமைத்திருந்தான். இந்த மகோன்னதமான சூழலில் ஒருவன் காதல் உணர்வு கொள்ளும்போது. புது உலகமே தமக்காக சஞ்சரிப்பது போல் தோன்றும்.ஊருக்குள் ஒவ்வொரு வீடும் சாணமிட்டு மொழுகி, சிக்கலான மாக்கோலங்கள். அந்த ஊரின் தூய்மையினையும், ஒழுக்கத்தினையும் எடுத்துக் காட்டியது. புலிக்களின் தொல்லை வெகுவாக குறைந்து வருவதால் அதிகாலையிலே வயலுக்கு சென்றுவிட்ட கணவன்மார்களுக்கு, கஞ்சியும், தினைச் சோறும்  தயாரித்துக் கொண்டிருந்தனர்.அடுத்த நாள் வரும் சந்தைக்கு தயாராக அண்டை ஊர்களிலிருந்து மாட்டுவண்டிகள் வந்து கொண்டிருந்தன.

            கோயிலுக்கு அருகிலுள்ள வீதியிலிருந்து, மருத்துவக்கிழவியின்   வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கோதையினை, வெகு தொலைவிலே அடையாளம் கண்டு கொண்ட வீரன் ஒரு புன்னகையுடன் அத்திசையில் நடக்கலானான். இளம் பச்சை நிற கச்சையுடன், பச்சை நிற சேலையணிந்து வயல்வெளியில் ஒரு கையினை மேற்புறமும், மற்றொன்றை செய்தும்   நடந்துவரும் அழகினைக் கண்டு மெய்மறந்த வீரன் வேகமாக அவளை பின்தொடர்ந்தான்.


             கோதை மெதுவாக ஒரு குடிசையினுள் எட்டி பார்த்துக் கொண்டே "அம்மா " என்று அழைத்தாள். அக்கிழவியும் வந்திருப்பது யார் என்பதை அறிந்து ,"யாரது நாகங் கண்டு மயங்கிய பெண்ணா?? ம்ம் ..பூச்சியைக் கண்டு மயங்கியவள் புலியைக் கொன்றதேனோ?? "என்றாள். "போ !! கிழவி ..நானெங்கு கொன்றேன்? ஒரு வில்லேந்திய வீரனும் அவன் தோழனும் வந்தல்லவோ கொன்றனர் .பாவம் அந்த புலி கோயில் வாசலிலேயே உயிர் துறந்தது "என்று பரிதாபம் கொண்டாள். பாரப்பா "புலிக்கு பரிந்து பேசும் பேதையே" என்று மீண்டும் ஏளனம் செய்தாள்.

   
            மீண்டும் அக்கிழவி"ஆமாம் யாரோ ஒரு நொண்டி திருக்கோயில் மேற்பார்வைக்கு வந்தானாமே??"என்றாள், அப்பொழுது கிழவியின் முகம் சற்று மாறியிருந்தது.கோதையும் அவனை நினைக்கையில், தன் இடை பற்ற வந்த அவன் குரூர எண்ணம் அவள் மனதில் ஓட, அவளுக்கும் முகம் மாறியது .சட்டென்று அந்த பேச்சினை மாற்ற அக்கிழவி "ஆமாம் அவ்வீரன் எப்படி இருந்தான் ?" என்றாள்.தான் வீரனை நன்றாக கவனிப்பதற்குள் மூர்ச்சையுற்று விழுந்ததையும், பின்னர் நினைவு திரும்பியும் இரு ஆண் மகன்கள் இருந்ததால் அவர்களை கவனிக்கவில்லை எனவும் ,அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் அதற்கு அக்கிழவியின் துணையினை நாடி வந்ததாக கூறினாள்.

           இதையெல்லாம் கவனிக்காது அக்கிழவி, "ஓகோ!! அந்த வேடனைத் தேடித்தான் இப்பைங்கிளி இங்கு வந்ததா ??" என்று விஷமத்துடன் கேட்க. கோபம் கொண்ட அந்த பெண் "ஏ கிழவி!! நீ பொல்லாதவள் .. உன்னிடம் போய் நான் உதவி கேட்டேனே " என்று கத்தினாள். "கோபம் கொள்ளாதே பெண்ணே!! உன்னைக் கண்டால் யாருக்குதான் உன்னை கவர்ந்து போக எண்ணம் வராது?? ஒருவேளை அந்த வேடனே உன்னைத்தேடி வருவானோ என்னவோ" என்று அந்த பேச்சை முடிக்க எண்ணமில்லாது இழுத்துக் கொண்டிருக்க, அவளை இடைமறித்து "ஊஹும் !! என்னை கவர்ந்து சென்று வாழ முடியாது , ஒரு வேளை காலில் விழுந்தால் வாழலாம் " என்று அவளும் நகைத்தாள் .. சொல்லி வைத்தார் போல், அந்த வேடன் திடுமென கதவு திறந்து கொண்டு நேராக அந்த கோதையின் காலில் விழ, கோதை அலறினாள்.  விதியின் விளையாட்டும் ஆரம்பமானது ....


      வீரநாயக்கனின் வாயில் நுரை கொட்டியிருந்தது...


(தொடரும் )