இதற்கு முன்னர்
ஜெயமோகனைக் கண்டித்து பெண்கள் சார்பில் முன்வைக்கப்பட்டக் கூட்டறிக்கையிலும், பெருமாள்
முருகனுக்கு ஆதரவாக எழுந்தக் கூட்டறிக்கையிலும் கூட, இதுபோன்ற இன்னும் ஒன்றிரண்டு அறிக்கைகளில்
நான் ஒப்பமிடவில்லை. ஏனெனில் அதன் பின்னணி அரசியலின் முழுமையும் தெரிந்து கொள்ளாதவரை
அதன் மீது ஒரு நிலைப்பாடு எடுப்பது தவறு என்று கருதியிருந்தேன். இவை இலக்கியத்தில்
புத்தக விற்பனையைக் கூட்டும் மலினச் செயல்பாடுகளில் ஒன்றாகவும் போய்விட்டது வருத்தத்திற்குரியச்
செயல்பாடு தான்.
லீனா மணிமேகலையின் செயல்பாட்டுக்கு எதிராக நிற்கும்
இந்தக் கூட்டறிக்கை குறித்தும் அதே போன்ற முழுமையானப் பின்னணியை அறியாதவன் என்கிறப்
புரிதலில் இதற்கு வெளியேவே இருக்க விரும்பினாலும்.
“தன் சொந்தப் பெண்ணிடம் பொது இடங்களில்
சரியாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பிறகு பெண்ணியம் பேசலாம்.” –
இதைப் போன்ற கருத்துகளைப்
பொதுவில் பதிவது மிகுந்த உளைச்சலைத் தருகிறது. இதுபோன்ற கருத்து அவதூறாகப் பதிவதை ஒருக்காலும்
ஏற்றுக்கொள்ள முடியாது. சகமனிதனாகவே இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
நடுநிலை என்பதும்
ஒரு அரசியல் தான். இந்த முறை நான் அதைச் செய்ய விரும்பவில்லை. ஒரு தனிமனிதன் மீது அவதூறு
செய்யும் எந்தச் செயல்பாட்டிற்கும் என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக