Suresh Kalmadi |
இந்தியாவின் மதிப்பு வெளிநாட்டில் ஒளிரும் மற்றொரு சமாசாரம் தான் இது.
1 . 11,494 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மானத்தை வாங்கிய சுரேஷ் கல்மாடிக்கு தான் இன்றைய வசை
2 .மொத்தம் 30,000 கோடி ரூபாய் செலவு எல்லா கட்டுமானங்கள்,தண்ட செலவீனங்களையும் சேர்த்து
3 .ஒரே ஒரு ஆறுதல் டெல்லி வாசி மக்களுக்கு மெட்ரோ ரயில் கிடைத்தது .
4 .285 event கொண்ட இந்த தொடரில், 495 பேரை களம் இறக்குகிறது இந்தியா, சீனா நடத்திய 639 பேரை களம் இறக்கியது.இது போல் இன்னும் கொஞ்ச பேரை கலந்து கொள்ள செய்திருக்கலாம்.
5 .பாதுகாப்பு(ஆப்பு): நம் நாட்டின் பாதுகாப்பே எப்படி உள்ளது என்பதற்கு இது ஒரு அத்தாட்சி, ஆஸ்திரேலிய டிவி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சி, ஒரு dummy bomb-உடன் நம் எல்லா பாதுகாவையும் மீறிச் சென்று நமக்கு ஒரு அவமானம் கிடைத்தது. நன்றி களமாடி அவர்களே !!
சொடுக்கவும்:http://www.guardian.co.uk/sport/2010/sep/22/explosives-commonwealth-games-tv-sting
6.மத்திய புலனாய்வு துறை சொல்லும் குற்றசாட்டு! மொத்தம் 14 project-களில் முறைகேடுகள் நடந்து உள்ளன என்கிறார்.
7 . நடைபாதையில் உள்ள பாலம் உடைந்து 23-27 பேர் காயமடைந்துள்ளனர், இன்னும் பனி முழுதாக முடிவடையவில்லை.மல்யுத்தம், குத்து சண்டை நடக்கும் இடங்களில் உள்ள போலிக் கூரைகள் திடீரென்று உடைந்து விழுந்தன. (பார்க்க : கீழே உள்ள படத்தினை)
8.கட்டுமானப் பனி ஒப்பந்தங்களில்
அ.மிகவும் அதிகமான தொகைகளில் ஒப்பந்தம் கை எழுத்தாகியுள்ளது
ஆ.இப்பணிகளை மேற்கொள்ள தகுதியே இல்லாத நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இ .மிகவும் மோசமான தரக் கட்டுப்பாடு கொண்ட பணிகளே நடந்துள்ளன.
நன்றி அதிசா -twitter |
உ.வீண் செலவு, அதாவது வாடகைக்காக கொடுக்கும் செலவில் வாங்கியிருக்கலாம்,வாங்கியிருக்கும் செலவில் சிலவற்றை வாடகைக்கு எடுத்திருக்கலாம்.(உதாரணம்) 72 golf cart ஒன்றுக்கு 4.23 lacs கொடுத்து 45 நாட்கள் வாடகைக்கு எடுத்திருக்கும் ஆணையம் 1.84 lacs கொடுத்து உடமை ஆக்கி இருக்கலாம்
9 . இங்கிலாந்தின் பிரபல நாள் வெளியிட்டிருக்கும் மிகக் கேவலமான செய்தி, கட்டுமான பணிகளில் அதிக அளவில் (ஒருத்தன் இருந்தாலும் கேவலம் தான்) குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்பது தான்.
10 .நியுசிலாந்து,இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் புறக்கணிக்க ஆரம்பித்தாகி விட்டது.
11 .எல்லா நாட்டு பத்திரிக்கைகளும் கிழிக்க ஆரம்பித்தாகி விட்டது.
கப்பலேறி போயாச்சு- என்று பாட வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் கீழ்க்கண்ட எவையேனும் செய்யலாம்.
1 .செய்திகள் கேட்காமல் இருக்கலாம்
2 .வழக்கம் போல் கிரிகெட்டையோ இல்லை எந்திரன் ரெலீசையோ கொண்டாடலாம்
3 .அட அப்படி துப்பிட்டு போங்கப்பா என்று நம்ம வேலைய பார்க்கலாம்
எனக்கு என்ன தோணுதுன்னா? இந்தியாவின் தலை (காஷ்மீரில்)-யில் ஒடுக்கப்படும் அப்பாவி மக்களுக்கு நேரும் கொடுமையை விட,இந்தியாவின் பாதங்களில் (தமிழ் நாட்டில்) ஒரு இன மக்களின் உணர்வு முழுவதுமாக புறக்கணிப்பதை விட இந்த காமன் வெல்த் விளையாட்டுச் சறுக்கல்கள் ஒன்றும் மானத்தை வாங்கவில்லை.
----கரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக