வெள்ளி, 17 செப்டம்பர், 2010

நீதி தேவன் மயக்கம்

இலங்கை அரசுக்கு தமிழர் நலனுக்காக சென்ற சிறப்பு இலங்கை தூதர் நிருபமா ராவ் அவர்களும், அவரின் உல்லாசப் பயணமும்.

1 .ஆமாம் , உல்லாச பயணம் தான் 4 நாட்களில் 1100 கீ.மி பயணத்தில் என்ன வெங்காயம் கிடைத்தது. ராஜ பக்சே -எனும் நாயிடம் டீ பார்ட்டி. அரசாங்க விருந்தினராய், இலங்கை ராணுவம் காண்பிக்கும் பகுதிகளுக்கு போவது, சிரிப்பது போட்டோவுக்கு pose கொடுப்பது .

2.என் இனப் பிரச்சனையினை உணர இந்த அம்மாளுக்கு எப்படி முடியும்?, இந்திய பார்லிமேண்டிலேயே தமிழக மீனவருக்கு பாதுகாப்பு என்று தானே மத்திய அரசாங்கம் சொல்கிறது. தமிழ் மக்களை இந்திய நாட்டில் இருந்து பிரிக்கும் இனவாதம் யாருக்கு( கண்டிப்பாக நடுவன் அரசு தான்)??

அம்மணி தன் சுற்று பயணத்தினை முடித்துவிட்டு தங்கள் கருத்தினை பதிவு செய்கிறார் - பின்வருமாறு .(எல்லாம் ஆங்கிலத்தில் தான் - அந்த கன்றாவியை மொழிபெயர்க்க வேறு செய்யனுமா?)
“While the focus on development and rehabilitation is very welcome, a long term perspective that also includes the issues relating to the political settlement that would meet some of the needs of the minorities should also be kept in mind,”she said.


“He [Rajapaksa] has constantly said that he is focused on that [political solution] need. And that he plans to move on it. He has his sight set on that. And this point about the need to be more than just focused on the economic issues and the development issues and to look beyond. Everybody in the government got a sense of how we look at it. From that point of view I think they know how India is approaching or looking at this issue,”she added  this  டூ.


என்ன கொடும சரவணா இது ?????

இந்த நேரத்தில் ஒரு இடுகை ஞாபகம் வருகிறது .

வனத்தின் நாலா பக்கத்திலும் சிங்கம் தன்  
முதுகைசொரிந்தபடி படுத்திருக்கிறது ...


துரோக நரிகளின் துணையோடு 
அனைத்து வனமும் பெருங் கூட்டத்திற்கு


 தாரை வார்க்கப்பட்ட தெம்பில் தனக்கான 
உணவை வாங்கி விடலாம் என்ற கனவோடிருந்த்தது..


இன்னும் மிச்ச மிருக்கிற வனத்தின் 
நாயகன் புலிக்கு எல்லாம் தெரியும்..
வனத்தின் மீள்வை கருத்தில் கொண்டே 
அது அமைதியாக இருக்கிறது..


ஆயினும் வனமும் வனத்தின் ஆதிகளும் 
தொலைந்து போவது கண்டு மரங்கள் கண்ணீருடன்..




1 .கச்சத்தீவை மீட்க முடியாதென்று சொல்லும் மத்திய மந்திரி S.M. Krishna அவர்களே !! நீங்கள் கச்சத் தீவு ஒப்பந்தம் ரத்து  செய்ய முடியாது என்பது சரி தான் - நம்ம கௌரவ பிரச்னை. ( மீனவனின் உயிர் அவ்வளவு மட்டமானது).ஆனால் ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தினை ரத்து செய்ததே இலங்கை நீதி மன்றம். நம்ம என்ன அவுங்க ம****கு( கனி இருப்ப காய் கவர்ந்தற்று)  சமானமா??

2.தகவல் உரிமை சட்டத்தின் படி , ஒரு தகவலைப் பெறலாமா ?? எத்தனை தமிழன் தமிழக எல்லையோர கப்பல் படையில் உயர் அதிகாரி இருக்கான் என்று?

3 .சர்வதேச அரசியலில் தமிழ்நாட்டின் இன உணர்வுக்காக இந்தியப்  பாதுகப்பிலோ, வெளியுறவுக் கொள்கையிலோ அப்படிப் பட்ட மாற்றங்கள் எதிர்ப் பார்க்க முடியாது என்று , இலங்கையுடன் தோழமை புரிந்து வந்த இந்திய அரசை எந்த அளவு மதிக்கின்றது இலங்கை. பாகிஸ்தான், லிபியா எல்லாவற்றிற்கும் மேல் சீனா என்று பாசக்கரம் காட்டி தங்கள் நாட்டின் மறு காட்டுமானப் பணிகளில் அந்த நாடுகளை உதவிக்கு அமர்த்தியது யாருக்கு ஆபத்து ? நமது தேசிய பாதுகாப்பு (முக்கியமாக கடல் வழி) எப்படி இருக்கின்றது என்று.

4 .எல்லாத்துக்கும் மேல, உங்கள சொல்லி குற்றம் இல்லைங்க,சும்மா அரசியலுக்காக ஈழ உடன்பிறப்பே என்றழைக்கும் குப்பை கட்சிகளும், கூட்டணிக்காக பொத்திக் கொண்டு உக்காரும் மற்ற கட்சிகளும் ,மத்தியில் ஆட்சியில் இருந்தும் (உட்கட்சி பிரட்சனைக்குள்ளே மூழ்கி) ஒரு மண்ணுக்கும் உதவாத சப்பைக்கட்சிகளும் இருக்கும் நாட்டில் நாம் என்ன செய்ய முடியும்.

( அ ) வலைப்பூ பதியலாம்
(ஆ ) டீ கடையிலாவது விவாதம் நடத்தலாம் (சபைகளில் தான் முடியாதே)
(இ )  எந்திரன் ரிலீசுக்கு காத்திருக்கலாம்/ சாம்பியன்ஸ் ட்ராபியில் மூழ்கலாம்
 (ஈ ) அரசுக்கும்,கோர்ட்டுக்கும் செலவழித்த பணத்தினை பிள்ளைகளிடமே spcl term fees-ஆக வசூலிக்கும் பள்ளியினை நொந்து பட்ஜெட்டில் விழும் வேஷ்டியை கணக்கு பண்ணலாம்.

நீங்க இந்த நாளில் ஏதாவது பண்ணினாலும் சரி , எல்லாத்தையும் பண்ணினாலும் சரி ....ஒன்னே ஒன்னு சொல்லுறேன் .

சத்தியம் நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ??



----கரி

1 கருத்து:

  1. Hey Kalidas!

    Please take a look at my blog, and share your thoughts!:)

    http://hemanththiru.blogspot.com/2010/09/tamils-antiquity-and-new-golden-age.html

    Hemanth
    http://hemanththiru.blogspot.com

    பதிலளிநீக்கு