பிரபாகரனுக்கு இந்த நாள் நன்றாக விடியவில்லை, காலையில் முதல் பேருந்திலேயே கோவை வருவதாக அவன் தங்கைக்குச் சொல்லி இருந்தான். காலை தூங்கி எழும்போதே மணி ௬ ஆகி விட்டது.அவசர அவசரமாக கிளம்பினான்.
தன் போனில் ஏற்கனவே 4 மிஸ்டு கால்கள் இருந்தன, அவன் தங்கையிடமிருந்து தான். அவளைச் சமாதானப் படுத்துவது அவ்வளவு எளிதல்ல. "sorry i'll be late 4 an hour..." என்று ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு பேருந்து நிலையம் சென்றான். அவன் பாட்டியும், அவன் தங்கையும் மட்டும் கோயம்புத்தூரில் இருக்க, இவன் ஒரு வங்கி கணக்கை முடிப்பதற்காக, திருச்சி வரை சென்றான்.
திருச்சியில் இருந்து அவன் மாற்றல் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது, புது ஊரில் அவர்களைத் தனியாக விட்டு வருவதும் கஷ்டம் தான், இருந்தாலும் தவிர்க்கவே முடியாத முக்கியமான வேலை என்பதால் தான் திருச்சிக்கு வந்திருந்தான். வங்கியில் கணக்கு முடித்து விட்டு வரத் தாமதம் ஆனதால் தவிர்க்க முடியாத சூழலில் அவன் நண்பனின் வீட்டில் தங்கி, அடுத்த நாள் (இன்று) காலையிலேயே வருவதாக நேற்றைக்கேச் சொல்லியிருந்தான். இன்று அவன் எழுந்ததே தாமதம் தான், பேருந்தும் ஆமை போல் ஊர்ந்துக் கொண்டிருந்தது.
சன்னல் ஓரமாக அமர்ந்து, காற்றிலே முகம் கழுவிக் கொண்டிருந்தான். திருச்சிக்கு இனிமேல் அவன் வரும் அவசியம் இல்லை, இனி அவனுக்கு எல்லாம் கோவை தான். தனது 10ஆம் வகுப்பு வரை கோவையில் தான் படித்து வந்தான். பிறகு,அவனுக்கு நேர்ந்த சில பேரிழப்புகள் ,அவனை அந்த ஊரை விட்டு பிரித்தது. பட்டம் வாங்கி முடித்த பின் தனது வாழ்கையினை திருச்சியில் தொடர மனமின்றி, மீண்டும் கோயமுத்தூருக்கு மாற்றலானான்.
அவனது பெரும்பான்மையான இனிய நாட்கள் திருச்சியில் தான் கழிந்தது. அவன் கோவைக்கு செல்லும் போது எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருந்தான்.
சரியாக 12.00 மணி கோவையினை சென்றடைந்தது,அங்கிருந்து அவன் வீட்டிற்கு செல்ல town பஸ்-ஐ பிடித்தான். மெதுவாக கிளம்பிய பேருந்து, கோவை நகரத்தின் தலைவலி சிக்னல்-ஆன G.P சிக்னலில் சிக்கிக்கொண்டது. உச்சி வெயலில் காதோரம் வழிந்த வியர்வையினை துடைத்துக் கொண்டே, ஜன்னலின் வழியே பார்வையினை நுழைத்தான், தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. சட்டென்று திரும்பி பார்க்கையில் ஒரு வெள்ளை சுடிதாரில்,கண்ணாடி அணிந்தபடி scooty-இல் இருந்து தன்னை ஒரு பெண் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தான்.
அவள் தன்னைத் தான் பார்க்கிறாளா ? இல்லை வேறு யாரையாவது பார்க்கிறாளா என்று சுற்று முற்றும் பார்த்த பொழுது தான். அவனுக்கு பொறி தட்டியது,ஒருவேளை அவள் தீபாவாக இருப்பாளோ!! என்று தோன்றியது. உற்று நோக்கினால் அவளே தான்!!தீபா தான்.ஆயிரம் வாட் மின்சாரம் பாய்ந்தது போல் தனை உலுக்கி கொண்டான். பிரபாகரன் பரபரப்புடன் பார்த்து கொண்டே, கை அசைக்க விளைந்தான்.ஒரு வேலை அவள் அவனை மறந்து இருப்பாளோ என்ற சந்தேகம் வந்தது.
அவளை பார்த்து லேசாக புன்னகைத்தான். அவள் அதை அடுத்த கணத்திலேயே புரிந்து கொண்டாள். ஆனால், பதில் ஏதும் தாராமல் சற்று தயக்கத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அவள் கண்கள் சற்று தாழ்ந்து இருந்தது.எதோ அவனிடம் மன்னிப்பு கேட்பது போல் இருந்தது.பிரபாகரனுக்கு இதயத் துடிப்பு ஆயிரம் மடங்கு அதிகரித்தது .
அவன் என்ன செய்யலாம் என்று நினைப்பதற்குள் பச்சை சிக்னல் அந்த பேருந்தை அங்கிருந்து அழைத்தது. "தீபா !!" என்று கத்த முயற்சித்தான், காற்று மட்டும் தொண்டையில் இருந்து வெளியேறியது .எல்லாம் சில நொடிகளில் தான், அவள் அவன் கண்களில் இருந்து மறைந்து விட ,அவன் நினைவுகளில் மலர ஆரம்பித்தாள்.அவன் கண்களுக்கு முன் ஒரு சாக்லேட்-ஐ பிரித்து கொண்டிருந்தான் ஒரு சிறுவன் .
-------------------------------------------------------------------------------------------------------------------------(flash back)
அவன் அப்பொழுது 9-ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.காதல் என்றால் என்ன என்று கூட சொல்லத் தெரியாது,ஆனால் அவன் தன் காதலை தீபாவிடம் வெளிப்படுத்தி 2 நாள் ஆகி இருந்தது.இருவரும் வெவ்வேறு பள்ளியில் படித்தாலும், ஒரே டியூசனில் படித்தனர்.பிரபாகரன் 9ஆம் வகுப்பும்,தீபா 10 -ஆம் வகுப்பும் படித்து வந்தனர் .2 நாளைக்கு முன்னர்,அவனுக்கு" 1997 தீபாவளி கிரீடிங் "கொடுத்தாள் தீபா ,பதிலுக்கு அவன் ஒரு இதயம்,ஒரு ரோஜா இருந்த வாழ்த்து அட்டையினை நீட்டினான் (எப்படியும் 50 ரூபாய் இருக்கும்).அவள் அதை பிரிக்க கூட இல்லை ,ஆனால் புரிந்து கொண்டாள்.முறைத்து கொண்டே வாங்கி ,அதை திறந்து பார்த்தாள். "I love U " என்று கோழி கிறுக்கலில் எழுதி இருந்தான்.
"டேய் !!! என்னடா இது ??" என்று கேட்டாள்.பின்னர்," கிவ் மீ சம் டைம்" என்று சொல்லிக் கொண்டு போய் விட்டாள்.அதற்கு அடுத்த நாள் வரவில்லை. இன்று அவள் எப்படியும் வருவாள் என்று தெரியும் (அவள் வீடு வரை சைக்கிளில் சென்று அவள் கிளம்புவதை ஊர்ஜிதம் செய்தான்).அதனால் இன்று தனக்கு விடை தெரியும் என்று நம்பினான்.
ஒரு lady bird சைக்கிள் வரும் ஓசை கேட்க, சற்று எட்டி பார்த்தான், வெள்ளை நிற T-ஷர்ட்ம் ,மிடியும் அணிந்து கொண்டு மெதுவாக வந்து கொண்டிருந்தாள் தீபா.
பகுதி -2
தீபா பிரபாகரனை முறைத்துக்கொண்டே வகுப்பில் நுழைந்தாள். பிரபாகரனுக்கு ஒன்னும் வியர்க்கவில்லை ஆனால் வியப்பாய் இருந்தது. "உண்மையிலேயே கோபமடைந்தால், ஒன்னு வீட்டில இருந்து யாரையாவது கூப்பிட்டு வந்திருக்கணும், இல்லயெனில் டியுசன் மிஸ்ஸிடமாவது சொல்லி இருக்கலாம். ஆனால் என்னைப் பார்த்தபடி அமர்ந்துக் கொண்டிருக்கிறாளே கடவுளே இது உண்மைதானா ? "என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டே, அவளிடமும் தைரியமாய் கேட்டான் ,"ஹை, தீபா யு ஆர் லுகிங் மோர் ப்ரெட்டி இன் திஸ் டிரஸ்" என்றான்.
தீபா இப்போது முறைக்கவில்லை,ஏளனமாக பார்த்தாள் அவனை, அவன் அதை விட ஒரு படி ஏளனமாய் "எனக்கு என்ன ரேச்போன்சே?" என்று கேட்டான்.சட்டென்று தன் bagல் கை விட்டு எதோ தேடினாள்.பிரபாகரனுக்கு கொஞ்சம் பயம் வந்தது 'அந்த கிரீடிங் கார்டினை கிழித்து எறியப் போகிறாளோ?' என்று நினைத்தான்.தீபா, பையிலிருந்து ஒரு சின்ன coffee bite சாக்லேட்டை எடுத்தாள்.அவனோ இவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் விழித்து கொண்டிருக்க,தீபா அந்த சாக்லேட்டை பாதியாக கடித்து மீதியை அவனுக்கு நீட்டினாள்.
பறவைகள் ஆயிரம் பறக்கவில்லை, தட்டிலிருக்கும் சில்லறை சிதறவில்லை, மண்பானை உடையவில்லை, அலைகள் அடிக்கவில்லை, புல்லாங்குழல் சத்தம் கேட்கவில்லை .இவர்கள் வயதுக்கு காதல் என்ற ஒரு விளையாட்டு நிறைவேறினால் என்ன ஆகும் ??? ஒருத்தரை பார்த்து ஒருத்தர் அசட்டு சிரிப்புடன் சிரித்து கொண்டிருந்தனர்.அங்கு அவர்களை தவிர இருந்த அத்தனைபேரும் மறைந்தனர்.
தீபாவுக்கும்,பிரபாகரனுக்கும் உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.இவர்கள் இருவர் வீட்டிலும் டெலிபோன் பில் எகிறிக் கொண்டிருந்தது.இருவரும் தங்கள் பெற்றோரிடையே இருந்த நெருக்கமோ குறைந்தது. இரண்டு பேரும் டியூசனுக்கு முதல் ஆளாக வந்து கடைசியாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தினர். ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் alif லைலா சிந்துபாத்தாக தீபாவுக்கு அன்று தெரிந்தான். பிரபாகரனுக்கோ ,அதே ஞாயிறு ஒளிபரப்பாகும் சின்ட்ரெல்லாவாக தீபா தெரிந்தாள்.
February 14 ,உலக காதலர் தினம் என்று தமிழ் நாட்டில் அப்பொழுது தான் பிரபலமாக வந்தது.தீபாவுக்கு கார்ட் வாங்கி கொடுக்க பணம் சேமித்து கொண்டிருந்தான்.அதே சமயம் மார்ச்சுடன் பள்ளி முடிவடைவதால் ,அடுத்த வருடம் வேறு பள்ளிக்கு செல்பவர்கள் slam book எனும் ஆட்டோக்ராப் வாங்குவதும் பிரபலமாகி கொண்டிருந்தது.இவர்கள் படித்ததும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல பள்ளி என்பதால் கொஞ்சம் trend updates எல்லாம் அங்கு ரொம்ப முன்னதாகவே வந்துவிடும்.
அப்படி பூர்ணிமாவும் ஒரு slam book -ஐ வாங்கி எல்லோரிடமும் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
அப்படியே பிரபாகரனுக்கும் கொடுத்தாள். அதில் இரண்டாவதாக கேட்கப் பட்ட கேள்வி,
2. The Person Who Like U Most ?
என்ற கேள்விக்கு "தீபா" என்று எழுதி தன் காதல் கதைக்கு முற்று புள்ளி வைத்தான் பிரபாகரன்.
அடுத்ததாக அந்த slam புக் அவனுடைய டியுசன் மிஸ்ஸிடம் சென்றது.பிரபாகரன், ஏற்கனவே அந்த வகுப்பில் படு சுட்டி என்பதால் அவனுடைய பதில்காலி படித்தாக வேண்டும் என்ற நிலை வேறு. சாதரணமாக அவன் எழுத்து கோழி கிறுக்கலாய் இருக்கும், தீபா அவள் பெயரை மட்டும் மிக அழகாக அவளுக்கு பிடித்த purple கலரில் எழுதியிருந்தான்.
அன்று வகுப்பு முடிந்தவுடன் இருவரை மட்டும் காத்திருக்க சொன்னார், அந்த டியுசன் மிஸ். இருவரின் ஸ்கூல் பாக்கையும் வாங்கி பார்த்தார்.இருவருக்கும் புரிந்து விட்டது, என்ன நடந்திருக்கும் என்று.இருவர் பையிலும் ஏராளமான கிரீடிங் கார்டுகளும், கடிதங்களும் இருந்தன.அந்த மிஸ்ஸின் இதயம் அப்படியே நின்றது.
"டேய்! பிரபாகர் ! என்னடா இது உன் வயசுக்கு இதெல்லாம் எப்படிடா தோணுது ? இதென்னடா கருமம்?" என்று ஒரு க்ரீடிங்கை நீட்டினார் அவனிடம்.அந்த வாழ்த்து அட்டையில் கையெழுத்திற்கு பதிலாக உதடு ரேகை பதிந்திருந்தது.அதை பார்த்தவுடன் அவனுக்கு மீண்டும் அந்த பொங்கல் விடுமுறை ஞாபகம் வந்தது.
--------------------குட்டி flash back--------------------------
அன்று , அவன் தீபா வீட்டுக்கு சென்றிருந்தான்.தீபாவின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.அன்று அவனுக்கு கிடைத்ததை அவன் வாழ்நாளில் மறக்கவே முடியாது . அது என்னவென்றால், போனவுடன் அவனுக்கு தீப கொடுத்த pineapple squash-ம் அல்ல; வீட்டில் எவ்வளவு அடம்புடித்தாலும் அப்பா வாங்கிதராத வீடியோ கேம் - super mario -வும் அல்ல;மத்தியானம் அவள் செய்து கொடுத்த maggi-ம் அல்ல;மாலை நாலரை மணி அளவில் he-man பார்க்க இருவரும் சோபாவில் அமர்ந்து டீ.வீ. பார்க்கும் போது, தீடீரென்று அவன் கன்னத்தில் அவனுக்கு அவள் கொடுத்த முத்தம்.....
-------------------------------------------
"டேய் !! நான்பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன்? என்னடா சிரிச்சுகிட்டு இருக்க" என்று அந்த டீச்சர் கத்தும் போது தான் அவன் சுய நினைவுக்கு வந்தான்."எங்க! இந்த பிரபாகரப் பாருங்க! முளைச்சு மூணு இழை விடல, என்ன பண்றன்னு நீங்களே கேளுங்க. தீபா நான் உன்னை எப்பிடியோ நெனச்சேன், i'm desirously disappointed on you" என்று தீபா பக்கம் திரும்பினார்.அவள் ஏற்கனவே நடுங்கியபடி இருந்தாள்.டீச்சரின் கணவர் என்னிடம் கேட்டார்,"உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும் டா! அக்கா! அக்கான்னு கூப்பிட்டே கரெக்ட் பண்ணிட்ட? " நக்கலடித்தவாறே.அடுத்தநாள் அவர்களுடைய அம்மாக்கள் இரண்டு பேரும் டியுசனில் வைத்து சந்தித்தனர்.
எல்லாம் முடிஞ்சு போச்சு, தீபாவை அடுத்த வருஷம் ஹாஸ்டலுக்கு அனுப்புறாங்க என்று கேள்விப் பட்டான். வீட்டில் ஏக கெடுபிடி.போன் பண்ணவே விடவில்லை.இவனை அந்த டியுசனுக்கும் அனுப்பவில்லை.அவளிடமிருந்தும் எந்த போன் காலும் வரவில்லை.அவள் ஞாபகமாய் வைத்திருந்த போட்டோவைக் கூட அவன் தங்கை சௌமி அம்மாவிடம் காட்டிக் கொடுத்தாள்.எல்லாம் விதியின் செயல்.
என்ன ஆனாலும் பரவாயில்லை என்று யாரும் அருகில் இல்லாத நேரத்தில் அவள் வீட்டுக்கு அழைத்தான்.வேறு யாரும் எடுக்க கூடாது என்று கண்களை மூடிக் கொண்டே இருந்தான் யாரும் எடுக்கவில்லை.1 ,2 ,3 தடவை அழைத்தான் பதில் இல்லை.கண்கள் இரண்டும் குளமாகின.அந்த போனை வைத்த அடுத்த வினாடி டெலிபோன் மணி அடித்தது,ஒரு ரிங் முடிவதற்குள் அதை எடுத்தான் , அவள் தான்.இருவரும் 2 ,3 தடவை அவர்கள் பெயரை அழைத்து கொண்டிருந்தனர்.
பிரபாகரன் கேட்டான்,"ம்ம் ..நீ உண்மையாவே ஹாஸ்டல்க்கு போறியா? "என்றான்."ம்ம் "என்று பதில் வந்தது."அப்போ நம்ம பாக்கவே முடியாதா" என்றான்.தீபா ,"நாம ரெண்டு பேரும் படிச்சு,பெரிய ஆளா வர்ற வரைக்கும் " என்றாள்.யாரோ வரும் சத்தம் கேட்டது,"ஒகே..தீபா நான் வரும் 14ம் தேதி உன்ன பார்க்க டியுசன் வர்றேன். கடைசியா நான் உனக்கு ஒரு கார்ட் கொடுக்கணும். ப்ளீஸ் "என்றான் பிரபாகரன்."ஆனா ......நா "
என்று பேசி முடிப்பதற்குள்.அவன் போனை வைத்து விட்டான்.
அப்பாவிடம் இருந்து ஒரு நூறு ரூபாய் வாங்கி ஒரு Music கார்ட் வாங்கினான். I LOVE YOU TILL I DIE என்று எழுதி மறைத்து வைத்துக் கொண்டான்.அன்று FEBRUARY 14 ,கோவை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தனது ரேஞ்சர் சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டே அவன் படித்த டியுசனுக்கு சென்றுகொண்டிருந்தான். பையில் வைத்திருந்த கிரிட்டிங் கார்டை தடவிக்கொண்டே சைக்கிளை அழுத்திக்கொண்டிருந்தான்.
அன்று அவனுக்கு எதோ ஒரு வித்தியாசமாய் இருந்தது.திடீரென்று ஒரு சத்தம், அவனுக்கு மிக அண்மையில் உள்ள தெரு ஒன்றிலிருந்து கேட்டது.அந்த நிலமே அதிர்ந்தது ,பதட்டம் நிலவியது,கூச்சலும் புழுதியும் பரவலாய் கிளம்பியது, சைரன் ஒலித்தது.அந்த கோவை குண்டுவெடிப்பு நடந்த அந்த பெப்ரவரி 14 அவனுக்கு மட்டுமில்லை தமிழ் நாட்டிற்கே மறக்க முடியாத நாள் ஆகியது.
அவன் செல்ல வேண்டிய டியுசன் இருக்கும் இடத்திற்கு செல்ல தடை செய்யப் பட்டது. கண்ணீருடன் வீட்டிருக்கு திரும்பினான் .
-------------------------------------------------
அன்று அவன் கொடுத்திருந்தால் அவள் என்ன செய்திருப்பாள்? ஒருவேளை அவள் அன்று டியூசன் வந்திருப்பாளா? என்று அவன் பல வருடங்களை கடந்தும் தனக்குள் கேட்டுக் கொண்டிருப்பான்.
இன்றும் அவன் படித்த டியூசன் இருக்கும் தெருவிலோ ,இல்லை அவள் வீடு இருந்த தெருவிலோ அவன் தன் வண்டியில் அடிக்கடி ஏக்கத்துடன் செல்வதைப் பார்க்கலாம்.
அவன் எழுதிய ஒரே கவிதை
நீ தந்த முத்தத்தின் எச்சிலாய் ,
கனவு மழையில் நிதமும் நனைகிறேன்
----கரி

பட்டாசு கிளப்புதுடா!! அருமையான வரிகள்!! இரண்டாவது பாதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன்:)
பதிலளிநீக்குthank u ...frnds..with ur appreciation only i can enjoy to write..
பதிலளிநீக்குArumai.. arumai !! Mahaakavingnar Kalidasan.
பதிலளிநீக்குChhe.. semaya iruku. Touching the heart and eyes. it can be named Love story of the decade !
பதிலளிநீக்குThank you for your compliment, Jagan:)
பதிலளிநீக்குஇக்கதையை உருவாக்கிய என் உயிர் நண்பன் காளிதாஸ்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கனத்த இதயத்துடன், பிரதீப்.
பதிலளிநீக்குcool... I really liked the way you said. why you are always writing the failure story ? Iam expecting some success story !! [innum ethir paakuraen] :)
பதிலளிநீக்குIt is very interesting and i am very very happy while reading each word. Moreover i like the story it brings me school memorable and unforgettable moments.Hats off to you
பதிலளிநீக்குHeartfelt thanks for your appreciation,
பதிலளிநீக்குyou people really motivate and acknowledge me as writer.
Thank you very much
really marvelous... அக்கா! அக்கான்னு கூப்பிட்டே கரெக்ட் பண்ணிட்ட? such lines r cool... soon post our memories
பதிலளிநீக்குI use to read novels and stories a lot as you well aware. but lot of stories will not give proper visualization.
பதிலளிநீக்குWhen i am reading the above it was been crystal clearly visualized to me what is going on.
As of my knowledge 90 of 100 peoples are having their own love story at their schooling time.
Whenever we read this type story all the way history will be recalled from the heart. The same my mind got recalled now.
Thanks for giving a wonderful moment
ayyo ! fine. awaiting second part of the flash backkkkkkkkkkkiiiiiiiieeeeeeee
பதிலளிநீக்குGowri.J
maams .. you read all my stories-aah ?? thank u for being a gentle man
பதிலளிநீக்கு